Wednesday, May 16, 2018

மனதார மன்னிப்பு கேட்டு தவ்பா செய்து கொள்ளுங்கள்.


ஹஜ்லால்குடி: இன்பாக்சிலும்  வாட்ஷப்பிலும் மற்ற வகைகளிலும் தொடர்பு கொண்டு 'உங்களின் கடந்த நான்கு மாத நடவடிக்கைகளும் வினோதமாக இருந்தது' 'நீங்கள் ததஜவை மலக்கிடங்கு மடம் என்று கூறியதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது' 'உங்களை நயவஞ்சகன் என்று பஜ்ர் தொழுகையில் துவா கேட்டேன். அதற்கு  இப்போது மனம் வருந்துகிறேன்' என்று மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்த சகோதரர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது...

உங்கள் யார் மீதும் எனக்கு கோபம் இல்லை. உங்களின் எந்த வார்த்தையும் என் மனதை புண்படுத்தவில்லை. சில உண்மைகளை அறியாமல் அறிய முயற்சிக்காமல் இருந்திருந்தால் நானும் நேற்று வரை பிஜேவுக்கு முரட்டு முட்டு கொடுத்திருந்திருப்பேன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அக்டொபர் இறுதியிலேயே பிஜேவைப் பற்றிய நெஞ்சை சுக்கு நூறாக உடைத்த உண்மைகளை அறிந்துகொள்ள அல்லாஹ் வாய்ப்புகளை வழங்கினான். இன்று உங்களை போன்று எனது மனமும் புழுவாய் துடித்தது. 20 வருடங்களுக்கும் மேல் இந்தக் காமப்பிசாசுவின் மேல் மடத்தனமாக பைத்தியமாக இருந்தேன். 1997 களில் இவனின் பேச்சை ஞாயிறு தோறும் ஜான் ட்ரஸ்டில் கேட்டபிறகு தான் அந்த வாரமே முழுமையடையும் என்றளவுக்கு அபிமானம் வைத்திருந்தேன்.

இந்தக் காமப்பிசாசுவை பற்றி அறிந்தவுடன் இவன் மேல் வந்த கோபத்தைவிட... அப்பட்டமாக இவனை  அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் இருந்தும் இவனை கிடிக்குப்பிடி செய்து விசாரிக்காமல் இவனுக்கு வளைந்து கொடுத்து சாமரம் வீசும் அயோக்கிய வேலையைத் தான் ததஜ தலைமை செய்தது. முதன்முதலில் இந்தத் தலைமையின் நிர்வாக சீர்கேட்டை அம்பலப்படுத்த வேண்டியே ஆக வேண்டும்  அதிகமான மக்களை கேள்விகள் கேட்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருந்தது.

மூன்று மாத காத்திருப்புக்கு பிறகு ஹாஜா நூஹுவின் நீக்கத்தின் மூலம் அல்லாஹ் இதற்கு வாய்ப்புகள் வழங்கினான். மனிதாபமானம் மற்றும் தார்மீக நெறிகளை மீறி இருபது ஆண்டுகள் மாடாய் உழைத்த ஒரு அப்பாவி மனிதரை சிறுமைப்படுத்தி அவமானப்படுத்தி தூக்கி எரிந்தது. இந்த விஷயத்தில் ததஜ தலைமை எந்தளவு அப்பட்டமாக தவறிழைத்துள்ளது என்பதை நுணுக்கமான புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டி அதிகமான மக்களை கேள்வி கேக்க வைக்க வேண்டும் என்று நானும் மற்றும் சில சகோக்களும் பலவகைகளில் முயற்சித்தோம். அல்லாஹ் இதில் சிறிதளவு வெற்றியைத் தந்தான். அதிகமான மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

ஹாஜா நூஹு விஷயத்தில் தாங்கள் தவறிழைத்து அம்பலப்படும் சூழல் ஏற்பட்டவுடன் அதை திசை திருப்ப இந்தக் காமப்பிசாசுவும் அயோக்கிய ததஜ தலைமையும் தங்களுக்கு அனுதாபம் ஏற்படும் வகையில்  பிப்ரவரி இறுதியில் அல்தாபி பிரச்சனையை கையில் எடுத்தது. ஆனால் அல்தாபி இந்த அளவுக்கு தாக்குப்பிடித்து எதிர் தாக்குதல் நடத்துவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

சூழ்ச்சியாளனுக்கு எல்லாம் சூழ்ச்சியாளனாகிய ஏகன் இந்தக் காமப்பிசாசு அனுதாபம் ஏற்பட கையிலெடுத்த அல்தாபி பிரச்சனையை வைத்து இவர்கள் மென்மேலும் தங்களை தாங்களே அம்பலப்படுத்தும் சூழலுக்கு வைத்துவிட்டான். பிஜே திரும்பவும் ததஜ நிர்வாகத்துக்குள்ளோ அல்லது பிரச்சாரத்துக்கோ வரக்கூடிய வழிகளை எல்லாம் அல்லாஹ் பிஜேவை வைத்தே அல்தாபி பிரச்சனையின் மூலம் அடைக்க வைத்துவிட்டான்.

இந்தப் பிரச்சனையில் அல்தாபி  வீட்டில் சிகிச்சைக்கு தங்கிய மற்றும் ஆட்டோவில் உடன் சென்ற பத்தினிப் பெண்கள் முதற்கொண்டு அவதூறுகளால் அவமானப்படுத்தப்பட்டது எல்லையில்லா கோபத்தைத் தந்தது.

அல்லாஹ்வின் உதவியால் அது முடிந்து சில வாரங்களிலேயே இவனை அல்லாஹ் அம்பலப்படுத்திவிட்டான்.

கடந்த மூன்று மாதங்களாக காமப்பிசாசாலும் ததஜ தலைமையாலும் உங்களின் பலராலும் ஏளனப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு நம்பியிருந்தவர்களாலேயே துரோகம் இழைக்கப்பட்டு நிற்கும் ஹாஜா நூஹு, அல்தாபிகடலூர் அப்துர் ரசாக் மற்றும் கள ஆய்வு  என்ற பெயரில் பந்தாடப்பட்டு எண்ணற்ற ததஜவின் தொண்டர்களிடம் மனதார மன்னிப்பு கேட்டு தவ்பா செய்து கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் எப்படி படிப்படியாக திட்டமிட்டு கட்டம் கட்டப்பட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

இந்த ஆடியோ விவகாரங்களை வைத்து பலகோடி ரூபாய்கள் பேரம் பேசி  அப்படியே மூடி மறைத்திருக்கலாம். ஆனாலும் இந்தக் காமப்பிசாசை அம்பலப்படுத்தி இந்த கும்பலுடன் ஏமார்ந்து நிற்கும் தலைமுறையை மீட்டெடுக்க இறுதிவரை போராடிய Mohamed Bashith மற்ற அணைத்து சிறைவாசிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்து இந்தக் காமப்பிசாசுவை அம்பலப்படுத்த நெடுங்காலம் போராடிக்கொண்டும் அந்தப்பயணத்தில் வயதில் பல வருடங்கள் சிரியவர்களின் எச்சுப் பேச்சுக்களையும் பொறுத்துக்கொண்டு அஹ்மத் கபீர் என்ற கள்ள ஐடி மூலம் இவரின் குடும்பமும் இவரின் சம்பந்தி குடும்பத்தின் மீதும் பச்சை அவதூறுகள் பரப்பப்பட்ட போதும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து உண்மையறிந்த மக்களை ஒருங்கிணைத்து இன்று சிந்தனை காயடிக்கப்பட்ட மூன்று தலைமுறையை மீட்டெடுக்கும் வாய்ப்பையும் அல்லாஹ் Mohamed Kamil மூலம் வழங்கியுள்ளான். இவருக்கும் இவருடன் தோள்கொடுத்து உழைத்த  T J Hameer Shaid மற்றும் வெளியில் முகம் தெரியா சகோக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். இவர்களின் பேச்சு கரடு முரடாக இருந்திருக்கலாம் ஆனால் சமுதாயத்தை சீரழித்து கொண்டிருந்த ஒரு மகா அயோக்கியனை அம்பலப்படுத்த தொடர் உழைப்பை தந்துள்ளனர்.

அடுத்தபடியாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கும் அவரின் குடும்பத்திற்க்கும் நன்றியையும் ஆறுதலையும்  கூறிக்கொள்ளுங்கள். இந்தக் காமப்பிசாசு ஜெரினா மற்றும் சபைக்கு வந்த மற்ற விவகாரங்களில் செய்ததைப்போல் பணத்தையும் ரவுடிகளையும் அதிகார  பலத்தையும் வைத்து மூன்றுகட்ட பேச்சு வார்த்தைகள் மூலம்  சரிக்கட்ட முயன்றான். பல அப்பாவி பெண்களை சீரழித்த இந்த காமப்பிசாசுவை பகிரங்கமாக நீக்கப்படும் வரை உறுதியாக நின்றதால் விஷயம் கைமீறி போய்விட்டதை அறிந்து ததஜ தலைமை அடி பணிய செய்தனர்.

பெரிய காம ஷாத்தான் மட்டுமே பதிவியிலுருந்து நீக்கப்பட்டுள்ளது. இது வளர்த்துவிட்ட பல குட்டி ஷாத்தான்கள் இன்னும் உள்ளே இருக்கின்றன. அவர்களை இனம் கண்டு தூக்கி எரிய வேண்டியது நமது கடமை. இந்தக் காம ஷாத்தானுக்கு சாமரம் வீசி வளைந்து கொடுத்த கேடுகெட்ட ததஜ தலைமையும் ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டு தகுதியான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும்.


No comments: