Saturday, May 26, 2018

முன்னாள் கொள்கை சகோதரர்களுக்கு ஒரு சவால் என்ற தலைப்பிலான கடிதத்திற்கு பதிலடியான கடிதம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முதலாவதாக,
முன்னாள் கொள்கை சகோதரர்கள் என்றால் இதற்கு முன் நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் என்று அர்த்தம். 

முன்னால் கொள்கை சகோதரர்கள் என்றால் உங்கள் எதிரே நிற்பவர்கள் என்று அர்த்தம். அதாவது சுற்றியுள்ள ஆட்டு மந்தைகள் அல்லது பினாமிகள். இவர்களுக்கு சவால் எல்லாம் விட மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம். வெளியேறிய பின்னர் தான் இந்த ஆட்டு மந்தைகளும் கழிவுகள்.

முதல் வரியிலேயே உங்கள் பதற்றமும் குழப்பமும் தெரிகிறது. சரியாக Proof கூட பார்க்கவில்லை. எங்கே பாய் நேரம் இருக்கிறது? ரியாசையும், மக்தூமையும் சில காலத்திற்கு கம்ப்யூட்டர் முன் அமரக்கூடாது என்று கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து விட்டீர்கள். எனவே முன் அனுபவமற்றவர்களைக் கொண்டே வண்டி ஓடுகிறது. சரி, அடுத்த விசயத்திற்கு வருவோம்.

இரண்டாவதாக,
ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதில் வராவிட்டால் அதை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்போம். Black & White காலம் முதல் உங்கள் பாஷையில் சொல்வதென்றால் 30, 35 ஆண்டு காலமாக இப்படித் தானே நடக்கிறது. ஜாக் அமைப்பில் கேள்வி கேட்டோம், பதில் வரவில்லை. வெளியே வந்தோம். தமுமுகவில் கேள்வி கேட்டோம், பதில் வரவில்லை. வெளியே வந்தோம். இப்போது TNTJவில் கேள்வி கேட்டோம். பதில் வரவில்லை. வெளியே வந்தோம். அதற்கு ஏன் ஒப்பாரியும், ஓலமும். 

மூன்றாவதாக,
6 லட்சம், 4 லட்சம் விபரம் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார்களாம். பார்ரா... அப்புறம்? 

நிர்வாகிகளிடம் மட்டும் நீங்கள் வசூல் செய்திருந்தால் நிர்வாகிகளுக்கு விளக்கம் கொடுப்பது போதும். ஆனால் ஜமாஅத் இல்லாத அனுதாபிகள் உட்பட அனைவரிடமும் வசூல் செய்தீர்கள் தானே. அப்படியென்றால் அனைவருக்கும் விளக்குவது தானே உங்கள் கடமை. ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. ஏனெனில் பொதுவாக விளக்கம் கொடுத்தால் எதிர்கேள்வி வரும். நம்மால் தாக்கு பிடிக்க முடியாது. நிர்வாகிகள் என்றால் ஆட்டு மந்தைகள். சமினா ஆத்தைனா என கட்டுப்படுவார்கள். அதிலும் பல மாவட்டங்களில் பொம்மைகளைப் பிடித்து அட்ஹாக் கமிட்டி அமைத்திருப்பதால் விளக்கம் என்பதே தேவைப்படுவதில்லை. 

நான்காவதாக,
ஒரு தவறை இருவர் செய்கிறார்கள். அதில் ஒருவர் நல்லவராம். இந்த கருத்து முற்றிலும் தவறு. ஒருவர் தனித்திருந்தார். பெரும்பாவம் செய்யவில்லை என்று முபாஹலா மூலம் நிரூபித்து விட்டார். இன்னொருவர் முற்றிலும் மறுத்து அல்லாஹ்வின் சாபம் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார். 

ஐந்தாவதாக, 
நாம் தோல்வியை மட்டும் சந்தித்து வருகிறோமாம். என்ன தோல்வியை யார் சந்தித்து விட்டார்கள்? நமக்கு தெரிந்து சமீபத்தில் எந்த தேர்தலோ போட்டியோ நடைபெறவில்லையே. கர்நாடகா தேர்தலை நீங்கள் சொல்கிறீர்களோ? நீங்களே பரீட்சை வைத்து நீங்களே வெற்றி அடைந்ததாக உங்களை நீங்களே புகழ்ந்து கொள்கிறீர்கள். 

ஆறாவதாக, 
கள்ள ஐடி பற்றி நீங்கள் பாடம் எடுக்கலாமா? அஹமது கபீர் ஐடி பற்றி ஒப்புதல் வாக்குமூலம் பகிரங்கமாக தந்தது யார்? நான் தான் ரியாத் மைதீன் என்றே வைத்துக் கொள்ளுங்கள் என்று (கோவை ரஹ்மத்துல்லாஹ்) தம்பிக்காக அண்ணன் முன்வந்து பழியை சுமந்த போது மட்டும் இனித்ததா? உள்ளே உள்ள செய்தியைப் பாருங்கள் என்று அன்று குதித்து கும்மாளம் போட்டு விட்டு இன்று திருப்பி அடிக்கும்போது கதறினால் எப்படி?

ஏழாவதாக,
உங்க மர்மதேச மாநில நிர்வாகிகளை நீக்குவது உங்க விருப்பம் மாதிரி எங்க அமைப்புக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். நாம் ஏன் இப்படி பெயர் வைக்கிறோம். நாம் எப்படி இயங்க போகிறோம் என்பது உங்களுக்குத் தான் நல்லாவே தெரியுமே. அப்புறம் ஏன் புலம்பல்.

எட்டாவதாக,
அல்தாபி கேப்டன் டிவியில் 30 நாட்கள் நிகழ்ச்சி நடத்துவதால் உங்கள் வயிறு எரிகிறது என்றால் நாம் என்ன செய்வது? எங்கிருந்து பணம் வருகிறது தெரியுமா? உலக மகா கண்டுபிடிப்பு. யூகத்தில் அழியும் ஜமாத்திற்கு இதுவே ஒரு ஆதாரம். யார் யாரிடம் வசூல் செய்தோம்? எப்படி நிகழ்ச்சி நடத்தினோம் என்பதை ரமலான் முடிந்ததும் வரவு செலவு கணக்கை அதிகாரப்பூர்வமாகவே வெளியிடுவோம். அப்போது தெரியும். உங்களைப் போல் திறந்த புத்தகம் என்று லேபிள் மட்டும் ஒட்டிக்கொண்டு மர்மமாக செயல்படும் அமைப்பு அல்ல, நாம். 

அல்தாபியை Disturb செய்யாமல் தாவா பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி நாமே சுமக்கிறோம். ஏற்கனவே, அவதூறுகள் பரப்பி விட்டு அல்லாஹ்வின் சாபம் கேட்டு பாதி ஜமாஅத் மண்ணோடு மண்ணாகிப் போன பின்பும் மீண்டும் அவதூறு பரப்பினால் பிர்அவுன் முடிவு தான் உங்களுக்கும் என்பதை நாம் கூறிக்கொள்கிறோம்.

ஒன்பதாவதாக, 
ஏதோ துவாரம் என்று (காமத்தலைவர் பாணியில்) வழக்கம்போல் ஆபாசமாகப் பேசும் ஜமாஅத் என்பதை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே வருகிறீர்கள். மக்கள் உங்களை இன்னும் புறக்கணிப்பார்கள்.

பத்தாவதாக,
ஆதாரம் எடுத்துக்கொண்டு தலைமைக்கு வர வேண்டுமாம். இப்படி மழுப்பியே 28 நிமிட ஆடியோவை மறைக்க முயன்றீர்கள். அடுத்து 10 நிமிட ஆடியோவுக்கும் இதே போல் Filim காட்ட முயற்சி செய்தீர்கள். தலைமைக்கு பார்ட்டி வந்த வேகத்தில் அண்ணனுக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது. விசாரணை வீடியோவும் வெளியே வரவில்லை. இதில் தலைமைக்கு வர வேண்டுமாம். நல்லவர் போல வேடமிட்ட உங்கள் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அல்லாஹ் உங்களை நடுத்தெருவுக்கு இறக்கிவிடப் போகிறான். இன்ஷா அல்லாஹ்.

11-வதாக 
அழைக்காத திருமணத்துக்கு வந்து கள்ளத்தனமாக விருந்து சாப்பிடுகிறவர் போல என்று உங்கள் பிளாஷ்பேக்கை எங்களுடன் ஒப்பிட முயற்சி செய்துள்ளீர்கள். உழைக்காமல் ஆயிரக்கணக்கில் சம்பளமாக எடுத்துக்கொண்டு, நிர்வாக செலவு என்ற பெயரில் ஜக்காத் பணத்தை எடுத்து ரொட்டேஷன் செய்து ஊர் காசில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு, 20% கமிஷன் அடித்து சாப்பிட்டு விட்டு, பயானுக்கு போகும் இடத்தில் A/c ரூம் போட்டு முந்திரியும், பாதாமும் சாப்பிட்டு தொப்பையை வளர்க்கும் நீங்கள் எங்களைப் பார்த்து பேச யோக்கியதை இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கே மாநில நிர்வாகத்தில் இருந்து வெளியேறினால் அடுத்த வேலை ருசியாக சாப்பிட முடியாதே என்ற வருத்தம் உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். எங்களுக்கு இப்படி கேவலமான எண்ணம் துளியும் இல்லை.

இறுதியாக,
இக்கடிதம் எழுதிய ரியாத் மைதீன் செய்த அரசியலையும் சேர்த்து கிழித்து இந்த பதிலடியை முடிக்கிறோம்.

சில நாட்களாக அமைதியாக, நல்ல பிள்ளை போல் வலம் வந்த ரியாத் மைதீன், துவா செய்யுங்கள் துவா செய்யுங்கள் என்று கூறித் திரிந்தவர், சரி திருந்தி விட்டார் போல என்று சிலபேர் நம்பிக்கை வைக்க அனைவரையும் வழக்கம்போல் ஏமாற்றி விட்டார். 

அல்லாஹ்வை நம்பாமல், நேர்மையை நம்பாமல் தனது குறுக்குபுத்தியை நம்ப ஆரம்பித்து விட்டார், ரியாத் மைதீன். ஆதரவற்ற சிறுவர், முதியோர் ஆதரவு இல்லத்தை வைத்து அரசியல் செய்து விட்டார். மாநில நிர்வாக செலவுக்கு வசூல் தாருங்கள் என்றால் சில்லறை காசு தான் தேறும் என்பதால், ஆதரவற்ற சிறுவர், முதியோர் துவாவில் தான் இந்த ஜமாஅத் இயங்குவதாக கண்ணீர் வரவழைக்க முயன்று தோற்றுவிட்டார். 

திறந்த புத்தகம் என்று மேடையில் பேசிவிட்டு CBI ரெய்டு வந்தால் உங்கள் சடலத்தை மிதித்து விட்டு தான் தடை செய்வார்கள் என்று உசுப்பி விட்டார். ஆனால் பாவம். அவர் கணக்கு ஒன்று. அல்லாஹ் போட்ட கணக்கு ஒன்று. 

CBI ரெய்டு வந்தால் எதிர்கொள்ள வேண்டியது தானே. நாம் தான் திறந்த புத்தகம் ஆயிற்றே. மடியில் கணம் இல்லை என்றால் எதற்கு பயம்? தேவையின்றி ஏன் இவர் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார் என்று பலரும், 

ஆ... இவர்கள் பின்னே போலீஸ் அலைகிறதா? அப்படியென்றால் இவர்களுடன் சேர்ந்து நமக்கும் பிரச்சினை வருமே, இனி இவர்கள் பக்கம் தலை வைத்தும் படுக்கக்கூடாது என்று பலரும் விமர்சிக்கின்றனர். இது தேவையா? அஞ்சோ பத்தோ கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க பாய் என்றால் வேலை முடிந்தது. அதை விட்டு ஏன் தேவையற்ற பில்டப்? 

ஆதரவற்ற சிறுவர், முதியோருக்கு நாம் ஏதோ எதிரிகளாகவும், துரோகிகளாகவும் சித்தரிக்க முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் எடுபடவில்லை. 

கோவை ரஹ்மத்துல்லாஹ் இவ்வளவு கூவியும், ஆக்ரோஷமாக தம்கட்டி பேசியும், ஆதரவற்ற சிறுவர், முதியோர் ஆதரவு இல்லத்தை வைத்து உருக்கமாகப் பேசியும், வழக்கம்போல் வரும் வசூலில் பாதி கூட வரவில்லை என்று அப்பகுதியில் சோகம் நிலவுகிறது, நம் கள ஆய்வு தகவல் இது, உண்மை தானே. அல்லாஹ்வை நம்பி, நேர்மையாக பேசினால் ரமலானில் தக்வாவுடன் தர்மம் சேர்ந்திருக்கும். இதற்கும் நாம் தான் காரணம் என்று சொல்லி விடுவீர்களே, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பயம். யார் குண்டு வைத்தாலும் பாய் தான் வைத்திருப்பான் என்று சல்லித்தனமாக சிந்திப்பது போல அனைத்திற்கும் நம்மைக் காரணம் காட்டினால் எப்படி?

யாரும் போய்விடக்கூடாது என்று கடலூரில் பாவா, பாவா என்று கெஞ்சினீர்கள். சென்னையில் Live போட்டு பார்த்தீர்கள். திருச்சி செயற்குழுவில் மண்டப கதவுகளை மூடிவிட்டு கதறி அழுதீர்கள். ஆனாலும் உங்களை யாரும் நம்ப தயாராக இல்லை. உங்களுக்கு மக்கள் செல்வாக்கு சரிந்து கொண்டே வருகிறது. அல்லாஹ்வை நம்பாமல் அண்ணனை நம்பி ஜமாத்தை இயக்குனீர்கள். இன்று கைசேதத்துடன் நிற்கிறீர்கள். இதற்கு நாமா பொறுப்பு?

TNTJ தாவாப் பணிகளில் இருந்து விலகி பல மாதங்கள் ஆகிவிட்டது. தலைமையாகிய உங்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளது. ஆடியோ குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். CCTV பதிவுகளை அழிக்க வேண்டும். அதிருப்தியில் உள்ள மண்டல நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஊர் ஊராக வசூலிக்க வேண்டும். நிதி வருகை பாதிப்பை தடுக்க வேண்டும். யார் யார் அல்தாபி பயானை Like, Share செய்கிறார்கள் என்று நோட்டம் விடவேண்டும். யாரைப்பற்றி அவதூறுகள் பரப்பலாம் என்று திட்டமிட வேண்டும் என்பது போன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் நமக்கு எந்த கவலையும் இல்லை. மக்களுக்கு தாவா செய்து சமுதாய சேவைகள் செய்து தூய இஸ்லாத்தினை சொல்லிகொண்டே இருப்பதைத் தவிர எங்களுக்கு எந்த டென்சனும் இல்லை. 

நமக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. நூஹ் நபி பிரச்சாரம் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளானே. கூட்டம் கூட்டம் என்று உங்களுக்குத் தான் வெறி, மனநோய் அனைத்தும். கூட்டத்தை தக்கவைக்கவே நீங்கள் குட்டிகரணம் போடுகிறீர்கள். நமக்கு அது தேவை இல்லை. நாம் தெளிவாகவே பயணிக்கிறோம். நம் நீரோடை அமைதியானது. சலனமில்லாதது. சத்தமின்றி பல ஆறுகள் நம்முடன் சங்கமிக்கின்றன. அல்லாஹ்வின் அருளால் நாம் பெரிய சக்தியாக உருவெடுப்போம். ஒருவேளை அப்படி உருவெடுத்தால் TNTJ போல அழிந்து போய்விடுவோம் என்று அல்லாஹ் நினைத்து நமக்கு அருள் செய்ய சிறிய கூட்டமாகவே வைத்து மென்மேலும் எங்களுக்கு அருள் புரிந்தாலும் அதிலும் நாம் மகிழ்ச்சி அடைவோம். ஒருக்காலும் வழிகெட மாட்டோம்.

குறிப்பு : இப்போதாவது உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள். செய்த பாவங்களுக்கும் அவதூறுகளுக்கும் பாவமன்னிப்பு கேளுங்கள். சம்மந்தப்பட்டவர் மன்னிக்காத வரை உங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மீண்டும் மீண்டும் அரசியல் செய்யாதீர்கள்.  

தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். – அல்குர்ஆன் 4 : 49

No comments: