ததஜ விலுள்ள சகோதரர்கள் உளப்பூர்வமாக குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம்.எஙகளுக்கு இயக்க வெறி கிடையாது மறுகைக்காகவே இருக்கிறோம் என்று சொல்லக் கூடிய நியாயமானவர்களாக இருக்கக் கூடியவர்கள், முபாஹலா ஆரம்பித்து அல்தாஃபி வெளியேறுவது வரை உள்ள நிகழ்வுகளை ஒன்றுக்கு பத்து தடவை திரும்ப திரும்ப கவனமாக அந்த வீடியோவை பாருங்கள்.
அல்தாஃபி தெளிவாக சொன்ன முபாஹலா வார்த்தைகளில் இருந்த நியாயமும், கலீல் ரஸுல் வார்த்தையில் இருந்த சூட்சுமத்தையும் தெளிவாக அறிந்து கொள்வீர்கள்.
தனக்கெதிராக முபாஹலா செய்பவர் சரியான வார்த்தைகளை கொண்டு அல்லாஹ்விடத்திலே தன் நிலைப்பாட்டை ஒப்படைத்து, இதில் நான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வுடைய சாபம் என் மீதும் என் குடும்பத்தார் மீதும் உண்டாகட்டும் என்று கேட்க வேண்டும்.
இதைத்தான் முபாஹலா குறித்த இறை வசனம் மிக தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.
தாங்கள் மட்டும் சாபத்திலிருந்து தப்பித்து கொண்டு குறிப்பிட்ட பெண்ணை மட்டும் சாபத்திற்கு உள்ளாகும் தந்திரமான வார்த்தைகளை கொண்டு அல்லாஹ்வையே ஏமாற்றும் விதமாக கலீல் ரஸுல் வார்த்தைகளை பயன்படுத்திய அயோக்கியத்தனத்தை புரிந்துக் கொள்ள முடியும்.
எப்படி யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்திலே, அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் மீது சாந்தியுண்டாகட்டும் என்று சொல்வது போல் சொல்லி, அஸ்ஸாமு அலைக்கும், உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்று வார்த்தை ஜாலங்களை கொண்டு சபித்தார்களோ அதுபோல் ததஜவினர் தங்களுக்கான முபாஹலா வார்த்தைகளை அல்லாஹ்வையே ஏமாற்றுவது போல் தந்திரமாக உச்சரித்ததை உண்மையில் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய ததஜ வினர் இவர்களின் கயமைத்தனத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.
அல்தாஃபியின் முபாஹலா வார்த்தை :
நான் சேலத்தில் இருக்கும் போதே அந்த பெண்ணுடன் தொடர்பு என்றும், நான் சென்னை வந்த பிறகும் அந்த தொடர்பை புதுப்பித்து தொடர்ந்தேன். என் மனைவி வீட்டிலில்லாத நேரம் அவளை வரவழைத்து விபச்சாரம் செய்தேன். மனைவி ஊரிலில்லாத நேரங்களில் தொடர்ந்து அவளை வரவழைத்து உல்லாசமாக இருக்கலாம் என்று சொன்னேன் என்று ஊரெல்லாம் நீங்கள் ( ததஜ ) பரப்பினீர்கள். நீங்கள் சொல்வது போல் நான் விபச்சாரம் செய்யவுமில்லை. அந்த பெண்ணிடம் அப்படி சொல்லவுமில்லை. இதில் நான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீதும் என் குடும்பம் மீதும் உண்டாகட்டும்.
தெளிவாக இருக்கிறது பாருங்கள்
கலீல் ரஸுல்: அந்த பெண் சொன்னதை சொன்னோம். நீங்கள் சொன்னதையும் சொன்னோம். இதில் நாங்கள் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் எங்கள் மீதும் எங்கள் குடும்பம் மீதும் உண்டாகட்டும்.
எப்படி லாவகமாக அந்த பெண்ணை பலிகடா ஆக்கிவிட்டு தப்பிக்கிறார்கள் பாருங்கள். (இது பி.ஜே. மூளை)
கேள்விபட்டதை பரப்பினீர்கள் என்பது தான் அல்தாஃபியுடைய குற்றச்சாட்டு.
அந்த பெண் சொன்னாள் என்றால் அவளை அல்லவா அழைத்து வந்திருக்க வேண்டும் என்று அல்தாஃபி கேட்டதற்கு கலீல் ரஸுல் சொல்கிறார் அவளுடன் நீங்கள் விபச்சாரம் செய்தீர்கள் என்று அவள் சொன்னதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.
முபாஹலா இடத்திற்கு வராமல் எந்த சாட்சிகளும் இல்லாமல் ஒரு விபச்சாரி தங்களிடம் சொன்ன வாக்கு மூலத்தை அல்லாஹ்விடம் செய்யும் முபாஹலாவிற்கு மேலான வார்த்தையாக எடுத்துக் கொண்டு அதை பிரகடனப்படுத்துவார்களாம்,இவர் கள்தான் தவ்ஹீத் வாதி என்று நம்பிட்டு இருக்காங்க மக்கள்!
ஒரு மனிதன் தன்னையும் தன் குடும்பத்தையும் அல்லாஹ்வை நம்பி சாபத்திற்கு உட்படுத்திக் கொண்ட நிலையை விட சாட்சிகள் இல்லாத ஒரு விபச்சாரியின் வார்த்தை இவர்களுக்கு மேலாகிவிட்டதா?
#தோழர்களே_சிந்தியுங்கள்_விடை_ கிட்டும்
No comments:
Post a Comment