அல்தாபியின் நேற்றைய முகநூல் லைவ் உரையில் , தெளிவு என்றால் அப்படி ஒரு தெளிவு என்று தான் சொல்ல வேண்டும்.
அவரது உரையில் பொய்யில்லை , புரட்டு இல்லை , வார்த்தை விளையாட்டு இல்லை , வார்த்தை ஜாலங்கள் இல்லை , தன் மீது பிறருக்கு பரிவு வரவேண்டுமென்ற பசப்பு இல்லை , இன்னும் சொல்லப்போனால் அவரது பேச்சில் சுத்தமாக நடிப்பு இல்லை.
கோவை ரஹ்மத்துலாவிற்கு ஊதியம் தரப்படவில்லையா ? மற்ற எந்த நிர்வாகியும் மெடிக்கல் அளவன்ஸ் வாங்காத போது , செய்யது இப்ராஹீம் மட்டும் வேண்டுமென்றே அடிக்கடி மெடிகல் அளவன்ஸ் வாங்கவில்லையா ? என ததஜவின் வங்கி வரவு செலவு ஸ்டேட்மென்ட்டை குறிப்பிட்டு , பட்டும்படாமலும் , தொட்டும் தொடாமலும் , பீஜே வின் உயிர் நாடியை தட்டி விட்ட அல்தாபியின் லாவகம் நிச்சயம் பாராட்டுக்குறியதே.
நாகை பெண்மணி உங்களை விட முதியவரா , இளையவரா ? அவரை உங்கள் தொண்டர்களுக்கு காட்ட முடியுமா ? என கேட்டாரே ஒரு கேள்வி . ததஜ அல்லாத எங்களை போன்றோருக்கே நாக்கை புடுங்குற லெவலுக்கு இருந்த அல்தாபியின் இந்த கேள்விக்கு , இன்றளவும் கூஜா தூக்கி கொண்டு திரியும் தொண்டர்கள் தான் பீஜே அண்ணனை வற்புறுத்தி பதில் வாங்கி தர வேண்டும்.
"முபாஹலாவிற்கு பின்" என்று தலைப்பிட்டு ஒளிபரப்ப பட்ட பீஜேவின் உரையை , இன்றைய நிகழ்விற்கு பின் மறுபடியும் பார்க்கும் போது , வான்ட்டா வம்பிழுத்து வெட்டி பேச்சு பேசி வாங்கி கட்டிக்கிட்ட வண்டு முருகன் வடிவேலுவை வச்சி செஞ்ச கதை தான் நமக்கு நியாபகத்திற்கு வந்தது. அல்தாபியின் இந்த முகநூல் லைவ் நிகழ்விற்கு பிறகு நடுநிலைவாதி் போர்வையில் திரிந்தவர்களும் , பீசே அய்யா , உனக்கு இது தேவையா யா , என்று புலம்பிய அவல குரலையும் வெகுவாக கேட்க முடிந்தது.
அய்யா அல்தாபி அவர்களே ! தவக்கல்து அலல்லாஹ் என்று தனி ஒருவனாக வலக்கரத்தில் உம்முடைய மைந்தனின் கரத்தை பற்றி பிடித்து , முபாஹலா அரங்கிற்குள் சிங்கமாய் பிரவேசித்து , வஞ்சக சிறுநரி கூட்டத்தை கலங்கடித்த உம்மை , நரநரவென்று பற்களை கடித்து , மூக்கை புடைத்து , தொடையை தட்டி மிரட்டி உருட்டிய அண்ணனின் அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி , அல்லாஹ் மட்டுமே அஞ்சுவதற்கு தகுதியானவன் என்ற உம்முடைய போர் குணத்தை வெளிப்படுத்தியதால் , அல்லாஹ் உம்மை அந்த அரங்கிலேயே தன் புறத்திலிருந்து தைரியத்தை கொடுத்து அன்றே கண்ணியப்படுத்தியது , எங்களை போன்றோர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
முபாஹலா மேடைக்கு சம்பந்தபட்ட பெண் வரவில்லை என்பதை அறிந்தும் , மெயின் ஐட்டமாக அண்ணனின் மனைவி வரவில்லை என்பதை அறிந்தும் , வஞ்சக நிர்வாகிகள் சிலரின் குடும்ப உறுப்பினர்கள் வரவில்லை என்பதையும் அறிந்தும் , அவற்றையெல்லாம் குறிப்பிட்டு் அண்ணனை போல் லாஜிக் கேள்விகள் கேட்டு எதிராளியை மடக்காமல் , எல்லாம் தெரிந்தும் உங்களோடு பயணித்த முன்னால் சகாக்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து பேராபத்தான அவனின் சாபத்தை பிராத்திக்காமல் , தங்களை மட்டும் பணயம் வைத்து , நான் பொய்யனாக இருப்பின் , என் மீதும் என் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என பிராத்தித்து , எதிரியாக இருந்தும் அவர்களின் நலனில் அக்கறை காட்டிய உம்முடைய பண்பு , எங்களை போன்றோர்களை நிச்சயம் நெகிழச் செய்துவிட்டது.
மொத்தமாக ஒத்த வரியில் சொல்லப்போனால் , தன் ஆடுகளை தக்க வைக்க காலையிலிருந்து இரவு வரை , இடையிடையில் இன்டர்வெல் பிரேக் எடுத்து நன்றாக பிரிபேர் பண்ணி , மாங்கு மாங்குன்னு விளக்கவுரை பேசிய அண்ணனை , உட்கார வைத்து நெத்தியில் " பட்டை நாமம் " தீட்டி , வெறும் ஒரு மணி்நேர லைவ் நிகழ்ச்சியில் நெத்தியடி பதில் சொல்லி பதிவை நிறைவு செய்த அல்தாபி , எல்லோர் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
#Ameer_Shaid
#Ameer_Shaid
+91 94879 21595: நானும் இதனை கண்டேன். போஸ்ட் போட ஆசைப்பட்டேன். ஒருவேளை இந்த போஸ்ட் பரவி, அந்த ஊதா கட்டம் போட்ட சட்டை பையனை... அவனின் ததஜ நிர்வாகியாக தந்தை... கட்டம் கட்டி... "போடா துரோகியே"ன்னு வீட்டை விட்டும் அடிச்சு துரத்தி விட்டுட்டா என்ன பண்றதுன்னுதான் போடலை.
ஆகவே, தயவு செய்து அந்த பையனின் நல்வாழ்வுக்காக இந்த போஸ்டில் உள்ள போட்டோவை டெலிட் பண்ணிடுங்க ப்ளீஸ்.
ததஜ நிர்வாகிகள் பலர் இயக்க வெறியர்கள். குடும்பம்... பிள்ளைகள் எல்லாம் அவர்களுக்கு பொருட்டல்ல.
] +91 94879 21595: உன் குற்றங்களுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் ஒருவனே.
அந்த கூட்டத்தில் யாருமே உன்னை கவனிக்காததுபோல் நடித்தாலும், தனிஒருவனாக அமர்ந்திருந்தபோதும், நம்மையும் நம்குடும்பத்தையும் அல்லாஹுவின் சாபத்தை வாங்கிதர வந்திருப்பவர் என்றுகூட அறியாத ஏதோ ஒரு நிர்வாகியின் இப்பாலகன் உன்னிடம் வந்து கை கொடுத்தபோது உன்னை காரி உமிழத்தோன்றியது.
மேடையில் ஏறி உன் மீது சுமத்தபட்ட குற்றத்தை மறுத்து, இது பொய்யாக இருந்தால் அல்லாஹுவின் சாபத்தை உனக்கும் உன் குடும்பத்திற்கு மட்டும் வாங்கிவிட்டு அவர்களின் சொல்லாடல் வார்த்தைஜாலம் என்று கூறி அவர்கள் குடும்பத்திற்கெதிராக பிரார்த்திக்காமல் நீ மேடையில் இருந்து இறங்கிச்சென்றது மனதை நெகிழச்செய்தது.
சரியானவனிடம்தான் அந்த பாலகன் கை கொடுத்திருக்கிறான். இனிமேல் சரியான பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்.
நீ கற்றகல்வியை வீணடித்து விடாதே. இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் நன்மைபயக்கட்டும்.
நீங்கள் விரல்பிடித்து அழைத்து வந்த அந்த பிஞ்சின் முகம் என் நெஞ்சை வெடிக்க செய்தது. எதுவும் அறியாமல் தந்தையின் கட்டளையை ஏற்று உங்கள் அருகில் அமர்ந்திருந்த உங்கள் மகனுக்கும் என் ஸலாம் சொல்லுங்கள்.
நன்றி சகோ KM Shah
No comments:
Post a Comment