Thursday, April 05, 2018

இறையச்சமுடையமுடையவர்கள் மட்டும் ததஜ விட்டு வெளியேறுகிறார்கள்.

அல்லாஹ்வின் சட்டம் எல்லா காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தும் என்பதை மறுத்தது.  விபச்சாரம் செய்பவன் 4 சாட்சிகளை வைத்துக் கொண்டா விபச்சாரம் செய்வான் என்று அல்லாஹ்வின் வேதத்தை கேலி செய்தது. குர்ஆனுக்கு மாற்றமாக மாற்றுக் கருத்துக் கூறியது. இவை இறையச்சமுடையமுடையவர்களை மட்டும் சிந்திக்க வைத்தது. அதனால் அல்லாஹ்வின் அச்சம் உடையவர்கள் மட்டும் ததஜவை விட்டும் வெளியேறி வருகிறார்கள். அந்தப் பட்டியலில் திருச்சி சிங்கரத்தோப்பு கிளை. 

http://fazlulilahi.blogspot.ae/2018/04/blog-post_92.html




பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

05/04/2018

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளுக்கு, திருச்சி சிங்கரத்தோப்பு கிளை உறுப்பினர் அனைவர்களுடைய மனக்குமுறல்கள்...

சமீப காலமாக நமது மாநில தலைமையின் நடவடிக்கைகளில் எந்தவித உடன்பாடும் இல்லாததால் TNTJ ஜம்மத்திலிருந்தும், நிர்வாகம் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் அனைவரும் விலகியாச்சு...

அடுக்கடுக்கான காரணங்கள்.


1. அப்துர்ரஜாக் அவர்களின் குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைத்து அதை எதிர்காலத்தில் குத்திக்காட்டி காயப்படுத்துவதால் எதிர்காலத்தில் உங்களிடம் வரும் அனைவரின் மான, மரியாதையையும் வாங்கி அசிங்கப்படுத்த தயங்க மாட்டீர்கள் என்று நாம் எண்ணி வெளியேறுகிறோம்.

2. அப்துர்ரஜாக் அவர்களுக்கு மாநில நிர்வாகிகள் யாரும் தமது சொந்த பணத்தை கொடுத்து உதவவில்லை. மார்க்கம் அனுமதித்த வகையில் அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அல்தபியுடன் இணைந்து செயல்பட்டார் என்ற ஒன்றே அவரை ஜமாத்தை விட்டு நீக்க போதுமானதாக இருந்தும்!!! தேவையின்றி அவரை மிரட்டி மாநில நிர்வாகத்தை நிர்வகிக்கும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்.

3. சகோதரர் அல்தாபி அவர்கள் விபச்சாரம் செய்ததாக ஆரம்பத்தில் அந்த பெண் கூறினாலும்... பின்னர் அதை மறுத்து அவர் கடிதம் தந்து விட்டார். அந்த கடிதத்தை நீங்கள் வெளியிடாமல் மறைத்து விட்டு பின்னர் அல்தாபி கூறியதால் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டீர்கள். இதை முபாஹலாவுக்கு பின்னர் கூறியது தலைமை நிர்வாகத்திற்கு தகுந்த பண்பு இல்லை.

4. மாநிலத் தலைவர் குற்றம் சாட்டியவரின் உண்மை தன்மை மற்றும் இறுதி விளக்கத்தை பரிசீலிக்காமல் முதலில் வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டும் நின்று இதற்கு அளித்த விளக்கம் மிகவும் அநியாய முறையில் இருக்கிறது. இதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.

5. பொதுக்குழுவில் நீங்கள் கூறியதாவது.... அந்த பெண் விபச்சாரம் செய்தோம் என கூறினால், ஆனால் அல்தாபி இல்லை என்று கூறினார், அந்த பெண் அல்தாபியின் மேல் உள்ள நடத்தினால்தான் அப்படி கூறுகிறாள் என்றும் மாநில நிர்வாகம் அல்தாபி கூறுவதை நம்புகிறோம் என்றும், இருந்தாலும் அவர் ஒப்புக்கொண்ட தனிமைக்காக அவரை நிர்வாகத்திலிருந்து நீக்கினோம் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அன்று விளக்கம் அளித்தீர்கள்... அனால் முபாஹலா வின் போதோ அல்தாபி கூறுவது பொய் என்றும் அந்த பெண் கூறுவதை நீங்கள் உளப்பூர்வமாக நம்புவதாகவும் கூறுகிறீர்கள்... உங்கள் முரண்பட்ட கருத்துகளை பொதுக்குழு மற்றும் முபாஹலா விடியோவை எடுத்து மறுமுறை கூர்ந்து பாருங்கள், ஏன் நமது ஜமாத் உறுப்பினர்கள் உங்களை விட்டு கொள்கையை மட்டும் போதும் என உங்களை தூக்கி எறிகிறார்கள் என்று உங்களுக்கு விளங்கும்.

6. முபாஹலாவிலிருந்து பின் வாங்குவதாக அல்தாபி அவர்கள் கடிதம் அனுப்பியும் இறுதி நேரத்தில் அக்கடிதம் வந்ததால் அதை ஏற்க முடியாது என்று நீங்கள் கூறியது தவறு. வெளியூரிலிருந்து வந்து விட்டோம் அதனால் அல்லாஹ்வின் சாபத்தை வாங்கிக் கொண்டு தான் போவோம் என்று அடம் பிடிப்பது இறையச்சவாதிகளுக்கு அழகல்ல.

7. அல்தாபி வீட்டில் தங்கிய பெண் மீது தவறு நடந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்று ஒரு பத்தினி பெண் மீது அவதூறு கூறுவது, தகாத வார்த்தைகளைக் கொண்டும் விமர்சிப்பதையும் நாம் கண்டித்து இந்த ஜமாத்தை விட்டுவெளியேறுவதே சிறந்தது என எண்ணுகிறோம்.

8. இறுதியாக இறையச்சத்தை தாமும் வளர்த்துக் கொண்டு பிறருக்கும் போதிக்க வேண்டும் என்றும் பக்குவமாகவும், பொறுப்பாகவும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தவர்களாக இந்த ஜமாத்திலிருந்து எங்களை விடுவித்துக் கொள்கிறோம்.


தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். - அல் குர்ஆன் 4 : 49

இப்படிக்கு:

சிங்கரத்தோப்பு கிளை,

திருச்சி மாவட்டம்

No comments: