Thursday, April 05, 2018

#அல்தாபியின்_நெகிழவைத்த_நெத்தியடி_உரை பற்றி அமீர் ஷாஹித்

அல்தாபியின் நேற்றைய முகநூல் லைவ் உரையில் , தெளிவு என்றால் அப்படி ஒரு தெளிவு என்று தான் சொல்ல வேண்டும்.

அவரது உரையில் பொய்யில்லை , புரட்டு இல்லை , வார்த்தை விளையாட்டு இல்லை , வார்த்தை ஜாலங்கள் இல்லை ,  தன் மீது பிறருக்கு பரிவு வரவேண்டுமென்ற பசப்பு இல்லை , இன்னும் சொல்லப்போனால் அவரது பேச்சில் சுத்தமாக நடிப்பு இல்லை.

கோவை ரஹ்மத்துலாவிற்கு ஊதியம் தரப்படவில்லையா ? மற்ற எந்த நிர்வாகியும் மெடிக்கல் அளவன்ஸ் வாங்காத போது , செய்யது இப்ராஹீம் மட்டும் வேண்டுமென்றே அடிக்கடி மெடிகல் அளவன்ஸ் வாங்கவில்லையா ? என ததஜவின் வங்கி வரவு செலவு ஸ்டேட்மென்ட்டை குறிப்பிட்டு , பட்டும்படாமலும் , தொட்டும் தொடாமலும் , பீஜே வின் உயிர் நாடியை தட்டி விட்ட அல்தாபியின் லாவகம் நிச்சயம் பாராட்டுக்குறியதே.

நாகை பெண்மணி உங்களை விட முதியவரா , இளையவரா ? அவரை உங்கள் தொண்டர்களுக்கு காட்ட முடியுமா ? என கேட்டாரே ஒரு கேள்வி . ததஜ அல்லாத எங்களை போன்றோருக்கே நாக்கை புடுங்குற லெவலுக்கு இருந்த அல்தாபியின் இந்த கேள்விக்கு , இன்றளவும் கூஜா தூக்கி கொண்டு திரியும் தொண்டர்கள் தான் பீஜே அண்ணனை வற்புறுத்தி பதில் வாங்கி தர வேண்டும்.

"முபாஹலாவிற்கு பின்" என்று தலைப்பிட்டு ஒளிபரப்ப பட்ட பீஜேவின் உரையை , இன்றைய நிகழ்விற்கு பின் மறுபடியும் பார்க்கும் போது , வான்ட்டா வம்பிழுத்து வெட்டி பேச்சு பேசி வாங்கி கட்டிக்கிட்ட வண்டு முருகன் வடிவேலுவை வச்சி செஞ்ச கதை தான் நமக்கு நியாபகத்திற்கு வந்தது. அல்தாபியின் இந்த முகநூல் லைவ் நிகழ்விற்கு பிறகு நடுநிலைவாதி் போர்வையில் திரிந்தவர்களும் , பீசே அய்யா , உனக்கு இது தேவையா யா , என்று புலம்பிய அவல குரலையும் வெகுவாக கேட்க முடிந்தது.

அய்யா அல்தாபி அவர்களே ! தவக்கல்து அலல்லாஹ் என்று தனி ஒருவனாக வலக்கரத்தில் உம்முடைய மைந்தனின் கரத்தை பற்றி பிடித்து , முபாஹலா அரங்கிற்குள் சிங்கமாய் பிரவேசித்து , வஞ்சக சிறுநரி கூட்டத்தை கலங்கடித்த உம்மை , நரநரவென்று பற்களை கடித்து , மூக்கை புடைத்து , தொடையை தட்டி மிரட்டி உருட்டிய அண்ணனின் அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி , அல்லாஹ் மட்டுமே அஞ்சுவதற்கு தகுதியானவன் என்ற உம்முடைய போர் குணத்தை வெளிப்படுத்தியதால் , அல்லாஹ் உம்மை  அந்த அரங்கிலேயே தன் புறத்திலிருந்து தைரியத்தை கொடுத்து அன்றே கண்ணியப்படுத்தியது , எங்களை போன்றோர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. 

முபாஹலா மேடைக்கு சம்பந்தபட்ட பெண் வரவில்லை என்பதை அறிந்தும் , மெயின் ஐட்டமாக அண்ணனின் மனைவி வரவில்லை என்பதை அறிந்தும் , வஞ்சக நிர்வாகிகள் சிலரின் குடும்ப உறுப்பினர்கள் வரவில்லை என்பதையும் அறிந்தும் , அவற்றையெல்லாம் குறிப்பிட்டு் அண்ணனை போல் லாஜிக் கேள்விகள் கேட்டு எதிராளியை மடக்காமல் , எல்லாம் தெரிந்தும் உங்களோடு பயணித்த முன்னால் சகாக்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து பேராபத்தான அவனின் சாபத்தை பிராத்திக்காமல் , தங்களை மட்டும் பணயம் வைத்து , நான் பொய்யனாக இருப்பின் , என் மீதும் என் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என பிராத்தித்து , எதிரியாக இருந்தும் அவர்களின் நலனில் அக்கறை காட்டிய உம்முடைய பண்பு , எங்களை போன்றோர்களை நிச்சயம் நெகிழச் செய்துவிட்டது.

மொத்தமாக ஒத்த வரியில் சொல்லப்போனால் , தன் ஆடுகளை தக்க வைக்க காலையிலிருந்து இரவு வரை , இடையிடையில் இன்டர்வெல் பிரேக் எடுத்து நன்றாக பிரிபேர் பண்ணி , மாங்கு மாங்குன்னு விளக்கவுரை பேசிய அண்ணனை , உட்கார வைத்து நெத்தியில் " பட்டை நாமம் " தீட்டி , வெறும் ஒரு மணி்நேர லைவ் நிகழ்ச்சியில் நெத்தியடி பதில் சொல்லி பதிவை நிறைவு செய்த அல்தாபி , எல்லோர் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

நன்றி
https://m.facebook.com/story.php?story_fbid=2489672447924116&id=100006441557229

No comments: