Friday, August 09, 2019

நீதியின் பக்கம் நிற்போம்! அநீதியாளர்களை அடையாளம் காண்போம்!!

[09/08, 9:40 am] யூசுப் 
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
திறந்த மனதுடன் ஒரு மடல் 
தயவு செய்து படிக்கவும்..

நீதியின் பக்கம் நிற்போம்!
அநீதியாளர்களை அடையாளம் காண்போம்!!

அன்புடையீர்! 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…!!

சென்ற ஜூலை 27 அன்று காரைக்கால் தவ்ஹீத் பேரவை நடத்திய பொதுக் கூட்டத்தில், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பீ.ஜெ. அவர்கள், ததஜ நிர்வாகிகள் தனக்கு இழைத்த அநீதி - துரோகங்களை வெளிச்சப்படுத்தினார். மேலும், தன்னை வெளியேற்றிய பிறகு ததஜ தலைமை பொருளாதார ரீதியாக செய்த மோசடிகளையும், வஹீ மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையிலிருந்து எவ்வாறெல்லாம் தடம் புரண்டு வருகிறார்கள் என்பதையும் பட்டியலிட்டு பேசினார்.
முத்தாய்ப்பாக - 
"ததஜ தலைமை என் மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் அதைத் தக்க ஆதாரங்களுடன் என் முன்னால் மக்கள் மத்தியில் அவர்கள் பொது விசாரணை மூலம் நிரூபிக்கட்டும்.

அதேபோல ததஜ தலைமை மீது நான் வைக்கும் பொருளாதாரக் குற்றச்சாட்டு, மார்க்கத்தில் தடம் புரண்டது குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தக்க ஆதாரங்களுடன் அவர்கள் முன்னால் மக்கள் மத்தியில் நான் நிரூபிக்கிறேன்.
இரு தரப்பும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் தனித்தனியே சமூக ஊடகங்களிலும், உள்ளரங்குகளிலும், மேடைகளிலும் குற்றச்சாட்டுகளை கூறி மக்களைக் குழப்புவதை விட, இரு தரப்பும் ஒரே மேடையில் ஒரு பொது விவாதத்தை சந்திப்போம். எனக்கு எதிராக உங்களிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் அள்ளிப் போட்டு, ஒரே விவாதத்தில் என்னை மேலும் கேவலப்படுத்தி, மக்களிடமிருந்து என்னை அன்னியப்படுத்திவிடுங்கள்." என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார்.
சகோதரர் பீ.ஜெ. அவர்களின் காரைக்கால் அறைகூவலைத் தொடர்ந்து, அதே இடத்தில் ததஜவினர் வரும் ஆக.9 அன்று ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதை நாங்கள் வரவேற்கிறோம். முக்கியமாக பீ.ஜெ. மீது கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பல்வேறு மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதில் முன்னிலை வகிக்கும் ததஜ மாநில பொதுச்செயலாளர் ஈ.முஹம்மது, மாநிலச் செயலாளர் அப்துல் கரீம் மற்றும் கோவை .ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்கள். அதை மேலும் நாங்கள் வரவேற்கிறோம்.
வழக்கம் போல எல்லா மேடைகளிலும் பீ.ஜெ. மீதான அவதூறு புராணம் பாடுவதைப் போல ஆக.9 காரைக்கால் மேடையிலும் பாடாமல், பீஜே அவர்களின் விவாத அறைகூவலை ஏற்குமாறு அல்லாஹ்வுக்காக கேட்டுக் கொள்கிறோம்.
காரைக்கால் ததஜ நிர்வாகிகளும் தங்கள் தலைமையின் நேர்மையைப் பறைசாற்றும் வகையில், அல்லாஹ்வை மட்டும் அஞ்சியவர்களாக, தங்கள் தலைமைக்கு எடுத்துச்சொல்லி பீ.ஜெ.யின் விவாத அறைகூவலையும் பொது விசாரணையையும் ஏற்கச் செய்ய வேண்டும்.
விவாத அறைகூவலை ஏற்றுக் கொண்டால், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு காரைக்கால் தவ்ஹீத் பேரவை பொறுப்பேற்றுக்கொள்ளும்.
எங்களுக்கு உண்மை – சத்தியம் தான் தேவை. உறுதிமிக்க கொள்கைத் தலைமை தான் தேவை. நீதியின் பக்கம் சார்ந்திருக்கவே விரும்புகிறோம். உங்களிடம் சத்தியமும், நீதியும் இருக்குமானால் அதை நிரூபித்துக் காட்டுங்கள். பீ.ஜே.வை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் பக்கம் நிற்கிறோம். காரைக்கால் தவ்ஹீத் பேரவையைக் கலைத்துவிட்டு, ததஜவின் அடிமட்ட தொண்டர்களாக எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம். பீ.ஜெ.க்கு எதிராகக் கடுமையாக களமாடுகிறோம்.
ததஜ மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், நடுநிலையாளர்களும் எங்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு வலு சேர்த்து நீதிக்கு சாட்சிகளாக நின்று மறுமை வெற்றிக்கு வழிகோல வேண்டுமென சகோதரத்துவ உணர்வுடன் வேண்டுகிறோம்.
அநீதியாளர்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி - நீதியின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே இந்தப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளோம். விவாதத்தையே வித்தாகக் கொண்டு வளர்ச்சியின் உச்சம் தொட்ட ததஜ தலைமை, இந்த விவாத அறைகூவலை ஏற்றுக் கொண்டால், ஓரளவு அவர்களிடம் ஆதாரங்களும்,உண்மையும், நேர்மையும் இருக்கும் என்று நாம் கருதலாம். அவர்கள் ஏற்கவில்லையெனில் யார் பொய்யர்கள்? யாரிடத்தில் பித்தலாட்டம் உள்ளது? என்பதை நடுநிலையான மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இவண்
காரைக்கால் தவ்ஹீத் பேரவை (KTP)
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
----------------------------------------------------------------------------------------------------------------


09/08, 10:12 am] அப்துல்: #பிஜெ_வின்_பொது_விசாரணை_அழைப்பு_ஏற்றுக்_கொள்ளப்பட்டது

பாலியல் குற்றவாளி சகோதரர் பிஜெ ஒரு விபச்சாரகனா? இல்லையா என்பதை நிருபிக்க்க பொது விசாரணை வேண்டும் என்று பல இடங்களில் பேசி வந்ததை தொடர்ந்து தற்போது பொது விசாரணை அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

*பொது விசாரணை நடுவர்களாக 23 கூட்டமைப்பின் தலைவர்கள் இருப்பார்கள்*

தரப்பு 1: சகோ. பி.ஜெயினுல் ஆபிதீன் 
               சகோ.அப்பல்லோ ஹனிபா

தரப்பு 2: 

            சகோ.முஹம்மது காமில், சகோ.கோவை பாசித், (ஆடியோ வெளியீட்டுக் குழு) 

சகோ.ஜாஹிர் உசேன் (மாஸ்கான் சாவடி) 
சகோ. ராஜா முஹம்மது (மாஸ்கான் சாவடி)

தேதி மாதம் இன்ஷா அல்லாஹ் ஹஜ் பெருநாளைக்குப் பிறகு சகோ.பிஜே தரப்பு அறிவிக்க வேண்டும்.

விசாரணை விபரம்:

பிஜே ஒரு விபச்சாரகன் என்றும் அவர் பல பெண்களுடன் விபச்சாரம் செய்துள்ளார் என்றும் 28 நிமிடம், அப்பல்லோ ஆடியோ மற்றூம் 10 நிமிட ஆபாச ஆடியோகளை பேசியவர் பிஜெ தான் என்னும் இன்னும் வெளி வராத பல ஆதாரங்கள் ஏற்கனவே 23 கூட்டமைப்பில் சமர்பிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் ஆடியோ வெளியீட்டுக்குழு சமர்பித்து பிஜெ விபச்சாரகன் என்று நிறுபிக்கும்

சகோ.பிஜெ தன்னிடம் உள்ள ஆதாரங்களை பொது விசாரணைக் குழுவில் சமர்பித்து தன்னை உத்தமன் என்று நிருபிக்க  வேண்டும்.

பொது விசாரணைக்கான தேதியையும் இடத்தையும் சகோ.பிஜே தரப்பு வெளியிடுவதை ஆடியோ வெளியிட்டு குழு ஏற்றுக் கொள்ளும்.

பொது விசாரணை ஏற்பு, இடம் மற்றும் தேதியை தன்னுடைய ஞாயிற்றுகிழமை பேஸ்புக் லைவில் சகோ.பிஜெ தெரிவித்தாலே போதுமானது.

- இப்படிக்கு,

28 நிமிடம், அப்பல்லோ ஆடியோ மற்றும் 10 நிமிட ஆபாச ஆடியோ வெளியீட்டு குழுவினர்