பெறுனர்:- தலைவர், மற்றும் ஜமாஅத்தார்கள்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நமது த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளர் எஸ். ஹைதர்அலி அவர்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். புதிய தலைவரான அவர்கள் 06-05-2007 ஞாயிறு அன்று நமது மேலப்பாளையம் மாநகருக்கு வருகை தர உள்ளார்கள்.
வக்பு போர்டு சேர்மேனாக பொறுப்பேற்றுள்ள அவர்கள் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள், ஊழியர்களுடைய வருமானத்துக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடிய திட்டங்களையும், அதுபோல் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவிக்கான திட்டங்களையும் செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பயன்படும் நல்ல பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். குறிப்பாக கல்வி நிலையங்கள், தொழிற்பயிற்சி கூடங்கள், தொகுப்பு வீடுகள், மாணவர் விடுதிகள், மருத்துவ மனைகள் போன்றவை வக்பு வாரியம் சார்பாக அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இவற்றில் நமது மேலப்பாளையம் பகுதிக்கு தேவையானதை அமைத்து தர வலியுறுத்தி தங்கள் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலப்பாளையம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்களை சந்திக்கும் நிகழ்ச்சி 2 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷh அல்லாஹ் 06-05-2007 ஞாயிறு மாலை மஃரிபுக்குப் பின் ஞானியாரப்பா நகர் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்ஆ பள்ளி முன்பும். இஷhவுக்குப் பின் மேலப்பாளையம் அல்லாமா இக்பால் (பசார்) திடலில் வைத்தும் நடைபெறும். மழையாக இருந்தால் புதுமனைப் பள்ளியில் வைத்து நிகழ்ச்சி நடைபெறும்.
இப்படிக்கு
இப்படிக்கு
கே.எஸ். ரசூல் மைதீன்
தலைவர்
த.மு.மு.க.
த.மு.மு.க.
மேலப்பாளையம்
தொடர்புகளுக்கு 0091- 9943144666, 9362989204, 9843149469
No comments:
Post a Comment