Friday, May 11, 2018

பி.ஜே.யின் சறுக்கல்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...  சகோ பிஜே அவர்களுக்கு

கழிந்த வருடம் உங்களை பற்றிய முதல் ஆடியோ வெளியே வரும் போது கட்சி இயக்க பேதம் இன்றி மக்கள் உங்களுக்கு அரணாக நின்றனர். காரணம் கொள்கையை மட்டும் எடுத்துச்செல்லி பரப்புரை செய்வதை மட்டும் வழக்கமாக கொண்ட ஒருவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை மக்கள் கொண்டிருந்தனர்.

அந்த நம்பிக்கையை தகர்த்தது உங்களின் பின்வந்த செயல்கள். 

அல்தாபி விசயத்தில் அவருக்கு உரிய நடவடிக்கையை ஜமாஅத் எடுத்த பின், ரியாத் மைதீன் என்ற போலி நபரை ஏற்படுத்தி அதன் மூலம் சகோ அல்தாபியின் மானத்தையும் அவர் குடும்ப மானத்தையும் துச்சமாக மதித்து மக்கள் மத்தியில் பரப்புனீர்கள். அல்லாஹ்வின் முதல் ஆலயம் கஃபாவை விட புனிதமாக மதிக்கப்படவேண்டிய தனி நபர் மானத்தை உங்களின் சுய லாபத்திற்காக  மீறினீர்கள்.  இது உங்களின் #முதல்_சறுக்கல்.

இரு சகோதரர்களுக்கு இடையே அபிப்ராய வித்தியாசங்கள்  பிணக்குகள் ஏற்படுவது சகஜம் தான். அது தலைமையின் கவனத்திற்கு வரும்போது முள்ளிற்கும் சேலைக்கும் பாதகம் இல்லாமல் அதை தீர்த்து வைக்கவேண்டிய கடமை தலைமைக்கு உண்டு. அதுவும் நீங்கள் தலைவராக இருக்கும் போது அது நடைபெறும் என அதிகமான மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நடைபெற்றதோ அதற்கு எதிரான செயல்கள். மக்களை தூண்டிவிட்டு நேற்றுவரை மிகவும் அன்னயோன்னமாக இருந்து குமரி சகோதர்ர்களுக்கிடையில் பிணக்கை ஏற்படுத்தி, உறவை முறித்து இன்னும் ஏன் உங்களின் தகுதி இன்மையால் சில கல்யாணமே நின்றுபோயிற்று. மிக சாதாரணமாக முடிக்கவேண்டிய விசயத்தை பூதாகரமாக மாற்றியது நீங்கள் தலைமை வகிக்கும் இந்த நிர்வாகம் தான் இத்தனை பிரச்சினைக்கும் முழுக்காரணமும். இது உங்களின் #இரண்டாவது_சறுக்கல்.

இதற்கு மகுடம் வைப்பது போன்று குமரி நிர்வாகத்தில் சகோ ஹாஜா தலையிட்டார் என்ற அல்ப காரணத்தை சொல்லி அவரை நீக்கம் செய்தது உங்களின் #மூன்றாவது_சறுக்கல்.

தர்பியா என பெயரிட்டுதாம் ஏற்ற கொள்கைக்காக இந்த ஜமாஅத்தில் தனது வாழ்நாளை தியாகம் செய்த பலருடைய மானத்தையும் ஜமாஅத் நன்மை என்ற ஒற்றைக்காரணத்தை கொண்டு காற்றில் பறக்கவிட்டு இது குர்ஆன் சுன்னாவை பேணும் ஜமாஅத் அல்ல என நிரூபித்தீர்களே அது உங்களின் #நான்காவது_சறுக்கல்.

தவறு செய்தால் சட்டையை பிடித்து கேளுங்கள் என்று வார்த்தெடுத்த ஜமாஅத்தில், கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக ஜமாஅத்தை விட்டு சகோ யூசுப் அவர்களை ஓரம் கட்டினீர்களே? அது உங்களின் #ஐந்தாவது_சறுக்கல். 

நீங்கள் காணாத விசயத்திற்கு, இஸ்லாமிய சட்டத்தின்படி 4 சாட்சிகள் தேவைப்படும் விபச்சார குற்றச்சாட்டிற்கு, 4 சாட்சியை வைத்து எவனாவது விபச்சாரம் பண்ணுவானா என மார்க்கத்தை கேலி செய்து, ஏதோ ஒருத்தி குற்றச்சாட்டு கூறி அதை வாபஸ் பெற்ற பின்பும் அதில் சம்பந்தப்பட்ட சகோ அல்தாபிக்கு எதிராக முபாஹலாவரை சென்று அல்லாஹ்வின் சாபத்தை வேண்ட முனைந்தீர்களே? அது உங்களின் #ஆறாவது_சறுக்கல்.

ஜமாஅத்திற்க்கு எதிரான கருத்து உடையவர்களையும், அவர்கள் குடும்பங்களையும் உங்களால் வார்க்கப்பட்ட தம்பிகள் அரச்சனை செய்தபோது அதை கண்டும் காணாமல் போனது உங்களின் #ஏழாவது_சறுக்கல்.

ஜமாஅத்தின் கருத்திற்கு எதிர்கருத்து உடையவர்களின் ஏழு தலைமுறையை தோண்டி எடுத்து அவர்களின் தவறுகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து அதை ஜமாத்தின் கள்ள ஐடியான ரியாத் மைதீன், நாகூர் கனி போன்றவற்றில் அவதூறுகளை அள்ளிவீசும் போது அதை ரசித்தீர்களே அது உங்களின் #எட்டாவது_சறுக்கல்

ரியாத் மைதீன் என்ற ஜகாத் மைதீனை அவதூறு பரப்ப ஏவிவிட்டு, அவரை இதுவரை ஜமாஅத்தில் வைத்துள்ளீர்களே அது உங்களின் #ஒம்பதாவது_சறுக்கல்.

நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாத செய்யது இப்ராஹிமை செயலாளர் ஆக்கி அதன்மூலம் ஜமாஅத் இழிநிலைக்கு சொல்லும் போதும் அதை கவனிக்காமல் இருந்தீர்களே அது உங்களின் #பத்தாவது_சறுக்கல்.

தங்களின் இத்தகைய சறுக்கலினால், மக்கள் உங்கள் மீது வைத்து இருந்த மரியாதையை நீங்களாகவே இழந்தீர்கள். எனவே தற்ப்போதைய ஆடியோ விசயத்தில் மக்கள் அதிகமாகவே கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். அது உங்களுக்கு மனவருத்தத்தையும் தந்துள்ளது என உங்கள் பதிவால் புரிந்துகொண்டேன்.

இதுவரை செய்யாத இதுபோன்ற செயல்களை சமீபகாலமாக நீங்கள் ஏன் செய்கின்றீர்கள் என என் போன்றவர்களுக்கு  புரியவில்லை. இத்தனை விசயங்களை செய்த பின்பும் அதில் பாதிக்கப்படவர்கள் எத்தனை மனவருத்தம்   உங்களால் அவர்களுக்கு  ஏற்பட்டு இருக்கும் என இப்போது புரிந்து கொண்டு இருப்பீர்கள் என  நம்புகின்றேன்.

காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலையை விட கடினமான சூழ்நிலையை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளான். 

இனியும் காலம் கடந்துவிடவில்லை. நடைபெற்ற தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.  உங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். 

நாம் அனைவரும் மனிதர்கள். மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர் தவறை உணர்ந்து அதை திருத்திக்கொள்பவர் தான். அதையும் செய்து நீங்கள் கொள்கையால் வார்த்தெடுத்த இந்த சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என ஆசைப்படுகின்றேன்.

அல்லாஹ்விடம் அதற்காக பிரார்திக்கின்றேன்.

No comments: