Saturday, June 02, 2018

அபு ஜஹ்ல் அழிந்தான் அவன் கொள்கை அழிந்ததா? அண்டா திருடனும் குண்டா திருடனும் ஒன்றா?

எண்ணிக்கையில் குறைந்தாலும் எண்ணத்தால் உயர்ந்தவர்கள் யார்? (ரமழானில் நடந்த பத்ருப் போர் பற்றி எழுதுங்கள் என்ற வேண்டுகோளை ஏற்று இந்த வெளியீடு)

திருடினால் கையை வெட்டுங்கள் என்கிறது அல் குர்ஆன். இஸ்லாமிய சட்டம் இருக்கும் பகுதியில் நாம் இருக்கிறோம். அங்கு ஒருவன் நமது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருடி விட்டான். போலீஸும் அவனை பிடித்து விட்டது. என்ன நடக்கும்? உடனே கையை வெட்டு என தண்டனை கொடுத்து விடுவார்களா?
அப்படி செய்ய மாட்டார்கள். தண்டனை கொடுக்கும் முன். நம் முன்னே நிறுத்துவார்கள். அப்பொழுது நாம் கேட்போம். ஏன் திருடினாய்? என்று. சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. வேறு வழியே இல்லை. வயிற்றுப் பசிக்காக திருடினேன் என்றால் முஸ்லிம்களாகிய நாம் என்ன சொல்வோம்? விட்டு விடுங்கள் என்போம். காரணம்? இதுதான் இஸ்லாம் காட்டிய வழி, முஸ்லிம்களின் பண்பு.

ஒரு தடவை அல்ல பல தடவை திருடியவன் திருடுவதையே தொழிலாக  கொண்டு செயல்பட்டவன் இருக்கிறான். போராட்டம் என்ற பெயரால் பிரியாணி அண்டாக்களை திருடினான் என்றால் என்ன சொல்வோம்? பசிக்கு குண்டா சோறு திருடியவனும் திருடுவதையே கொள்கையாக் கொண்ட அண்டா திருடியவனும் ஒன்றா? அண்டா அண்டாவாக திருடியவன் கையை வெட்டுங்கள் என்போம்

போலீஸுக்கோ, நீதிபதிக்கோ அவன் யார் என்பது தெரியவும் செய்யலாம். தெரியாமலும் இருக்கலாம். அவன் ஏன் அந்த செயலை செய்தான் என்பதும் யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள். சூழ்நிலைகைளை அறிந்து உணா்ந்து தீர்மானித்து மன்னிக்கலாம். அல்லது தண்டிக்கவும் சொல்லலாம்.

கொலை செய்தவனை கொலை செய்யுங்கள் என்று இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மார்க்கம் அணுமதி அளித்துள்ளது. இருந்தாலும் பாதிக்கப்பட்டவனிடம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். அவன் என்ன சொல்கிறான். தன் சகோதரனை கொன்றவனை கொன்றுதான் ஆகணும் என்று சொன்னால் கொன்று விடுங்கள்

இல்லை மன்னித்து விட்டு விடுங்கள் என்றால் நீங்களும் விட்டு விடுங்கள். இந்த மாதிரிதான் அல்லாஹ் போர்க் கைதிகள் விஷயத்தில் கட்டளையை போடவில்லை. ஈடு பெற்று விட்டு விடுறீர்களா

அப்படியே விட்டு விடுங்கள். அல்லது கருணையுடன் விட்டு விடுங்கள். நாம் கருணை புரிந்தால் அல்லாஹ் நம்மீது கருணை புரிவான். அவனும் மனிதன்தானே. யார் மனிதர்கள் மீது இறக்கம் காட்டவில்லையோ அவர்களிடத்தில் அல்லாஹ் இறக்கம் காட்ட மாட்டான் என்று கருணை நபி(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.

போருக்குள்ள வரை முறை என்ன? எதிரிகள் ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் முஸ்லிம்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாட்டிக் கொண்டார்கள் வசமாக என்று எதுவும் செய்யக் கூடாது

50 பேர் கொண்ட குழுவில் இரண்டு பேர் வேகமாக வீழ்த்தப்பட்டால் மற்றவர்கள் சரண் அடைந்து விடுவார்கள். இனிமேல் அவர்களுக்கு வழி இல்லை என எல்லோரையும் கொன்று விடலாம்

எத்தனையோ போர்களில் இப்படித்தான் கொன்றார்கள். உலகளாவிய போர்கள் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் யாரையும் மீதம் வைக்காமல் வெட்டி சாய்த்து விடுவார்கள். கைதிகளாக பிடித்தார்கள் என்றால் சாகும் வரை சிறையில் போட்டு சித்ரவதை செய்வார்கள்

அல்லாஹ் முஸ்லிம்களுக்கு என்ன சொல்கிறான் எதிரிகள் ஆயுதத்தை கீழே போடும் வரை போர் செய்யுங்கள். அல்லாஹ் நாடி இருந்தால் போருக்கு முன்னரே அவர்களை அல்லாஹ் பழி வாங்கி இருப்பான்

னாலும்போரின் மூலம் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் சோதிக்கின்றான். அவனுக்கு ஒரு சோதனை. உங்களுக்கு ஒரு சோதனை இதுதான் அல்லாஹ்வின் நாட்டம். எவர்கள் வெட்டப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய (நன்மையான) செயல்களை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.) (47;4)

அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டி, அவர்களது நிலையைச் சீராக்குவான். அவர்களுக்காக அவன் அறிவித்திருந்த சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வான். நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான் இவ்வாறு (47;4-7) சொல்லிக் காட்டி உள்ளான். 

இந்த வசனங்கள் அருளப்பட்டப் பிறகு பத்ருப் போர் முடிவாகிறது. இனிமேல் நாம் போர் செய்யலாம். நம்மை வெட்ட வரக் கூடியவர்களை நாம் திருப்பி தாக்கலாம். அல்லாஹ் அணுமதி அளித்து விட்டான். இது பத்ரை எதிர் கொண்ட  இஸ்லாமிய கூட்டத்தின் நிலை.  அங்கே என்ன?

பத்ர், பத்ரு என ஆர்ப்பரித்து பத்ருப் போரை அறிவித்து ஆயுதத்துடன் வந்தது அபுஜஹ்ல் கூட்டம்தான். அபுஜஹ்ல் வழி நடப்பவர்கள் ஆயுதத்துடன்தான் முஸ்லிம்களை தாக்க வருவார்கள். அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்கள். 

அந்த அபுஜஹ்ல் கூட்டத்தில் என்ன நடக்கிறது? மது பானங்கள் அருந்தினார்கள். அடிமைப் பெண்களை பாட விட்டு இரவு முழுவதும் கச்சேரிகள் நடத்தினார்கள். ஒட்டகங்களை அறுத்து உணவுகளை தயாரித்து உண்டார்கள். மிகப் பெரிய ஆராவாரத்துடன் இருந்தார்கள். 

ஊரார் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ய அபுஜஹ்ல்களின் கூட்டத்திற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? செலவு செய்தார்கள். 

இதைத்தான் இன்றும் அபுஜஹ்ல் வழி வந்தவர்கள் அணி செய்து கொண்டிருக்கும். நான் அபுஜஹ்லைவிட மோசமானவன், கடுமையானவன் என்று பிரகடனப்படுத்தியவன்களின் அணி செய்து கொண்டிருக்கும். 

பல்வேறு பெயர்களில் வசூலித்த பணத்தில் சட்டி சட்டியாய் ஆக்கி தின்று கொண்டிருக்கும். இதை ஒவ்வொரு ஊரிலும் நீங்கள் காணலாம். பத்ரில் அபு ஜஹ்ல் அழிந்தான் அவன் கொள்கை அழியவில்லை. அதனால் தான் அபு ஜஹ்ல் வழியில் உள்ளோர் இன்றும் பத்ர் பத்ர் என்று அலைகிறார்கள்.

இறைத்துாதர்(ஸல்) அவர்களின் அணியில் உள்ள மக்கள் கொலை வெறி தாக்குதல் எண்ணமும் ஆயுதமும் இல்லாத மக்கள். அவர்களுடன் இருப்பவர்களோ 313 பேர்கிளிலிருந்து 317 பேர்கள் வரைதான். 

அங்கே அபுஜஹ்ல் தலைமையில் இருப்பவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். எப்பொழுதுமே அபுஜஹ்ல்கள் போன்றோர் பின்னால் மக்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். பெருந் திரளாகத்தான் இருக்கும். 

அதற்காக பெருந் திரளாகக் கூடும் கூட்டங்களை எல்லாம் வழிகெட்டக் கூட்டம் என்று எண்ணி விடக் கூடாது. அபுஜஹ்ல்கள் கூட்டத்தோடு ஒப்பிடும்போது நாம் குறைவாகத்தான் இருப்போம். 

ஆக அபுஜஹ்லிடம் திரண்டு இருப்பவர்களோ ஆயிரத்துக்கும் மேல். நபி(ஸல்) அவர்களோடு திரளாக வந்து இருக்கும் மக்களோ மூன்றில் ஒரு பகுதிதான்.  எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எண்ணத்தால் உயர்ந்தவர்கள்.

எண்ணிக்கையில் குறைந்தாலும் எண்ணத்தால் உயர்ந்தவர்கள் யார்? நபி வழியில் நடப்பவர்கள் அல்லவா? நபி வழியில் உள்ள இந்த மக்கள் இடத்தில் ஆயுதம் இல்லை. ஆனால் அல்லாஹ் இருக்கிறான்

இந்த மக்களின் உள்ளத்தில் போர் பற்றிய பயம் சிறிது கூட இல்லை. காரணம் அவர்கள் உள்ளத்தில் ஈமான் நிறைந்து இருந்தது. இவர்களை ரசூல்(ஸல்) அவர்கள் எப்படி பக்குவப்படுத்தி கொண்டு வந்து இருந்தார்கள்

அபுஜஹ்ல் கூட்டத்திலோ பீதியோ பீதி.  அபுஜஹ்ல் வழி நடப்பவர்களிடம் இன்றும் அந்த பீதியைக் காணலாம். ஐ.டி. ரைடு வருமா? போலீஸ் வருமா?  என்ற புலம்பல்கள் இருந்து கொண்டே இருக்கும்.

மக்காவில் 13 மதீனாவில் 2 ஆக 15 ஆண்டு காலம். பொறுமையையும் சோதனைகளையும் முன் சென்ற சமுதாயங்களின் வரலாறுகளை எடுத்துச் சொல்லி வார்த்து எடுத்து இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.. சொர்க்கம் வேண்டும் என்றால் தியாகங்களை செய்தே ஆக வேண்டும். இந்த உறுதியுடன் கூடிய நிலையான உள்ளம் கொண்ட மக்களாக ஆக்கி வைத்து இருந்தார்கள்.

எனவே பத்ரில் வெற்றி பெற்ற பின் யாரையும் சிறைவாசிகளாக வைத்திருக்கவில்லை. மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர்கள் அல்லவா முஸ்லிம்கள்.  

போர்க் கைதிகளிடத்திலும் கருணை நபி கனிவோடு நடந்து கொண்டார்கள். இன்றும் கருணை நபி வழியில் உள்ளவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அபுஜஹ்ல்களின் வாரிசுகளிடத்தில் அபுஜஹ்லை விட மோசமானவன், கடுமையானவன் என்று அறிவித்து விட்டவனிடம் அன்பு காட்ட மாட்டோம். 

அபுஜஹ்லின் வழியில் ஊரார் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் கூட்டத்திற்கு எதிரான நமது சட்டப் போராட்டம் அல்லாஹ்வின் அருளால் தொடரும். 

அபுஜஹ்ல் ஆணைப்படி அபுஜஹ்ல் வழியில் ஆயுதம் ஏந்தி வந்தவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபம் இறக்கி அழித்தொழிப்பாயாக என்று தொடர்ந்து துஆச் செய்வோம்.  

அபு ஜஹ்ல் அழிந்தது போல் அவனது வழியில் ஆயுதம் ஏந்தி அலையும் கூட்டமும் அழியட்டுமாக!



No comments: