அந்த பெண் கடிதத்தில் சொல்லப்பட்ட சாராம்சம் என்ன...
1. என்னை வழிகெடுக்க ஆசைவார்த்தைகளை SMS குறுஞ்செய்தி அனுப்பினார்.
2. என்னை அவர் மனைவி இல்லாத போது வீட்டுக்கு அழைத்தார்.
3. என்னிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்தார்.
4. நான் கண்டித்து அவருக்கு SMS குறுஞ்செய்தி அனுப்பினேன்.
5. அல்தாபி என்னுடன் முபாஹலா செய்ய வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
சராசரி மனிதனின் அடிப்படை கேள்விகள்
1. இத்தனை நிகழ்வுகள் நடந்ததை தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை அல்லது மேலாண்மை குழுவிற்கு தெரிவிக்காதது ஏன்?
2. இத்தனை நிகழ்வுகள் நடந்ததை தனது பெற்றோர்களிடம் தெரிவிக்காதது ஏன்?
3. இத்தனை நிகழ்வுகள் நடந்ததை குறைந்தபட்சம் தனது சக மானவிகள் ஒருவரிடமாவது தெரிவிக்கவில்லையா?
4. இத்தனை நிகழ்வுகள் சொல்லப்பட்டதில் ஒன்றுக்கு கூட ஆதாரத்தை காட்டவில்லை.
🤡 தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளே!
1. ஒரு பெண் புகாரை தூக்கி கொண்டு வந்தால் அதனை முறையாக விசாரிக்க மாட்டீர்களா?
2. அந்த பெண் சொல்லும் புகார் என்ன? அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்க மாட்டீர்களா?
3. வலியவனுக்கு ஒரு நீதி! எளிவனுக்கு ஒரு நீதி என்று நடப்பது ஏன்?
4. அண்ணனின் ஆடியோவிற்கு ஆதாரம் கேட்டு ஆட்டம் போட்ட நீங்கள்! அல்தாபிக்கு ஆதாரம் கேட்காதது ஏன்?
5. ஒரு பெண் கொண்டு வந்த புகாரை ஆதாரம் கேட்காமல் அப்படியே எழுதி வாங்கி (அல்லது எழுதி கொடுத்து கையெழுத்து மட்டும் பெற்று) அப்படியே வாசித்தது சரியா?
6. அண்ணன் என்றால் கால் History, Geography, Physics, Botany என்று எல்லாத்தையும் கொண்டு வந்து நிறுபிக்க சொல்லும் நிர்வாகம் மற்றும் மேலாண்மை குழு, அல்தாபிக்கு அப்படி எதுவும் கேட்காமல் கேவலபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வீடியோ எடுத்து பரப்பியது தான் உங்களின் நீதியா?
7. அந்த பெண் முபாஹலாவிற்கு அழைப்பு கொடுக்க முஹாந்திரம் உண்டா?
8. அந்த பெண் புகாருக்கு முஹாந்திரம் இல்லை என்றதை பின்னர் அறிந்தா அல்லது என்ன காரணத்தால் திருச்சி நிர்வாகியிடம் அந்த பந்தை தள்ளி விட்டீர்கள்?
திருச்சி பெண்ணே!
உன் கடிதத்தில்
நான் என் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டேன். மேலும் இதுகுறித்து என் கணவரிடமும் தெரிவித்து விட்டேன்.
நான் கூறும் இந்த விஷயம் உண்மை என்பதை என் இறைவன் அறிவான் அல்தாஃபியின் உள்ளமும் அறியும்
என்று எழுதிவிட்டு தற்போது முபாஹலா அழைப்பு விடுப்பதற்கு யார் கொடுத்த யோசனை, அல்லது தூண்டுதல்.
அல்தாபியை முபாஹலாவிற்கு அழைப்பு விடுக்க GROUND இருக்கா என்று கீழே உள்ளதை படித்து பார், அப்படியே உன்னை முபாஹலா அழைப்பு விடுக்க தூண்டியவன்(வர்களுக்கு) அனுப்பி வைத்து தெளிவு பெற வைக்கவும்.
சந்தேகம்!
முபாஹலா அல்லது மன்னிப்பு கோரிக்கை வைக்கும் திருச்சி பெண்.
மன்னிப்பு: அந்த பெண் தனது கடிதத்திலயே அல்தாபி தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்லி உள்ளது. அது மட்டும் இல்லாமல் அல்தாபி மீண்டும் கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டதாக சொல்லி இருந்தது.
அந்த பெண்ணும் மன்னித்து விட்டதாக சொல்லி எழுதியும் இருந்தது.
ஒரு பிரச்சணை ஆரம்பித்து அதற்கு முற்று புள்ளி *மன்னிப்பு* கேட்கப்பட்டு அந்த மன்னிப்பை ஏற்ற பின் மீண்டும் அதே பிரச்சனையை மூன்று வருடம் கழித்து எடுப்பது பழி வாங்க தூண்டப்பட்டதா?
மன்னிப்பு கேட்டு முடிந்த பிரச்சனையை மீண்டும் எடுத்து *மன்னிப்பு* கேள் என்பது மார்க்க படி சரியா??
முபாஹலா அழைப்பு விடுக்கும் நீ, தொடர்புக்கு உன் நம்பர் அல்லது உன் கணவர் மொபைல் நம்பர் போடாமல் திருச்சி மாவட்ட தலைவர் மொபைல் நம்பர் போட காரணம் என்ன?
*முபாஹலா அழைப்பு!*
திருச்சி பெண் முபாஹலா அழைக்கிறது, அல்தாபி ஓடி ஒழுகிறார் என்று சொல்லும் திருச்சி மாவட்ட தலைவர், மற்றும் இதர *தவ்ஹீத்(வாந்திகள்)* அண்ணன் எழுதிய விளக்கத்தின் படி அந்த பெண் முபாஹலா அழைக்க GROUND இருக்கா என்று படித்துவிட்டு சொல்லவும்.
ஆம் இருக்கு என்று சொன்னால் அண்ணனின் தமிழாக்க குர்ஆன் *எடிசன்* 12 அல்லது 13 வில் மாற்றம் செய்து விட்டு. அப்புறம் வந்து முபாஹலா அழைப்பு விடுங்கள்.
யார் பொய்யர் என்பதைக் கண்டுபிடிக்கும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கேட்கலாம் என்பதற்கான முக்கியமான சான்றாக இது உள்ளது.
✅ மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நாம் கண்டுபிடிக்க முடியாதபோது அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிட்டு பிரச்சினையை முடிப்பதைத் தவிர மனிதனுக்கு வேறு வழி இல்லை.
✍ முஸ்லிமுக்கு மத்தியில் யார் பொய்யர்கள் என்பதில் தீர்வு காணும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை வேண்டக் கூடாது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
⁉ முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாம் என்று நல்லறிஞர்கள் யாரும் சொல்லவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
அறிஞர் இப்னு தைமியா அவர்கள் அத்வைதக் கொள்கை உடைய முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் முபாஹலா செய்துள்ளார்கள். மற்றொரு அறிஞரான ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் இப்னு அரபியின் சீடர்களுடன் முபாஹலா செய்துள்ளார்கள்.
இப்னு அப்பாஸ், சுஃப்யான் ஸவ்ரீ, அவ்ஸாயீ, இப்னுல் கையும் உள்ளிட்ட எண்ணற்ற அறிஞர்கள் தவறான கொள்கை உடையவர்களிடம் முபாஹலா செய்துள்ளனர்; செய்யலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளனர் என்பதால் இந்த வாதமும் தவறாகும்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
✅ ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரு பழியைச் சுமத்துகிறார். இப்படி பழி சுமத்தும்போது பழி சுமத்தப்பட்டவர் முபாஹலாவுக்கு அழைக்கலாம். அதில் நியாயம் உள்ளது. அல்லது அவர் அதை அலட்சியம் செய்து விடலாம்.
ஆனால் பழிசுமத்தியவர் முபாஹலாவுக்கு அழைத்து தப்பித்துக் கொள்ள இஸ்லாத்தில் இடமில்லை. ஒருவர் இன்னொருவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தினால் குற்றம் சுமத்தியவரின் ஒரே கடமை அந்தக் “குற்றத்தை சான்றுடன் நிரூபிப்பது தான்”.
நான் சான்றுடன் நிரூபிக்க மாட்டேன்; முபாஹலாவுக்கு வருகிறாயா? என்று கேட்டு அவதூறுக்கான தண்டனையில் இருந்து அவன்/ள் தப்பிக்க முடியாது. என் கருத்து சரியா உன் கருத்து சரியா? என் கொள்கை சரியா? உன் கொள்கை சரியா? என்பது போன்ற பிரச்சினைகளில் தான் இருவரில் யாரும் முபாஹலாவுக்கு அழைக்கலாம்.
்கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட மனிதர் மீது ஒருவர் பொய்க்குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டப்பட்டவர் முபாஹலாவுக்கு அழைக்கலாம். ஏனெனில் எதையும் நிரூபிக்கும் கடமை குற்றம் சாட்டப்பட்டவர் மீது இல்லை. குற்றம் சாட்டியவர் மீது தான் இந்தக் கடமை உள்ளது. சான்றுடன் நிரூபிப்பது தான் அவருக்குள்ள ஒரே கடமையாகும்.
🛑 எந்தச் சான்றும் இல்லாமல் குற்றம் சாட்டி விட்டு நிரூபிக்க முன்வராமல் முபாஹலாவுக்குத் தயாரா என்று கேட்டு ஓட்டம் பிடிக்க முபாஹலாவைக் கருவியாக்க கூடாது.
குற்றம் சுமத்தியவன்/ள் மீது நிரூபிக்கும் கடமை மட்டுமே மார்க்கத்தில் உள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் அவனு(லு)க்கு அவதூறுக்கான தண்டனை வழங்கப்படும். குற்றம் சுமத்தியவன்/ள் அதை நிரூபிக்க மறுத்தால் அவன்/ள் சுமத்திய குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமாகி விட்டதால் குற்றம் சுமத்தப்பட்டவன்/ள் அதை அத்துடன் விட்டு விடலாம்.
✍ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மற்றவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் அதை நிரூபிக்காதபோது தண்டிக்கப்பட்டார்கள்.
குற்றச்சாட்டைச் சுமத்தி விட்டு முபாஹலாவுக்கு அழைத்து குற்றச்சாட்டை நிரூபிக்காமல் தப்பித்துக் கொள்ள யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எப்போது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லையோ அதுவே பொய்யன் என்பதைக் காட்டிவிட்ட பிறகு முபாஹலா மூலம் நான் நிரூபிப்பேன் என்று ஒருவன் கூறுவது மார்க்கத்தின் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்குவதாகும்.
*அவதூறு பரப்புவோர் முதலில் மார்க்க அடிப்படையில் செய்ய வேண்டிய நிரூபிக்கும் கடமையைச் செய்ய வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்தக் கடமையும் இல்லை. எனவே அவர் முபாஹலாவுக்கு அழைப்பு கொடுக்கலாம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.*
நாம் அனைவரும் நேர்வழியில் வாழ துவா செய்வோம்.
No comments:
Post a Comment