Thursday, August 16, 2018

பீஜே புத்தகங்கள் மற்றும் குர்ஆன் தமிழாக்கம் ராயல்டி சம்பந்தமாக


Mohamed Madhar is with Mohamed Rafiq Raja and 16 others.
பீஜே புத்தகங்கள் மற்றும் குர்ஆன் தமிழாக்கம் ராயல்டி சம்பந்தமாக பொய்யான தகவல்களை பொதுக்குழுவில் சொல்லப்பட்டு பீஜேவுக்கு மகா அயோக்கியன் என்ற பட்டம் தரப்படுகிறது.
Mohamed Nisam மற்றும் தாஜுத்தீன் என்ற பெயரில் பீஜே ஜமாத்துக்கு எதிராக எழுதுகிறார், ஆகையால் அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்குகிறோம். - பொதுக்குழுவில் மகா யோக்கியர் #கலீல்_ரசூல்.
உடனே அல்லாஹ் அக்பர் என்ற கோரஸாக சத்தம்.! Mohamed Nisam மற்றும் தாஜுத்தீன் என்பவர்கள் தான் பீஜே என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் பொதுக் குழுவில் சமர்பிக்கப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீத்கள் கொள்கைப்படி செயல்படும் ஜமாத் என்று மார் தட்டும் ஜமாத்தில் கடந்த 30 வருடமாக பல சிரமங்கள் பட்டு கொள்கையை சொல்ல முன்னோடியாக இருந்தவரை நீக்க, அவருக்கு எதிராக ஒரு ஆதாரத்தை காட்டப்பட வில்லை என்பது ஜமாத்திற்கு பெரும் #பின்னடைவு.
ஆதாரம் ஆதாரம் என்ற ஒருவரின் சத்தமும் கேட்கிறது ஒரு பத்து நிமிடம் சலசலப்பு ஏற்படுகிறது யாரோ ஒருவர் கேள்வி கேட்க நினைக்கிறார், அவரை அப்துந்நாசர் அமைதிப்படுத்துகிறார்.
4499 உறுப்பினர்களுக்கு ஆதாரத்தை கேட்க மனம் இல்லாதது பார்க்கும் போது அவர்கள் தலைமை மீது #கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருப்பதை படம் பிடித்து காட்டியுள்ளது. இந்த போக்கு ஜமாத்தின் வளர்ச்சிக்கு மிக ஆபத்தானது.
ஆதாரம் எதுவும் சமர்பிக்காமல் பீஜேவை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்குவதிலேயே தலைமை நிர்வாகிகள் முனைப்பு காட்டி, அதையே பிரதானமாக வைத்து, கடந்த ஒரு வருடமாக தவ்ஹீத் ஜமாத்தில் நடக்கும் எந்த ஒன்றுக்கும் முறையாக விளக்கம் தரவில்லை.
4500 உறுப்பினர்களின் ஒரு நாள் மற்றும் தலைமை நிர்வாகிகள் எனப்படுவோரின் நேரத்தை வீணடித்து லட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு பொதுக் குழுவில் எந்த கேள்விகளும் கேட்கப்படாமல், அனைத்துக்கும் #அல்லாஹ்_அக்பர் என்ற சத்தம் மூலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் அனைத்து விளக்கமும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு #கல்தாகொடுக்கப்பட்டுள்ளது என்பது வேதனை.
-----------------------------------
-------------------------------------------
பழசும் புதுசும்

No comments: