Saturday, April 14, 2018

மைலை கம்ருதீன் தலைமை செய்யும் போது கொஞ்சம் கூட பொங்காம கிடந்தாரே ஏன்?

From +971 58 928 9549‬: ஜமா அத்தில் அல்தாஃபி தொடர்பான பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க துவங்கிய நாட்களில் இருந்து முகநூல் நேரலைக்கு பஞ்சமே இல்லை. அதிலும் ஒரு சிலர் தங்களது முகத்தை நேரலையில் காட்டி பரவசம் அடைவதும் உண்டு. 

எப்படியோ தலைமையின் இரண்டாம் தள அதிகாரப்பூரவ முகநூல் போராளி மைலை கம்ருதீன் என்பவர் நேரலை மற்றும் பி.ஜே மற்றும் யூசுப் யாஸ்மின் என்ற பெண்ணிடம் விசாரித்த ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
https://www.youtube.com/watch?v=fq8HwtRADqA 

தலைமை, விசாரனை ஆடியோ வெளியிடாமல் இவர் மூலம் ஏன் வெளியிட்டார்கள் என தெரியவில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும், அவர் உரையில் கடுமையாக ஆவேசப்படுகிறார்
தீமைக்கு எதிராக கோபத்தை கொப்பிளிக்கிறார். சரி நல்ல விஷயம் தான் தீமைக்கு எதிராக கொப்பிளிக்கிறார். அது யார் செய்தாலும் வரணும்ல தலைமை செய்யும் போது கொஞ்சம் கூட பொங்காம கிடந்தாரே ஏன்?

அவர் இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தரட்டும்.முதலில் மாநாடு வேலை இருக்கு யாரும் அல்தாஃபிக்கு பதில் கொடுக்காதீர்கள் என்று பதிவு போட்ட தலைமை, இவரிடம் அந்த ஆடியோவை கொடுத்து பதில் போடுகிறார்கள், மேலும் இவர் மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அவர்களின் சகோதரர், அது போக இவர் தாவா களத்தில் தாயீயாக இருந்து ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டார், அந்த பிரச்சனைகளுக்கு நாம் போக விரும்பவில்லை.

அல்தாஃபி தவறு செய்து புகார் ஆக்கப்பட்ட நேரத்தில் ஒப்புக் கொண்டு பொறுப்பில் இருந்து விலகி தனியாக ஒதுங்கி இருந்தார். அந்த பெண்ணும் பெரும் பாவம் நடைபெறவில்லை என புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டார். பிரச்சனை முடிந்தது.அவர் ஆந்திராவில் தனது வேலையை பார்த்து ஒதுங்கிவிட்டார்.

இதன் பிறகு ரியாத் மைதீன் பெயரில் குமரி ஜலீல் ஐ பயன்படுத்தி கள்ள ஐடியில் முகநூல் மற்றும் வாட்ஸப் பில் இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்கியது யார்? ரஹ்மத்துல்லாஹ் இல்லையா?

உங்கள் கோபம் ஏன் ரஹ்மத்துல்லாஹ் பக்கம் திரும்பவில்லை?

அந்த பெண் வாபஸ் பெற்றதை கடைசியாக நடந்த முபஹலா வரை மறைக்க காரணம் என்ன?
ஏன் மறைத்தீர்கள் என்று கம்ருதீன் கேட்ப்பாரா?

அல்தாஃபி வீட்டில் அவரின் மனைவி சம்மதத்துடன் தங்க வைக்கப்பட்ட இரண்டு பெண்களை குறித்து விபச்சாரம் நடந்து இருக்கும் என அவதூறாக எந்த ஆதாரம் இல்லாமல் அடித்து சொன்னாரே பி.ஜே!

இப்படி மார்க்கத்திற்க்கு முரணாக ஏன் பெண்கள் விஷயத்தில் அவதூறு பரப்பினீர்கள் என பி.ஜே வுக்கு எதிராக பொங்குனாரா?

ஒவ்வொரு பிரச்சனையையும் நேரலை மூலம் மக்களுக்கு சொல்கிறோம் என நேரலையில் பிரச்சனையை இழுத்து விட்டது யார்?

ஏன் இப்படி நேரலையில் பிறருடைய மானத்தோடு விளையாடுகிறீர்கள் என கொப்பிளிக்க காணோம்?

பெண் விஷயமான குற்றச்சாட்டிற்க்கு 5 வருட கால நடவடிக்கை என்பதை ஆயுட்கால தடை என்று இல்லாத பைலாவை உருவாக்கி அல்தாஃபியை ஓரங்கெட்ட நடந்த சதி செய்தது யார்?

அல்தாஃபி நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பொதுகுழுவில் எம்.ஐ.சுலைமான் 5 வருட நடவடிக்கை என்று அறிவிக்கிறார்?

இது கம்ருதீன் கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை.

பொதுகுழு ஒப்புதலுக்கு ஆதாரம் கேட்கும் பொழுது ஆதாரம் இல்லாமல் அந்த பொதுகுழு கேசட்டை அல்தாஃபி திருடி விட்டார் என்று அவதூறாக பேசியது யார்?

நிரூபித்தார்களா? இதையும் சேர்த்து தட்டி கேட்டால் கம்ருதீனை ஒரு கணக்குக்கு சேர்க்கலாம்.
அதிலும் அல்தாஃபிக்கு உதவி செய்த பணம் பி.ஜே வின் பொருளாதாரம் இல்லை வெளிநாட்டில் இருந்து வந்த பணம் என்று சொன்ன பிறகும், பி.ஜே கொடுத்தார் என நேரலையில் பேசி தனது பி.ஜே பக்தியை வெளிபடுத்தி பேசி முடித்திருக்கிறார்.

உங்கள் கோபம் நியாயமாக இரண்டு பேர் பக்கமும் திரும்பி இருக்க வேண்டும். அது தலைமையின் பக்கம் திரும்ப வில்லை என்றால் இது மகா செட்டிங் என்று சொல்லமாட்டேன், இது மெகா மெகா செட்டிங்.

பொய்யர்களை அல்லாஹ் அடையாளப்படுத்தி காட்டுவான். யார் பொய்யனோ அவர்களை இவ்வுலகில் அடையாளப்படுத்தி காட்டு யா அல்லாஹ்!

No comments: