Sunday, May 13, 2018

இதயவலி எல்லோருக்கும் பொதுவானதே... ததஜ யாரை உருவாக்குகிறது ??

13/05, 9:51 am] JYaasir New St: ததஜவின் முக்கிய முகங்களாக கருதப்பட்ட 

பாக்கர் ததஜவில் இருந்து வெளியேறப்பட்டார்.
அதற்கு சொல்லப்பட்ட காரணம்
பெண் குற்றச்சாட்டு.

அல்தாஃபி ததஜவில் இருந்து வெளியேறப்பட்டார்.
அதற்கும் சொல்லப்பட்ட காரணம்
பெண் குற்றச்சாட்டு.

இப்பொழுது பீ.ஜே.யும் ததஜவில் இருந்து வெளியேறப்பட்டுள்ளார்.
அதற்கும் காரணம் பெண் குற்றச்சாட்டு.

அகில இந்திய அளவில் பெண் பாலியல் வன்கொடுமைகள் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரசியல் கட்சி பாஜக என்றால், அதே குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒரே ஒரு இஸ்லாமிய இயக்கம் என்றால் அது ததஜ மட்டும் தான் என்றால் அது மிகையில்லை.

ததஜ யாரை உருவாக்குகிறது ??

மார்க்க பிரச்சாரகர்களையா ??

அல்லது

பெண் பித்து பிடித்த காம காட்டேரிகளையா ??
்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
இதயவலி எல்லோருக்கும் பொதுவானதே... 

நேற்றுவரை தவ்ஹீத் ஜமாஅத்துடன் இருந்தவரை இதை பொய் என்று வாதிட்டவர்கள் இன்று வெளியேறியவுடன் மெய் என்று சொல்வது இதயத்திற்கு கூடுதல் பாதிப்பு என்று பிஜே சொல்கிறார்.

இதே போன்றே வேறுசில நண்பர்கள் என்னை டேக் செய்தும் சிலர் சாடைமாடையாகவும் கேள்விகள்  கேட்டிருந்தனர்.

கடந்த வருடன் ஆகஸ்ட் மாதத்தில் முதல் ஆடியோ வெளிவந்தவுடன் ஒரு சிலருக்கு சந்தேகம் இருந்தாலும் பலரும் அதை செட்டிங் என்றே நம்பினோம். அது செட்டிங் என்பதை பொதுவெளியில் பாதிக்கும்  வகையில் எல்லா காரணங்களையும் தேடிக்கண்டு பிடித்து பிஜேவுக்கு ஆதரவாக பலவகையில் களமாடினோம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

பிஜேவைப் பற்றி களங்கம் சுமத்துபவர்களுக்கு பதிலடியாக பிஜெவே தலைவராக வந்து இவையனைத்தையும் முறியடிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தோம். கடந்த ஆண்டு பொதுக்குழுவுக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே 'பிஜேவை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று நமக்கு எழுதி கொடுக்கப்பட்ட பதிவை நாம் அனைவரும் ஒரே குரலில் பதிவு செய்தோம்.

பல வருடங்களுக்கு முன்னர் தன்மீது சுமத்தப்பட்ட பொருளாதார குற்றச்சாட்டுக்களுக்கு 'எனக்கு ஐம்பது லட்சம் கொடுத்துவிட்டு எனது பெயரில் உள்ள அணைத்து சொத்துக்களையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்' என்று பொட்டில் அடித்தமாதிரியான ரீதியில்... பிஜேவும் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அறிவியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராடி வெற்றிபெறுவார் என்ற நிம்மதி பெருமூச்சுடன் இருந்த போது.....

 பொதுக்குழுவுக்கு சில நாட்களுக்கு முன்பு இடியாய் வந்து இறங்கியது பிஜேவும் அப்பல்லோ ஹனிபாவும் பேசிய அந்த இரண்டாவது உரையாடல். இந்த ஆடியோ பலருக்கும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது என்பதே நிதர்சனம். இருவரின் குரலும் அச்சு அசலாகப் பொருந்தி போகிறது என்ற கருத்தைக்கூட அப்போதே மூடிய குழுமங்கலிலும் பதிவு செய்திருந்தேன்.

இரண்டாவது வந்த இந்த ஆடியோவுக்கு மறுப்போ அல்லது விளக்கமோ சொல்லாமல் அதீத மவுனமே ததஜ  தலைமையில் நீடித்தது. இது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. காரணம் பிரபலமான பிஜேவின் குரலை மிமிக்ரி செய்வது எளிது ஆனால் பேச்சால் அவ்வளவு பிரபலமாகாதா அப்பல்லோ ஹனிபாவின் செய்வது சாத்தியக்குறைவு. அதில் பேசப்படும் விடயங்களாக காஷிஃபுல் ஹுதா விவகாரம் கோவை ரஹ்மத்துல்லாஹ்வின் உரை போன்றவை கால அளவுடன் ஒத்துப்போகிறது.

இதையொட்டி இந்த சம்பவம் உண்மையென பத்திரிக்கையில் எழுதிய குமுதம் ரிப்போர்ட்டர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையோ அல்லது கண்டன ஆர்ப்பாட்டமோ கூட நடத்தாமல் மவுனமாக கடந்து சென்றது சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது.

அடுத்து பிஜேவின் குரலை மிமிக்ரி செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ததஜவின் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட ஆடியோ சிறிது மனநிறைவைக் கொடுத்து நம்பிக்கையை உண்டாக்கியது. ஆனால் மறுநாளே அதில் பேசியவர்கள் ரியாஸ் மற்றும் மக்தூம் என்ற ததஜவின் தலைமை அலுவலக ஊழியர்கள் அவர்களின் என்று குரல் பரிட்சையமானவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலே சொல்லாமல் மழுப்பியது தற்காலிகமாக எழுந்த மன நிறைவையும் நம்பிக்கையையும் பொய்க்கச் செய்தது. அடுத்த சில வாரங்களில் ஷாட்ஷாத் பிஜெவே பிஜேவின் குரலை மிமிக்ரி செய்த விவகாரம் தலைமையில் உள்ளவர்களின் மூலமாகவே தெரிந்து கொண்டேன்.

பிஜே மீதான இருபது வருட உறுதியான நம்பிக்கை  கடந்த ஆண்டு நவம்பர் முதல் நொறுங்க ஆரம்பித்தது. அதன் பிறகு இருதரப்பிலும் கிடைத்த மேலதிக தகவல்கள் அதை ஊர்ஜிதப்படுத்தும் தரவுகள் இதயத்தை சுக்குநூறாக நொறுக்கி பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கியது. அனைத்தும் அம்பலப்படுத்த வேண்டும் என்று ஆழ்மனதின்  ஒரு பக்கம் சொன்னது ஆனால் பிஜேவின் கண்ணியத்தில் தான் லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆத்மார்த்த அர்பணிப்பில் உருவான ததஜவின் எதிர்காலமும் பிணைந்துள்ளது அதனால் மவுனியாகவே தொடர இன்னொரு பக்கம் சொன்னது. 

சில உண்மைகளை அறிந்ததால் நான் மவுனியாக பிஜே ஆடியோ விவகாரத்தில் வெளிப்படையான ஆதரவைத்  தவிர்த்து ததஜவின் சமூகப் பணிகளுக்கு மட்டும் ஆதரவளித்து வந்தேன். ஒரே காரணம் பல்வேறு சமூகப் பணிகளை செயல்படுத்தி வரும் ஒரு சமூகக் கட்டமைப்பு குலைந்து விடக்கூடாது என்பதால்தான்.

ஆனால் பிஜே தலைமையிலான நிர்வாகமே இந்தக் கட்டமைப்பை பல்லாண்டுகால அர்ப்பணிப்பால் உருவாக்கியவர்களை கள ஆய்வு மற்றும் அட்ஹாக் கமிட்டி என்ற பெயர்களில் அடாவடிதனம் செய்து  உதாசீனப்படுத்தி அவமானப்படுத்தி வெளியேற்ற ஆரம்பித்தது.

இருபது ஆண்டு காலம் தனது குடும்பம் மற்றும் தொழில் என்று அனைத்தையும்  ஒதுக்கிவைத்து விட்டு முழுமூச்சுடன் இயக்கத்துக்காகவும் இயக்க கொள்கைக்காகவும் இயங்கிய ஹாஜா நூஹு என்ற மனிதர் உதாசீனப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு கட்டம் கட்டி வெளியேற்றப்பட்டார். அதை மறுகேள்வியில்லாமல்  எதோ சாதனை போல் அடுத்தகனமே ஆரவாரத்துடன் கொண்டாட ஆரம்பித்தது ததஜவில் உள்ள ஒரு கூட்டம். 

இதில் நான் எனது மனதுக்கு நியாயமாய்ப்பட்ட கேள்விகளை எழுப்பியதற்கு பதிலாக  பட்டங்களும் வசவுகளுமே பரிசாகக் கொடுக்கப்பட்டது.

தனக்கு ஒவ்வாத ஒருவரை சந்தித்த காரணத்தால் கடலூர் அப்துர் ரசாக் அமானிதமாகப் பகிர்ந்த குடும்ப விவகாரங்களை லெட்டர் பேடில் எழுதி மிரட்டி அவரை நீக்கிவிட்டு கள்ள ஐடிக்களில் அதை பரப்பினர்.

இவைகள் கூட பிஜேவின் அந்தரங்க லீலைகளை அம்பலப்படுத்த தூண்டவில்லை. இந்த கால கட்டங்களில் சவுக்கு சங்கர் போன்றோர் கூட காதலர்  தினத்தன்று ஆடியோ விவகாரத்தை எள்ளி நகையாடியபோது பிஜேவுக்கு முட்டுக்கொடுக்கும் விதமாகத்தான் கருத்துகளை பதிவு செய்திருந்தேன். காரணம் பிஜேவின் கண்ணியத்தில் தான் லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆத்மார்த்த அர்பணிப்பில் உருவான ததஜவின் எதிர்காலமும் பிணைந்துள்ளது என்ற நம்பிக்கை தான்.

ஆனால் மைசூர் தர்பியாவில் அப்துர் ரசாக்கின் குடும்ப அமானிதங்களை லெட்டர் பேடில் எழுதியது சரி என்று சப்பைக்கட்டு காட்டியதும்... 

அல்தாபி அல்லாஹ்வை சாட்சியாக வைத்து தனித்து இருந்ததை ஒப்புக்கொண்டு ஆனால் விபச்சாரம் செய்ததை மறுத்த நிலையில் அவர்மீது விபச்சார குற்றசாட்டை எப்படியாவது சுமத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது வீட்டில் சிகிச்சைக்கு வந்து தங்கியவர் மாற்று ஆட்டோவில் சென்றவர் என்று ஏதும் அறியா பத்தினிப்பெண்களின் மீது அவதூறை அள்ளித்தெளித்த வக்கிர செயலும்...

அல்தாபி மீது குற்றசாட்டு அளித்த பெண் நான்கே நாட்களில் விபச்சாரம்  செய்த குற்றசாட்டை மறுத்து வாபஸ் வாங்கிய  விஷயத்தை மறைத்து அணைத்து நிர்வாகிகளின் குடும்பத்தினரையும் அல்லாஹ்வின் சாபத்தை கேக்க வைத்த கயமைத்தனமும் தான் பிஜேவின் லீலைகளை பற்றி அம்பலப்படுத்த தூண்டியது.

குடும்ப விவாகரம் சம்பந்தமாக ஆலோசனை கேட்க வந்த பெண்களில் பலவீனமானவர்களை தனது காமசேட்டைக்கு உபயோகம் செய்த ஒரு வக்கிரமாதித்த Pervert... ஃபோனில் அந்நிய பெண்களுடன் ஆபாசமாகி பேசியும் அவர்களது அங்கங்களை வீடியோவாகவும் பதிவுசெய்து தனிமையில் ரசித்த ஒரு Sexually Starved/Aggravated  பொறுக்கி... பொருளாதாரத்தில் நலிவடைந்த அபலைப் பெண்களை ஆசை வார்த்தை காட்டி அனுபவித்த ஒரு Sugar Daddy... தன்னை யோக்கியவானாகவும் தன்னுடைய லீலைகளை  பொத்தி பாதுகாக்கும் ஆசாமிகளை  யோக்கியவான்களாகவும் நிறுவ அப்பாவி குடும்ப பெண்களின் மீது அவதூறு சொல்லி களங்கப்படுத்த முற்பட்ட ஒரு பொறுக்கியை அம்பலப்படுத்துவதில் என்ன தவறு ?

பிஜே என்ற இந்த பொறுக்கி செய்த லீலை சாம்ராஜ்யத்தில் பதிவானவைகளில் வெளிவந்தவை வெகு சிலவைகளை... இன்னும் பதிவானவைகளில் வீதிக்கு வராமல் உறங்கிக்கொண்டிருக்கிற மற்றும் பதிவாகாமல் மடிந்த அசிங்கங்கள் பலனவாம். 

இப்போதுதான் பிஜேவின் ஆடியோவை கனடாவிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ சென்று பரிசோதனைக்கு அனுப்பும் கோரிக்கை உள்ளே வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறதாக அறிகிறேன். அதிலுள்ள உண்மைகளும் மற்றவழியில் மேலதிக உண்மைகளும் வெளிவரும்போது அதை தாங்கும் கனத்த இதயத்தை அல்லாஹ் அனைவருக்கும் தரட்டும்.

எவ்வளவு சீக்கிரம் பிஜே தனது தவறுகளை ஒப்புக்கொண்டு தவ்பா செய்கிறாரோ அவ்வளவு அவருக்கும் நல்லது மற்றும் அவரது அந்தரங்கங்களை தெரிந்து வைத்துக்கொண்டு அவரை பாதுகாக்கிறோம்  என்ற பெயரில் மிரட்டி சுரண்டிக்கொண்டிருக்கும் கும்பலிடமிருந்து ததஜ என்னும் மக்கள் பேரியக்கத்துக்கும் விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறேன்.
்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

No comments: