Monday, May 21, 2018

நேற்றைய ததஜ மாநில செயற்குழு தொடர்பாக மாவட்ட சுற்றறிக்கை

சகோ. சையது இப்ராஹிம், சாதிக், எம் எஸ் சுலைமான், ஷம்சுல்லுஹா போன்றோர் இது தொடர்பாக பேசுகின்ற போது, அவரின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக இந்த செயலை இதுவரை நாங்கள் நம்பாமல் தான் இருந்தோம் எனவும் தற்போது தான் இதன் உண்மைத்தன்மையை அறிகிறோம் எனவும் தங்களையும் அறியாமல் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.


📍
மாவட்ட சுற்றறிக்கை *KK/12/2018* 📍

தேதி : 21.05.2018


தலைப்பு : **நேற்றைய மாநில செயற்குழு தொடர்பாக.*

அன்புள்ள கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பிஜே மீதான நடவடிக்கை தொடர்பான கூடுதல் விளக்கங்களுக்காக நேற்று திருச்சியில் *மாநில செயற்குழு* கூடியதை நீங்கள் அறிவீர்கள்.


அங்கே அளிக்கப்பட்ட விளக்கங்களின் சாராம்சத்தை இங்கே உங்கள் கவனத்திற்கு தருகிறோம்.


பிஜெ மீதான குற்றச்சாட்டு புகாராக சம்மந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தரப்பில் மாநில தலைமைக்கு தரப்பட்டது.


பிஜே பதவி விலக வேண்டும், அனைத்து பொறுப்புகளிலிருந்தும், தாவா களத்திலிருந்தும் அவரை வெளியேற்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர்கள் ஜமாஅத்திடம் முன்வைத்ததோடு, இதையே பிஜெவிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி அவரையும் மிரட்டியிருக்கின்றனர்.


புகார் வந்ததையடுத்து, அதற்கான சாட்சிகள் , ஆதாரங்கள் தொடர்பாக கேட்ட போது, சம்மந்தப்பட்ட பெண்ணின் சகோதரருடன் பிஜே பேசிய ஆடியோவும், அதே போன்று, அந்த பெண்ணின் சகோதரியிடம் பிஜே பேசிய ஆடியோ ஒன்றும் *அதிகாரப்பூர்வமாக* சமர்ப்பிக்கப்பட்டது.


அதோடு, சமீபத்தில் வெளியான 10 நிமிட ஆபாச உரையாடல் தொடர்பான *கால் ஹிஸ்டரியும்* ஸ்க்ரீன் ஷாட் வடிவில் தரப்பட்டது.


சான்றுகள் போதுமான அளவில் இருந்த நிலையில் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன மாநில உயர்நிலைக்குழு, இது தொடர்பாக பிஜேவை தொலைப்பேசியில் அழைத்து, "உங்கள் மீது ஆதாரத்துடன் அந்த பெண் தரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறது, நீங்கள் குற்றம் செய்திருப்பது நிரூபணமாகியிருக்கிறது, இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?" என கேட்டனர்.


சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை தான் என அந்த உரையாடலில் *பிஜே ஒப்புக் கொண்டார்* (அந்த உரையாடல் செயற்குழுவில் போட்டுக் காட்டப்பட்டது).


வீடியோ வாக்குமூலம் தந்தாக வேண்டும் எனவும், அதற்காக நேரில் வருமாறும் உயர்நிலை குழு அவரை அழைத்தது.


ஆனால், அதற்கு தயக்கம் காட்டிய அவர், *வீடியோ வாக்குமூலம் வேண்டாம், வேண்டுமென்றால் எழுதித் தருகிறேன்,* என சொல்லியிருக்கிறார்.

அதை ஏற்றுக் கொள்ளாத உயர்நிலை குழு, வீடியோ வாக்குமூலத்தை *தொடர்ந்து வலியுறுத்தியும் கூட அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.* 

எனவே அவர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக மட்டும் வாக்குமூலம் பெறப்பட்டு, ஜமாஅத்தை விட்டு *நிரந்தரமாக அவர் நீக்கப்பட்டதாக* அறிவிக்கப்பட்டது. (அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கமில்லை).


இது போக, இவரின் இத்தகைய செய்கைகள் முன்கூட்டியே பல மாநில நிர்வாகிகள் அறிந்து வைத்திருந்தார்கள் எனவும், அவருடன் சேர்ந்து இவர்களும் கூட்டு சதி செய்ததாகவும் பரப்பட்ட அவதூறுப் பிரச்சாரங்களை அனைத்து உயர்நிலைகுழு உறுப்பினர்களும் *திட்டவட்டமாக, அல்லாஹ்வை சாட்சியாக்கி  மறுத்தனர்.* 


சகோ. சையது இப்ராஹிம், சாதிக், எம் எஸ் சுலைமான், ஷம்சுல்லுஹா போன்றோர் இது தொடர்பாக பேசுகின்ற போது, அவரின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக இந்த செயலை இதுவரை நாங்கள் நம்பாமல் தான் இருந்தோம் எனவும் தற்போது தான் இதன் உண்மைத்தன்மையை அறிகிறோம் எனவும் தங்களையும் அறியாமல் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.


பொதுமக்களைப் போன்று, மாநில நிர்வாகமும் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்த்தே வந்திருக்கிறது என்பதையும், அவர் மீது துளியளவும் அவர்களுக்கு சந்தேகம் எழாத நிலை தான் இதுவரை இருந்தது என்பதையும், அவர் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் அந்த மனிதர் துரோகம் இழைத்து விட்டார் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. 


தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானங்களில், இனி வரும் காலங்களில் பிஜே எழுதிய குர்ஆன் தர்ஜுமா, நூல்கள் ஆகியவற்றை, அவருடைய பெயரை நீக்கி, " *TNTJ அறிஞர் குழு* " என பெயர் மாற்றம் செய்து வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.


அவருடைய ஆடியோ, வீடியோக்களைப் பொறுத்தவரை அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் வரை அதை எவருக்கும் வினியோகிப்பதில்லை எனவும், ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அவற்றை *மறைத்து* (hide) வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


புதிய தாயிக்கள், ஆய்வாளர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோரை இன்னும் அதிகப்படுத்துவது தொடர்பான தலைமையின் புதிய திட்டமும் செயற்குழு உறிப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பிஜெ, ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட இந்த அசாதாரண சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் ஜமாஅத்தின் எதிரிகள், ஜமாஅத்தை விட்டும் நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவர்கள் போன்றோர், இந்த ஜமாஅத்தின் கட்டமைப்பையே சீர்குலைக்கும் கெட்ட எண்ணத்துடன் விஷக்கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.


நம்முடைய ஒன்றுபட்ட உறுதிப்பாட்டின் மூலமும், முன்பை விட வீரியமிக்க தாவா முறைகளின் வாயிலாகவும் இத்தகைய சூழ்ச்சிகளை இறையருளால் முறியடிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


எந்த நிலையிலும் நாம் கொண்டிருக்கும் *சத்தியக் கொள்கை ஒன்றே நமக்கான ஒரே தலைமை* என்பதை உளமார நம்பி செயல்படுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவல் கிளை நிர்வாகிகளுக்கு மட்டுமானது. இதை பொதுவில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

- மாவட்ட நிர்வாகம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம்
 ---------------------------------------------------------------------

இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தலாமா? 

இந்த விஷயத்தில் நம் மார்க்கத்தின் நிலை என்ன? என்பதை அறிந்து செயல்படுவோம். செய்த விமர்சனங்கள் மார்க்க ரீதியாக மார்க்க ரீதியாக தவறு என்றால் விமர்சனத்தை நிறுத்தி விட்டு நடந்தவற்றுக்கு வரட்டு கவுரவம் பார்க்காமல் பகிரங்க மன்னிப்பு கேட்போம். 

சரிதான் என்றால், மார்க்கத்தில் தடை இல்லை என்றால், தூய இஸ்லாத்தை நிலை நாட்ட நமது விமர்சனங்களையும் மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் பிரச்சாரகர்களை அடையாளம் காட்டும் பணிகளையும் தொடர்வோம். இன்ஷா அல்லாஹ்.


முன்னுதாரணத்தை பார்க்க வேண்டும்.

மார்க்க பிரச்சாரகர்களிலெல்லாம் தலைசிறந்தவர், முதன்மையானவர் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கவே இருக்காது. 

அவர்கள் மூலம்தான் அல்லாஹ் இந்த மார்க்கத்தை நமக்குத் தந்தான். அவர்களிடமிருந்துதான் இந்த மார்க்கத்தின் பிரச்சாரப் பணியே துவங்குகிறது. 

பிரச்சாரகர்களின் குறைகளை வெளிப்படுத்தக் கூடாது, அவர்களது தவறுகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டக் கூடாது, தப்புகளை தட்டிக் கேட்கக் கூடாது என்றால் அதற்குரிய  முன்னுதாரணத்தை இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையில்தான் பார்க்க வேண்டும். அதைத்தான் ஆதரமாக ஏற்க வேண்டும்.

ஸலாமுக்கு பதில் சொல்லாத நபி

கண் தெரியாத ஸஹாபியான அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். ஒரு நோக்கத்துடன் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பதில் சொல்லவில்லை. இதனை கண்டித்து உடனேயே 80:1,2 ஆகிய வசனங்களை அருளுகிறான் அல்லாஹ்.

சபித்த நபி ஆட்சேபித்த அல்லாஹ்

உஹது போர்க் களத்தில் பாதிக்கப்பட்ட இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எதிரிகளைப் பார்த்து தமது நபியின் முகத்தில் ரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்று சபித்தார்கள். இந்த வார்த்தையை ஆட்சேபித்து (துாதரே) அதிகாரத்தில் உமக்கு பங்கில்லை என்று 3:128 வசனத்தை அருளினான்.

சொல்லிக் காட்டியதே இத்தகைய பாதிப்பு என்றால்?

இவற்றை உணர்வு பூர்வமாக புரிந்தால்தான் இவற்றின் தாக்கங்களை புரிய முடியும். நாம் ஒருவரின் ஸலாமுக்கு அது மாதிரி பதில் சொல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். 

இதை இரண்டு பேர் முன்பாக, என்னங்க அவர் ஸலாம் சொல்கிறார் நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்களே? என்று சொல்லிக் காட்டினாலே போதும் எவ்வளவு வெட்கப்படுவோம், வேதனைப்படுவோம், நமது முகம் எப்படி மாறும்

இதை எவ்வளவு பெரிய கவுரவப் பிரச்சனையாக இமேஜ் பாதிப்பாக கருதுவோம்? 2 பேர் அறிய சொல்லிக் காட்டியதே இத்தகைய பாதிப்பு என்றால்? கண்டித்துப் பேசினால் நிலமை எப்படி இருக்கும்?

தாங்க முடியாத துன்பம் ஏற்படும்போது மனிதர்கள் கடுமையான வார்த்தைகளை கூறி விடுவது இயல்புதான். 

உஹது போர்க்களத்திலே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது சாதாரண பாதிப்பா

நபி (ஸல்) அவர்கள் தலைக் கவச சங்கிலிகள் பற்களில் மாட்டிக் கொள்ளும் அளவில் முகத்தில் வெட்டப்பட்டு பற்கள் உடைக்கப்பட்டது. தாடையும் பிளக்கப்பட்டது. அவர்களது முகத்திலிருந்து ரத்தம் பீறிட்டு ஓடியது. அந்த மாதிரி பாதிப்பான நேரத்தில் நாம் செய்யும் தவறை யாராவது சொல்லிக் காட்டினால் ஜீரணிப்போமா? நமது மன நிலமை எப்படி இருக்கும்?

சொல்லிக் காட்டவில்லை, கண்டித்துக் கூறுகிறான்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் சொல்லிக் காட்டவில்லை. கண்டித்துக் கூறுகிறான். சாதாரணமான கண்டிப்பா? ஸலாமுக்கு பதில் சொல்லாத நிகழ்ச்சியைக் கூட நீர் கடுகடுத்தீர், அலட்சியம் செய்தீர் என்று நேரடியாக சொல்லவில்லை. 

நாம் ஒருவரிடம் கோபமாக உள்ள நிலையில் அவரிடம் நேரடியாக பேச விரும்பாமல் அவரது செயலை வெறுத்து கண்டனத்தை பிறரிடம் கூறி வெளிப்படுத்துவோம். 

அது மாதிரி இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார் என்று 3 வது ஆளிடம் சொல்லிக் காட்டுவதுபோல் ஆயத்து இறக்கி தனது கடுமையான கண்டிப்பை காட்டி உள்ளான் அல்லாஹ்.

அவர் நல்ல பேச்சாளர் அவரை மாதிரி யார் பேச முடியும். அவருக்குத்தான் கூட்டம் கூடுகிறது. அவரது இமேஜை கெடுத்தால் பிரச்சாரப்பணி பாதிக்கும். 

அவரது பேச்சை கேட்டு வந்தவர்களும் அவரைப் பற்றிய விமர்சனத்தை அறியும்போது திரும்ப போய் விடுவார்கள் என்கின்றனர். இது பற்றி மார்க்கத்தின் நிலை என்ன?

நபிக்காகக் கூட இஸ்லாத்தில் இருக்கக் கூடாது.

முஹம்மத், தூதரே தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா?.. என்று அல் குர்ஆன் 3:144. வசனத்தில் அல்லாஹ் கேட்கிறான். 

இந்த வசனத்தின் மூலம் நபிக்காகக் கூட இஸ்லாத்தில் இருக்கக் கூடாது என்பதை திட்டவட்டமாகக் கூறி அல்லாஹ்வுக்காகத்தான் இஸ்லாத்தில் இருக்க வேண்டும் என்பதையும் பிரகடனப்படுத்தி உள்ளான் அல்லாஹ்.

(குறிப்பு- இது இன்று எழுதியது அல்ல 22-07-2004 அன்று பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன் என்ற தலைப்பில் எழுதியது)

நபிக்காகக் கூட இஸ்லாத்தில் இருப்பதை விரும்பாத அல்லாஹ் சாதாரண மனிதர்கள் மீது உள்ள பிரியத்தால், அதுவும் விபச்சார பொய்யர்கள் மேல் உள்ள பிரியத்தால் இஸ்லாத்தில் இருப்பதை விரும்புவானா? சாதராண பொய்களா? விபச்சார பொய்கள்.

ஒருவனை ஏமாற்ற ஒருவன் ஒரு முறை பொய் சொல்வதையே மனித உள்ளம் உள்ளவர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். 

ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஏமாற்ற எப்பொழுதுமே பொய் சொல்வதையே மூலதனமாகக் கொண்டு ஒன்றுக்கு பல முறை பிரிவினைகளை ஏற்படுத்தி, விபச்சார பொய்கள் மூலம் அந்த பிரிவினைகளை நியாயப்படுத்தி சுயலாபம் அடைந்து வருபவர்களை மனித உள்ளம் உள்ளவர்கள் ஏற்பார்களா

அவர்களை மனிதர்களே ஏற்காத போது, அந்த பொய்யர்களுக்காக இஸ்லாத்தில் இருப்பதை அல்லாஹ் ஏற்பானா?


ஒரு நிறுவனத்திலே மேனேஜராக உள்ளவர் செய்த தவறுக்காக ஏனைய பணியாட்கள் அறியும் வண்ணம் அதன் உரிமையாளர் கண்டிப்பதை ஏற்பாரா? எல்லாருக்கும் தெரியும் வண்ணம் என்னை கண்டித்தால் அவர்கள் எப்படி என் சொல்லை கேட்பார்கள் என்பார். 

மற்றவர்களும் மேனேஜர் கூற்றை சரி காண்பார்கள். மேனேஜர் செய்யாத தவறை சொல்லி இந்த மேனேஜர் பொய் சொன்னால் இவரை டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்று கூறினால்? சொல்லவும் வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் இமேஜ் பாதிக்குமே என்பதை பொருட்படுத்தாமல் செய்த தவறுகளைத்தான் மேற்கண்ட ஆயத்துகளில் கடுமையாக கண்டித்தான் என்றால் செய்யாத தவறு பற்றி சொல்லிக் காட்டும்போது உள்ள வசனத்தைப் பாருங்கள். ... 

சில சொற்களை இவர் நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் அவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. என்று 69:44,45வது வசனங்களில் சொல்லிக் காட்டி உள்ளான்.


இவ்வாறு அல்லாஹ் யாரை கண்டிக்கிறான்? தண்டிப்பேன் என்கிறான்? யாரை அவன் தேர்வு செய்து வேதத்தை அருளி விளக்கத்தையும் கொடுத்து முழுமைப்படுத்தப்பட்ட இஸ்லாத்தின் முதல் பிரச்சாரகராகவும் இறுதித் தூதராகவும் ரஹ்மதுல் ஆலமீனாகவும் ஆக்கினானோ அந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களைத்தான் கண்டிக்கிறான், தண்டிப்பேன் என்கிறான். அவர்களிடம் ஏற்பட்ட எந்த தவறையும் மூடி மறைக்கவில்லை.


இவ்வாறு கண்டித்துள்ள அல்லாஹ் தனது தூதரின் இமேஜ் பாதிக்காத வண்ணம் ரகசியமான வஹி மூலம் சுட்டிக் காட்டி இருக்கலாம். இதன் மூலம் பிரச்சாரகர்களின் தவறுகளை அவர்கள் இமேஜ் பாதிக்காத வண்ணம் ரகசியமாக சொல்லிக் காட்ட வழி காட்டி இருக்கலாம். 

அப்படிச் செய்யாமல் கண்டித்துள்ளான். அதுவும் சாதாரண கண்டிப்பா? அந்த கண்டிப்பை கியாமத் நாள் வரை உள்ளவர்கள் அறியும் வண்ணம் குர்ஆனில் அல்லவா இடம் பெறச் செய்து விட்டான். அல்லாஹ்வால் இஸ்லாமிய பிரச்சாரத்திற்கென்று தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட தூதராக இருந்தும் அவர் இமேஜ் பாதிக்கக் கூடாது என்று பார்க்கவில்லை. எதையும் மூடி மறைக்கவில்லை.


சாதாரணமானவர்கள் செய்யும் ஒரு தவறை மக்கள் தவறு என எளிதில் விளங்கி விடுவார்கள். அதே தவரை மார்க்கப் பிரச்சாரகர்கள் அறிஞர்கள் என்று அறியப்பட்டவர்கள் செய்யும்போது தவறு என்று விளங்காமல் அதுதான் மார்க்கம் என்று விளங்கிக் கொள்கிறார்கள். 

அதன் வெளிப்பாடுதான் தவறுகள் சுட்டிக் காட்டப்படும்பொழுதெல்லாம் அந்த அறிஞரே அப்படித்தானே செயல்பட்டார் அவருக்கு தெரியாததா உங்களுக்கு தெரிந்து விட்டது என்று மக்களால்   கேள்விகள் கேட்கப்படுகின்றன.

எனவே நடைமுறை ஏற்படுத்தியுள்ள விளைவுகளைப் பார்த்தாலும் மார்க்க அறிஞர்கள் என்று பிரபலமாகி விட்டவர்களின் தவறுகளை பகிரங்கமாகத்தான் கண்டிக்க வேண்டும் என்பதுதான் சரியான நிலை. 

மார்க்க ரீதியாக பார்த்தாலும் பிரச்சாரகர்களிடம் உள்ள குறைகளை போட்டு உடைக்கத்தான் வேண்டும் என்பதற்குத்தான் 80:1-2, 3:128 ஆகிய ஆயத்துகள் மட்டுமன்றி இன்னுமுள்ள ஆயத்துகளும் ஹதீஸ்களும் ஆதாரமாக உள்ளன.


எனவே இதுவரை நாம் செய்த விமர்சனங்களுக்கு மார்க்கத்தில் தடை இல்லை என்பது மட்டுமல்ல மார்க்க ரீதியாக சரிதான் என்பதற்குரிய ஆதாரங்களையும் பார்த்து விட்டோம். 

எனவே தூய இஸ்லாத்தை நிலை நாட்ட நமது விமர்சனங்களையும் மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் பிரச்சாரகர்களை அடையாளம் காட்டும் பணிகளையும் தொடர்வோம். 

இதன் மூலம் அவர்களோ, அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களோ விளங்கி திருந்தினால் அல்லாஹ்வின் தண்டனைகளிலிருந்து தப்புவார்கள். அந்த 2 சாராரும் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் நமது விளக்கங்களை காணும் இறையச்சமுடைய முஸ்லிம்கள் இனிமேல் அந்த வழி கெடுக்கும் கூட்டத்தாரிடம் போய் வீழ்ந்து ஏமாற மாட்டார்கள். இதுவே நமது வெளியீடுகளுக்கு கிடைத்த பயன்மிக்க வெற்றிகளாகும்.
ஒரு வரலாற்று நிகழ்ச்சி 

மண்ணடி ஒய்.கே. மேன்சன் முன் நான்பார்க்கிங்கில் ஒரு பைக் நிற்கிறது. போலீஸ் வருகிறது. பைக் யாருடையது? லாட்ஜ் பொறுப்பாளி பைக்குக்கு உரியவர் பெயர் சொல்லி இந்த ரூமில் இருப்பார் கூட்டி வா என்கிறார். 

தட்டுங்கள் திறக்கப்படும் என்ற கதவு தட்டப்படுகிறது. திறக்கப்படவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவு திறக்கப்படுகிறது. கதவை திறந்தவர் யாஸ்மின் என்ற பெண். 

பைக்கை நான்பார்க்கில் விட்டு விட்டு வந்துள்ளவர் பெயரை சொல்லி கேட்டதற்கு இல்லை என்று பதில் சொல்லி உள்ளார் யாஸ்மின். 

போலீஸ் வந்துள்ளது என்றதும் ஒரு ஆண் மகன் அவசரமாக வெளிப்படுகிறார். அவர் வேறு யாருமல்ல தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர், டைரக்டர் பாக்கர்தான் அந்த ஆண் மகன். 

பெண் யார்? என்று கேட்டால் ஐ.ஏ.எஸ். கோச்சிங்குக்கு வந்துள்ளது என்று உளறி இருக்கிறார். ஐ.ஏ.எஸ். கோச்சிங் காலம் இது அல்லவே என்ற குறுக்கு கேள்வியில் மாட்டிக் கொண்டார்.

மீடியா வேல்டு பெயரில் போடப்பட்டுள்ள லாட்ஜ் ரூமில் யாஸ்மின் என்ற பெண். செய்தி காட்டுத் தீயாக பறக்கிறது. சத்திய நேசன் ஆசிரியர் முற்பகல் (லுஹா) போன்றோருக்கு சந்தோஷமோ சந்தோஷம். 

சத்திய நேசன் மெயிலின் ஒரிஜினல் ஆசிரியர் பி.ஜே.யோ தலையில் அடித்துக் கொண்டு பரபரக்கிறார். உடனே தலையிட்டு என்ன கேஸ் வேண்டுமானாலும் பதியுங்கள் விபச்சார வழக்காக பதிந்து விடாதீர்கள் என்று கெஞ்சி கூத்தாடி பாக்கரை காப்பாற்றி விட்டு தனது மானத்தையும் காப்பாற்றி விடுகிறார். .

யாஸ்மின், 10. புது ஆயக்குடி, பழனி. என்ற முகவரியில் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் சுற்று வட்டாரங்களில் விசாரித்தால் உண்மைகள் வெளி வரும். என்று 2004ல் அட்ரஸுடன் எழுதினோம். 

அன்று பாக்கருக்காக பி.ஜே. கெஞ்சி கூத்தாடினார். இன்று பி.ஜே.க்காக மாஸ்கான்சாவடிக்காரர்களிடம் பாக்கர் கெஞ்சி கூத்தாடி காப்பாற்றி உள்ளார்


No comments: