Friday, April 06, 2007

த.மு.மு.க.வினர் கொடுத்த மனு

மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களும் மாண்புமிகு வக்பு வாரிய அமைச்சர் மைதீன் கான் அவர்களும் மேலப்பாளையம் ஆஸ்பத்திரியை பார்வையிட வந்திருந்தனர். ஆஸ்பத்திரி வளாகத்தினுள் அமைச்சர்கள் நுழைந்ததும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாயத்தின் பெயரால் உள்ள லட்டர் பேடு அமைப்புகள் எல்லாம் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக சம்பந்தமில்லாத மனுக்கள் கொடுத்து போஸ் கொடுத்து படம் காட்டினார்கள். த.மு.மு.க.வினரும் மனு கொடுத்தார்கள்.

ஆஸ்பத்திரியை சுற்றிப் பார்த்துவிட்டு ஆஸ்பத்திரியில் உள்ள அலுவலகத்திற்கு அமைச்சர்கள் சென்றார்கள். சமுதாயத்தின் பெயரால் உள்ள லட்டர் பேடு அமைப்புகள் முண்டியடித்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்து நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களிலேயே உருப்படியானதாக இருந்தது த.மு.மு.க.வினர் கொடுத்த மனுதான். எனவே அற்ப நேர நாற்காலி சுகத்திற்காக முண்டியடித்து நுழைந்து நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்களை விட்டு விட்டு வெளியில் நின்ற த.மு.மு.க.வினரை பெயர் கூறி அழைத்தார்கள்.

த.மு.மு.க.வினர் வைத்த கோரிக்கைகளை கேட்டார்கள். உடனுக்குடனே அதிகாரிகளைக் கூப்பிட்டு பைல்களை எடுத்து வரச் செய்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்தார்கள். தீர்கப்பட வேண்டிய குறைகளை உடனடியாக தீர்க்க ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். குறிப்பாக செயல்படாமல் இருக்கும் நுண்கதிர் பிரிவை 10 நாளில் செயல்படுத்தப்படும். ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்படும் என்றார்கள்.

த.மு.மு.க. எடுத்த முயற்சி மகத்தானது என்று நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர் மைதீன் அவர்களும் தி.மு.க. பிரமுகர்களும் கூடி இருந்த பொதுமக்களும் பாராட்டிச் சென்றார்கள்.
இதுதான் த.மு.மு.க.வினர் கொடுத்த மனு



No comments: