Thursday, August 02, 2018

தாஜிதீன் பெயரில் #பிஜே எழுதிய மாநில நிர்வாகிகக்கு சங்கு ஊதும் கடிதம் 1,2

[02/08, 12:30 pm] நன்றி  அப்ரஹ்மான் கடையநல்லார்: 
பாகம் . 1
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அன்பான மடல்
அன்புள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கொள்கைச் சகோதரன் தாஜுத்தீன் எழுதுவது. அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் எதற்காக உங்களுக்கு இம்மடலை எழுதுகிறேன் என்று சொல்வதற்கு முன்னால், நான் பினாமி அல்ல; ஜமாஅத்துக்குச் சம்மந்தமில்லாதவனும் அல்ல என்பதை முதலில் அறிமுகம் செய்து கொள்கிறேன்.
நான் ராயபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். த.மு.மு.க ஆரம்பித்த காலம் முதல் தவ்ஹீத் கொள்கையில் இருப்பவன். பீஜே அவர்கள் ஜான் டிரஸ்டில் திருக்குர்ஆன் விளக்கம் நடத்திய காலத்திலும், ஜமாஅத்திற்கு நெருக்கடியான காலத்திலும் ஜமாஅத்தில் இருந்தவன்; இன்று வரை இருந்து வருபவன்.

பீஜே, அல்தாபி, யூசுப், சைய்யித் இப்ராஹீம் முதல் முன்னாள் நிர்வாகிகளை நான் அறிவேன், அவர்களும் என்னை அறிவார்கள்.

தற்போதைய மாநில நிர்வாகிகளான தவ்பீக், கலீல் ரசூல், சாதிக், உள்ளிட்ட பல மாநில நிர்வாகிகளை நான் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். மாநிலத் தலைமை அலுவலகத்துடன் நான் தொடர்பில் உள்ளவன்.

முன்னாள், இந்நாள் நிர்வாகிகளை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவன்.

தவ்ஹீத் கொள்கையில் சிறிதளவும் சமரசம் செய்து கொள்ளாதவன். மாநிலத் தலைமையில் நடக்கும் ஜும்மாவில் தான் எப்போதும் கலந்து கொள்வேன்.

ரமலான் உரைகளையும் தலைமையில் தினமும் நேரில் கேட்பவன்.

தவ்ஹீத் கொள்கை மீதும், ஜமாஅத் மீதும் அபிமானம் உள்ளவனாகிய நான் ஜமாஅத் நன்மை கருதி கீழே உள்ள விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆனால் நான் எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை. எனவே நான் பொதுக்குழு உறுப்பினர் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வாட்சப் நம்பர் 6379368904
எனது தொலைபேசி எண்: 9840280338
எலக்ட்ரீசியன் தாஜுத்தீன் என்று சொன்னால் சென்னையில் உள்ள கொள்கைச் சகோதரர்கள் அறிவார்கள்.

நான் எழுதும் இந்த விஷயம் குறித்து மேலே நான் குறிப்பிட்டுள்ள எனது எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.
முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழு ஜமாஅத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்த அல்தாபி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட பின் ஜமாஅத்துக்கு எதிராக பல வழிகளில் செயல்பட்டு வருகிறார். இயன்றவரை தனி நபர்களைச் சந்தித்து தவறான விஷக்கருத்தை விதைத்து வருகிறார்.

ஆனாலும் தனி நபர் தக்லீதை ஏற்காத கொள்கைச் சகோதாரர்கள் ஜமாஅத்தின் பக்கமே நிற்கிறார்கள். பெரிய அளவில் அவரால் குழப்பம் ஏற்படுத்த முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் இனியும் தனிநபர் பின்னால் போக மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அல்தாபியை ஜமாஅத்தில் இனி ஒருக்காலும் சேர்க்கக் கூடாது என்ற உறுதி அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து வெளிப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆனாலும் அல்தாபி மக்கள் மத்தியில் விதைத்துள்ள பொய்யான வாதங்களுக்கான பதிலை பொதுக்குழுவில் நிர்வாகிகள் தருவார்கள் என்று நம்பி மக்கள் அமைதி காக்கிறார்கள்.
ஜமாஅத் மீது தவறு இருந்தால் பொதுக்குழு அதைச் சரி செய்யும் என்றும் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட நெருக்கடியான கட்டத்தில் மாநிலப் பொதுக்குழு கூடவுள்ளது. நம் ஜமாஅத்தைப் பொருத்தவரை பொதுக்குழு தான் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.

இப்பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்வும் நடக்கவுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பல விஷயங்களில் உறுப்பினர்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய பொதுக்குழுவாகவும் இது உள்ளது.

இப்பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஜமாஅத்தை வழிநடத்தக் கூடியவர்களைத் தேர்வு செய்யும் பொதுக்குழுவாக உள்ளது.

எனவே பொதுக்குழுவில் பெற வேண்டிய விளக்கங்கள் என்ன என்பதை முன்னரே முடிவு செய்து கொண்டால் அது குறித்து கேள்விகள் எழுப்பி விளக்கம் பெறலாம். தவறுகளைத் திருத்தலாம். இந்த நல்ல எண்ணத்தில் தான் இந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.

நான் சுட்டிக் காட்டும் கேள்விகள் பொதுக்குழு உறுப்பினர்களாக இல்லாமல் நம் ஜமாஅத் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் உள்ள மக்கள் மனங்களில் இருக்கும் சந்தேகங்கள் தான். இதற்கான விளக்கத்தைப் பொதுக்குழுவுக்குப் பின் பொதுக்குழு உறுப்பினர்கள் தமக்குச் சொல்வார்கள் என்று பெரிய நம்பிக்கையுடன் மக்கள் இருக்கிறார்கள்.

எனவே நான் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் அனுப்பும் இந்த ஆலோசனையை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் நீங்கள் கொண்டு செல்லலாம். பொதுக்குழு உறுப்பினர் அல்லாத எவருக்கும் அனுப்பி விட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதனால் குழப்பம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆனாலும் இந்த ஜமாஅத்தில் நய வஞ்சகமும் கூட இருந்து குழி பறிக்கும் துரோகமும் இல்லாமல் இருந்தது. நடிப்பதற்கும், அடுத்துக் கெடுப்பதற்கும் அல்தாபி கற்றுக் கொடுத்ததால் சிலர் தாமும் நடித்துக் கொண்டே ஜமாஅத்தில் இருக்கிறார்கள் என்பது சையித் இபராஹீம் கடிதம் பரவியதில் இருந்து தெரிகின்றது.

மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர், மண்டலத் தலைவர் ஆகிய பொறுப்பை வகிப்பவர்களுக்கு மட்டுமே சையித் இப்ராஹீம் அனுப்பினார். ஆனாலும் ஒரு நம்பிக்கை துரோகி மூலம் இது பரப்பப்பட்டு விட்டது. ஆனால் இத்தகையோர் 99 சதம் களையெடுக்கப்பட்டு விட்டனர். பொதுக்குழுவுக்குப் பின்னால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று விளங்கி அவர்களுக்குத் தகுதியான இடத்துக்கு போய் விடுவார்கள், இன்ஷா அல்லாஹ்.

இதை எதற்கு கூறுகிறேன் என்றால் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் சேர வேண்டும் என்பதற்காக நான் அனுப்பும் இக்கடிதம் பகிரங்கமாகவும் வாய்ப்பு உள்ளது. ஆனாலுல் நம் ஜமாஅத் நன்மை குறித்த விஷயமாக உள்ளதால் இதை எழுதும் அவசியம் உள்ளது.

நம் ஜமாஅத் இது வரை கட்டிக்காத்த நீதியும் மாண்பும் மீறப்பட்டுள்ளன என்று நமக்கு ஆதரவான சகோதரர்கள் பலர் கருதுகின்றனர். கீழ்க்கண்ட விஷயங்களை அதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
[02/08, 1:49 pm] அப்ரஹ்மான்கநல்லார்: தாஜிதீன் பெயரில் #பிஜே எழுதிய# கடிதம் #மாநில நிர்வாகிகக்கு சங்கு ஊதும் கடிதம்
பாகம் . 2
நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் உள்ளது. ஆனால் அந்த நம்பிக்கை பெருமளவு சிதைக்கப்பட்டு விட்டதாக நம் மக்களே கவலைப்படுகிறார்கள்.

முப்பது ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அமைப்பாக உள்ளதாலும், செயல்பட மர்கஸ்கள் இருப்பதாலும் பணிகளில் தொய்வு இல்லாமல் நடந்து வருகிறது. ஆனால் நிர்வாகிகளாக இல்லாத உறுப்பினர்கள், தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் முன்பு இருந்த நம்பிக்கை குறைந்துள்ளதை சரி செய்தே ஆக வேண்டும்.

அனைத்தும் பொதுக்குழுவில் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஆனால் மக்களிடம் என்னென்ன கேள்விகள் உள்ளன என்பதை பொதுக்குழுவில் நாம் எடுத்து வைத்தால் தான் அதற்கான விளக்கம் கிடைக்கும். அதை மக்களுக்கும் சொல்ல முடியும்.
ஆதாரங்களுடன் நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! விருப்பையும், வெறுப்பையும் தூக்கி எறிந்து விட்டு சொல்லப்படும் செய்தி சரியா என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நம் ஜமாஅத் மார்க்க விஷயங்களுக்கு திருக்குர்ஆனையும், திருக்குர்ஆனுக்கு முரண்படாத நபிவழியையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டுள்ளது.

அது போல் நிர்வாகிகள் தமது இஷ்டத்துக்கு நிர்வாகம் செய்யக் கூடாது என்பதற்காக நாம் அனைவரும் கூடி பைலா எனும் சட்டவிதியை உருவாக்கி அந்த விதியின்படி நம்மை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை நிர்வாகிகளுக்கு கொடுத்து இருக்கிறோம்.

அந்த விதிகளைப் பாரபட்சமில்லாமல் செயல்படுத்த வேண்டும்; ஆளுக்குத் தக்கவாறு மாற்றாமலும் நிர்வாகிகள் நம்மை நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் பைலாவில் வழங்கப்படாத அதிகாரத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. 
இதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
இதை மாநில நிர்வாகிகள் மீறினால் ஜமாஅத்தின் கட்டுக் கோப்பு குலைந்து விடும். மக்களின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து விடும்.

இப்படி சீர்தூக்கிப் பார்ப்பது தான் தவ்ஹீதின் அடிப்படை. இந்த அடிப்படையை மீறினால் தலைமை தவறாகச் சொன்னாலும் நாம் அதை மறுத்து பேசக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கினால் நாளை தவ்ஹீத் கொள்கையில் இருந்தும் தடம் புரளும் நிலை ஏற்பட்டு விடும்.
அப்படி ஏற்படாமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

வசூல் கமிஷன் விஷயத்தில் பொய்
ஜமாஅத் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்காக வசூல் பிரதிநிதிகளை நியமித்துள்ளது. அவர்களுக்கு மார்க்கம் அனுமதித்த அடிப்படையில் கமிஷன் கொடுத்து வருகிறது. இதை நாம் அனைவரும் மனமாற ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

மாநிலச் செயலாளரான கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் வசூல் செய்யும் குழுவுடன் சேர்ந்து கொண்டு கமிஷன் வாங்கினார் என்று ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டார்.

அவர் கமிஷன் வாங்கி இருந்தால் ஆம் என்று சொல்லலாம். இல்லை என்றால் இல்லை என்று சொல்லலாம். அல்லது எதுவும் பேசாமல் மவுனம் காக்கலாம்.

ஆனால் கோவை ரஹ்மதுல்லா அவர்கள் தனது சொந்த முகநூலில் இதற்கு விளக்கம் அளிக்கும் போது
சிறுவர் இல்லத்துக்காக வசூல் செய்தாலும், முதியோர் இல்லத்துக்காக வசூல் செய்தாலும் தாவா செண்டருக்கு வசூல் செய்தாலும் அவற்றுக்கு கமிஷன் கொடுக்கப்படுவதில்லை என்று எழுதியுள்ளார்.

ஆனால் மேற்கண்ட வகைக்கான வசூலுக்கும் கமிஷன் உண்டு என்பதே உண்மை. வசூல் செய்பவர்களைக் கேட்டு நீங்கள் உறுதி செய்யலாம்.

மேற்கண்ட வசூலுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது என்று பீஜே தலைவராக இருந்த போது பகிரங்கமாக நேரலையில் விளக்கினார்.

எதற்கெல்லாம் கமிஷன் உண்டோ அதற்குக் கமிஷன் இல்லை என்று துணிந்து பொய் சொல்கிறார் என்றால் நாளை உண்மை தெரியும் போது ஜமாஅத்தை எப்படி மக்கள் நம்புவார்கள்?

ரஹ்மதுல்லா இப்படி எழுதியது சரியா என்று ஒருவர் மேலாண்மைக் குழுவுக்கு மெயில் அனுப்பியும் ரஹ்மதுல்லா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ரஹ்மதுல்லாஹ் கூறியது தவறு என்று அறிவிக்கவும் இல்லை.

அப்படியானால் இதில் ஜமாஅத்தும் உடன்படுகிறது என்று மக்கள் கருத மாட்டார்களா?

ரஹ்மதுல்லாஹ் குறித்து புகார் அனுப்பியவர் தனது முக நூலில் வெளியிட்டுள்ளார்.
http://fazlulilahi.blogspot.com/ 



[01/08, 2:15 pm] அப்ரஹ்மான்கநல்லார்: சை.இப்ராஹீமை வச்சு சகுனி ஆட்டம் ஆடும் பி.ஜெ விரைவில் முழு தகவல்

[01/08, 5:16 pm] அப்ரஹ்மான்கநல்லார்: கொத்தடிமை : கூலி வாங்கி செத்து வாழ்பவன் கெத்தடிமை : கேலியானாலும் கவுரவமாக நினைப்பவன்.
அதாவது கள்ள ஐடி காரன்
[01/08, 6:56 pm] அப்ரஹ்மான்கநல்லார்: தள்ளாடும் ததஜா
பிஸ்மில்லாஹிர்ர
ஹ்மானிர்ரஹீம்
31-7-2018
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
திருச்சி மாவட்டம், கூத்தூர் கிளை நிர்வாகிகளான பொருளாளர் A.அப்துல் முனாப், துணைத்தலைவர் S.ரியாஜூதீன், துணைச்செயலாளர் H.தாஜுதீன் ஆகியோர் எழுதும் விலகல் கடிதம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சமீபகால செயல்பாடுகள் மார்க்கத்திற்கு முரணாக உள்ளதை நாம் அறிகிறோம். எனவே, இந்த ஜமாஅத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நாம் விலகுகிறோம்.
இப்படிக்கு,
A.அப்துல் முனாப், கூத்தூர் கிளை பொருளாளர்.
S.ரியாஜூதீன், துணைத்தலைவர்.
H.தாஜுதீன், துணைச்செயலாளர்.
[01/08, 7:01 pm] அப்ரஹ்மான்கநல்லார்: சையது இப்ராகிம்
ஒரு அயோக்கியன்
இப்படிக்கு ,
யோக்கியன் R . ரஹ்மதுல்லாஹ்






No comments: