Wednesday, June 26, 2019

கேவியட் என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும்?

1988, 89 களிலேயே குமரி மாவட்டம் கோட்டாறு சகோதரர்கள் வழி காட்டுதலில் மேலப்பாளையத்தில் செட்டி ஸலாம், அப்துல் ஹமீது போன்ற பலர் பெயரில் ஜாக் சார்பில் கேவியட் போட்டோம். 

மதுரை மாநாடு கேவியட்டில் JAQH மாநில தலைமை கோட்டை விட்டது. அதனால் 1992 ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜாக் மாநாடு துவங்கி முதல் அமர்வு நடந்தும். 

எதிர்பாரா திசையான மதுரை  கிட்டாபாய் வழக்கால் மைதானத்தை சுற்றி வளைத்தது போலீஸ். மாநாட்டை தொடர்ந்து நடத்த விடாமல்   தடை செய்தது. திடலுக்கு உள்ளே உள்ளவர்கள் வெளியே வர முடியவில்லை. வெளியே உள்ளவர்கள் உள்ளே போக முடியவில்லை. மேடையில் SSU ஸைபுல்லா ஹாஜா பேசிக் கொண்டிருக்கும்பொழுது எதிர்ப்பாளர்கள் மட்டும் உள்ளே நுழைந்து தகராறு செய்து கொண்டிருந்தார்கள்.

கோவை பாஷா, இம்தாதி, PJ போன்றவர்கள் மனைவி மக்களுடன் மறியல் செய்தார்கள்.  போலீஸ் துப்பாக்கியுடன் நிற்கிறான். பொம்பளைங்க இருக்காங்க எனவே கலைந்து போங்க என அமீர் கமாலுத்தீன் சொன்னார். சுட்ட நம்மளும்தான் சாவோம் நாம செத்த பிறகு பொம்பளைங்களைங்க இருந்து என்ன செய்ய என்று வாதம் வைக்கப்பட்டது. கடைசியில் அமீருக்கு 
கட்டுப்பட்டு மறியல் வாபஸ் பெறப்பட்டு மாநாடு நிறுத்தப்பட்டது. தடை செய்ப்பட்ட அதே இடத்தில் அல்லாஹ்வின் பேரருளால் 2000 ஆகஸ்ட்டில் மாநாடு நடத்தப்பட்டது. 

இனி வழக்கறிஞர் அல்பி நிஜாம். B.Sc.,B.L., அவர்கள் கேவியட் என்றால் என்ன? என்பதற்கு அளித்துள்ள விளக்கத்தை பாருங்கள்

கேவியட் (முன்னெச்சரிப்பு மனு)      பிரிவு 148 A - உரிமையியல் நடைமுறை சட்டம்
1) ஒரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அல்லது தொடரப்படவுள்ள உரிமை வழக்கு அல்லது நடவடிக்கை ஒன்றில் விண்ணப்பம் ஒன்று செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் போது அல்லது செய்யப்பட்டுள்ளவிடத்து அத்தகைய விண்ணப்பம் விசாரிக்கப்படுகின்றபோது நீதிமன்றத்தில் முன்னிலையாக உரிமையுள்ள எவரும் அதனையொட்டி கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம் பிரிவு 148-A(1)

2) கேவியட் மனு தாக்கல் செய்துள்ளவர் யாரால் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதோ அவருக்கு கேவியட் நோட்டீஸ் ரிஜிஸடர் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.  பிரிவு 148-A(2)

3) கேவியட் மனு தாக்கல் செய்த பின் நாம் யாருக்கு கேவியட் மனு அனுப்பினோமோ அவர் நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு போட்டால் நீதிமன்றம் கேவியட் போட்டவருக்கு அதை பற்றி அறிவிப்பு கொடுக்க வேண்டும். பிரிவு 148-A(3)

4) நீதிமன்றத்தில் வழக்கு போடும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கு மனுவின் நகல் ஆவணங்கள்பத்திரங்கள் போன்றவற்றை தன்னுடைய செலவிலேயே  கேவியட் போட்டவருக்கு உடனடியாக கொடுக்க வேண்டும் . பிரிவு 148-A(4)

5) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரை அமலில் இருக்கும். அந்த 90 நாட்கள் முடியும் முன்னர் மீண்டும் கேவியட் போட்டால் அது மேலும் 90 நாட்கள் அமலில் இருக்கும். பிரிவு 148-A(5)

வழக்கறிஞர் அல்பி நிஜாம். B.Sc.,B.L.,
மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி


ஜாக் மாநாடு தடையானது பற்றி உருது பத்திரிக்கையில் வந்த செய்தி