Saturday, April 14, 2018

இயக்கத்தின் ( இஸ்லாமிய ஜமாஅத்தின்) சேவை; சமூகத்திற்க்கு தேவை !

பல்வேறு நல்ல இயக்கங்கள் இருப்பது பிரச்சனை அல்ல;
ஆனால்.....

👉🏼 *சரியான இயக்கத்தில் இணைந்து இஸ்லாமிய பற்றுடன் செயல்படுவது பிரச்சனை இல்லை;*
*ஆனால் நன்மையான காரியங்களை செய்யும்போதும் இயக்கவெறியுடன் செயல்படுவதில் தான் பிரச்சனை.*

👉🏼 *நன்றாக ஆராய்ந்தபின், நீங்கள் தவறாக இருக்கலாம் என்று அழகிய முறையில் எடுத்துக்கூறுவது (சுட்டிக்காட்டுவது) பிரச்சனை இல்லை;*
*ஆனால் நாங்கள் மட்டும் தான் சரி என்று முரண்டுபிடிப்பது பிரச்சினை.*

👉🏼 *நமது இயக்கத்தவர்கள் மத்தியில் நெருங்கிய தோழமையை ஏற்படுத்திக்கொள்வது பிரசச்சனை இல்லை;*
*ஆனால் நமது இயக்கத்தில் இல்லாத பிற முஸ்லிம்களை மாற்றார் போல் பாவிப்பது பிரச்சினை.*

👉🏼 *நமது இயக்கம் நடத்தும் நன்மையான நிகழ்ச்சிகளில், மற்ற இயக்கத்தவர்கள் உட்பட எல்லோரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்று ஆர்வம்கொள்வதும் அதற்க்கு முயற்சி செய்வதும் பிரச்சனை இல்லை;*
*ஆனால் பிற இஸ்லாமிய இயக்கங்கள் நன்மையான நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அதில் நமது இயக்க சகோதரர்கள் கலந்துகொள்ள கூடாது என்று நினைப்பதும் (பயனடைய விடாமல்) தடுப்பதும் தான் பிரச்சனை.*

👉🏼 *ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கத்திற்க்கும், தாங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத்திற்க்கு உட்பட்டு பைலா (இயக்கச் சட்டங்கள்) இருப்பது பிரச்சனை இல்லை;*
*ஆனால் அந்த பைலா (இயக்கக் சட்டங்கள்), இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு முரணாக இருந்தாலும் அதனை எடுத்துக்கூறி திருத்தாமல், நாம் எடுத்து செயல்படுத்துவதில் தான் பிரச்சனை.*

👉🏼 *ஆக, இஸ்லாமிய இயக்கம் (ஜமாஅத்)  பிரச்சனை அல்ல;*
*ஆனால் இயக்கம் (ஜமாஅத்) பற்றிய இஸ்லாமிய பார்வையை சரியாக புரிந்துகொள்ளாத ஒரு சில இயக்க உறுப்பினர்களால் தான் பிரச்சனை.*

இயக்கத்தின் (ஜமாஅத்தின்) சேவை சமூகத்திற்க்கு தேவை. ஆனால் அந்த சேவைகள் இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சேவை செய்யக்கூடிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இஸ்லாமிய அகீதாவை அறிந்து செயல்பட வேண்டும்.

இஸ்லாமிய பற்றிர்க்கும் - இயக்க வெறிக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து செயல்படுவோம்.

குர்ஆன் ஹதீஸிர்க்கு முரணாக இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டவும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக.

No comments: