Tuesday, April 03, 2018

பொய்யர், மோசடியாளர், மார்க்கத்தில் விளையாடுபவர் அடையாளம் காட்டப்பட்ட நாள்! ஏப்ரல் 1, 2018

கேட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் - நபிமொழி
அப்பெண் கூறியதையே பரப்பினோம். எனவே அது தவறல்ல - கலீல் ரசூல்


4 சாட்சிகளில் ஒன்றாவது முரண்படுமானால் சாட்சிகள் அத்தனை பேருக்கும் 80 கசையடி வழங்கவேண்டும் - இஸ்லாமியச் சட்டம்

அல்தாஃபியுடன் விபச்சாரம் செய்ததாக அப்பெண் கூறியதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். - கலீல் ரசூல்.

 எங்கே சாட்சி?

அல்தாஃபி விபச்சாரம் செய்ததாக நாங்கள் சொல்லவில்லை. அப்பெண் கூறியதையே பரப்பியதாக கலீல் ரசூல் தெளிவாக கூறினார் - பிஜே.

அல்தாஃபியைத் திருமணம் செய்யும் நோக்கில் சொன்னேன். விபச்சாரம் ஏதும் நடக்கவில்லை. எனவே அல்தாஃபியை இதுதொடர்பாக விசாரிக்க வேண்டாம் என அப்பெண் பின்னர் கடிதம் கொடுத்தார். அக்கடிதத்தைத் ததஜவினர் மறைத்துவிட்டனர் - அல்தாஃபி


அப்பெண் தான் கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுவிட்டார் - பிஜே இன்று ஒப்புதல்

**************

சிந்தியுங்கள், ததஜவில் மார்க்கத்துக்காக மட்டுமே இருப்பதாக நினைக்கும் சொந்தங்களே. எவ்வளவு பெரிய மோசடியும் பித்தலாட்டமும் செய்துள்ளனர்.

 மார்க்கத்தைத் தங்கள் விருப்பத்துக்கு வளைத்து விளையாடியுள்ளனர்.

கேட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்ற நபிமொழிக்கேற்ப, நாங்கள் பொய்யர்கள்தாம் என அன்று கலீல் ரசூல் தம் வாயாலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளார். 4 சாட்சிகள் இன்றி வரும் விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு 80 கசையடிகள் கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டப்படி அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு கலீல் ரசூல் சொன்னதைக் கேட்டு கரகோசம் எழுப்பிய அனைத்து ததஜவினருக்கும் 80 கசையடிகள் கொடுக்கவேண்டும். இங்கே இஸ்லாமிய ஆட்சி இல்லாததால் தப்பித்தீர்கள். ஆனால், இங்கே பெண்டிங் ஆகியுள்ள இந்தத் தண்டனைக்குப் பகரமாக மறுமையில் அல்லாஹ்விடம் என்ன தண்டனை எதிர்பார்க்கிறீர்கள்? தௌபா செய்யுங்கள். அல்தாஃபியிடம் மன்னிப்பு கேளுங்கள். அதுதான் இஸ்லாம் சொல்லித்தரும் பண்பு.


ஒரே மேடையில், 10 நிமிடங்களுக்கு முன்னர் கலீல் ரசூல் அவ்வளவு தெளிவாக அந்தப் பெண் கூறிய விபச்சாரக் குற்றச்சாட்டை நாங்கள் நம்புகிறோம் எனக் கூறியதை மாற்றி, அல்தாஃபி விபச்சாரம் செய்ததாக நாங்கள் சொல்லவேயில்லை எனக்கூறும் பிஜேவின் பேச்சினை இனியுமா நம்புகிறீர்கள்? வெறும் 10 நிமிடத்திலேயே உலகம் முழுக்கக் கண்டுகொண்டிருக்கும் ஒரு நிகழ்வில் இவர் இப்படி பச்சை பொய்ச் சொல்வது யாரைத் திருப்திப்படுத்த? இறைவனின் கண்காணிப்பு என்ற அச்சம் இம்மியளவேனும் இருப்பின் இப்படி பச்சை பொய் வருமா?

இப்போது, அப்பெண் தம் குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுவிட்டார் என சம்மதித்துள்ளீர்கள். இது எப்போது நடந்தது என்பதைச் சொல்லுங்கள் கொள்கைசீலர்களே...
ஏப்ரல் 1, 2018 அந்த நிகழ்ச்சிக்கு முன்னர் நடந்ததா அல்லது பின்னரா? முன்னர் தானே? எனில், முன்னுக்குப் பின் முரணாக பேசும் அப்பெண்ணின் குற்றச்சாட்டினை எந்தத் தரவின் அடிப்படையில் நம்புவதாக இச்சமுதாயத்தின் முன் நெஞ்சை நிமிர்த்தி கூறினீர்கள்?


மார்க்கம் சொல்வதற்கு எதிராக, சாட்சிகள் இன்றி அதனை நாங்கள் நம்புகிறோம் எனக் கூறவும் அதனையே பரப்பவும் அதனை முன்வைத்து முபாஹலா செய்யவும்... இங்கே கேட்பதற்கு இஸ்லாமிய ஆட்சியோ இஸ்லாமிய அடிப்படையில் விசாரித்து தீர்ப்பளிக்கும் முறையோ இல்லை என்ற தைரியமா?

 இங்கே தப்பிவிடுவீர்கள், வாய் ஜாலத்தால்... நாளை அல்லாஹ்விடம் நீங்கள் தப்பமுடியுமா?

வெட்கப்படுங்கள் ததஜவினரே... இருப்பதில் சரியான இயக்கம் என்ற நம்பிக்கையில் இருந்த உங்கள் நம்பிக்கையைக் குழிதோண்டி புதைத்துள்ளார்கள் உங்கள் தலைவர்கள்...
இவ்வளவு அப்பட்டமாக மார்க்கச் சட்டத்துக்கு விரோதமாக பச்சை பொய்யை அடித்துவிடும் இவர்களைத் தடுக்க, அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்ட ஒரு ஆலிம் கூடவா உங்களிடையே இல்லை? 

இதுவரை கொள்கை கொள்கை என பேசிக் கொண்டிருந்த அந்த தாயிகளெல்லாம் எங்கே போனார்கள்?

 எதிராகா வாய்த்திறந்தால் வேலை போய்விடும், பிழைப்பு நாறிவிடும் என சவூதியின் அத்தனை அராஜகத்தையும் பார்த்து கொண்டிருக்கும் சவூதி மார்க்கத்துறையில் பணியாற்றும் மவுலவிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

 ததஜவிலிருந்து கிடைக்கும் மாதச் சம்பளம் மற்றும் இன்னபிற வருமானங்கள் போய்விடுமே என்ற எண்ணம் உங்களைச் சத்தியம் பேசவிடாமல் தடுக்கிறதா?

 அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளுங்கள்; அவனின் பிடியிலிருந்து எவனும் தப்ப முடியாது!

ஏப்ரல் 1, 2018 துயர நாள் நிகழ்வின் இறுதியில் சம்சுல் லுஹா,
சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்துவிட்டது எனக்கூற, ததஜவினர் அல்லாஹ் அக்பர் என கரகோசம் எழுப்பினர்.

ஆம், சத்தியம் மிகத் தெளிவாக புரிந்துவிட்டது. ததஜவினரின் பொய்யும் புரட்டும் மோசடியும் அல்லாஹ்வின் சட்டத்திலேயே துணிச்சலாக விளையாடுவதும் எல்லாமே மிகத் தெளிவாக லைவில் தெரிந்து சத்தியம் புரிந்துவிட்டது.
ஆனால், ததஜவினருக்கு மட்டும் புரிந்த சத்தியம் வேறு.

 கொள்கை உறுதியும் அல்லாஹ்வின் மீதான அச்சமும் சிறிதளவேனும் மிச்சமிருப்பின் சிந்தியுங்கள் சகோதரர்களே!
சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்..


ததஜவின் அசத்தியம் மூக்குடைபட்டு அழிந்தநாள் ஏப்ரல் 1, 2018. என்றும் வாழ்வில் மறவோம்!
சத்தியப்பாதை என வெட்கமின்றி இனியும் சொல்லித்திரியாதீர்கள்! உங்களின் இப்பாதை அழிவின் பாதை என்பதை உணர்ந்தால் தப்பித்தீர்கள்.

நன்றி fb@A Rahuman B Positive

No comments: