Wednesday, June 27, 2018

கோவை ரஹ்மத்துல்லாஹ் கூறும் பொருத்தமற்ற உதாரணங்களில் லாஜிக் முரண் 12 :– ஒரு அலசல்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து மக்கள் சாரை சாரையாக வெளியேறும் வண்ணம் உள்ளார்கள். இதனை தடுத்து நிறுத்த எத்தனையோ ஆயுதங்களை கையில் எடுத்துப் பார்த்தார்கள். அறியாமைக்கால ஹதீஸ்களையும், ஆட்சிக்கான ஹதீஸ்களையும் ஆதாரமாக எடுத்துப் போட்டனர். பொருந்தா விளக்கம் என்பதை விளக்கிய பின்னர் குர்ஆன், ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு சென்டிமென்ட் டச் கொடுக்க முயற்சித்து வருகின்றனர்.

குறிப்பாக கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் TNTJவிலிருந்து வெளியேறியவர்களையும், வெளியேற உள்ளவர்களையும் பார்க்கும் போதெல்லாம் செண்டிமென்ட்டாக லாஜிக் ஒன்றை பேசி கடுப்பேத்தி வருவதாக பரவலான செய்திகள் நமக்கு வருகிறது.

“ஏன் பாய் வெளியே போனீங்க? (போறீங்க?) இது உங்கள் வீடு, உங்கள் வீட்டில் ஒரு பிரச்சினை என்றால் வெளியே சென்று விடுவீர்களா? உங்கள் வீடு, உங்கள் வீடு என்கிறார் பாய், முடியல...’’ என்று காதில் Blood வரும் அளவுக்கு விளக்கம் என்ற பெயரில் கோவை ரஹ்மத்துல்லாஹ் இரக்கம் இல்லாமல் சித்ரவதை செய்வதாக அவர்கள் வருத்தப்பட்டனர். அவர்களை ஆசுவாசப்படுத்தி விட்டு கோவை ரஹ்மத்துல்லாஹ் கூறும் சென்டிமென்ட் டச் என்ன என்பதை கேட்டறிந்தோம்.

லாஜிக் என்று எண்ணி கோவை ரஹ்மத்துல்லாஹ் கூறுவதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா என்று நீங்களே பாருங்கள்.

“நாம் எல்லாம் ஒரு குடும்பம் மாதிரி. நமது ஜமாஅத் ஒரு வீடு மாதிரி. உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டில் ஒரு பிரச்சினை. நீங்கள் வீட்டுக்குள் இருந்து அதை தீர்த்துக்கொள்வீர்களா? இல்லை வீட்டை விட்டு வெளியேறி சென்று பிரச்சினை தீர்க்க முயல்வீர்களா?’’ – இது தான் கோவையாரின் செண்டிமென்ட் + லாஜிக் டச்.

ஒரு MISC ஆசான். ஒரு மகளிர் கல்லூரியின் முதல்வர். (முன்னாள்) பேரியக்கத்தின் மாநிலச்செயலாளர். ஜனாஸா விளக்கத்தில் அக்கறை காட்டுபவர். இவ்வளவு மாண்புகள் பொருந்திய கோமான் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் குர்ஆனிலிருந்து ஒரு விளக்கம் தருவார் என்றோ, இல்லை ஒரு ஹதீஸிலிருந்து விளக்கம் தருவார் என்றோ எதிர்பார்த்தால் வீட்டுக்குள் சென்று விளக்கம் தருகிறார்.

அந்த முரணான செண்டிமென்ட் லாஜிக்கை அலசுவோம் :
லாஜிக் முரண் 1 :
இந்த ஜமாஅத் ஒரு குடும்பம் மாதிரி. உங்கள் வீட்டில் ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

எங்கள் வீட்டுக்குள் ஒரு பிரச்சினை என்றால் அதை நாம் பொதுத்தளத்தில் வைத்து விவாதிக்க மாட்டோம். கதவுகள், ஜன்னல்கள் மூடிவிட்டு, பக்கத்துக்கு வீட்டுக்கு கூட கேட்காமல் அமைதியாகப் பேசித் தீர்க்கவே முயற்சி செய்வோம். LIVE போட்டு உலகம் முழுக்க ஒளிபரப்பு செய்ய மாட்டோம். மைசூரிலும், கடலூரிலும் நிர்வாகப் பிரச்சினையை உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் ஒரு குடும்பப் பிரச்சினையை LIVE போட்டு ஒளிபரப்பு செய்தது வீட்டை நிர்வகித்தவர்களா? வீட்டுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களா?

லாஜிக் முரண் 2 :
வீட்டு பிரச்சினை பேசும்போது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி நிறைந்திருக்கும் போது ஆபாசமாக யாரும் பேச மாட்டோம். LIVE போட்டு கந்தூரி விழாவில் ராத்திரி 1 மணிக்கு மேல் கேபரே டான்ஸ் போல .................. போட்டு ஆடாமல் .................... மூடி விடுவார்கள் என்று பச்சையாக ஆபாசமாக பேசியது வீட்டை நிர்வகித்தவர்களா? வீட்டுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களா?

லாஜிக் முரண் 3 :
வீட்டு பிரச்சினை பேசும்போது தப்பித்தவறி தவறான வார்த்தைகளை யாராவது பேசிவிட்டால் கூட, உடன் இருப்பவர்கள் “அஸ்தவ்பிருல்லாஹ்’’ என்று கூறிவிட்டு பேசியவரை கண்டிப்பார்கள். எல்லோரும் கைத்தட்டி ரசித்து கேட்க மாட்டார்கள். கேபரே டான்ஸ் என ஆபாசமாகப் பேசும் போது, கண்டிக்காமல், உடனிருந்து கைத்தட்டி ரசித்தது வீட்டை நிர்வகித்தவர்களா? வீட்டுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களா?

லாஜிக் முரண் 4 :
வீட்டு பிரச்சினை பேசும்போது, உலகம் முழுவதும் பார்க்கும் LIVE போட்டு, “அடித்துச் சொல்கிறோம். இந்தத் தங்குதல் விபச்சாரம் செய்யும் விதத்தில் தான் அமைந்திருந்தது’’ என்று நம் வீட்டுப் பெண்களைப் பற்றி நாமே அவதூறுகள் பரப்பும் பத்து பெரும்பாவங்களில் ஒன்றை செய்வோமா? ஆனால் இப்படி நம் வீட்டுப் பத்தினிப்பெண்கள் மீது அவதூறு பரப்பியது வீட்டை நிர்வகித்தவர்களா? வீட்டுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களா?

லாஜிக் முரண் 5 :
நம் வீட்டிற்கு மஹ்ரம் அல்லாத பெண் உறவுகள் வந்தால் மார்க்க அனுமதிப்படி தங்க வைத்தாலும், பாத்ரூமுக்கு செல்லும் போது, தூங்கும்போது பக்கத்து அறையில்... என்று தரங்கெட்டு கேவலமாக பேசினால் அதை ஏற்றுக்கொள்வோமா? கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கும் இந்த கருத்தில் உடன்பாடு இருப்பதால் தானே கண்டிக்காமல் அமைதியாக இருந்தார்.

லாஜிக் முரண் 6 :
வீட்டில் உள்ள ஒருவருக்கு வீட்டில் போட்ட உணவையும், பல வருடங்களுக்கு முன்பாக தீர்த்து வைத்த அந்தரங்கப் பிரச்சினைகளையும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, எதிர்கருத்து கூறும்போது அதை உலகிற்கு வெளியிட்டு விடுவோம் என்று தரம் தாழ்ந்து பிளாக்மெயில் செய்ய மாட்டோம். இவ்வாறு பிளாக்மெயில் செய்து, மான மரியாதையை வாங்கியது வீட்டை நிர்வகித்தவர்களா? வீட்டுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களா?

லாஜிக் முரண் 7 :
வீட்டில் ஒரு பிரச்சினை என்றால் நேரில் அழைத்து விசாரித்து மனம் விட்டு பேசி பரஸ்பரம் மீண்டும் ஒன்று கூட முயற்சி செய்வோம். வீட்டுக்குள் இருக்கும் சிலரை நேரில் கூட அழைத்து பேசாமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்தியது வீட்டை நிர்வகித்தவர்களா? வீட்டுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களா?

லாஜிக் முரண் 8 :
நம் சகோதரர்கள் சிலரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது போல் நாளை நம்மையும் பிடித்து தள்ளிவிட மாட்டார்கள் என என்ன உத்திரவாதம்? வீட்டை விட்டு வெளியே போங்க என்பதற்கு முன் நமது மரியாதையை நாம் பாதுகாத்துக் கொள்ள மான, ரோஷம் உள்ளவர்கள் இப்படித் தானே முடிவெடுப்பார்கள்? இங்கு வந்து மொக்கை கேள்விகளை கேட்காமல், நம்மை விசாரிக்காமல் சர்வாதிகாரத்துடன் வெளியேற்றிய (நீக்கிய) உங்களில் ஒருவரான வீட்டின் சக நிர்வாகிகளிடம் போய் கம்பை சுற்றுங்கள் ரஹ்மத்துல்லாஹ் பாய்.

லாஜிக் முரண் 9 :

சரி, ஒரு வாதத்திற்கு (கோவித்துக் கொண்டு) வெளியே வந்தாலும் வீட்டை நிர்வகிப்பவர் என்ன செய்யவேண்டும்? இன்று இல்லை நாளை வருவார் என்று அமைதி காத்திருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் சிந்திக்காமல் தலையாட்டும் ஆட்டு மந்தைகள் “மே... கழிவுகள், மே... கழிவுகள்’’ என தரம்தாழ்ந்து விமர்சிக்கும் போது அந்த ஆட்டு மந்தைகளை கண்டிக்காமல், கத்துவதை ரசித்துப் பார்த்தது யார்? வீட்டை நிர்வகித்தவர்களா? வீட்டுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களா?

லாஜிக் முரண் 10 :
சுயமரியாதையுடன் நடக்க வேண்டும் என்று வீட்டுக்குள் கற்றுத் தந்து விட்டு தன்மானத்திற்கு பங்கம் வரும் வகையில் கற்றுத் தந்தவர்களே நடந்து கொண்டால் சுயமரியாதை காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியேறத்தானே வேண்டும்.

லாஜிக் முரண் 11 :

தனி ஒருவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில், அவரை ஒழிப்பதாக எண்ணி மீறப்பட்ட வரம்புகள் எத்தனை, எத்தனை? இதெல்லாம் ஒரு குடும்பமா? இப்படியுமா ஒரு வீடு இருக்கும் என்று உலகமே காரி உமிழும் அளவுக்கு நடந்து கொண்டது யார்? வீட்டை நிர்வகித்தவர்களா? வீட்டுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களா?

லாஜிக் முரண் 12 :
“வீட்டை விட்டு வெளியேறி எங்கே செல்வீர்கள்?’’ கோவையாரின் இறுதி லாஜிக் இது. அல்லாஹ்வின் பூமி விசலாமானது இல்லையா? இன்னொரு வீட்டை கட்டிக்கொண்டு குடி போகப் போகிறோம். மாட மாளிகையில் இருந்து வெளியேறினால் உடனே இன்னொரு மாளிகைக்கு செல்ல முடியுமா? தற்போதைக்கு குடிசை போட்டு ஆரம்பித்துள்ளோம். அல்லாஹ்வின் அருளால் உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை விஸ்தரிப்போம்.

இயன்ற அளவு முயற்சி செய்து காழ்ப்புணர்ச்சியற்றவர்களைத் தேர்ந்தெடுத்து நன்கு கவனிக்கவும், தேர்ந்தெடுத்து (பரிந்துரைத்து அல்ல) சிறந்த நிர்வாகிகளைக் கொண்டு வீட்டை நிர்வகிக்க வைப்போம். இன்ஷா அல்லாஹ் ஒருக்காலும் பழைய மாட மாளிகை நிர்வாகிகள் போல கேடுகெட்ட நிர்வாகத்தை செய்யவே மாட்டோம்.

கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களிடம் ஒரு கோரிக்கை :

நாம் இருந்த வீடு செல்லரித்து விடாமல் இருக்க, மென்மேலும் வீட்டிலிருந்து யாரும் வெளியேறாமல் இருக்க, வீட்டு நிர்வாகிகளை மாற்றுங்கள். வீட்டில் இருக்கும் எங்கள் நட்புகள், கொள்கை சொந்தங்களையாவது பத்திரமாக பார்த்துக்கொள்ள

நீங்கள். இந்த வீட்டுக்காக நாம் உழைத்தது போல இப்போது இருப்பவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் சிந்தித்து இந்த வீட்டை விட்டு வெளியே வருவார்கள். அவர்களுக்கும் மானம், மரியாதை இருக்கிறது. அவர்கள் உள்ளங்களையும் காயப்படுத்தி விடாதீர்கள். அவர்கள் உங்களிடம் எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களின் பலவீனங்களையும் உங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் மிரட்டாதீர்கள். இந்த வீட்டில் உள்ள பெண்கள் மீது இனியாவது அவதூறு பரப்பாமல் இருங்கள். வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறினாலும் அவர்களின் கண்ணியங்களை குறைத்து விடாதீர்கள்.

சகல வசதிகளுடன் கூடிய செதுக்கிக் கட்டிய சொந்த வீட்டை விட்டு எந்த ஒரு முட்டாளும் தக்க காரணமின்றி வெளியேற மாட்டான். இந்த வீட்டை விட கொள்கையும், தன்மானமும் தான் முக்கியம், நம்மால் இதைவிட சிறந்த இன்னொரு வீட்டை உருவாக்க முடியும் என அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வெளியேற மிகப்பெரிய தைரியம் வேண்டும். தில் வேண்டும். கோழையாக, சோம்பேறியாக இல்லாமல் ஏகத்துவக் கொள்கை நம்மை இவ்வாறு தான் உருவாக்கியுள்ளது.

கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களிடம் கூட இந்த போர்க்குணத்தை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. தன்னளவில் பாதிப்பு வராமல் பாதுகாப்பாக பயணிக்கவே இவர் விரும்புவார். எனவே இவரது பொருந்தாத இந்த உதாரணத்தைக் கண்டு கொள்கை சொந்தங்கள் அலட்டிக்கொள்ள வேண்டாம்.

வீட்டு நிர்வாகிகள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு பொதுமன்னிப்புக் கோரி வீட்டை விட்டு வெளியேற்றிய, வெளியேறிய அனைவரையும் அழைக்காமல், அரவணைக்காமல் தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணமே போட்டாலும் எந்த உதாரணங்களாலும், எந்த பலனும் அவருக்குக் கிடைக்கப் போவதில்லை. இன்ஷா அல்லாஹ் இனி கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இந்த அணுகுமுறையைக் கையாள மாட்டார் என அனைவரும் நம்புவோமாக.

உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! – அல்குர்ஆன் 2 : 85

நன்றி நமக்கு வாட்ஸப் மூலப் கிடைக்கச் செய்த கடையநல்லுார் அப்துர்றஹ்மான்

No comments: