மாண்புமிகு வக்பு வாரிய அமைச்சர் T.P.M. மைதீன் கான் சுகாதாரத்துறை அமைச்சர் K.K.S.S.R.R. ஆகியவர்களை கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி பொன்னாடை போர்த்தி வர வேற்றார்.
த.மு.மு.க. நகர தலைவர் ரசூல் மைதீன் கோரிக்கை மனு கொடுத்தார். த.மு.மு.க. நகர செயலாளர் தேயிலை மைதீன், பொருளாளர் ஆட்டோ காஜா,ராஜா, கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி உடன் உள்ளனர்
த.மு.மு.க. மனுவை படித்து பார்க்கும் அமைச்சர்.
மனு சம்பந்தமாக த.மு.மு.க.வினரிடம் விபரங்கள் கேட்டு விளக்கம் அளிக்கும் காட்சி .
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களும் மாண்புமிகு வக்பு வாரிய அமைச்சர் மைதீன் கான் அவர்களும் மேலப்பாளையம் ஆஸ்பத்திரியை பார்வையிட வந்திருந்தனர். அப்பொழுது அரசியல்வாதிகள் பலர் சால்வைகள் அணிவித்து கவுரவித்தனர். யாரும் எதுவும் சொல்லவில்லை. தள்ளு முள்ளுகள் முடிந்து ரிலாக்ஸ் ஆனதும் இரு அமைச்சர்களுக்கும் நாம் ஆடை அணிவித்தோம்.
யார் எது செய்தாலும் கேள்விகள் கேட்காத சமுதாயம் நாம் எது செய்தாலும் கேள்விகள் கேட்கும். இது ஒரு நல்ல நிலைதான். அந்த அடிப்படையில் ஆடை அணிவிப்பது கூடுமா? என்று சில சகோதரர்கள் கேட்டனர். நபி (ஸல்) சொன்ன செய்த அன்பளிப்பை ஹராம் போல் காட்டி ரகசிய கூலி வாங்கிய லூசுப்பய ஏற்படுத்திய தவறான சிந்தனை இது.
'நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் 'பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று' என்று கூறினார்கள்' என உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்கள். இது புகாரியில் (375 ஆவது ஹதீஸாக) இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸில் அங்கி அளித்ததை வெறுக்கவில்லை பட்டு ஆண்களுக்கு ஹராம் என்றுதான் வெறுத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)'' என்றார்கள். புகாரியில் (1473. ஆவதாக) இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை உமர்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அய்லா என்ற ஊரின் மன்னன் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் போர்த்தினார். என்பதும் புகாரியில் (1481 { 1482) இடம் பெற்றுள்ளது.
நபி(ஸல்) அவர்களுக்கும் ஆடை அணிவிக்கப்பட்டிருக்கிறது. நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களுக்கு ஆடை அணிவித்து இருக்கிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ரகசியக் கூலி இதையும் ஹராம் போல் காட்டி விட்டான். அவன் நம்மை விட்டு ஒளிந்து போன பின்னரும் அவன் ஏற்படுத்திய தாக்கம் போகவில்லை என்றேன்.
இப்பொழுது சால்வை அணிவித்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்றவர்கள் சால்வை அணிவித்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்றால் அணிவிக்கவும் செய்யலாம் என்பதும் அதில் அடங்கி விட்டது என்றனர். சின்னத்திரை சின்ன புத்திக்காரர் நம்மோடு இருக்கிற காலத்திலும் ஆடைகள் அணிவித்து கவுரவித்து வரவேற்பதை நான் செய்து கொண்டுதான் இருந்தேன்.
இந்த ஆடை நமது நாட்டில் மேடைகளில் அணிவிக்கும் முறை கொண்டு வந்ததற்கும் காரணம் உண்டு. சால்வை, மேலாடை, மேலங்கி, துண்டு எனப்படும் இந்த ஆடையிலேயே ஏற்றத் தாழ்வு சாதி பேதம் இருந்தது. ஜமீன், பண்ணை எனப்படுவோர் தோள் மேல் போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் அந்த துண்டை கக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். முழங்கையில் போட்டுக் கொள்ள வேண்டும். இடிப்பில் கட்டிக் கொள்ள வேண்டும் என்றிருந்தது. இதுதான் முஸ்லிம்களிடமும் ஊடுறுவியது. செய்கு, ஸாஹிபு, தங்கள் என உருவான போலிகள் முன்னால் இப்படி நிற்பார்கள். இந்துக்களிடம் இருந்த அடிமைத் தனத்தை போக்கவும் அனைவரும் சமம் என காட்டவும்;தான் மேடையிலே துண்டு போடும் முறையை கொண்டு வந்தார்கள்.
சபைகளில் பலர் முன் ஆடை அணிவித்து கவுரவிக்கப்படும்பொழுது வரட்டு கவுரவம் வந்து அல்லாஹ்வை மறந்தவனாக ஆகி விடக் கூடாது என்பதற்காக முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினார்கள். நீ பெரிதல்ல, உனக்கு அணிவிக்கப்படும் ஆடை பெரிதல்ல, ஆடை அணிவிப்பவர் பெரிதல்ல, இந்த சபை பெரிதல்ல அல்லாஹ்வே பெரியவன் என்பதை உணர்த்திதான் தக்பீர் முழக்கம் செய்யப்படுகிறது.
நபி (ஸல்) அவர்களின் சுன்னத்களையெல்லாம் ஹராம் போல் காட்டி ரகசிய கூலி வாங்கித் திரியும் லூசுப்பய ஏற்படுத்திய தவறான சிந்தனையிலிருந்து அனைவரும் விடுபடுவோமாக. அல்லாஹ் அருள்புரிவானாக

No comments:
Post a Comment