Monday, April 09, 2007

தலைவரின் தலை தப்புமா?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மைதீனுக்கும் துணைத் தலைவர் கோதர் மைதீனுக்கும் குடுமி பிடி சண்டை.

வக்பு வாரிய தலைவர் பதவியை பாளையங்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீனுக்கு பெற்றுத் தருவதாக கடந்த ஓராண்டு காலமாக படம் காட்டி வந்துள்ளார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மைதீன்.

வக்பு வாரிய தலைவர் பொறுப்பு ஹைதர் அலி அவர்களுக்கு என்ற செய்தி வெளியானதும் மு.லீக்கில் உள்ள அனைத்து மாவாட்ட தலைவர்களும் வேட்டியை மடித்து தலையில் கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் 6 பைசா வீதம் வக்பு சொத்துக்களை விற்று திண்றவர்கள்தான் இன்று மு.லீக்கில் மாவாட்ட தலைவர்களாக உள்ளனர்.

இப்படிப்பட்ட மாவாட்ட தலைவர்களில் ஒருவர்தான் தென்காசி துராப்சா என்பவரும். இவரது இஷhஅத் இஸ்லாம் சபை ஊழலை அம்பலப்படுத்தியது உணர்வு வார இதழ். உணர்வுக்கும் மக்கள் உரிமைக்கும் வித்தியாசம் தெரியாத மாங்கா மடையனான துராப்சா பழி வாங்கும் முகமாக தென்காசி கலவரத்தை பயன்படுத்தினார். த.மு.மு.க.வினர் பற்றி பொய் கம்ளைண்ட் கொடுத்தார். இன்று தென்காசிவாசிகள் சிறையில் வாட உணர்வுக்கும் மக்கள் உரிமைக்கும் வித்தியாசம் தெரியாத இந்த டியூப் லைட் துராப்சாதான் காரணம்.

இப்படிப்பட்டவர்களுக்கு வக்பு போர்டில் இடம் இல்லை என்றானதும் கோதர் மைதீனுக்கும் காதர் மைதீனுக்கும் மோதல் வந்து விட்டது. மாநில செயற்குழுவை கூட்டும்படி தலைவரை துணைத் தலைவர் கோர. அப்படியெல்லாம் கூட்ட முடியாது என்று தலைவர் மறுத்து விட்டார். கோபம் தலைக்கேறிய துணைத் தலைவர் பேட்டைக்காரர் பேட்டை ரவுடியாக மாறினார். அரண்டு போன திருச்சிக்காரர் செல் போனை ஆப் பண்ணி விட்டு டெல்லிக்கு ஓட்டம் பிடித்து விட்டார்.

போட்டி செயற்குழு விரைவில் கூட இருக்கிறது. வக்பு சொத்தை திண்றவர்கள் வாரியம் கிடைக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் ஒன்று கூட இருக்கிறார்கள். தலைவரின் தலை தப்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: