Sunday, April 29, 2007

மேலப்பாளையம் த.மு.மு.க. கொடுத்துள்ள அழைப்பிதழ்.

பொருள்:- வக்பு வாரிய தலைவர் வருகையும் நமது கோரிக்கையும்.

பெறுனர்:- தலைவர், மற்றும் ஜமாஅத்தார்கள்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நமது த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளர் எஸ். ஹைதர்அலி அவர்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். புதிய தலைவரான அவர்கள் 06-05-2007 ஞாயிறு அன்று நமது மேலப்பாளையம் மாநகருக்கு வருகை தர உள்ளார்கள்.
வக்பு போர்டு சேர்மேனாக பொறுப்பேற்றுள்ள அவர்கள் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள், ஊழியர்களுடைய வருமானத்துக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடிய திட்டங்களையும், அதுபோல் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவிக்கான திட்டங்களையும் செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

மேலும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பயன்படும் நல்ல பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். குறிப்பாக கல்வி நிலையங்கள், தொழிற்பயிற்சி கூடங்கள், தொகுப்பு வீடுகள், மாணவர் விடுதிகள், மருத்துவ மனைகள் போன்றவை வக்பு வாரியம் சார்பாக அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இவற்றில் நமது மேலப்பாளையம் பகுதிக்கு தேவையானதை அமைத்து தர வலியுறுத்தி தங்கள் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலப்பாளையம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்களை சந்திக்கும் நிகழ்ச்சி 2 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷh அல்லாஹ் 06-05-2007 ஞாயிறு மாலை மஃரிபுக்குப் பின் ஞானியாரப்பா நகர் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்ஆ பள்ளி முன்பும். இஷhவுக்குப் பின் மேலப்பாளையம் அல்லாமா இக்பால் (பசார்) திடலில் வைத்தும் நடைபெறும். மழையாக இருந்தால் புதுமனைப் பள்ளியில் வைத்து நிகழ்ச்சி நடைபெறும்.
இப்படிக்கு
கே.எஸ். ரசூல் மைதீன்
தலைவர்
த.மு.மு.க.
மேலப்பாளையம்
தொடர்புகளுக்கு 0091- 9943144666, 9362989204, 9843149469

Friday, April 27, 2007

நமது த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளர் எஸ். ஹைதர்அலி அவர்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இது பற்றி வக்பு வாரிய மாத இதழ் இஸ்மியில் வந்த செய்தியும் படங்களும்




Sunday, April 22, 2007

பாக்கர் பதவி விலகல் ஒரு எடுத்துக் காட்டு என்று பீற்றி எழுதிய பேனாவின் மை காயும் முன் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டு விட்டார். பாக்கர் தானாக முன் வந்து விலகி இருந்தால் மீண்டும் பொதுச் செயலாளராக ஆகி இருக்க மாட்டார்.

பி.ஜெ. மற்றும் அவரது மனைவி மக்கள் மீதும் அவரது மைத்துனர் ஷம்சு மீதும் வண்டி வண்டியாகக் குற்றச்சாட்டுக்களை எம்மிடம் கூறி வந்தவர் திருவாளர் லுஹா. அந்த லுஹாவை 2002 ஜுன் 25இல் கடையநல்லூரில் வைத்து பி.ஜெ. விலைக்கு வாங்கினார். நாகூரைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கு த.மு.மு.க.வின் டிசம்பர் 6 பணத்தை திருடி கொடுக்கச் செய்த பி.ஜெ. விலை மாடன் லுஹாவை விலைக்கு வாங்கியதும் அவனது துணையுடன் அந்தக் குற்றச்சாட்டை நம்மீது கூறி திசை திருப்பினான்.

பி.ஜெ. செட்டப் செய்யும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் துணை நிற்பவன் விலை மாடன் லுஹாதான். கமாலுத்தீன் மதனி ஜாக் கணக்கெல்லாம் என் மனைவியிடம் இருக்கு என்று சொன்னார் என்று பி.ஜெ. சொன்ன பொய்க்கு அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் செய்தவனும் விலை மாடன் லுஹாதான்.

விலை மாடன் லுஹா என்று நாம் நீண்ட காலமாகவே எழுதி வருகிறோம். இது ரொம்ப ஓவர் என சிலர் கூறுகின்றனர். காசுக்காகவும் மற்றுமுள்ள உலக ஆதாயத்துக்காகவும் அந்நியனுடன் படுக்கும் பெண்களை விலை மாது என்கிறோம். இந்த விலை மாதுகள் பிடிபட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அந்நிய ஆடவனை தனது கணவன் என்பார்கள். அது போல்தான் இந்த பள்ளித் திருடன் சட்டத்தின் முன் தன்னை ஜாக் என்று கூறித் திரிகிறான்.

இந்த லுஹாவின் துணையுடன்தான் பாக்கர் கோவில்பட்டி விவகாரம் அரங்கேற்றப்பட்டது.
பாக்கரை நோக்கி பி.ஜெ. பிடித்த துப்பாக்கியை (கூறப்பட்ட குற்றச்சாட்டை)யே பி.ஜெ. நோக்கி பாக்கர் திருப்பி பிடித்தார். அதனால் பாக்கரின் காலில் விழுந்தார் பி.ஜெ. இன்று த.த.ஜ.வில் பெரும்பாலானவர்கள் பாக்கர் பின்னால் அணி வகுத்து விட்டனர். பி.ஜெ.யும் பி.ஜெ.யுடனுள்ள மவுலவிகளும் நடமாடும் நடை பிணங்களாக ஆகி விட்டனர்.

மார்க்கத்தை வைத்து வயிறு பிழைக்கும் ஆலிம்களின் தலைவரான பி.ஜெ.யின் கை கீழே இறங்கி விட்டது. த.த.ஜ.வின் மாநில நிர்வாகத்தில் பாக்கரின் கை ஓங்கி நிற்கிறது. எனவே பி.ஜெ. தலைமையிலான மவுலவிகள் கூட்டம் தற்கொலை முயற்சியில் இறங்கி உள்ளது.
அந்தப்புர விஷயங்களால் நாறி நாற்றமெடுத்து விட்டதால் அவர்கள் செய்யவிருக்கும் தற்கொலையை இட ஒதுக்கீட்டுக்காக என மாற்ற முடிவு செய்து விட்டனர் போலும். இதனால்தான் இட ஒதுக்கீட்டுக்காக கப்ருகளை நிரப்பவும் தயார் என ஊருக்கு ஊர் பேனர் வைக்கத் துவங்கி விட்டனர்.
நாமாக சிறையை நிரப்பலாம். நாமாக கப்ருகளை நிரப்ப முடியுமா? கப்ருகளை நிரப்பவும் தயார் என்பது தற்கொலை முயற்சி வார்த்தைதான். இந்த வார்த்தையை படிப்பறிவு இல்லாத சாதாரண முஸ்லிம் கூட சொல்ல மாட்டான். வாய் தவறி கூட சொல்லத் தயங்கும் இந்த வார்த்தையை ஊர் ஊராக எழுதி வைத்துள்ளனர். பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையிலும் எழுதியுள்ளனர்.
த.த.ஜ.வின் மாநில நிர்வாகத்தில் பாக்கரின் கை ஓங்கி விட்டதால் பி.ஜெ. அணியினர் தற்கொலைக்கு தயாராகி விட்டனர் என்பதைத்தான் இந்தப் போர்டுகள் சாட்சி கூறுகின்றன. இவர்களது தற்கொலை முயற்சி புதிதானது அல்ல மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு வாரியம் நுழைந்ததும் 3ஆவது மாடியிலிருந்து குதிக்கப் போனார்கள். அதை ஜிஹாது என்றார்கள்.
இப்பொழுது இட ஒதுக்கீடும் ஜிஹாதுதான் என கூறி தற்கொலைக்கு அழைக்கிறார்கள். நரகத்தை நேசிப்பவர்கள்தான் இவர்களின் பின்னால் போவார்கள். இந்த முஸீபத்து பிடித்த கூட்டத்தினரிடமிருந்து நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

Monday, April 09, 2007

தலைவரின் தலை தப்புமா?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மைதீனுக்கும் துணைத் தலைவர் கோதர் மைதீனுக்கும் குடுமி பிடி சண்டை.

வக்பு வாரிய தலைவர் பதவியை பாளையங்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீனுக்கு பெற்றுத் தருவதாக கடந்த ஓராண்டு காலமாக படம் காட்டி வந்துள்ளார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மைதீன்.

வக்பு வாரிய தலைவர் பொறுப்பு ஹைதர் அலி அவர்களுக்கு என்ற செய்தி வெளியானதும் மு.லீக்கில் உள்ள அனைத்து மாவாட்ட தலைவர்களும் வேட்டியை மடித்து தலையில் கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் 6 பைசா வீதம் வக்பு சொத்துக்களை விற்று திண்றவர்கள்தான் இன்று மு.லீக்கில் மாவாட்ட தலைவர்களாக உள்ளனர்.

இப்படிப்பட்ட மாவாட்ட தலைவர்களில் ஒருவர்தான் தென்காசி துராப்சா என்பவரும். இவரது இஷhஅத் இஸ்லாம் சபை ஊழலை அம்பலப்படுத்தியது உணர்வு வார இதழ். உணர்வுக்கும் மக்கள் உரிமைக்கும் வித்தியாசம் தெரியாத மாங்கா மடையனான துராப்சா பழி வாங்கும் முகமாக தென்காசி கலவரத்தை பயன்படுத்தினார். த.மு.மு.க.வினர் பற்றி பொய் கம்ளைண்ட் கொடுத்தார். இன்று தென்காசிவாசிகள் சிறையில் வாட உணர்வுக்கும் மக்கள் உரிமைக்கும் வித்தியாசம் தெரியாத இந்த டியூப் லைட் துராப்சாதான் காரணம்.

இப்படிப்பட்டவர்களுக்கு வக்பு போர்டில் இடம் இல்லை என்றானதும் கோதர் மைதீனுக்கும் காதர் மைதீனுக்கும் மோதல் வந்து விட்டது. மாநில செயற்குழுவை கூட்டும்படி தலைவரை துணைத் தலைவர் கோர. அப்படியெல்லாம் கூட்ட முடியாது என்று தலைவர் மறுத்து விட்டார். கோபம் தலைக்கேறிய துணைத் தலைவர் பேட்டைக்காரர் பேட்டை ரவுடியாக மாறினார். அரண்டு போன திருச்சிக்காரர் செல் போனை ஆப் பண்ணி விட்டு டெல்லிக்கு ஓட்டம் பிடித்து விட்டார்.

போட்டி செயற்குழு விரைவில் கூட இருக்கிறது. வக்பு சொத்தை திண்றவர்கள் வாரியம் கிடைக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் ஒன்று கூட இருக்கிறார்கள். தலைவரின் தலை தப்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, April 06, 2007

பொன்னாடை போர்த்தலாமா?

மாண்புமிகு வக்பு வாரிய அமைச்சர் T.P.M. மைதீன் கான் சுகாதாரத்துறை அமைச்சர் K.K.S.S.R.R. ஆகியவர்களை கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி பொன்னாடை போர்த்தி வர வேற்றார்.
த.மு.மு.க. நகர தலைவர் ரசூல் மைதீன் கோரிக்கை மனு கொடுத்தார். த.மு.மு.க. நகர செயலாளர் தேயிலை மைதீன், பொருளாளர் ஆட்டோ காஜா,ராஜா, கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி உடன் உள்ளனர்


த.மு.மு.க. மனுவை படித்து பார்க்கும் அமைச்சர்.



மனு சம்பந்தமாக த.மு.மு.க.வினரிடம் விபரங்கள் கேட்டு விளக்கம் அளிக்கும் காட்சி .
பொன்னாடை போர்த்தலாமா?

மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களும் மாண்புமிகு வக்பு வாரிய அமைச்சர் மைதீன் கான் அவர்களும் மேலப்பாளையம் ஆஸ்பத்திரியை பார்வையிட வந்திருந்தனர். அப்பொழுது அரசியல்வாதிகள் பலர் சால்வைகள் அணிவித்து கவுரவித்தனர். யாரும் எதுவும் சொல்லவில்லை. தள்ளு முள்ளுகள் முடிந்து ரிலாக்ஸ் ஆனதும் இரு அமைச்சர்களுக்கும் நாம் ஆடை அணிவித்தோம்.

யார் எது செய்தாலும் கேள்விகள் கேட்காத சமுதாயம் நாம் எது செய்தாலும் கேள்விகள் கேட்கும். இது ஒரு நல்ல நிலைதான். அந்த அடிப்படையில் ஆடை அணிவிப்பது கூடுமா? என்று சில சகோதரர்கள் கேட்டனர். நபி (ஸல்) சொன்ன செய்த அன்பளிப்பை ஹராம் போல் காட்டி ரகசிய கூலி வாங்கிய லூசுப்பய ஏற்படுத்திய தவறான சிந்தனை இது.

'நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் 'பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று' என்று கூறினார்கள்' என உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்கள். இது புகாரியில் (375 ஆவது ஹதீஸாக) இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸில் அங்கி அளித்ததை வெறுக்கவில்லை பட்டு ஆண்களுக்கு ஹராம் என்றுதான் வெறுத்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)'' என்றார்கள். புகாரியில் (1473. ஆவதாக) இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை உமர்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அய்லா என்ற ஊரின் மன்னன் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் போர்த்தினார். என்பதும் புகாரியில் (1481 { 1482) இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கும் ஆடை அணிவிக்கப்பட்டிருக்கிறது. நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களுக்கு ஆடை அணிவித்து இருக்கிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ரகசியக் கூலி இதையும் ஹராம் போல் காட்டி விட்டான். அவன் நம்மை விட்டு ஒளிந்து போன பின்னரும் அவன் ஏற்படுத்திய தாக்கம் போகவில்லை என்றேன்.

இப்பொழுது சால்வை அணிவித்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்றவர்கள் சால்வை அணிவித்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்றால் அணிவிக்கவும் செய்யலாம் என்பதும் அதில் அடங்கி விட்டது என்றனர். சின்னத்திரை சின்ன புத்திக்காரர் நம்மோடு இருக்கிற காலத்திலும் ஆடைகள் அணிவித்து கவுரவித்து வரவேற்பதை நான் செய்து கொண்டுதான் இருந்தேன்.

இந்த ஆடை நமது நாட்டில் மேடைகளில் அணிவிக்கும் முறை கொண்டு வந்ததற்கும் காரணம் உண்டு. சால்வை, மேலாடை, மேலங்கி, துண்டு எனப்படும் இந்த ஆடையிலேயே ஏற்றத் தாழ்வு சாதி பேதம் இருந்தது. ஜமீன், பண்ணை எனப்படுவோர் தோள் மேல் போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் அந்த துண்டை கக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். முழங்கையில் போட்டுக் கொள்ள வேண்டும். இடிப்பில் கட்டிக் கொள்ள வேண்டும் என்றிருந்தது. இதுதான் முஸ்லிம்களிடமும் ஊடுறுவியது. செய்கு, ஸாஹிபு, தங்கள் என உருவான போலிகள் முன்னால் இப்படி நிற்பார்கள். இந்துக்களிடம் இருந்த அடிமைத் தனத்தை போக்கவும் அனைவரும் சமம் என காட்டவும்;தான் மேடையிலே துண்டு போடும் முறையை கொண்டு வந்தார்கள்.

சபைகளில் பலர் முன் ஆடை அணிவித்து கவுரவிக்கப்படும்பொழுது வரட்டு கவுரவம் வந்து அல்லாஹ்வை மறந்தவனாக ஆகி விடக் கூடாது என்பதற்காக முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினார்கள். நீ பெரிதல்ல, உனக்கு அணிவிக்கப்படும் ஆடை பெரிதல்ல, ஆடை அணிவிப்பவர் பெரிதல்ல, இந்த சபை பெரிதல்ல அல்லாஹ்வே பெரியவன் என்பதை உணர்த்திதான் தக்பீர் முழக்கம் செய்யப்படுகிறது.

நபி (ஸல்) அவர்களின் சுன்னத்களையெல்லாம் ஹராம் போல் காட்டி ரகசிய கூலி வாங்கித் திரியும் லூசுப்பய ஏற்படுத்திய தவறான சிந்தனையிலிருந்து அனைவரும் விடுபடுவோமாக. அல்லாஹ் அருள்புரிவானாக

த.மு.மு.க.வினர் கொடுத்த மனு

மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களும் மாண்புமிகு வக்பு வாரிய அமைச்சர் மைதீன் கான் அவர்களும் மேலப்பாளையம் ஆஸ்பத்திரியை பார்வையிட வந்திருந்தனர். ஆஸ்பத்திரி வளாகத்தினுள் அமைச்சர்கள் நுழைந்ததும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாயத்தின் பெயரால் உள்ள லட்டர் பேடு அமைப்புகள் எல்லாம் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக சம்பந்தமில்லாத மனுக்கள் கொடுத்து போஸ் கொடுத்து படம் காட்டினார்கள். த.மு.மு.க.வினரும் மனு கொடுத்தார்கள்.

ஆஸ்பத்திரியை சுற்றிப் பார்த்துவிட்டு ஆஸ்பத்திரியில் உள்ள அலுவலகத்திற்கு அமைச்சர்கள் சென்றார்கள். சமுதாயத்தின் பெயரால் உள்ள லட்டர் பேடு அமைப்புகள் முண்டியடித்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்து நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களிலேயே உருப்படியானதாக இருந்தது த.மு.மு.க.வினர் கொடுத்த மனுதான். எனவே அற்ப நேர நாற்காலி சுகத்திற்காக முண்டியடித்து நுழைந்து நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்களை விட்டு விட்டு வெளியில் நின்ற த.மு.மு.க.வினரை பெயர் கூறி அழைத்தார்கள்.

த.மு.மு.க.வினர் வைத்த கோரிக்கைகளை கேட்டார்கள். உடனுக்குடனே அதிகாரிகளைக் கூப்பிட்டு பைல்களை எடுத்து வரச் செய்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்தார்கள். தீர்கப்பட வேண்டிய குறைகளை உடனடியாக தீர்க்க ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். குறிப்பாக செயல்படாமல் இருக்கும் நுண்கதிர் பிரிவை 10 நாளில் செயல்படுத்தப்படும். ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்படும் என்றார்கள்.

த.மு.மு.க. எடுத்த முயற்சி மகத்தானது என்று நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர் மைதீன் அவர்களும் தி.மு.க. பிரமுகர்களும் கூடி இருந்த பொதுமக்களும் பாராட்டிச் சென்றார்கள்.
இதுதான் த.மு.மு.க.வினர் கொடுத்த மனு



மேலப்பாளையம் வந்த மாண்புமிகு அமைச்சர் மைதீன் கான் அவர்களிடம் தக்வா ஜமாஅத் அளித்த கோரிக்கை மனு

Wednesday, April 04, 2007

மு.லீக்கில் ஷம்சுல் ஆலம் பேச்செல்லாம் அத்தாரிட்டி கிடையாது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இ.யூ.முஸ்லிம் லீக்கைச் சார்ந்த வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் என்பவர் யார் என்பது பற்றி http://mdfazlulilahi.blogspot.com/2007/03/blog-post_31.html எனும் சைட்டில் இடம் பெற்றுள்ள கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணம் இவர்தான் என்ற தலைப்பு மூலம் அறிந்திருப்பீர்கள்.
வக்பு சொத்துக்களை 6 பைசாவுக்கு விற்று காடாக்கிய சமுதாய கட்சியாம்(?) மு.லீக்கைச் சார்ந்தவர் இவர். த.மு.மு.க.வினர் டெல்லி சென்றதை பயன்படுத்தி அவர்கள் ஊர் திரும்புவதற்குள் அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் எனும் பெயரில் 11.3.2007 அன்று ஒரு கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.

அதில் தவ்ஹீதுவாதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யக் கூடாது. தேர்வு செய்தால் நாங்கள் விலகி விடுவோம் என தீர்மானம் போட வேண்டும் என மு.லீக்கினர் பேசி உள்ளார்கள்.
பேசியவர்கள் யார் தாங்கள் இருக்கும் மு.லீக் கட்சி மூலம் சீட்டு பெற வக்கற்றவர்கள். த.மு.மு.க. தயவில் சீட்டு பெற்றவர்கள். த.மு.மு.க. தொண்டர்கள் உழைப்பில் மாநகராட்சி உறுப்பினர்களாக ஆனவர்கள், தங்கள் மனைவிகளை மாநகராட்சி உறுப்பினர்களாக ஆக்கியவர்கள். இவர்கள்தான் பேசி இருக்கிறார்கள். பலரது பெயரால் தந்தி அனுப்பி இருக்கிறார்கள்.

டெல்லியிலிருந்து வந்த நமக்கு சண்டாளர்கள் செய்த சதிச் செயல்கள் பற்றி தகவல் கிடைத்தது. உடனே த.மு.மு.க. நகர நிர்வாகிகளிடம் கூறி விசாரிக்கச் சொன்னோம். இப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை என மு.லீக்கர்கள் கூறி விட்டனர். கூட்டம் கூட்டியதற்குரிய ஆதராமாக அழைப்பிதழ் காப்பியை சேகரித்துக் கொடுத்தோம்.

சுன்னத் ஜமாஅத் லட்டர் பேடை பயன்படுத்தி நமது ஊரில் வீடுதோறும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பது சம்பந்தமாக என்ற பெயரில் வேஷதாரி ஷம்சுல் ஆலம் கொடுத்த அழைப்பிதழ் இதுதான்.

உடனே கூட்டம் கூட்டப்பட்டது தவ்ஹீதுவாதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யக் கூடாது. தேர்வு செய்தால் முஸ்லிம் லீக்கர்களாகிய நாங்கள் விலகி விடுவோம் என்றெல்லாம் பேசவில்லை என கூறி விட்டனர்.


அதில் கலந்து கொண்ட ஆலீம்ஸாக்களில் சிலரிடம் கேட்டதற்கு கூட்டம் நடந்தது மீலாது விழா கொண்டாடுவது பற்றி பேசினோம் என கூறி உள்ளனர். ஆலீம்ஸாக்கள் கூடினால் இதுதானே பேசுவார்கள் என பலர் நம்பி விட்டனர். நமக்கு கிடைத்த உண்மைத் தகவல் சதிகாரர்களால் பொய்யாக்கப்பட்டது. இருந்தாலும் காலம் தாழ்ந்தாலும் உண்மை வெளி வரும் என உறுதியுடன் இருந்தோம்.

24.3.2007 அன்று மு.லீக் இளைஞர் அணி சார்பில் மேலப்பாளையம் அல்லாமா இக்பால் (பசார்) திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணமான ஷம்சுல் ஆலம் என்பவர் தவ்ஹீதுவாதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யக் கூடாது என்று தீர்மானம் போட்டு அனுப்பி இருக்கிறோம் என்ற உண்மையை கக்கி விட்டார்.


உடனே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது? சம்சுல் ஆலம் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே எல்.கே.எஸ். மீரான் என்பவருக்கு செல் போன் மூலம் கடும் கண்டனம் போயிருக்கிறது. சம்சுல் ஆலம் ஒரு ஆண் மகனாக இருந்தால் இதைக் கூறி மு.லீக் சார்பில் கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டியதுதானே. சுன்னத் ஜமாஅத் லட்டர் பேடை பயன்படுத்தி நமது ஊரில் வீடுதோறும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பது சம்பந்தமாக என்ற பெயரில் ஏன் கூட்டத்தைக் கூட்டனும்? என கேட்டிருக்கின்றனர்.

வருத்தம் தெரிவித்த எல்.கே.எஸ். மீரான் மு.லீக்கில் ஷம்சுல் ஆலம் பேச்செல்லாம் அத்தாரிட்டி கிடையாது. அவர் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மு.லீக் இளைஞர் அணி மாநில தலைவர் சி.எம்.என். சலீம் ஷம்சுல் ஆலம் என்பவரின் சமுதாய விரோத பேச்சை கடுமையாகக் கண்டித்து பேசினார்.


''இப்படி அவனுக்கு கொடுக்காதே இவனுக்கு கொடுக்காதே என்று சொல்லித்தான் வாங்கிய தொகுதியில் ஒரு தொகுதியை இழந்தோம்.


செயல்படக் கூடியவர்கள் யார் வந்தாலும் வரவேற்க வேண்டும். வக்பு வாரிய சொத்துக்களை விற்று திண்றானே அவனை செருப்பால் அடியுங்கள்''


(என்று சி.எம்.என். சலீம் பேசியபொழுது ஷம்சுல் ஆலம் முகம் கறுத்து சிறுத்தது. புழுவாக துடித்து நெளிந்தார்.)


உரையின்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற சி.எம்.என். சலீம் வக்பு சொத்துக்களில் ஊழல் செய்கிறானே அவனை வெட்டுங்கள் என்றும் பேசினார்.


மு.லீக் இளைஞர் அணி மாநில தலைவர் சி.எம்.என். சலீமை வைத்து கூட்டம் நடத்தக் கூடாது. அவருக்கும் தலைவர் காதர் மைதீனுக்கும் டேம்ஸ் சரி இல்லை என்று நெல்லை மாவட்ட மு.லீக் நிர்வாகிகளும் சம்சுல் ஆலம், எல்.கே.எஸ். மீரானும் கூறி இருக்கின்றனர்.


மு.லீக் தலைவர் காதர் மைதீனுக்கு போன் போட்டு ஹாபீஸ் மைதீன் அப்துல் காதர் எம்.சி. அணியினர் கேட்டதற்கு நடத்துங்கள் என்று கூறி இருக்கிறார்.


நெல்லை மாவட்ட மு.லீக் நிர்வாகிகள், சம்சுல் ஆலம், எல்.கே.எஸ். மீரான் அனைவரது எதிர்ப்புகளையும் மீறி சி.எம்.என். சலீம் கூட்டத்தை 2 மாதத்துக்கு முன் ஹாபீஸ் மைதீன் அப்துல் காதர் எம்.சி. அணியினர் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். 'மழையின் காரணமாக அந்தக் கூட்டம் ரத்து ஆகி இருக்கிறது.

அதன் பிறகுதான் 24.03.2007 அன்று கூட்டம் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். அன்றைய தினம் நாம் அந்நஜாத் ஆசிரியர் அபுஅப்துல்லாஹ்வை அவர்களை வைத்து கூட்டம் நடத்துவதற்கு 16.3.07 அன்று திருச்சி சென்ற நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள் தேதி வாங்கி இருந்தார். 24.03.2007இல் மு.லீக் இளைஞர் அணி சார்பில் கூட்டம் என தெரிந்ததும் 1.4.07தேதிக்கு மாற்றிக் கொண்டோம்.


24.03.2007 அன்றும் மு.லீக் இளைஞர் அணி மாநில தலைவர் சி.எம்.என். சலீமை வைத்து கூட்டம் நடத்தக் கூடாது என்று மு.லீக் நெல்லை மாவட்ட நிர்வாகிகள், சம்சுல் ஆலம், எல்.கே.எஸ். மீரான் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.


ஹாபீஸ் மைதீன் அப்துல் காதர் எம்.சி. அணியினர் நெல்லை மாவட்ட மு.லீக் நிர்வாகி தென்காசி துராப்சாவை தனியாக அணுகி இருக்கின்றனர். மாநில செயலாளர் சையது சத்தாருக்கு எதிர்ப்பானவர் சலீம் என கூறி விட்டு சரி கூட்டம் நடத்துங்கள் என கூறி இருக்கின்றார்.


தங்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த மு.லீக் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கூட்டம் நடத்த அனுமதி அளித்து விட்டார்களா! நெல்லை மாவட்ட மு.லீக் நிர்வாகிகளை நீக்கி விட்டு அவர்களை அழைக்காமல் நாம் மட்டும் சி.எம்.என். சலீமை வைத்து கூட்டம் நடத்துவோம் என சம்சுல் ஆலம், எல்.கே.எஸ். மீரான் அணியினர் சேர்ந்து இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில்தான் இத்தனை கூத்துக்கள் நடந்திருக்கின்றன.


01-04-2007 அன்று நடந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தவ்ஹீதுவாதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யக் கூடாது. தேர்வு செய்தால் முஸ்லிம் லீக்கர்களாகிய நாங்கள் விலகி விடுவோம் என்று சொன்ன ஷம்சுல் ஆலமே! உங்கள் எதிர்ப்புகளை மீறி ஹைதர் அலி அவர்கள் வக்பு வாரிய தலைவராக ஆகி விட்டார். உமக்கு மானம் இருந்தால் உமது தலைவர் காதர் மைதீனை வக்பு வாரிய உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் என்றோம்.