Thursday, April 05, 2018

அல்லாஹ்வின் சாபத்தை கேட்கும் அளவுக்கு துணிந்தவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

 அல்தாஃபி விஷயமாக சம்பந்தப்பட்ட பெண் இரண்டு விதமான தகவலை சகோ.பி.ஜே அவர்களிடம் பதிவு செய்துள்ளார்.

1) அல்தாஃபி என்னுடன் விபச்சாரம் செய்துவிட்டார். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்.

2) அல்தாஃபி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட உடன் அவர் மீது நான் சொன்னதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். பெரும் பாவம் நடைபெறவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
http://fazlulilahi.blogspot.ae/2018/04/blog-post_23.html 

முதல் சொன்ன தகவலை மட்டும் மக்களிடம் பரப்பிவிட்டு இரண்டாவதாக சொன்ன தகவலை லாவகமாக மறைத்து விட்டார்கள்.

அல்தாஃபி இது குறித்து பல முறை நேரலையில் கேட்டார். மௌனம் காத்த மாநில தலைமை.

முபஹலாவில் சொல்கிறார்கள் - அந்த பெண் சொன்ன தகவலையும் அல்தாஃபி சொன்ன தகவலையும் முழுமையாக மக்கள் மன்றத்தில் வைத்துவிட்டோம். இதில் நாங்கள் பொய்யர்களாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என பிரார்த்திக்கிறார்கள்.

அதன் பிறகு இன்று நேரலையில் பி.ஜே முதல் முறையாக, ஆமாம் அந்த பெண் விபச்சாரம் குறித்த புகாரை வாபஸ் பெற்றால் ஆனாலும் நாங்கள் விபச்சாரம் செய்ததாகவே கருதுகிறோம் என்கிறார்.

அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் அல்லாஹ்வின் சாபத்தை கேட்கும் அளவுக்கு துணிந்தவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
 ‪+971 58 928 9549‬:

No comments: