Saturday, April 14, 2018

மாவட்ட நிர்வாகியே ஜமாஅத் நம்பரை பயன்படுத்தி கள்ள ஐடியில் வலம் வரும் அவலநிலை!

From  971 58 928 9549‬: 
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
14-4-2018
சமீப காலமாக தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளை ஓரங்கட்டிவிட்டு மனிதக்கறி உண்டு சுவைத்து வருகிறது. இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்று கூப்பாடு போடும் கொள்கைக் குன்றுகளுக்கு இந்த பதிவு. 

ஆதாரத்தை நாம் வழங்கிவிட்டால் அவர்களுக்கு ஏதோ 80 கசையடிகள் கொடுக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்காமல் அதற்கு நேரெதிராக பதவி உயர்வு வழங்கி ஊக்கப்படுத்தும் வேலையை மாநில நிர்வாகம் செய்து வருகிறது. அதனால் தான் போட்டி போட்டு அவதூறுச் சேற்றை இயன்ற அளவுக்கு வாரி இறைக்கின்றனர்.

தன் மகள் பாத்திமா திருடினாலும் தப்பு தப்பு தான் என்று நபியவர்களின் ஹதீஸை மேடையில் மட்டும் முழங்கி விட்டு மாநில நிர்வாகியாகவே இருந்தாலும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருந்தால் மட்டுமே மாநிலத் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை அறிந்து உலகமே இன்று தூற்றுகிறது.

அந்த வகையில் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட ஒரு ஆ(ட்டை)ளை நாம் இங்கு தக்க சான்றுகளுடன் சுட்டிக் காட்டியுள்ளோம். இவரை என்ன செய்யப் போகிறது மாநில, மாவட்டத் தலைமை. பொறுத்திருந்து பார்க்கத் தானே போகிறோம்.

தலைமைக்கு ஆதரவான கருத்து இருந்தால் அவதூறு அனைத்தும் அனுமதிக்கப்பட்டது என்று ஆகிவிடுமோ. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

ஆனால் இந்த கள்ளத்தனத்தை நாம் விடுவதாக இல்லை. அவர் பதிவுக்கு அவரே பொறுப்பு. என்ன கள்ள மசூராவை அவர் விளக்கு பிடித்து பார்த்தார். கழிவாகக் கழுவப்பட்டு பயந்து ஓடி ஒளிந்தோமா? நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் 4 கேள்விகளைக் கேட்டு விட்டு தானே போனோம். பெயர், பொறுப்பு, செல் நம்பர் தந்து விட்டு தானே போனோம். மிமிக்ரி ஆடியோ என்று மழுப்பினோமா, இல்லையே. இதோ இந்த நபர் தான் நேராக கேள்வி கேட்க பயந்து கள்ளத் தனமாக ஒளிந்து கொண்டு அட்டைக்கத்தி சுற்றுகிறார்.

நேர்மையாக இவர் மீது குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுங்கள். இல்லாவிட்டால் யார் யார் எந்த எந்த கள்ள ஐடி யில் உலா வருகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டாமல் ஓய மாட்டோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற உதாரணம் போல சிக்கியது ஒருவர் மட்டுமே.



இருக்கும் வரை உழைப்பையும், ரத்தத்தையும் உறிஞ்சிக் கொள்வது. வெளியேறினால் விமர்சிப்பது. மாநிலம் போல இருபதாயிரம், நாற்பதாயிரம் என சம்பளமும், 20%, 40% கமிசனுமா வாங்கி வேலை செய்தோமா? நன்றி கெட்டவர்களே..

No comments: