Saturday, May 26, 2018

முன்னாள் கொள்கை சகோதரர்களுக்கு ஒரு சவால் என்ற தலைப்பிலான கடிதத்திற்கு பதிலடியான கடிதம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முதலாவதாக,
முன்னாள் கொள்கை சகோதரர்கள் என்றால் இதற்கு முன் நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் என்று அர்த்தம். 

முன்னால் கொள்கை சகோதரர்கள் என்றால் உங்கள் எதிரே நிற்பவர்கள் என்று அர்த்தம். அதாவது சுற்றியுள்ள ஆட்டு மந்தைகள் அல்லது பினாமிகள். இவர்களுக்கு சவால் எல்லாம் விட மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம். வெளியேறிய பின்னர் தான் இந்த ஆட்டு மந்தைகளும் கழிவுகள்.

முதல் வரியிலேயே உங்கள் பதற்றமும் குழப்பமும் தெரிகிறது. சரியாக Proof கூட பார்க்கவில்லை. எங்கே பாய் நேரம் இருக்கிறது? ரியாசையும், மக்தூமையும் சில காலத்திற்கு கம்ப்யூட்டர் முன் அமரக்கூடாது என்று கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து விட்டீர்கள். எனவே முன் அனுபவமற்றவர்களைக் கொண்டே வண்டி ஓடுகிறது. சரி, அடுத்த விசயத்திற்கு வருவோம்.

இரண்டாவதாக,
ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதில் வராவிட்டால் அதை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்போம். Black & White காலம் முதல் உங்கள் பாஷையில் சொல்வதென்றால் 30, 35 ஆண்டு காலமாக இப்படித் தானே நடக்கிறது. ஜாக் அமைப்பில் கேள்வி கேட்டோம், பதில் வரவில்லை. வெளியே வந்தோம். தமுமுகவில் கேள்வி கேட்டோம், பதில் வரவில்லை. வெளியே வந்தோம். இப்போது TNTJவில் கேள்வி கேட்டோம். பதில் வரவில்லை. வெளியே வந்தோம். அதற்கு ஏன் ஒப்பாரியும், ஓலமும். 

மூன்றாவதாக,
6 லட்சம், 4 லட்சம் விபரம் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார்களாம். பார்ரா... அப்புறம்? 

நிர்வாகிகளிடம் மட்டும் நீங்கள் வசூல் செய்திருந்தால் நிர்வாகிகளுக்கு விளக்கம் கொடுப்பது போதும். ஆனால் ஜமாஅத் இல்லாத அனுதாபிகள் உட்பட அனைவரிடமும் வசூல் செய்தீர்கள் தானே. அப்படியென்றால் அனைவருக்கும் விளக்குவது தானே உங்கள் கடமை. ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. ஏனெனில் பொதுவாக விளக்கம் கொடுத்தால் எதிர்கேள்வி வரும். நம்மால் தாக்கு பிடிக்க முடியாது. நிர்வாகிகள் என்றால் ஆட்டு மந்தைகள். சமினா ஆத்தைனா என கட்டுப்படுவார்கள். அதிலும் பல மாவட்டங்களில் பொம்மைகளைப் பிடித்து அட்ஹாக் கமிட்டி அமைத்திருப்பதால் விளக்கம் என்பதே தேவைப்படுவதில்லை. 

நான்காவதாக,
ஒரு தவறை இருவர் செய்கிறார்கள். அதில் ஒருவர் நல்லவராம். இந்த கருத்து முற்றிலும் தவறு. ஒருவர் தனித்திருந்தார். பெரும்பாவம் செய்யவில்லை என்று முபாஹலா மூலம் நிரூபித்து விட்டார். இன்னொருவர் முற்றிலும் மறுத்து அல்லாஹ்வின் சாபம் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார். 

ஐந்தாவதாக, 
நாம் தோல்வியை மட்டும் சந்தித்து வருகிறோமாம். என்ன தோல்வியை யார் சந்தித்து விட்டார்கள்? நமக்கு தெரிந்து சமீபத்தில் எந்த தேர்தலோ போட்டியோ நடைபெறவில்லையே. கர்நாடகா தேர்தலை நீங்கள் சொல்கிறீர்களோ? நீங்களே பரீட்சை வைத்து நீங்களே வெற்றி அடைந்ததாக உங்களை நீங்களே புகழ்ந்து கொள்கிறீர்கள். 

ஆறாவதாக, 
கள்ள ஐடி பற்றி நீங்கள் பாடம் எடுக்கலாமா? அஹமது கபீர் ஐடி பற்றி ஒப்புதல் வாக்குமூலம் பகிரங்கமாக தந்தது யார்? நான் தான் ரியாத் மைதீன் என்றே வைத்துக் கொள்ளுங்கள் என்று (கோவை ரஹ்மத்துல்லாஹ்) தம்பிக்காக அண்ணன் முன்வந்து பழியை சுமந்த போது மட்டும் இனித்ததா? உள்ளே உள்ள செய்தியைப் பாருங்கள் என்று அன்று குதித்து கும்மாளம் போட்டு விட்டு இன்று திருப்பி அடிக்கும்போது கதறினால் எப்படி?

ஏழாவதாக,
உங்க மர்மதேச மாநில நிர்வாகிகளை நீக்குவது உங்க விருப்பம் மாதிரி எங்க அமைப்புக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். நாம் ஏன் இப்படி பெயர் வைக்கிறோம். நாம் எப்படி இயங்க போகிறோம் என்பது உங்களுக்குத் தான் நல்லாவே தெரியுமே. அப்புறம் ஏன் புலம்பல்.

எட்டாவதாக,
அல்தாபி கேப்டன் டிவியில் 30 நாட்கள் நிகழ்ச்சி நடத்துவதால் உங்கள் வயிறு எரிகிறது என்றால் நாம் என்ன செய்வது? எங்கிருந்து பணம் வருகிறது தெரியுமா? உலக மகா கண்டுபிடிப்பு. யூகத்தில் அழியும் ஜமாத்திற்கு இதுவே ஒரு ஆதாரம். யார் யாரிடம் வசூல் செய்தோம்? எப்படி நிகழ்ச்சி நடத்தினோம் என்பதை ரமலான் முடிந்ததும் வரவு செலவு கணக்கை அதிகாரப்பூர்வமாகவே வெளியிடுவோம். அப்போது தெரியும். உங்களைப் போல் திறந்த புத்தகம் என்று லேபிள் மட்டும் ஒட்டிக்கொண்டு மர்மமாக செயல்படும் அமைப்பு அல்ல, நாம். 

அல்தாபியை Disturb செய்யாமல் தாவா பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி நாமே சுமக்கிறோம். ஏற்கனவே, அவதூறுகள் பரப்பி விட்டு அல்லாஹ்வின் சாபம் கேட்டு பாதி ஜமாஅத் மண்ணோடு மண்ணாகிப் போன பின்பும் மீண்டும் அவதூறு பரப்பினால் பிர்அவுன் முடிவு தான் உங்களுக்கும் என்பதை நாம் கூறிக்கொள்கிறோம்.

ஒன்பதாவதாக, 
ஏதோ துவாரம் என்று (காமத்தலைவர் பாணியில்) வழக்கம்போல் ஆபாசமாகப் பேசும் ஜமாஅத் என்பதை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே வருகிறீர்கள். மக்கள் உங்களை இன்னும் புறக்கணிப்பார்கள்.

பத்தாவதாக,
ஆதாரம் எடுத்துக்கொண்டு தலைமைக்கு வர வேண்டுமாம். இப்படி மழுப்பியே 28 நிமிட ஆடியோவை மறைக்க முயன்றீர்கள். அடுத்து 10 நிமிட ஆடியோவுக்கும் இதே போல் Filim காட்ட முயற்சி செய்தீர்கள். தலைமைக்கு பார்ட்டி வந்த வேகத்தில் அண்ணனுக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது. விசாரணை வீடியோவும் வெளியே வரவில்லை. இதில் தலைமைக்கு வர வேண்டுமாம். நல்லவர் போல வேடமிட்ட உங்கள் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அல்லாஹ் உங்களை நடுத்தெருவுக்கு இறக்கிவிடப் போகிறான். இன்ஷா அல்லாஹ்.

11-வதாக 
அழைக்காத திருமணத்துக்கு வந்து கள்ளத்தனமாக விருந்து சாப்பிடுகிறவர் போல என்று உங்கள் பிளாஷ்பேக்கை எங்களுடன் ஒப்பிட முயற்சி செய்துள்ளீர்கள். உழைக்காமல் ஆயிரக்கணக்கில் சம்பளமாக எடுத்துக்கொண்டு, நிர்வாக செலவு என்ற பெயரில் ஜக்காத் பணத்தை எடுத்து ரொட்டேஷன் செய்து ஊர் காசில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு, 20% கமிஷன் அடித்து சாப்பிட்டு விட்டு, பயானுக்கு போகும் இடத்தில் A/c ரூம் போட்டு முந்திரியும், பாதாமும் சாப்பிட்டு தொப்பையை வளர்க்கும் நீங்கள் எங்களைப் பார்த்து பேச யோக்கியதை இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கே மாநில நிர்வாகத்தில் இருந்து வெளியேறினால் அடுத்த வேலை ருசியாக சாப்பிட முடியாதே என்ற வருத்தம் உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். எங்களுக்கு இப்படி கேவலமான எண்ணம் துளியும் இல்லை.

இறுதியாக,
இக்கடிதம் எழுதிய ரியாத் மைதீன் செய்த அரசியலையும் சேர்த்து கிழித்து இந்த பதிலடியை முடிக்கிறோம்.

சில நாட்களாக அமைதியாக, நல்ல பிள்ளை போல் வலம் வந்த ரியாத் மைதீன், துவா செய்யுங்கள் துவா செய்யுங்கள் என்று கூறித் திரிந்தவர், சரி திருந்தி விட்டார் போல என்று சிலபேர் நம்பிக்கை வைக்க அனைவரையும் வழக்கம்போல் ஏமாற்றி விட்டார். 

அல்லாஹ்வை நம்பாமல், நேர்மையை நம்பாமல் தனது குறுக்குபுத்தியை நம்ப ஆரம்பித்து விட்டார், ரியாத் மைதீன். ஆதரவற்ற சிறுவர், முதியோர் ஆதரவு இல்லத்தை வைத்து அரசியல் செய்து விட்டார். மாநில நிர்வாக செலவுக்கு வசூல் தாருங்கள் என்றால் சில்லறை காசு தான் தேறும் என்பதால், ஆதரவற்ற சிறுவர், முதியோர் துவாவில் தான் இந்த ஜமாஅத் இயங்குவதாக கண்ணீர் வரவழைக்க முயன்று தோற்றுவிட்டார். 

திறந்த புத்தகம் என்று மேடையில் பேசிவிட்டு CBI ரெய்டு வந்தால் உங்கள் சடலத்தை மிதித்து விட்டு தான் தடை செய்வார்கள் என்று உசுப்பி விட்டார். ஆனால் பாவம். அவர் கணக்கு ஒன்று. அல்லாஹ் போட்ட கணக்கு ஒன்று. 

CBI ரெய்டு வந்தால் எதிர்கொள்ள வேண்டியது தானே. நாம் தான் திறந்த புத்தகம் ஆயிற்றே. மடியில் கணம் இல்லை என்றால் எதற்கு பயம்? தேவையின்றி ஏன் இவர் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார் என்று பலரும், 

ஆ... இவர்கள் பின்னே போலீஸ் அலைகிறதா? அப்படியென்றால் இவர்களுடன் சேர்ந்து நமக்கும் பிரச்சினை வருமே, இனி இவர்கள் பக்கம் தலை வைத்தும் படுக்கக்கூடாது என்று பலரும் விமர்சிக்கின்றனர். இது தேவையா? அஞ்சோ பத்தோ கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க பாய் என்றால் வேலை முடிந்தது. அதை விட்டு ஏன் தேவையற்ற பில்டப்? 

ஆதரவற்ற சிறுவர், முதியோருக்கு நாம் ஏதோ எதிரிகளாகவும், துரோகிகளாகவும் சித்தரிக்க முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் எடுபடவில்லை. 

கோவை ரஹ்மத்துல்லாஹ் இவ்வளவு கூவியும், ஆக்ரோஷமாக தம்கட்டி பேசியும், ஆதரவற்ற சிறுவர், முதியோர் ஆதரவு இல்லத்தை வைத்து உருக்கமாகப் பேசியும், வழக்கம்போல் வரும் வசூலில் பாதி கூட வரவில்லை என்று அப்பகுதியில் சோகம் நிலவுகிறது, நம் கள ஆய்வு தகவல் இது, உண்மை தானே. அல்லாஹ்வை நம்பி, நேர்மையாக பேசினால் ரமலானில் தக்வாவுடன் தர்மம் சேர்ந்திருக்கும். இதற்கும் நாம் தான் காரணம் என்று சொல்லி விடுவீர்களே, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பயம். யார் குண்டு வைத்தாலும் பாய் தான் வைத்திருப்பான் என்று சல்லித்தனமாக சிந்திப்பது போல அனைத்திற்கும் நம்மைக் காரணம் காட்டினால் எப்படி?

யாரும் போய்விடக்கூடாது என்று கடலூரில் பாவா, பாவா என்று கெஞ்சினீர்கள். சென்னையில் Live போட்டு பார்த்தீர்கள். திருச்சி செயற்குழுவில் மண்டப கதவுகளை மூடிவிட்டு கதறி அழுதீர்கள். ஆனாலும் உங்களை யாரும் நம்ப தயாராக இல்லை. உங்களுக்கு மக்கள் செல்வாக்கு சரிந்து கொண்டே வருகிறது. அல்லாஹ்வை நம்பாமல் அண்ணனை நம்பி ஜமாத்தை இயக்குனீர்கள். இன்று கைசேதத்துடன் நிற்கிறீர்கள். இதற்கு நாமா பொறுப்பு?

TNTJ தாவாப் பணிகளில் இருந்து விலகி பல மாதங்கள் ஆகிவிட்டது. தலைமையாகிய உங்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளது. ஆடியோ குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். CCTV பதிவுகளை அழிக்க வேண்டும். அதிருப்தியில் உள்ள மண்டல நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஊர் ஊராக வசூலிக்க வேண்டும். நிதி வருகை பாதிப்பை தடுக்க வேண்டும். யார் யார் அல்தாபி பயானை Like, Share செய்கிறார்கள் என்று நோட்டம் விடவேண்டும். யாரைப்பற்றி அவதூறுகள் பரப்பலாம் என்று திட்டமிட வேண்டும் என்பது போன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் நமக்கு எந்த கவலையும் இல்லை. மக்களுக்கு தாவா செய்து சமுதாய சேவைகள் செய்து தூய இஸ்லாத்தினை சொல்லிகொண்டே இருப்பதைத் தவிர எங்களுக்கு எந்த டென்சனும் இல்லை. 

நமக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. நூஹ் நபி பிரச்சாரம் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளானே. கூட்டம் கூட்டம் என்று உங்களுக்குத் தான் வெறி, மனநோய் அனைத்தும். கூட்டத்தை தக்கவைக்கவே நீங்கள் குட்டிகரணம் போடுகிறீர்கள். நமக்கு அது தேவை இல்லை. நாம் தெளிவாகவே பயணிக்கிறோம். நம் நீரோடை அமைதியானது. சலனமில்லாதது. சத்தமின்றி பல ஆறுகள் நம்முடன் சங்கமிக்கின்றன. அல்லாஹ்வின் அருளால் நாம் பெரிய சக்தியாக உருவெடுப்போம். ஒருவேளை அப்படி உருவெடுத்தால் TNTJ போல அழிந்து போய்விடுவோம் என்று அல்லாஹ் நினைத்து நமக்கு அருள் செய்ய சிறிய கூட்டமாகவே வைத்து மென்மேலும் எங்களுக்கு அருள் புரிந்தாலும் அதிலும் நாம் மகிழ்ச்சி அடைவோம். ஒருக்காலும் வழிகெட மாட்டோம்.

குறிப்பு : இப்போதாவது உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள். செய்த பாவங்களுக்கும் அவதூறுகளுக்கும் பாவமன்னிப்பு கேளுங்கள். சம்மந்தப்பட்டவர் மன்னிக்காத வரை உங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மீண்டும் மீண்டும் அரசியல் செய்யாதீர்கள்.  

தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். – அல்குர்ஆன் 4 : 49

பக்கீர் பாபுவுக்கு யாஸ்மீன், அண்ணணுக்கு யார்.?

அஸ்ஸலாமு அலைக்கும்...,

இன்று முதல் முனீபாகிய நான் ததஜ என்கிற இயக்கத்தின் உறுப்பினர் என்கிற நிலையில் இருந்து விலகிக் கொள்கிறேன். இனி மேல் அடிப்படைக் கொள்கைகள் ரீதியாக மட்டுமே அந்த அமைப்பின் ஆய்வுகளை பின்பற்றும் ஒரு கொள்கை ஆதரவளான் என்கிற நிலையில் இன்ஷா அல்லாஹ் தொடருவேன். 

மற்ற இசுலாமிய இயக்கங்கள் அடிப்படைக் கொள்கையிலேயே தடம் புரண்டு விட்டதால் அவைகளில் இன்ஷா அல்லாஹ் ஒரு பொழுதும் அங்கம் வகிக்க மாட்டேன். 

அல்ஹம்துலில்லாஹ் இது நாள் வரை அந்த அமைப்பில் இருந்து பல இறைப் பணிகளை செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கு நன்றி கூறிகிறேன்.

அல்லாஹ் மென் மேலும் அந்த இயக்கத்தை தூய்மையானதாகவும், சுதந்திரமானதாகவும் இயக்க என் உளமாற இறைஞ்சுகிறேன். அந்த இயக்கத்தை விட்டு நீங்கி விட்டேன் என்பதற்காக வழி கெட்ட சலஃபுக் கொள்கையினரோ இன்ன பிற இயக்க தோழர்களோ எம்மை அணுக வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் அருளால் மிகத் தெளிவாக உள்ளேன்.

என்னருமை ததஜ சகோதரர்களுக்கு நன்றியையும் அல்லாஹ் உங்களுக்கு எல்லா வகையிலும் அருள் புரிய வேண்டும் என்கிற துஆவோடும் முடித்துக் கொள்கிறேன். 

இனி மேல் கொள்கை ரீதியாக மட்டுமே விவாதக் களங்களில் ஈடுபவேனே தவிர இயக்க ரீதியாகவோ அல்லது அதில் அங்கம் வகிக்கும் முக்கியப் பிரமுகர்கள் சார்பாகவோ எவ்வித கருத்துக்களையும் கூற மாட்டேன். 

அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் வைத்து இரு உலகிலும் வெற்றி அடையச் செய்வானாக!

ஏகத்துவச் சகோதரன்,

முனீப் அபு இக்ராம்

அண்ணண் தவறு செய்தார், ஆதாராம்.?

அண்ணண் விபச்சாரம் செய்தார், ஆதாரம் இல்லையை, ? பக்கீர் பாபுவுக்கு யாஸ்மீன், அண்ணணுக்கு யார்.?
மாநில நிர்வாகம் தெளிவாக சொல்லி இருக்கு பெண் வீட்டார் மிரட்டினார்கள், அதான் அண்ணண் பயந்து விட்டார், அண்ணண் மிரட்டினார் மாநில நிர்வாகம் பயந்து எழுத்து மூலம் வாங்கி இருக்காம் (ஆனால் அதுவும்இப்ப வெளியீடு இல்லை) மற்றவர்களை மிரட்டி வீடியோ எடுத்த மாநில நிர்வாகம் பிஜேவின் மிரட்டலுக்கு அடிபணிந்ததுஉறுப்பினராக இருக்கும் போதே மாநில நிர்வாகத்தை எதிர்கிறார் என்றால்நிர்வாகத்தில் இருக்கும் போது என்ன என்ன செய்து இருப்பார். ஆனாலும் அவரை அடிப்படை உறுப்பினரில் இருந்து விலக்க மாட்டோம்.! ஏன்னா அவரை தக்லீத் செய்தே பழகி விட்டோம் மாநில நிர்வாகம்.

இஸ்மாயில் அப்துல் ரஹ்மான்

Friday, May 25, 2018

*தூய்மையை இழந்த தவ்ஹீத் ஜமாஅத்*



🔰 நிர்வாகத்தில் தூய்மையில்லை
🔰 பொருளாதாரத்தில் தூய்மையில்லை
🔰 சொல்லில் தூய்மையில்லை
🔰 செயலில் தூய்மையில்லை

⁉ தூய்மை ஜமாஅத் ஏன் சிபிஐ ரைட்க்கு பயப்பட வேண்டும்.

⁉ கணக்கில் தூய்மையாக இருக்கும் ஜமாஅத் *மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை*  என்று சொல்லாமல் அப்பாவி மக்களை கேடயமாக (உயிர் பலி) கொடுக்க தூண்டுவது ஏன்?

⁉ சடலத்தை தாண்டி தான் எங்கள் ஜமாஅத்தை தடை செய்ய முடியும் என்று வெள்ளிமேடையில் முழுங்க காரணம் ஏன்? *தூய்மை தொலைந்து விட்டதா?*

⁉ சத்தியம் சொல்ல கூடிய ஜமாஅத்தை இந்த அரசு முடக்க நினைத்தால் வேறு இயக்கம் கான முடியாதா?

⁉ அரசால் இயக்கத்தை தான் முடக்க முடியுமே தவிர இயக்கத்தில் உள்ளவர்களின் செயலை முடக்க முடியுமா. சத்தியம் இருந்தால்...

🔴 அசத்தியவாதி தான் அஞ்ச வேண்டுமே தவிர சத்தியவாதி அல்ல என்று மேடைகளில் முழுக்கமிட்டு பேசியவர்கள் கண்ணில் ஏன் சிபிஐ/கஸ்டம்ஸ் ரைட் பீதி?

❓சத்தியத்தை சொல்ல கூடிய ஜமாஅத் இந்த அரசின் ரைட்க்கு பயப்படலாமா?

✅ தவறு செய்ய கூடியவன் தான் சிபிஐ, கஸ்டம்ஸ் சோதணைக்கு பயப்பட வேண்டுமே தவிர தவறிலைக்காதவன் தலை நிமிர்ந்து நிற்பான்.

❓சத்தியத்தை பேச கூடிய ஜமாஅத் அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டுமா? அரசுக்கு பயப்பட வேண்டுமா??

*சத்தியமே வெல்லும்*!

Thursday, May 24, 2018

இவர்களுக்கு எல்லாம் மூளை என்று ஒன்று உள்ளதா என சந்தேகமாக இருக்கு!

] ‪+91 99940 96567: என்ன நடக்கிறது?

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிறுவனர் மற்றும் அதன் முன்னால் மானிலத்தலைவர்
தொண்டியைச்சேர்ந்த பீ ஜெய்னுல் ஆபிதீன் விபச்சார குற்றச்சாட்டு காரணமாக ததஜவில் இருந்து நீக்கப்பட்டார்.
அல்ஹம்து லில்லாஹ்.

ஆனால் அதை ஜீரணிக்க முடியாத ததஜ தொண்டர்கள் தற்ப்போது என்ன பேசுகிறோம் என புரியாமல் சிலர் அழுது ஒப்பாரி வைத்தும் 
சிலர் அமைதி காத்தும் 
சிலர் சோக கீதம் வாசித்தும் வருகிறார்கள்.
அதற்க்கும் ஒரு அல்ஹம்து லில்லாஹ்.

ஆனால் ஒருசில மொரட்டு தொண்டர்கள் ஷிர்க் தான் பெரிய்ய பாவம்.
விபச்சாரம் ஒன்னும் பெரிய்ய பாவமல்ல என்று
பிரச்சனையை ஷிர்க் பக்கம் திருப்புகிறார்கள்.

இவர்களை பொருத்தவரை இவர்களை யார் எதிர்தாலும் அவர்கள் முஷ்ரிக் ஷிர்க் செய்பவர்கள்.
அதாவது காஃபிர்கள்.

இவர்களுக்கு எல்லாம் மூளை என்று ஒன்று உள்ளதா என சந்தேகமாக இருக்கு!

இவர்கள் சொல்வது போல யாரும் இங்கே முஷ்ரிக் இல்லை.
தர்கா வணங்கிகள் என்கிறார்கள்
அப்படி தர்கா வணங்கியும் யாருமில்லை.

உண்மையான ஈமான் தாரிகளையே இவர்கள் முஷ்ரிக் என்கிறார்கள்.
எந்த குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தை வைத்து இப்படி சொல்கிறார்கள் என்று விளங்க வில்லை.

இவர்கள் குறிப்பிடும் அந்த தர்கா வணங்கி முஷ்ரிக் யார் என்கிற கேள்விக்கு இதுவறை பதில் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பீஜெவின் ஆபாச ஆடியோ வெளியிட்டதே பீஜெவால் பாதிக்கப்பட்ட முன்னால் ததஜ தொண்டர்கள் தான்.

அவர்களைப்பற்றி ஒருவார்த்தைக்கூட பேசாமல்
இல்லாத ஷிர்க்கைப்பற்றி பேசுவது கோமாளிதனத்தின் உச்ச கட்டம்.

பீஜெ இஸ்லாத்தின் எதிரி
அந்த எதிரியை நாங்கள் அவர் உயிரோடு  இருந்தாலும் இறந்தாலும் எதிர்த்துக்கொண்டே தான் இருப்போம்.
அதற்க்கு அவருக்கு முழு தகுதி இருக்கு!

எங்களிடம் கேள்வி கேட்க அவர்தானே உங்களை தூண்டிவிட்டார்.
இப்ப எங்களுக்கு அவரை எதிர்ப்பது பழகிபோய் விட்டது.
எனவே எதிர்க்கிறோம்.
இனியும் தொடர்ந்து எதிர்ப்போம்.

உங்கள் குடும்பத்தார் யாராவது பாதிக்கப்பட்டு நிறூபிக்கப்பட்டிருந்தால்
இப்படித்தான் ஷிர்க் பற்றி பேசிக்கொண்டு இருப்பீர்களா?

பீஜெ செய்த இழி செயலை 
இழி செயலாக பார்த்து அவர்மீது கண்டனத்தை பதிவு செய்யுங்கள்.

அவர் மார்கத்தின் பெயரால் சொன்ன பொய் பித்தலாட்டங்களை தூர தூக்கி வீசுங்கள்.
இல்லையா அமைதியா இருங்கள்.

பீஜெ சாப்டர் முடிந்து விட்டது.

சும்மா அலம்பல் பன்னாமல் 
தயவு செய்து நிம்மதியா எங்களை நோன்பு நோற்க்க விடுங்கள்.

பீஜேக்கு முட்டுக் கொடுத்ததைப் போல, இப்பொழுது முட்டுக் கொடுத்தவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பல ஆதாரங்கள் இருந்தும், பச்சையாக புளுகுவது ஏன் ஷம்சுல்லுஹா அவர்களே ?
பலவற்றில் ஒன்று...
மாநிலத்தலைமை அலுவலகத்தில் அந்நியப் பெண்ணுடன் பீஜே தனிமையில் இருக்கிறார், இதைக் கண்ணால் பார்த்த சாட்சியாக வேலூர் இப்றாஹிம், மற்றும் கோவை ரஹ்மத்துல்லாஹ் இருக்கின்றனர். இதுக் குறித்து வேலூர் இப்றாஹிம் வெளியில் சொல்லுகிறார் இதனால் அவரும் அவர் குடும்பத்தினரும் அருவருக்கத்தக்க வகையில் பீஜே கோஷ்டியினரால் திட்டப்படுகிறார்.
கோவை. ரஹ்மத்துல்லாஹ் இதுக் குறித்து வாயே திறக்காமல் கள்ள மெளனம் காத்து பீஜேயைக் காப்பாற்றியது ஏன் ?

தர்க்கம் பண்றவங்க தெளிவா பண்ணுங்க
விபச்சாரம் செய்ததால் அவரது ஆய்வை நிராகரிக்கணும்ன
ு விபச்சாரத்தை ஹைலைட் செஞ்சா ... ஆய்வு வேற விபச்சாரம் வேற . எதோ பலகீனத்தால பண்ணிட்டார் ன்னு முட்டு அங்க இருந்து வரும் .
விபச்சாரத்தை விட ஹைலைட் பண்ணவேண்டியது பிஜே ஒரு பொய்யன் என்பதே .. எல்லாம் செஞ்சிட்டு எந்தளவு பொய் சொல்லி தன்னை நம்பிய மக்களையும் கூட முட்டாளாக்கி நடித்தார் என்பதே .. தனக்கு எதிரான சான்று வரும்வரையில் ஒப்புக்கொள்ளாமல் ஏமாற்றினார் என்பதே .. பைலா சட்டத்தை மதியாமல் தலைமைக்கே வந்தார் என்பதே .. எல்லாத்துக்கும் காரணம் இறையச்சம் அங்கு கேள்விக்குறியானதே ..
இறையச்சமற்ற பொய்யனுக்கு ஷரியத் ஆய்வு முடிவில் வேலை இல்லை

அண்னனுக்கு இன்னும் முட்டு
அவரை தவிர அவர் எழுதிய சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம்
இறையச்சம் இல்லாதவனுக்கு குர்ஆன் நேர்வழி காட்டாது அவன் சொன்ன அனைத்தும் வழிகேடே அதை தூக்கி எரி....

விபச்சாரம் _பெரும்பாவம்

அதை மறைக்க அவன் சொன்னது _பொய்

அதை நம்ப வைக்க நியு செட்டிங்_ஏமாற்றம்

அவனை நம்பிய உங்களுக்கு அவன் செய்தது_நம்பிக்கை துரோகம்

விபச்சாரன்
பொய்யன்
ஏமாற்றுபவன்
நம்பிக்கைதுரோகி

இவனுக்கு இறையச்சம் துளியும் இல்லை
அவன் சொன்னவிஷயங்களில் மட்டும் எப்படி உண்மை இருக்கும்

இந்த பதிவு சிந்திப்பவர்களுக்கு மட்டும்.....

மனைவி மக்களுடன் பொழுதை கழிக்க
ஆபாச ஆடியோ # பலியை அண்ணன் ஏத்து கொண்டார்////////
பீசு பீசா கிழிக்கும் போது ஏசு வை போல் குணத்தை பாரு
பச்சை ரத்தம் ஒழுகும் போதும் பசுவ போல குணத்த பாருடா
ஏசப்பா கோடான கோடி நன்றிகள் #ஏசப்பா


விபச்சாரம் ஆடியோ மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவனை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கக் கூடிய ஒவ்வொருவனையும் நீ விட்டு விடாதே யா அல்லாஹ்

ஆதாரத்தை கொண்டு வாங்க இதே மேடையில் உலகம் பூரா வீடியோ லைவ் பன்றோம்


அன்னைக்கு கூடுமா கூடாதான்னு ஊருக்கே ஆய்வு பண்ணி சொன்னார்.
இப்போ அவரது ஆய்வு கூடுமா கூடாதான்னு ஊரே ஆய்வு பண்ணிட்டு இருக்கானுக.
வாட் எ மெடிக்கல் மிராக்கிள்.

எந்த ஒரு கொள்கையை பறைசாற்ற TNTJ என்கிற இயக்கம் துவங்கப்பட்டதோ அப்படியாபட்ட ஒரு இயக்கத்தை துவக்கி அதில் influential ஆக இருந்தவராலேயே அந்த இயக்கத்தின் ஊடாக பிரச்சாரம் செய்த கொள்கையை பின்பற்ற முடியவில்லை எனும்போது அப்படியாபட்ட இயக்க கட்டமைப்பால் எவருக்கு என்ன பயன்?

நம்பக் கூடாத யாரை நம்பினாராம் P.J? அந்த பெண்ணையா.... அல்லது இது அனைத்தும் முழுக்க தெரிந்திருந்த முக்கிய TNTJ புள்ளிகள் இறுதியில் காப்பாற்ற வழியில்லாமல் கைவிரித்து விட்டதையா....? பச்சை துரோகத்தை பல காலம் செய்துவிட்டு இப்ப ஃபீல் செய்கிறாராம்....
இது யார் யாருக்கு எந்தெந்த நிர்வாகிக்கு முன்னமே எப்போதிலிருந்து தெரியும் என்கிற நோக்கில் வெளிப்படை தன்மைக் கொண்ட தீவிர தெளிவான விசாரணை வேண்டும்...

எப்ப ஒருவர் con-man ஆக அவரது தொடர் நெடுநாள் குற்ற ஒழுக்க கேட்டின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறாரோ அப்ப அவரது முந்தைய சர்ச்சைக்குரிய சுய காரண காரியம் கொண்ட வியாக்கியானம் கொண்ட விவர ஆக்கங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை தான் உருவாகும்.
காரணம்.... அதிலும் அவரது ஆய்வின் மீது பிறர் கொண்டிருந்த நம்பிக்கையை பயன்படுத்தி நம்பிக்கை மோசடி செய்து இருக்க மாட்டார் என்று எப்படி கூற முடியும்.
உதாரணத்திற்கு பலதார திருமணம் செய்துக் கொள்ள இவர் குறிப்பிட்ட நிபந்தனை...
இப்ப PJ இந்த TNTJ சமூகத்திற்கும் தனக்குமாக செய்துக் கொண்ட இந்த கேடுக்கெட்ட கருமத்திற்கு பேசாம தனது உடல் தேவைக்கு கூடுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடித்துவிட்டு போய் இருக்கலாமே.... குறைந்த பட்சம் இந்த அளவிற்கு அசிங்கப்பட்டு இருக்க தேவையில்லை.

புஹாரி இமாம் வரலாற்றில் ஒரு சம்பவம்
இமாம் புஹாரி ஹதீஸ் ஓன்று அரியதாக ஒருவரிடம் மட்டும்தான் இருந்தது அந்த ஹதீஸை பெற பல நூறு மைல் தூரம் பிரயாணித்து வந்து அந்த ஊர் மக்களிடம் அந்த ஹதீசை மனனமிட்டு வைத்துள்ள நபர் பற்றி விசாரித்தார்கள் அப்போதுஅந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த நபர் நாணயமானவர் உண்மையாளர் என சான்று கூறினார்கள்.
அதன்பிறகு அந்நபரிடம் ஹதீஸை நாடி சென்றார், அவரை சந்திக்கும் போது அவர் தன்னுடைய குதிரையை தொழுவத்தில் கட்டிவிட்டு வருகிறேன் என்று புஹாரி இமாமிடம் கூறிவிட்டு ஒரு கூடையை எடுத்து அதில் புள் இருப்பது போல் காட்டி அந்த குதிரையை ஏமாற்றி அதை தொழுவத்தின் பக்கம் அழைத்தார்கள்,
இதை கண்ட இமாம் புஹாரி நீங்கள் மனிதர்களிடம் உண்மையாக இருந்தாலும் நீங்கள் விலங்குகளை ஏமாற்றிவிட்டீர்கள். நீங்கள் அறிவிக்கும் ஹதீஸ் தேவை இல்லை . நான் நபிமொழிகளின் உண்மை தன்மையில் உறுதியானதை மட்டும் சேகரிக்க விரும்புகிறேன் என்று கூறி தன்னுடைய பல நூற்றுக்கணக்கான பயணத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த ஹதீஸை பெறாமல் சென்றார்.
இன்று பல ஆண்டுகளாக பொய்களை கூறிவரும் பீஜே யின் ஆய்வுகளை எப்படி சந்தேகம் கொள்ளாமல் ஏற்றுக்கொள்வது? இமாம் புஹாரி சந்தித்த மனிதரை விட பல மடங்கு மோசமானவர் பொய்யன் பீஜே . நான் பாலியல் தப்பு செய்தால் ஆதாரத்தை கொண்டு வாங்க இதே மேடையில் உலகம் பூரா வீடியோ லைவ் பன்றோம் என்று நா கூசாமல் பொய் சொன்ன பீஜே யின் ஆய்வுகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதற்கு முன்பு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டவர்க
ளின் ஆடியோ வீடியோ நீக்கப்பட்டது போல் இவருடைய ஆய்வுகளும் இணையத்திலிருந்து நீக்க வேண்டும். செய்வார்களா?