Wednesday, April 11, 2018

பழைய வண்ணாரப்பேட்டை கிளை முஹம்மது சுல்தான்


+971 58 928 9549: அலி போனா என்ன, புலி போனா என்ன,
எங்களுக்கு அண்ணன் மட்டும் போதும்,
ஜமாத், கட்டமைப்பு என்று சொல்லியே வாழ்நாளை ஒப்பேற்றிவிடுவோம்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…….
வடசென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை முஹம்மது சுல்தான் ஆகிய நான் தெரிவிப்பது யாதெனில்…….

1998 லிருந்து தவ்ஹீத் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அல்லாஹ்வின் அருளால் தமுமுக-வில் இனைந்து செயல்பட்டு கொண்டிருந்தேன். அதன் பிறகு தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்ப காலத்திலிருந்து கிளை நிர்வாகியாக செயல்பட்டு கொண்டிருந்தேன். 

அதன் பிறகு நான்கு ஆண்டு காலமாக வடசென்னை மாவட்ட துணை செய்லாளராகவும் மேலும் இரண்டு பதவிகாலம் (7) ஆண்டுகள் வடசென்னை மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு கொண்டிருந்தேன். 

அதற்கு பிறகு வட சென்னை மாவட்ட பொதுகுழு நடைபெற்றது. இதில் TNTJ பைலாவின் அடிப்படையில் நான் முக்கிய நிர்வாகியாக வரமுடியாது என்று தெரிவித்து விட்டேன். 

ஆனால் மீண்டும் மாவட்ட துணைச்செயலாளராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். நான் என்னால் முடியாது என்று கூறினேன் வற்புறுத்தியதால் அல்லாஹ் நாடி இருக்கின்றான் என்று சரி ஒத்துக்கொண்டு ஓராண்டு துணை செயலாளராக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். அல்ஹம்துலில்லாஹ்!

இதற்கு அருள்புரிந்த எல்லாப்புகழும் அல்லாஹ்விற்க்கே!

மேலும் எனக்கு ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர், மற்றும் கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், மற்றும் உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கும் ஜஸக்கல்லாஹ் கைர். அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

நான் கடந்த 01:02:2018. அன்று ஜமாஅத் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துவிட்டேன், தற்பொழுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமீபகால நிர்வாக செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் அடிப்படை உறுப்பினரிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

இப்படிக்கு.
முஹம்மது சுல்தான்.
பழைய வண்ணாரப்பேட்டை கிளை.
வட சென்னை மாவட்டம்.
9884132651.

No comments: