Tuesday, April 03, 2018

யார் மீதும் வேண்டாம் அல்லாஹ்வின் சாபம் !



சகோ Mohamed Sharaf பதிவில் இருந்து.
யார் மீதும் வேண்டாம் அல்லாஹ்வின் சாபம் !
இரண்டு மாதம் முன்பு வரை நாங்கள் உருகி உருகி நேசித்த இந்த தவ்ஹீத் ஜமாத் என்ற பேரியக்கமும் , அண்ணன் என்று ஆசையோடு அழைத்த பெரியவர் பீஜேவும் இவ்வளவு விரைவில் எங்கள் இதயங்களில் ஒரு பெரிய ரணத்தை ஏற்படுத்துவார்கள் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை .
இந்த பீஜேவை நேசித்த அளவு நான் ஒரு போதும் அல்தாபியை நேசித்ததில்லை .
என்றாலும் அல்தாபி அவர்கள் ஒரு நாகரீகமான, நளினமான , பண்பான மனிதன் என்பதைஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டேன் .
அப்படி பட்ட அந்த மனிதன் , மனிதனுக்கு ஏற்படும் சில பலவீனங்களின் அடிப்படையில் தவறிய ஒரு நிகழ்வின் மூலமாக அதை பகடை காயாக பயன் படுத்தி உலகில் எங்குமே நிகழாத மனிதாபிமானமற்ற குத்தி கீறல்களை தவ்ஹீத் ஜமாத் இங்கே நிகழ்த்தியது . எத்தனை எத்தனை அவதூறுகள் அவர் மேல் . அவரும் அவர் குடும்பமும் எவ்வளவு காயப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள நீங்கள் ஒரு அடிமையாக இருக்கும் வரை நிச்சயம் உங்களால் உணர்ந்து கொள்ள முடியாது . அதை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் அவரின் நிலையில் உங்களை வைத்து பொருத்தி பார்க்க வேண்டும் . அப்போது தான் உங்களுக்கு புரியும் அந்த குடும்பத்தின் ஆறாத மனக்காயம் .
அந்த முபாகலா நிகழ்வை பார்த்த மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் கண்ணீர் வடிப்பான் . அல்தாபியின் அந்த பிஞ்சு பாலகனை பார்த்து .
தன்னிந்தனியே நின்று முக்கிய பிரச்சனையை தெளிவாக அவர் முபஹலா செய்தும் உங்களின் வார்த்தை ஜாலத்தால் நீங்கள் எல்லோரையும் முட்டாளாக நினைத்து விளையாடினீர்கள். தன்னந்தனியே நின்ற அவர் வேறு வழியே இல்லாத நிலையிலும் உங்களின் மீது சாபம் வேண்டாமலும் அந்த சபையை விட்டு அந்த அந்த பிஞ்சு பாலகனையும், அப்பாவி மனைவியையும் அழைத்து வெளியேறும் போது எங்கள் இதயம் கனத்தது . ஆனால் அவரோடு சகோதரனாக பழகிய உங்கள் இதயங்கள் மட்டும் வெற்றி வெற்றி என்று குதூகலித்தது .
வெற்றி வெற்றி என்று கூச்சலிட நீங்கள் அப்படி என்ன பெரிய முபஹலா செய்து விட்டீர்கள் . அவள் சொன்னதை நாங்கள் நம்பினோம் . அதனால் பரப்பினோம் . இது உண்மை இல்லை என்றால் எங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் . நாங்கள் சொல்வது பொய்யென்றால் அந்த பாவமறியா பிஞ்சு பாலகனின் மீதும், அப்பாவி அபலை பெண்ணான அவர் மனைவி மீதும் , உங்களோடு அண்ணன் தம்பியாக இத்தனை காலம் பழகிய அந்த சகோதரர் அல்தாபி மீதும் அல்லாஹ் வின் சாபம் இறங்கட்டும் என்று கூறினீர்கள் . அதை எந்த தைரியத்தோடு கூறினீர்கள்.
அட... பாவிகளே ? நீங்கள் அவளை நம்பியதற்காக அல்தாபியின் குடும்பத்தின் மேல் எப்படிடா அல்லாஹ் சாபத்தை இறக்குவான். அல்லாஹ்வை ,முட்டாள் என்று நினைத்தீர்களா ?
அதிலும் ரஹ்மத்துல்லாஹ் ஒரு படி மேலே போய் உரத்த குரலில் அந்த குடும்பத்தின் மேல் அல்லாஹ்வின் சாபத்தை வேண்டினார் . எப்படி உனக்கு மனம் வந்தது அந்த பிஞ்சின் முகம் பார்த்த பின்னும் இப்படி கொடூர சாபத்தை வேண்டுவதற்கு .
தூரத்தில் இருந்து பார்த்த எங்கள் இதயங்களே சுக்கு நூறாகியதே அந்த பாலகனின் முகம் பார்த்து . உரத்த குரலில் நீங்கள் எதை சொன்னாலும் மனிதாபிமானமற்ற மிருங்களாக அல்லாஹ் அக்பர்என்று சொல்லும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற ஒரு மிக பெரிய நம்பிக்கை உங்களுக்கு உண்டு என்று எங்களுக்கு தெரியும். அந்த துணிச்சல் தானே உங்களை இப்படி சொல்ல வைத்தது .
இனி மனிதாபிமானத்தை பற்றி பயான் பேச உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை .
குரான், ஹதீஷில் பீஜே அவர்களின் எத்தனையோ விளக்கங்களை பார்த்து மெய்சிலிர்த்து போன காலங்களுண்டு . என்றாலும் எங்களை போல வெகு சிலர் அதை சிந்தித்தே ஏற்று கொண்டிருக்கிறோம் . தவறை தவறாகவே உணர்திருக்கிறோம் .
ஆனால் இன்றைக்கு அந்த பெண் அவரை திருமணம் செய்வதற்காக தான் அந்த பொய்யை கூறினேன் என்று ஏற்கனவே கூறிய அந்த புகாரை வாபஸ் வாங்கியதை கூட வசமாக மறைத்து விட்ட நீங்கள் அது ஏன் என்ற அல்தாபியின் கேள்விக்கு கொடுத்த அற்புதமான விளக்கம் உங்களின் இத்தனை கால அத்தனை விளக்கங்களையும் கேள்வி குறியாக்கிவிட்டதே மாற்று அமைப்பினர் முன்னால்.
சிந்தித்தே ஏற்கும் பழக்கம் உடைய எங்களுக்கு உங்களின் பழைய விளக்கங்களில் எந்த சந்தேகமும் இல்லை என்பது வேறு விஷயம் . ஆனால் உங்களின் இந்த புதிய விளக்கத்தின் க்ரூரமும் கள்ளத்தனமும் உங்களின் மேல் உள்ள எதிர்கால நம்பிக்கையை கேள்வி குறியாக்கி விட்டதே .
அதே வேளை அல்தாபியின் முபாஹலா எப்படி இருந்தது . நீங்கள் இவ்வளவு குத்தி குதறிய பின்னும் அவர் ஒரே ஒரு முபாஹலாவை செய்தாலும் உங்களை போல வார்த்தை ஜாலம் செய்யாமல் நேரடியாக தெளிவாக விசயத்தை சொல்லி தங்கள் குடும்பத்திற்கு மட்டும் சாபத்தை வேண்டி உங்கள் குடும்பத்திற்கு எந்த சாபத்தையும் அவர் வேண்ட வில்லை . காரணம் குரூர எண்ணம் படைத்தவர்களாக நீங்கள் இருந்தாலும் எந்த பாவமும் அறியாத உங்கள் பிஞ்சு குழந்த்தைகளையும் , உங்கள் மனைவி மார்களையும் குத்தி கீற மனிதாபி மானமுள்ள அந்த மனிதனுக்கு மனம் வரவில்லை.
ஆக நீங்கள் வீழ்த்த நினைத்த அல்தாபி மனிதாபிமானத்தில் உயர்வை அடைந்து விட்டார் . நீங்கள் உயர்த்த நினைத்த உங்கள் இமேஜோ நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அகல பாதாளத்தில் வீழ்ந்து விட்டது .
Top of Form
Nizar Ahamed கூட்டத்தோடு வந்த ததஜ 
"கோழைகள்" அடுத்தவர் பேசுவதற்கு சரியான பதிலளிக்காமல் கத்தி கத்தி பேசி வாங்கிய காசுக்காக காரியம் சாதித்த சைத்தான்கள்...

தவறே செய்திருந்தாலும் தனியாக வந்து அல்தாஃபியும் அவர் மகனும் உண்மையில் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தி விட்டார்.

(குறிப்பு: நான் எந்தக்கூட்டத்தையும் சார்ந்தவன் இல்லை உண்மையை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்)
---------------------------------------------------------------------------------------------------------------
Syedbavakps உண்மையே உரைத்தீர் Abdul kareem waqqas
------------------------------------------------------------------------------
 எளியவன் இனியவன் கலீல் ரசூலில் வார்த்தைகளிலேயே அவர்கள் பொய்யின் மீது இருக்கிறார்கள் என்று பொது மக்கள் உணர்ந்துவிட்டார்கள். முபாஹலாவிற்க்கு முன்பே அந்த பெண்மணி தான் தவறாக குற்றம்சாட்டிவிட்டேன் என்று குற்றசாட்டை திரும்ப பெற்ற பின்பும் அதை மறைத்து திரும்ப திரும்ப பொய்யில் உறுதியாக நின்ற அந்த கபட ஜமாத்தினர் பொதுமக்களின் மதிப்பை இழந்துவிட்டார்கள் என்பது நிதர்சனம்.
-------------------------------------------------------------------------------------------------------
Mohamed Fazlu Elahee சாபம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அல்லாஹ்வின் நியதிப்படி பொய்யர் மீது சாபம் இறங்கத்தான் செய்யும். வானளாவ வளர்ந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டிய முஸ்லிம்களின் கட்டுக் கோப்பை சொந்த சுய நலனுக்காக உடைத்து சின்னாபின்னமாக ஆக்கி விட்ட மாபாவிக்கு எதிராக பாதிகப்பட்ட சமுதாயம் பிரார்த்திக்காமல் இருக்குமா?

Bottom of Form


No comments: