Wednesday, April 04, 2007

மு.லீக்கில் ஷம்சுல் ஆலம் பேச்செல்லாம் அத்தாரிட்டி கிடையாது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இ.யூ.முஸ்லிம் லீக்கைச் சார்ந்த வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் என்பவர் யார் என்பது பற்றி http://mdfazlulilahi.blogspot.com/2007/03/blog-post_31.html எனும் சைட்டில் இடம் பெற்றுள்ள கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணம் இவர்தான் என்ற தலைப்பு மூலம் அறிந்திருப்பீர்கள்.
வக்பு சொத்துக்களை 6 பைசாவுக்கு விற்று காடாக்கிய சமுதாய கட்சியாம்(?) மு.லீக்கைச் சார்ந்தவர் இவர். த.மு.மு.க.வினர் டெல்லி சென்றதை பயன்படுத்தி அவர்கள் ஊர் திரும்புவதற்குள் அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் எனும் பெயரில் 11.3.2007 அன்று ஒரு கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.

அதில் தவ்ஹீதுவாதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யக் கூடாது. தேர்வு செய்தால் நாங்கள் விலகி விடுவோம் என தீர்மானம் போட வேண்டும் என மு.லீக்கினர் பேசி உள்ளார்கள்.
பேசியவர்கள் யார் தாங்கள் இருக்கும் மு.லீக் கட்சி மூலம் சீட்டு பெற வக்கற்றவர்கள். த.மு.மு.க. தயவில் சீட்டு பெற்றவர்கள். த.மு.மு.க. தொண்டர்கள் உழைப்பில் மாநகராட்சி உறுப்பினர்களாக ஆனவர்கள், தங்கள் மனைவிகளை மாநகராட்சி உறுப்பினர்களாக ஆக்கியவர்கள். இவர்கள்தான் பேசி இருக்கிறார்கள். பலரது பெயரால் தந்தி அனுப்பி இருக்கிறார்கள்.

டெல்லியிலிருந்து வந்த நமக்கு சண்டாளர்கள் செய்த சதிச் செயல்கள் பற்றி தகவல் கிடைத்தது. உடனே த.மு.மு.க. நகர நிர்வாகிகளிடம் கூறி விசாரிக்கச் சொன்னோம். இப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை என மு.லீக்கர்கள் கூறி விட்டனர். கூட்டம் கூட்டியதற்குரிய ஆதராமாக அழைப்பிதழ் காப்பியை சேகரித்துக் கொடுத்தோம்.

சுன்னத் ஜமாஅத் லட்டர் பேடை பயன்படுத்தி நமது ஊரில் வீடுதோறும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பது சம்பந்தமாக என்ற பெயரில் வேஷதாரி ஷம்சுல் ஆலம் கொடுத்த அழைப்பிதழ் இதுதான்.

உடனே கூட்டம் கூட்டப்பட்டது தவ்ஹீதுவாதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யக் கூடாது. தேர்வு செய்தால் முஸ்லிம் லீக்கர்களாகிய நாங்கள் விலகி விடுவோம் என்றெல்லாம் பேசவில்லை என கூறி விட்டனர்.


அதில் கலந்து கொண்ட ஆலீம்ஸாக்களில் சிலரிடம் கேட்டதற்கு கூட்டம் நடந்தது மீலாது விழா கொண்டாடுவது பற்றி பேசினோம் என கூறி உள்ளனர். ஆலீம்ஸாக்கள் கூடினால் இதுதானே பேசுவார்கள் என பலர் நம்பி விட்டனர். நமக்கு கிடைத்த உண்மைத் தகவல் சதிகாரர்களால் பொய்யாக்கப்பட்டது. இருந்தாலும் காலம் தாழ்ந்தாலும் உண்மை வெளி வரும் என உறுதியுடன் இருந்தோம்.

24.3.2007 அன்று மு.லீக் இளைஞர் அணி சார்பில் மேலப்பாளையம் அல்லாமா இக்பால் (பசார்) திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணமான ஷம்சுல் ஆலம் என்பவர் தவ்ஹீதுவாதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யக் கூடாது என்று தீர்மானம் போட்டு அனுப்பி இருக்கிறோம் என்ற உண்மையை கக்கி விட்டார்.


உடனே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது? சம்சுல் ஆலம் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே எல்.கே.எஸ். மீரான் என்பவருக்கு செல் போன் மூலம் கடும் கண்டனம் போயிருக்கிறது. சம்சுல் ஆலம் ஒரு ஆண் மகனாக இருந்தால் இதைக் கூறி மு.லீக் சார்பில் கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டியதுதானே. சுன்னத் ஜமாஅத் லட்டர் பேடை பயன்படுத்தி நமது ஊரில் வீடுதோறும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பது சம்பந்தமாக என்ற பெயரில் ஏன் கூட்டத்தைக் கூட்டனும்? என கேட்டிருக்கின்றனர்.

வருத்தம் தெரிவித்த எல்.கே.எஸ். மீரான் மு.லீக்கில் ஷம்சுல் ஆலம் பேச்செல்லாம் அத்தாரிட்டி கிடையாது. அவர் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மு.லீக் இளைஞர் அணி மாநில தலைவர் சி.எம்.என். சலீம் ஷம்சுல் ஆலம் என்பவரின் சமுதாய விரோத பேச்சை கடுமையாகக் கண்டித்து பேசினார்.


''இப்படி அவனுக்கு கொடுக்காதே இவனுக்கு கொடுக்காதே என்று சொல்லித்தான் வாங்கிய தொகுதியில் ஒரு தொகுதியை இழந்தோம்.


செயல்படக் கூடியவர்கள் யார் வந்தாலும் வரவேற்க வேண்டும். வக்பு வாரிய சொத்துக்களை விற்று திண்றானே அவனை செருப்பால் அடியுங்கள்''


(என்று சி.எம்.என். சலீம் பேசியபொழுது ஷம்சுல் ஆலம் முகம் கறுத்து சிறுத்தது. புழுவாக துடித்து நெளிந்தார்.)


உரையின்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற சி.எம்.என். சலீம் வக்பு சொத்துக்களில் ஊழல் செய்கிறானே அவனை வெட்டுங்கள் என்றும் பேசினார்.


மு.லீக் இளைஞர் அணி மாநில தலைவர் சி.எம்.என். சலீமை வைத்து கூட்டம் நடத்தக் கூடாது. அவருக்கும் தலைவர் காதர் மைதீனுக்கும் டேம்ஸ் சரி இல்லை என்று நெல்லை மாவட்ட மு.லீக் நிர்வாகிகளும் சம்சுல் ஆலம், எல்.கே.எஸ். மீரானும் கூறி இருக்கின்றனர்.


மு.லீக் தலைவர் காதர் மைதீனுக்கு போன் போட்டு ஹாபீஸ் மைதீன் அப்துல் காதர் எம்.சி. அணியினர் கேட்டதற்கு நடத்துங்கள் என்று கூறி இருக்கிறார்.


நெல்லை மாவட்ட மு.லீக் நிர்வாகிகள், சம்சுல் ஆலம், எல்.கே.எஸ். மீரான் அனைவரது எதிர்ப்புகளையும் மீறி சி.எம்.என். சலீம் கூட்டத்தை 2 மாதத்துக்கு முன் ஹாபீஸ் மைதீன் அப்துல் காதர் எம்.சி. அணியினர் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். 'மழையின் காரணமாக அந்தக் கூட்டம் ரத்து ஆகி இருக்கிறது.

அதன் பிறகுதான் 24.03.2007 அன்று கூட்டம் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். அன்றைய தினம் நாம் அந்நஜாத் ஆசிரியர் அபுஅப்துல்லாஹ்வை அவர்களை வைத்து கூட்டம் நடத்துவதற்கு 16.3.07 அன்று திருச்சி சென்ற நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள் தேதி வாங்கி இருந்தார். 24.03.2007இல் மு.லீக் இளைஞர் அணி சார்பில் கூட்டம் என தெரிந்ததும் 1.4.07தேதிக்கு மாற்றிக் கொண்டோம்.


24.03.2007 அன்றும் மு.லீக் இளைஞர் அணி மாநில தலைவர் சி.எம்.என். சலீமை வைத்து கூட்டம் நடத்தக் கூடாது என்று மு.லீக் நெல்லை மாவட்ட நிர்வாகிகள், சம்சுல் ஆலம், எல்.கே.எஸ். மீரான் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.


ஹாபீஸ் மைதீன் அப்துல் காதர் எம்.சி. அணியினர் நெல்லை மாவட்ட மு.லீக் நிர்வாகி தென்காசி துராப்சாவை தனியாக அணுகி இருக்கின்றனர். மாநில செயலாளர் சையது சத்தாருக்கு எதிர்ப்பானவர் சலீம் என கூறி விட்டு சரி கூட்டம் நடத்துங்கள் என கூறி இருக்கின்றார்.


தங்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த மு.லீக் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கூட்டம் நடத்த அனுமதி அளித்து விட்டார்களா! நெல்லை மாவட்ட மு.லீக் நிர்வாகிகளை நீக்கி விட்டு அவர்களை அழைக்காமல் நாம் மட்டும் சி.எம்.என். சலீமை வைத்து கூட்டம் நடத்துவோம் என சம்சுல் ஆலம், எல்.கே.எஸ். மீரான் அணியினர் சேர்ந்து இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில்தான் இத்தனை கூத்துக்கள் நடந்திருக்கின்றன.


01-04-2007 அன்று நடந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தவ்ஹீதுவாதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யக் கூடாது. தேர்வு செய்தால் முஸ்லிம் லீக்கர்களாகிய நாங்கள் விலகி விடுவோம் என்று சொன்ன ஷம்சுல் ஆலமே! உங்கள் எதிர்ப்புகளை மீறி ஹைதர் அலி அவர்கள் வக்பு வாரிய தலைவராக ஆகி விட்டார். உமக்கு மானம் இருந்தால் உமது தலைவர் காதர் மைதீனை வக்பு வாரிய உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் என்றோம்.

No comments: