Sunday, July 29, 2007

உருப்பட மாட்டார்கள். உருப்பட விடவும் மாட்டார்கள்.

வெற்றி முரசையும் நிறுத்தியாச்சு. மு.லீக் இளைஞர் அணியையும் கலைச்சாச்சு.

18-07-2007 அன்று சென்னை சென்ற நாம் புழல் ஏரியில் திறக்கப்பட்டுள்ள புதிய மத்திய சிறைக்குச் சென்று குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்களை சந்தித்தோம். எந்தக் குற்றமும் செய்யாமல் 10 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்.

மத்திய மந்திரியாக ஆகி இருப்பார்.

சென்னை செல்லும் முன் பா.ம.க. நெல்லை பிரமுகர் ஒருவர் நம்மை சந்தித்தார். 1995இல் நடைபெற்ற தடா எதிர்ப்பு பேரணிக்காக அவர் இல்லம் சென்று அழைத்ததை நினைவூட்டினார். குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லாமல் பா.ம.க.வில் மாநில பொருளாளர் பதவி வழங்கினார் டாக்டர் ஐயா ராமதாஸ். அதுமட்டுமல்ல கொடுங்கையூரில் வீடு கட்டி கொடுத்ததும் பா.ம.க.தான். அவர் தொடர்ந்து பா.ம.க.வில் இருந்திருந்தால் மத்திய மந்திரியாக ஆகி இருப்பார்.

யாராலும் வெளியில் எடுக்க முடியவில்லை.

கண்டவர்களின் சொல் கேட்டு பா.ம.க.வை விட்டு வெளியேறினார். பா.ம.க.வை விட்டு விலகிய பின்னர் என் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது புத்திமதி சொன்னேன் கேட்கவில்லை. இன்று அநியாயமாக சிறையில் வாடி வருகிறார். 10 ஆண்டுகள் ஆகியும் அவரை யாராலும் வெளியில் எடுக்க முடியவில்லை பார்த்தீர்களா? என்றார்.

கோவை தீர்ப்புக்குப் பின்னர் ஜாமீன் கிடைத்து விடும்.

புழல் சிறை சென்ற நாம் குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்களிடம் பா.ம.க. நெல்லை பிரமுகர் சந்தித்து பேசிய விபரத்தைச் சொன்னோம். கோவை தீர்ப்புக்குப் பின்னர் ஜாமீன் கிடைத்து விடும் என்று த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி கூறியதாக குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்களின் மகனார் மைதீன் ரஸாக் கூறினார்.

இந்த ஜோக்கை கட்சி அலுவலக வாசலில் மாட்டி வைத்துள்ளார்கள்.

சென்னையின் பல பகுதிகளுக்குச் சென்ற நாம் 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஜோக் ஒன்றைக் கண்டோம். அமீரகத்தில் பணிபுரிந்தபொழுது அறிமுகமாகி நண்பர்களான வரிசை கனி, குத்புத்தீன் ஐபக் போன்றவர்களை சந்திக்க மரைக்காயர் லெப்பைத் தெருவுக்குச் சென்றோம். அங்குதான் 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஜோக்கைக் கண்டோம். வரிசை கனி வீட்டுக்கு எதிரில் ஒரு கட்சியின் மாநில தலைமை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் வாசலில்தான் அந்த ஜோக் எழுதப்பட்டுள்ளது. மாநில தலைவர் - - - அவர்களே மாநில பொதுச் செயலாளர் - - - - அவர்களே வருக வருக. இதுதான் அந்த ஜோக். ஒரு தகர போர்டில் பெயிண்டால் எழுதப்பட்டிருந்த இந்த ஜோக்கை கட்சி அலுவலக வாசலில் மாட்டி வைத்துள்ளார்கள்.

அப்பொழுது அந்த மனைவியின் நிலை எப்படி இருக்கும்?

இந்த கட்சியின் மாநில தலைமைக்கு அதன் மாநில தலைவரும் மாநில பொதுச் செயலாளரும் வருவது அபூர்வமானது கட்சி மய்யித்தானது என்பதைத்தான் இந்த வருக வருக போர்டு காட்டுகிறது என்றேன். இன்னொருவர் சொன்னார். வீட்டை விட்டு விட்டு ஊர் சுற்றும் கணவன் எப்பொழுதாவதுதான் மனைவியிடம் வருவான். அப்பொழுது அந்த மனைவியின் நிலை எப்படி இருக்கும்? அதே மாதிரிதான் இது உள்ளது என்றார். இந்த அலுவலகம் எது என கேட்கிறீர்களா? அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை அலவலகம்.

வெற்றி முரசை நிறுத்தி விட்டு மணிச்சுடர் வெளியிடுகிறார்கள்.

அங்கே ஒருவர் மு.லீக் மாநில இளைஞர் அணி எனும் பெயரால் கொடி கட்டி பறந்ததாரே என்பதாலும் நண்பர் என்ற முறையிலும் அவரை விசாரித்தோம். சி.எம்.என். சலீம் எப்படி இருக்கிறார் என கேட்டதுமே வந்த பதில் சி.எம்.என். சலீமா? மு.லீக் மாநில இளைஞர் அணியையே கலைத்து விட்டாச்சே என்ற பதில் வந்தது. வெற்றி முரசையும் நிறுத்தியாச்சு. மு.லீக் இளைஞர் அணியையும் கலைச்சாச்சு என்று இன்னொருவர் சொன்னார். ஏன் என்ன என்று கேட்டதற்கு சையது சத்தார் கை ஓங்கி விட்டது மு.லீக் கட்டிடம் முழுவதும் அவர் பொறுப்பில்தான் இருக்கிறது. சலீம் வளர்ச்சி பிடிக்கவில்லை. வெற்றி முரசை நிறுத்தி விட்டு மணிச்சுடர் வெளியிடுகிறார்கள் என்றார்கள்.

வங்கி தேர்தலில் மு.லீக் இளைஞர் அணி.

சி.எம்.என். சலீம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று கேள்விப்பட்டவைகளைக் கூறி நேரில் விசாரித்தோம். மு.லீக் மாநில இளைஞர் அணியை கலைத்து விட்டதாக அறிவித்து விட்டார்கள் என்றார். வட்டியை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு வங்கி தேர்தலில் மு.லீக் இளைஞர் அணி ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றெல்லாம் மேலப்பாளையத்தில் போஸ்ட்டர் பார்த்தோமே என்றோம். அது எல்.கே.எஸ். மீரான் மைதீன் ஒட்டி இருப்பார் என்றார். வருக வருக என எழுதி வைத்துள்ளார்களே என்றேன். இவர்களை திருத்த முடியாது. நம்பி ஏமாந்து விட்டோம். இவர்கள் காருக்கு பெட்ரோல் போட முடியாமல் கஷ்டப்பட்டபொழுது போட்டுக் கட்டியவர்கள் துபை காயிதே மில்லத் பேரவையினர். அவர்களுக்கே துரோகம் செய்து விட்டார்கள் என்றார்.

இப்பொழுது ஐ.டி.எம்கே. என்ற புதிய அமைப்பு ஆரம்பித்துள்ளார்கள்.

வரிசை கனி, குத்புத்தீன் ஐபக், அப்துர்ரவூப் போன்றவர்கள் காயிதே மில்லத் பேரவையில் இணைந்து செயல்பட்டு மு.லீக்கை வளர்க்க பல தடவை என்னை அழைத்தார்கள். மு.லீக்கில் நான் பட்ட அணுபவத்தைச் சொன்னேன் அவர்கள் கேட்கவில்லை. 2004 ரமழானில் இரண்டு முறை துபை வந்து விடிய விடிய வரிசை கனி, குத்புத்தீன் ஐபக் ஆகியவர்கள் என்னிடம் பேசினார்கள். மு.லீக்கை வளர்க்க பல்வேறு தொலை நோக்கு திட்டங்களைச் சொன்னார்கள். அதற்காக காதர் மைதீனிடம் தனியாக சந்தித்து பேசி அணுமதி வாங்கி விட்டதாகக் கூறினார்கள். அப்பொழுது அவர்களிடம் சொன்னேன். உங்களை நான் தடுக்க மாட்டேன். நீங்கள் சரி செய்து விட்டால் சந்தோஷம். ஆனால் முடியாது என்பது என் நிலை என்றேன். பிறகு அணுபவப்பூர்வமாக உணர்ந்து வெளியேறி இருக்கிறீர்கள். இப்பொழுது ஐ.டி.எம்கே. என்ற புதிய அமைப்பு ஆரம்பித்துள்ளார்கள்.

மு.லீக்கினரின் லட்சணங்கள் பற்றி கூறி இருக்கிறேன்.

2003க்குப் பிறகு துபை வந்தபொழுதெல்லாம் நேரில் வந்து என்னை சந்தித்த நீங்கள் மீண்டும் மு.லீக்கில் இணைந்து செயல்படும்படி கூறினீர்கள். நான் மறுத்து மு.லீக்கினரின் லட்சணங்கள் பற்றி கூறி இருக்கிறேன். மு.லீக் என்பது ஆட்டு மந்தை. அதை அவர்கள் மட்டுமே அறுத்து திண்ண வேண்டும் என்று உள்ளார்கள். அவர்களை திருத்தவே முடியாது. உருப்பட மாட்டார்கள். உருப்பட விடவும் மாட்டார்கள். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். உங்களை நான் தடுக்க மாட்டேன். நீங்கள் திருத்தி விட்டால் மீண்டும் இணைவோம். ஆனால் திருந்த மாட்டார்கள் என்பது உறுதி என்றேன். இப்பொழுது அணுபவப்பூர்வமாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.

லீக் எனும் பெயரால் உள்ள கட்சிகளில் அரை டஜன்.

நீங்களும் அபு ஆஸியாவும் இணைந்து புதிய அமைப்பு துவங்கி உள்ளதாக கேள்விப்பட்டோமே என்றோம். புதிய அமைப்பு எதுவும் இல்லை. அது ஏற்கனவே உள்ள கல்வி அமைப்பு. அவர்கள் என்ன மு.லீக் இளைஞர் அணியை கலைப்பது நாம் நடத்துவோம் என கடையநல்லூர் சகோதரர்கள் சொல்கிறார்கள். 22.7.2007 அன்று கடையநல்லூரில் மு.லீக் இளைஞர் அணி சார்பில் கூட்டம் வைத்துள்ளார்கள். எனவே 22ஆம் தேதி அங்கு போகிறேன் என்றார் சி.எம்.என். சலீம். அதன் பிறகு நமது சமுதாயத்தின் இன்னொரு பிரமுகரை சந்தித்தோம். சமுதாயத்தின் பெயரால் புற்றீசல்கள் போல் வந்து விட்ட அமைப்புகள் பற்றி கவலைப்பட்டார். தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் சார்பில் எத்தனை அமைப்புகள் உள்ளன என்று கேட்டோம் நூற்றுக்கு மேல் உள்ளது என்றார். லீக் எனும் பெயரால் உள்ள கட்சிகளில் அரை டஜன் பெயர்களைச் சொன்னார். அவை.

லீக் (கட்சியின்) பெயர் தலைவர்
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக். திருச்சி கே.எம். காதர் மைதீன்.
2. அகில இந்திய முஸ்லிம் லீக். திருச்சி எம். ரபீக் அஹ்மது.
3. தேசிய லீக் தருமபுரி ஏ.எம். அப்துல் காதர்.
4. தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூர் அல்தாப்
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக் எஸ். Nஷக் தாவூது
6. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் அ.சா. உமர் பாரூக்

உங்க ஆளு டவுசர் பாய் வைத்திருக்கும் கட்சியின் கொடி கூட த.மா.ந.வா.பே. உடையதுதான் என்றார். அது என்ன த.மா.ந.வா.பே. என்றோம். தமிழ் மாநில நபிமார் வாரிசுப் பேரவை. அதன் கொடி மேல் பகுதி பச்சை. கீழ்ப் பகுதி கருப்பு, மத்தியில் வெள்ளை. என்றார். அது ஆய்வு செய்து முடிவு செய்த கொடி என்றுதானே களவாடிய பத்திரிக்கையில் போட்டார்கள் என்றோம். உடனே த.மா.ந.வா.பே.யின் ஆதாரத்தை எடுத்துப் போட்டார். கருப்பு நிறம் தீமைகளுக்கு எதிர்ப்பும், பச்சை நிறம் நன்மைகளுக்கு ஆதரவும், வெள்ளை நிறம் நல்லிணக்கம், ஒற்றுமை இவைகளை குறிக்கும் என பேரவையின் கொடி என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. ஆக அது ஆய்வு செய்து முடிவு செய்த கொடி அல்ல. களவாடிய கொடி என்பது இன்னும் உறுதியானது.