Thursday, April 05, 2018

அல்தாஃபி விஷயமாக இனி எதுவும் பேசமாட்டோம். பி.ஜே.

நிர்வாகம் எதற்கும் பதில் அளிக்காது. இத்துடன் முடிந்துவிட்டது என.பி.ஜே இன்று அறிவித்துவிட்டார்.

ஏன் அப்படி சொன்னார், அல்தாஃபி நீக்கம் தொடர்பான பிரச்சனையில் முபஹலா வும் நடந்துவிட்டது. அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டிவிடலாம் அனைத்திற்க்கும் விளக்கம் சொல்லியாச்சு. இது அவரின் விளக்கம்..


முபஹலா அனைத்திற்க்கும் தயார் என இரு தரப்பும் துவங்கினீர்கள்.
இந்த முபஹலாவில் பிரதான பிரச்சனை என்ன? அல்தாஃபி ஒரு பெண்ணோடு தனிமையில் மட்டும் இருந்தாரா அல்லது விபச்சாரமும் செய்தாரா?

அல்தாஃபி - விபச்சாரம் அளவில் எதும் நடைபெறவில்லை. தனிமையில் இருந்தது உண்மை. இது அல்லாஹ்வின் மீது சத்தியம். இது பொய்யாக இருக்குமானால் என் மீதும் குடும்பத்தின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என பிரார்த்தனை செய்தார்.

அடுத்து தலைமை சார்பாக வந்த .

கலீல் ரசூல் - பெண் சொன்னதை பரப்பினோம். அல்தாஃபி சொன்னதையும் பரப்பினோம் என முபஹலா செய்தார். பிறகு நிதானம் இழந்து அந்த பெண் சொல்வது போன்று விபச்சாரம் நடந்தது உண்மை என நாங்கள் நம்புகிறோம் என கூறி அனைவரின் மீதும் சாப அழைப்பு வேண்டி பிரார்த்தனை செய்தார்.

இதன் பிறகு மேடை ஏறிய பி.ஜே விபச்சாரம் நடந்ததாக நாங்கள் சொல்லவில்லை என கலீல்ரசூலுக்கு மறுப்பு கொடுத்து பேசினார். அந்த பெண் சொன்னதை தான் நாங்கள் எடுத்து சொன்னோம் அவ்வளவு தான் என்றார்.

அடுத்த நாள் பி.ஜே நேரலையில் தோன்றி அதையும் மறுத்து தனிமையில் இருந்தால் விபச்சாரம் நடந்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம் என்கிறார்.

1)அல்தாஃபி விபச்சாரம் செய்தார் உண்மை.
2)அல்தாஃபி விபச்சாரம் செய்ததாக நாங்கள் சொல்லவில்லை. அந்த பெண் சொன்னதை எடுத்து சொன்னோம் அவ்வளவு தான்.
3) அல்தாஃபி விபச்சாரம் செய்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

அல்லாஹ்வின் சாப அழைப்பு விஷயத்தில் இத்தனை முரண்பாடுகளா?
இதை எல்லாம் யாரும் கேள்வியாக கேட்கக்கூடாது. அது தான் அண்ணன் மூடு விழா நடத்திட்டாரே!
+971 58 928 9549‬

No comments: