Tuesday, November 28, 2006

ஒமானில் நடந்த சம்பவம்-மண்ணறை வேதனையை மனிதர்கள் அறிய முடியாது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ரசிகவ் ஞானியார் அவர்கள் அனுப்பிய மண்ணறை வேதனை என்ற தலைப்பிலான போட்டோவுடன் கூடிய மெயில் கண்டேன். ரசிகவ் ஞானியார் அவர்கள் தமிழில் எழுதி இருந்ததால் எனக்கு புரிந்தது. மிகச் சமீப காலமாக இதே போட்டோவுடன் கூடிய மெயில்கள் பலரிடமிருந்தும் நமக்கு வந்துள்ளன. அவை ஆங்கிலத்தில் இருந்தது. எனக்கு ஆங்கிலம் அதனால் அது என்ன போட்டோ என்ன செய்தி என புரிய முடியாமல் டெலிட் செய்து விட்டேன். ஞானியார் அவர்கள் தமிழில் அனுப்பிய மெயிலைக் கண்ட பின்தான் அதன் பின்னணி புரிந்தது.

ஓமானில் நடந்த உண்மைச் சம்பவம். குர்ஆனை காலால் எட்டி உதைத்த 12 வயது முஸ்லிம் சிறுமி குரங்காக மாறி விட்டாள். இது 3 மாதங்களுக்கு முன்பு வரை உலவி வந்த செய்தி. பாம்பு தீண்டிய ஜனாஸா என்று படத்துடன் செய்தி வந்தது. காஃபதுல்லாஹ்வில் வைத்து பொய் சத்தியம் செய்தவரின் தலை பாம்புத் தலையாக மாறி விட்டது என்றும் படத்துடன் செய்தி வந்தது. இப்படி ஏராளமான செய்திகள் அடிக்கடி வருகின்றன. இவை முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிக்கைகளும் செய்திகளாக வந்து விடுகின்றன.

மேலோட்டமாக பார்க்கும்பொழுது இஸ்லாத்தின் உயர்வை இயம்புவது போல் இந்த செய்திகள் இருக்கும். சிந்தித்துப் பார்த்தால் இவை யாவும் ஈமானுக்கு வேட்டு வைக்கும் செய்திகளே. இஸ்லாத்தின் எதிரிகளான ஷய்த்தான்களால் இஸ்லாத்துக்கு எதிராக இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகளே என அறியலாம். அந்தக் கட்டுக் கதைகளில் ஒன்றுதான் இப்பொழுது வந்துள்ள மண்ணறை வேதனை என்ற செய்தியும்.

இம்மை என்று கூறும் நாம் வாழும் இந்த உலகுக்கும் மறுமை என்று கூறும் மறு உலகுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை (வாழ்க்கை) உண்டு. அந்த நிலையை (வாழ்க்கையை)த்தான் கபுறு வாழ்க்கை என்கிறோம். அந்த கபுறு வாழ்க்கையில் நடக்கும் மண்ணறை வேதனையை மனிதர்கள் அறிய முடியுமா? நிச்சயமாக முடியாது. இதோ அதற்குரி ஆதாரம்.

.. .. அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் பர்ஸக் (திரை - தடுப்பு) இருக்கிறது என்று அல் குர்ஆனின் 23:100வது வசனத்தில் அல்லாஹ் கூறி உள்ளான். எவர்களுக்குப் பின்னால் பர்ஸக் (திரை - தடுப்பு) இருக்கிறது என்று அல்லாஹ் கூறி விட்டானோ அவர்களின் நிலையை யாராலும் அறியவே முடியாது. மண்ணறை வேதனையை மனிதர்கள் அறிய முடியாது என்பது ஈமான் சம்பந்தப்பட்டது. எனவே இப்பொழுது வெளியாகியுள்ள செய்தி ஈமானுக்கு வேட்டு வைக்கும் செய்தி என்பதை இந்த ஒரு ஆயத்து மூலமே விளங்கிக் கொள்ளலாம். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி.

Sunday, November 26, 2006

நேச குமார் மாதிரி முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளைக் கூற மாட்டோம். ஆதாரங்களை மட்டுமே வெளியிடுவோம்.

Saturday, November 25, 2006

தஞ்சை பெரிய கோயில் நிழல் அற்புதமா? அறிவியலா?