Sunday, May 20, 2018

நம்பி வந்தவர்களிடமே விபச்சாரமா? செருப்பால் அடித்தது போல் உள்ளது.

விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்டவர்களை மன்னிக்கும் அதிகாரம் யார் கொடுத்ததுஎந்த மார்க்க சட்டத்தின் அடிப்படையில் அந்த அதிகாரத்தை இவர்கள் கையிலெடுத்துக் கொண்டனர்? அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் சபிப்பவர்களின் சாபமும் உண்டாகட்டுமாக!
http://fazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_79.html
-------------------------------------------------------------------------

`பிஜே பற்றிய சில குழப்பங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஏனெனில் இது ஓர் இயக்கத்தின் பிரச்சனை அல்ல. சமுதாய பிரச்சனையாக மாறிவிட்டது. 

இன்று பலர் தங்கள் வீட்டு பெண்களை பயானுக்கே அனுப்ப பயப்படுகிறார்கள். உங்க மார்க்கத்தில் உள்ள மத போதகர்களும் விபச்சாரம் செய்யத்தானே செய்கிறார்கள். அதுவும் அவர்களை நம்பி வந்தவர்களிடமே என்று கேட்கும் போது செருப்பால் அடித்தது போல் உள்ளது.

சிலர் பிஜேவை மன்னிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், சிலர் அவரை மன்னித்து விட்டார்கள். சிலர் விபச்சாரத்தை விட ஷிர்க் கொடியது அவர் ஷிர்க் செய்யவில்லை விபச்சாரம் தானே(!) செய்துள்ளார் என்று கூறுகிறார்கள்.  

சிலர் அவர் மன்னிப்பு கோரி விட்டு மீண்டும் களப்பணியாற்ற வேண்டும் என்று கோருகிறார்கள். சிலர் மனிதனின் மானத்தோடு விளையாடாதீர்கள் என கூறி அவருடைய மானத்திற்கு அரணாக பதிவிடுகிறார்கள். 

சில கேள்விகளுக்கு பதில் கூறப்பட்டால் மேற்சொன்ன விஷயங்களுக்கு விளக்கம் கிடைத்து விடும்.

ஒருவர் விபச்சாரம் செய்து கையும் களவுமாக மாட்டிக்கொண்டால் அவரை எப்படி கையாள வேண்டும் என இஸ்லாம் கூறியுள்ளது? குர்ஆன் ஹதீஸின் வழியில் நின்று சொல்லவும்.

விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்டவரை மன்னிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? எந்த மார்க்க சட்டத்தின் அடிப்படையில் அந்த அதிகாரத்தை இவர்கள் கையிலெடுத்துக் கொண்டனர்?

விபச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் யாரையும் மன்னித்தது உண்டா?

விபசாரியும், விபசாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல் குர்ஆன் 24:2)


பிஜே குற்றத்தை தானே முன்வந்து ஒப்புக்கொண்ட உத்தமரா?

ஜாபிர்(ரலி) அறிவித்தார்;

பனூஅஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(ஸல) அவர்கள் அவரை விட்டு  தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது அவரிடம் நபி(ஸல) அவர்கள், 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை' என்றார். எனவே நபி(ஸல்) அவர்கள், அவருக்கத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள். 
நூல்;புஹாரி எண் 6820 
  
மற்றொரு அறிவிப்பில்
  
மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், '(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!' என்றார்கள். அவர், '(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் 'அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?' என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 
ஆதாரம்; புஹாரி எண் 6824 

1239 ''விபச்சாரம் செய்து கர்ப்பிணியான ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருபெண் அதே நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்து விட்டேன். என்மீது அதை (தண்டனையை) நிறைவேற்றுங்கள்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அவரது பொறுப்பாளரை அழைத்து, அவரது பொறுப்பாளரை அழைத்து, இவளுடன் நன்றாக நடந்து கொள்ளும் இவள் குழந்தை பெற்றெடுத்தும் என்னிடம் அழைத்து வாரும்'' என்று கூறினார்கள். அவர் நபி(ஸல்) அவர்களது கட்டளையை நிறைவேற்றினார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் அவளது துணியை அவள் மீது கட்டிவிட்டு அவள் மீது கல்லெறிந்து கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். இதைக் கண்ட உமர்(ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! விபச்சாரம் செய்த ஒரு பெண்ணுக்கா தாங்கள் தொழுகை நடத்துகிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு, ''அவள் செய்திருக்கும் பாவமன்னிப்பை இந்த மதீனா நகாரில் உள்ள எழுபது மனிதர்களுக்குப் பிரித்துப் பங்கிட்டாலும் அது அவர்கள் அனைவாரின் பாவங்களும் மன்னிக்கப்பட போதுமானதாயிருக்கும். அந்த அளவிற்கு அவள் பாவமன்னிப்புக் கோரியிருக்கிறாள். தன்னுடைய உயிரை இறைவன் வசம் ஒப்படைத்து விட்ட ஒரு பெண்ணை விடச் சிறந்த செயல் புரிந்தவரை நீர் கண்டதுண்டா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னுஹுசைன்(ரலி) அறிவிக்கிறார். -முஸ்லிம்

இப்படி தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட மாயிஸ்(ரலி)  அல்லது ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணோ அல்ல பிஜே. 

அப்படி ஒப்புக்கொண்ட பின்னரும் அவர்களை போனால் போகட்டும் என்று மன்னித்து விடவில்லை நபி (ஸல்) அவர்கள். ஆனால் இங்குள்ளவர்கள் சிலரோ தாங்களாகவே முன்வந்து பிஜேவை மன்னிக்கும் அதிகாரத்தை தங்கள் கையிலெடுத்துக்கொண்டுள்ளனர். அது எப்படி?

பிஜேயின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பல்வேறு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட போதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அது அவராலும் அவரை சார்ந்தவர்களாலும் மறுக்கப்பட்டது. மேலும் குற்றம் சாட்டியவர்களையே பொய்யர்களாகவும் அவதூறு கூறுபவர்களாகவும் காட்ட பல்வேறு தந்திரங்கள் கடைபிடிக்கப்பட்டன. மிமிக்ரி செய்து வெளியிட்டது போல பிஜேவே பேசி ஆடியோ வெளியிட்டார். குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் வைத்தவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தை பற்றியும் மிகக் கேவலமாக பதிவிடப்பட்டது. இப்போது அவதூறு சொல்லியவர் யார் என தெரிந்து விட்டது. இதற்கெல்லாம் என்ன தண்டனை வழங்கப்படவேண்டும்?

இதனை சம்பந்தப் பட்டவர்கள் மன்னிக்க வேண்டுமா? அல்லது வேடிக்கை பார்த்தோர் அல்லது பிஜேவின் அபிமானிகள் இதை மன்னிக்கலாமா? அவருக்காக களமிறங்குபவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதற்கு பதில் சொல்ல வேண்டும். 

இன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அடிக்க உதைக்க வந்து காவல்துறையில் புகார் தெரிவிப்போம் என்று கூறியவுடன் அவசர அவசரமாக அவரை இயக்கத்தை விட்டு நீக்கியிருப்பதாக அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. அவரை இயக்கத்தை விட்டு நீக்கியிருப்பதன் மூலம் அவர் தண்டிக்கப்பட்டு விட்டதாக ஆகிவிடுமா

இந்து மத சாமியார்கள் விஷயத்தில் ஆபாச வீடியோக்கள் வந்த போது குற்றச்சாட்டுகள் வந்த போது அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நாம் வைத்த விமர்சனங்கள் இப்போதும் வைக்கப்படுமா? நித்யானந்தா சொன்ன விளக்கமே இதற்கும் பொருந்துமா?

பிஜே ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறிழைத்து விட்டாரா?

பிஜே ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக தவறிழைத்து விட்டாரா? கிடையாது. அவர் சந்தர்ப்பங்களை திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டார். அவர் இதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்பதும் அவர் பல்வேறு பெண்களிடம் விபச்சாரம் செய்துள்ளார் என்பது வெளியிடப்பட்டுள்ள ஆடியோக்களில் இருந்து தெரிகிறது. அதுவும் தன்னை நம்பி இருந்த தன் இயக்கத்தை சேர்ந்த சகோதரர்களின் மனைவிமார்களிடமே தன் கைவரிசையை காட்டியிருக்கிறார். இந்த நம்பிக்கை துரோகத்திற்கு என்ன தண்டனை?

பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னிடம் கணவர் சம்பந்தமாக பஞ்சாயத்து கொண்டு வந்த குடும்பங்களின் பெண்களிடம் பேசி அவர்களை சரி கட்டி குலா விட சொல்லி பின்னர் அவர்களுடன் விபச்சாரம் செய்துள்ளார் பிஜே. இப்படி எத்தனை பெண்களை அவர் பாழாக்கியுள்ளார்? நல்ல குடும்பத்து பெண்களை இப்படி இவர் விபச்சாரிகளாக்கி உள்ளார். இவர் விபச்சாரம் செய்துள்ள பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு

அந்தந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் பிஜேவை மன்னித்து விட்டனரா? அல்லது மன்னிக்க முன்வருபவர்கள் அந்த குடும்பங்களை சேர்ந்தவர்களா?

விபச்சாரத்திற்கும் விபச்சார பஞ்சாயத்திற்கும் செலவிடப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது?

சமுதாயத்தை சேர்ந்த பலர் ஜக்காத்தாகவும் சதக்காவாகவும் தந்துள்ள பணம் தான் இதற்கு செலவிடப்பட்டுள்ளது. இந்த பணம் பிஜேவிடமிருந்து மீட்கப்பட்டதா? ஏற்கனவே விபச்சாரிகளுக்கு செலவிடப்பட்ட பணம், கையும் களவுமாக ஆடியோ மாட்டிக்கொண்டபின் பஞ்சாயத்து செய்ய தந்த பணம் இவையெல்லாம் பிஜேவுக்கு எங்கிருந்து கிடைத்தது? (ஒரு முறை விபச்சாரத்திற்கு மூன்றாயிரம் என தரப்பட்டதை ஆடியோ தெளிவுபடுத்துகிறது)  ஷிர்கை ஒழிக்க தந்த பணமா? இவையெல்லாம் பிஜேவிடமிருந்து கைப்பற்றப்பட்டதா? போனது போகட்டும் விபச்சாரம் செய்து அழித்தவை போக மீதமுள்ளவையாவது கைப்பற்றப்பட்டதா? இவற்றையெல்லாம் கைப்பற்றாமலேயே பிஜேவை மன்னிக்க வேண்டுமா?

இப்படி ஜக்காத்து சதக்கா பணத்தை கையாடல் செய்து விபச்சாரம் செய்தவரை மன்னிக்கும் முகாந்திரம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உள்ளதா?

மனிதனின் மானத்தோடு விளையாடாதீர்கள் என கூறப்பட்டது பிஜேவால் மானமிழந்த அந்த பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பொருந்தாதோ?

குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் தீர்ப்பளிக்க எங்களிடம் இஸ்லாமிய ஆட்சி இல்லை என்று சொல்பவர்கள் குறைந்த பட்சம் இந்திய அரசிடமாவது  அவரை ஒப்படைக்கலாமே? அவரை காவல்துறையிடம் ஒப்படைத்து தண்டனை வாங்கித் தரலாமே?

கடைசியாக ஒன்று குடும்ப பெண்களை விபச்சாரம் செய்ய தூண்டியவர்களுக்கும், விபச்சாரம் செய்தவருக்கும், விபச்சாரத்திற்கும் துணை நிற்பவர்களையும் அல்லாஹ்வும் மன்னித்ததில்லை., இந்த சமுதாயமும் மன்னித்ததில்லை. இது வரலாறு. துணை நிற்பவர்கள் தனித்து விடப்படுவார்கள். ——
இப்படிக்கு அபு அப்ரஹ்.
முகநூலில் கண்டது


No comments: