தலைமைப் பதவிக்கு சம்சுல்லுஹா ஆசைப்படுவது ஏன்? இதன் உள் நோக்கம் என்ன? நிர்வாகத் திறன் இல்லாதவர் சம்சுல் லுஹா. இவரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டினால் கடுமையாக கோபப்படுவார். மருமகன் ஷேக், ஹாஜா நூஹ் அணியில் உள்ளதாலும், லுஹாவின் மகனும் அதில் இருந்தவன் என்பதாலும் அவர்களை உள்ளே இழுத்துப் போட லுஹா திட்டம்? ஹாஜா நூஹும் லுஹாவுக்கு கொடுத்த 25 லட்சம் பற்றி விமர்சிக்கவில்லையே ஏன்? ஜமாஅத் பாலிசிக்கு மாற்றமாக சொந்தக் காரணங்களுக்காக அமைச்சர்களையும், அரசியல்வாதிகளையும் பல தடவை அணுகியவர் லுஹா. இதை நாம் சொல்லவில்லை யார் சொல்லி உள்ளார் என்பதை படித்துப் பாருங்கள். எழுத்து நடை சாட்சி சொல்லும்.
தலைமைப்
பொறுப்பு என்பது வயதில் மூத்தவர் என்பதற்காக கொடுக்கப்படும் கவுரவம் அல்ல. மாறாக
ஜமாஅத்தைக் கட்டிக்காக்கும் சிரமமான அமானிதமாகும். இதைக் கவனத்தில் கொண்டு தலைவரை
நாம் தேர்வு செய்ய வேண்டும். தனக்கு இது
இயலாது என்று தெரிந்து இருந்தும் இந்தப் பதவிக்கு சம்சுல்லுஹா ஆசைப்படுவது ஏன்? இதன் உள்
நோக்கம் என்ன?
தலைவர் என்ற
பொறுப்பை வைத்து சுய நலன் காப்பதும், கலீல் ரசூலை மறைமுகத் தலைவராகக் கொண்டு
ஜமாஅத்தை இயக்குவதும் தான் இதன் நோக்கம். இதுவும் இவரது
பலவீனங்களில் ஒன்றாகும்.
மேலும் மாபெரும்
கட்டமைப்பை நிர்வகிக்கும் நிர்வாகத் திறன் இல்லாதவர் சம்சுல் லுஹா. இவரிடம் உள்ள
குறைகளைச் சுட்டிக் காட்டினால் கடுமையாக கோபப்படுவார். எனவே மாபெரும்
பேரியக்கத்தை இவரால் நிர்வகிக்கவே முடியாது.
இது
பாரபட்சமில்லாமல் செயல்படும் ஜமாஅத். முழுமையாக அர்ப்பணிக்கும் தன்மை உள்ளவர்களால்
தான் வழி நடத்தப்பட வேண்டும்.
மருமகன் ஷேக், ஹாஜா நூஹ் அணியில் உள்ளதாலும், லுஹாவின் மகனும் அதில் இருந்தவன் என்பதாலும்
அவர்களை உள்ளே இழுத்துப் போட வாய்ப்பு உண்டு. கஷ்டமான காலத்தில் ஜமாஅத்தைக்
கட்டிக்காத்த குமரி மாவட்ட நிர்வாகிகள் ஓரம் கட்டப்பட வாய்ப்பு உண்டு.
ஏனெனில் தன்
மகன், தன் மருமகன் தன்
குடும்பம் என்ற சுயநலம் இவருக்கு எப்போதும் உண்டு. எதையெல்லாமோ
விமர்சித்த லுஹாவின் மருமகனும், ஹாஜா நூஹும் லுஹாவுக்கு கொடுத்த 25 லட்சம் பற்றி
விமர்சிக்கவில்லை. இதைப் பற்றி மட்டும் பேசவில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது
அவசியம்.
மேலும் ஜமாஅத்
பாலிசிக்கு மாற்றமாக சொந்தக் காரணங்களுக்காக அமைச்சர்களையும், அரசியல்வாதிகளையும்
பல தடவை அணுகியவர் லுஹா.
சம்சுல் லுஹா
பற்றி நான் கூறிய விஷயங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும்.
அவரைப்
பரிந்துரை செய்யும் நிர்வாகிகள் இது பொய் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம்
செய்தால் இதைப் பொய் என்று கருதிக் கொள்ளுங்கள்.
நெல்லை மாவட்ட
நிர்வாகிகள் இது பொய்யான குற்றச்சாட்டு என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால்
இது பொய் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
நான் எழுதிய
இந்த விபரங்கள் முன்னாள், இன்னாள் மாநில நிர்வாகிகளிடம் பேச்சுக்
கொடுத்து அறிந்து கொண்ட உண்மை என்று நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து
கூறுகிறேன்.
சம்சுல் லுஹா
தகுதியானவர் அல்ல என்று தனிப்பட்ட முறையில் பேசும் போது நிர்வாகிகளே சொல்வார்கள்.
கோவை
ரஹ்மத்துல்லா முன்னாள் பொதுச்
செயலாளர், இன்னாள் மாநிலச்
செயலாளர் ஜமாஅத்தின் ஆய்வாளர்களில் ஒருவராகவும் உள்ளார். வசீகரமாக உரை நிகழ்த்தக்
கூடியவர்.
பெரும்பாலான
விவாதக் களங்களில் இவர் பங்கேற்று உள்ளார்.
இவருக்கு
நிர்வாக அனுபவம் உள்ளது
வசூல் கமிஷன்
விஷயமாக இவர் தனது முக நூலில் பொய்யான செய்தியைப் பரப்பி ஜமாஅத்தின் நம்பகத்
தன்மையைக் கேள்விக்குறியாக்கியவர்.
சிறுவர் இல்லம், முதியோர் இல்லம்
ஆகியவற்றுக்கு வசூல் செய்வதில் கமிசன் இல்லை என்று பகிரங்கமாக எழுதினார். ஆனால்
இதற்கு கமிசன் வழங்கப்பட்டது உண்மை.
மேலும் பொய்யான
பெயர்களில் தான் விரும்பியதைப் பரப்பி வருகிறார். இன்றளவும் இது நீடிக்கிறது.
இந்த பலவீனம்
காரணமாக மக்களிடம் கேள்வி எழலாம். இதற்காக மன்னிப்பு கேட்டு இவர் திருந்திக்
கொண்டு பொதுக்குழுவும் இவரைப் பொருந்திக் கொண்டால் இவரைத் தேர்வு செய்யலாம்.
அப்துல் கரீம்
தற்போது இவர்
மாநிலத் தலைவராக இருக்கிறார். மாநிலத் துணைத் தலைவராக ஒரு ஆண்டு செயல்பட்டு
அனுபவம் பெற்றுள்ளார். வயது குறைவு என்றாலும் பக்குவமாகவும், நிதானமாகவும்
செயல்படுபவர் என்ற பெயர் இவருக்கு உண்டு,
மேலும் தவ்ஹீத்
ஜமாஅத் என்றால் ஆய்வுத் திறனும், விவாதத் திறனும் முக்கிய தகுதியாகும். இந்தத்
தகுதி இவரிடம் உள்ளது என்பதை இவர் நிரூபித்து இருக்கிறார். (பிறை விசயம் தவிர)
மேலும் சில ஆண்டுகள் ஆலிம்களை உருவாக்கும் இஸ்லாமியக் கல்லூரியில் ஆசிரியராகப்
பணியாற்றி உள்ளார். ஜமாஅத்தின் ஆய்வாளர்களில் ஒருவராகவும் உள்ளார். வசீகரமாக உரை
நிகழ்த்தக் கூடியவர்.
வயதுக் குறைவு
இவரது பலவீனமாகக் கருதப்படலாம் என்றாலும் உண்மையில் அது பலவீனம் அல்ல என்பதே
உண்மை. இவர் மீது கடந்த காலத்தில் எந்தக் குற்றச்சாட்டும் விமர்சனமும் இல்லை.
வசீகரமாக உரை நிகழ்த்தக் கூடியவர்.
ஜமாஅத் எடுத்த
சில தவறான முடிவுகள் இவரது தலைமையில் எடுக்கப்பட்டாலும் கலீல் ரசூல் போன்றவர்கள்
தலையீடு இல்லாத நிர்வாகம் அமையும் போது இவர் சரியாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது.
இவரைத் தேர்வு
செய்தால் ஜமாஅத்துக்கு எதிராகப் பெரிய அளவில் விமர்சனம் வராது.
அப்துன் நாசர்
மேலாண்மைக்
குழுத் தலைவராக இவர் இருக்கிறார். ஆலிம்களை உருவாக்கும் இஸ்லாமியக் கல்லூரியில்
ஆசிரியராக இருக்கிறார். ஜமாஅத்தின் ஆய்வாளர்களில் ஒருவராகவும் உள்ளார். வசீகரமாக
உரை நிகழ்த்தக் கூடியவர்.
பெரும்பாலான
விவாதக் களங்களில் இவர் பங்கேற்று உள்ளார்.
இவருக்கு
நிர்வாக அனுபவம் இல்லை என்பது பலவீனமாகும். ஆனாலும் ஜமாஅத் நிர்வாகத்துக்கு
சட்டவிதிகள் உள்ளதால் அனுபவமில்லாவிட்
டாலும்
நிர்வாகம் செய்து விட முடியும்.
இவரைத் தேர்வு
செய்தால் பெரிய அளவில் விமர்சனம் வராது. சிறந்த தேர்வாக இருக்கும்.
எம்.எஸ்.
சுலைமான்
இவர் மார்க்க
அறிஞர்களில் மூத்தவர். நிர்வாகத்தில் பல்வேறு துணைப் பொறுப்புகளை ஏற்று அனுபவம்
பெற்றவர். மார்க்க அறிஞர்களை உருவாக்கும் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்.
விவாதங்களிலும் பங்கேற்றவர். ஆய்வாளர்களில் ஒருவர்.
இவர் உணர்ச்சி
வசப்படுபவர்; கோபக்காரர் என்ற
பெயர் உள்ளது. சில விஷயங்களை விளக்குகிறேன் என்ற பெயரில் கூடுதல் குறைவாகச்
சொல்பவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. தலைவர் பொறுப்பு ஏற்றபின் தன்னை மாற்றிக்
கொள்ளக் கூடும். இந்த பலவீனம் தவிர பெரிய பலவீனம் ஏதும் இல்லை.
எம்.ஐ.சுலைமான்
இவரும் மூத்த
அறிஞர்களில் ஒருவர். இஸ்லாமியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஆய்வாளர்.
விவாதக் களங்களில் பங்கேற்றவர். தனது கருத்தை தைரியமாகச் சொல்பவர். அனைவரையும்
அரவனைத்துச் செல்பவர்.
உயர்நிலைக்
குழுவினரின் அவசரத்தனமான சில முடிவுகளை இவர் ஏற்கவில்லை என்பதால் இவரைப் பரிந்துரை
செய்ய மாட்டார்கள்.
ஆனாலும்
மற்றவர்களை விட இவருக்குத் தான் இன்றைய சூழலில் அதிகத் தகுதி உள்ளது.
தனது மென்மையான
போக்கால் அனைவரையும் அரவணைப்பார்.
புரிந்து
கொள்ளாமல் ஜமாஅத்துக்கு எதிராகப் போனவர்கள் கூட திரும்பி வருவதற்கு இவர் தேர்வு
செய்யப்படுவது வாய்ப்பாக அமையும்.
பெரிய அளவில்
குறை சொல்ல முடியாத ஒரு தேர்வு உள்ளது என்றால் அதற்கான தகுதி எம்.ஐ.சுலைமானுக்கு
உள்ளது.
மேலும் நான்
சுட்டிக்காட்டிய எந்த ஒன்றிலும் இவர் சம்மந்தப்படாதவர். மக்களும் இவருக்குக்
கட்டுப்படுவார்கள் என்பதால் ஜமாஅத் சிறப்பாகச் செல்லும்.
ஆனாலும்
இப்போதைய நிர்வாகிகளின் தவறான போக்கை அவர் ஆதரிக்காத காரணத்தால் இவரை மேலாண்மைக்
குழு பரிந்துரை செய்யாது. பொதுக்குழு உறுப்பினர்கள் முன் மொழிந்தால் இது இன்றைய
சூழலில் சிறந்த தேர்வாக இருக்கும்.
நான் விசாரித்த
வகையில் அவர் தொழிலை மூடி விட்டதாக அறிகிறேன். அப்படி இருந்தால் அவர் மறுக்காமல்
ஏற்க வாய்ப்பு உண்டு.
இரண்டு தடவை
பொறுப்பில் இருந்ததால் அவர் இடைவெளி விட்டுத் தான் வர முடியும் என்ற பைலா விதியைக்
காரணம் காட்டி மறுக்க முடியாது. இவர் முந்தைய நிர்வாகத்தில் பதவியில் இல்லாமல்
இடைவெளி உள்ளது. மேலும் பொதுக்குழு நெருக்கடியான நேரத்தில் அவரை ஏற்க முடிவு
செய்தால் அதைத் தடுக்க முடியாது.
பைலாவை விட
பொதுக்குழு முடிவு மேலானது. பொதுக்குழு ஏற்றுக் கொண்டால் அதுவே பைலாவாக ஆகிவிடும்,
மேலும் பலவற்றை அறிய கிளிக் செய்யவும் http://fazlulilahi.blogspot.com/
மேலும் பலவற்றை அறிய கிளிக் செய்யவும் http://fazlulilahi.blogspot.com/
------------------------------------------------------------------------------------
[02/08, 2:04 pm] அப்ரஹ்மான்கநல்லார்: தாஜிதீன் பெயரில் #பிஜே எழுதிய# கடிதம் #மாநில
நிர்வாகிகக்கு சக்கு ஊதும் கடிதம்
பாகம். 7
ஒலி முஹம்மத்
இவர் ஆலிம், ஆய்வாளர்
விவாதங்கள் சிலவற்றில் கலந்து கொண்டவர். குறுகிய காலத்தில் தனது அறிவையும், நிர்வாகத்
திறனையும் வளர்த்துக் கொண்டவர். கவர்ச்சிகரமாக உரை நிகழ்த்துபவர்.
அனுபவம் குறைவு
என்ற பலவீனத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் இவரும் தகுதியானவரே.
இவர்கள் அல்லாத
தாவூத் கைசர், தாஹா உள்ளிட்ட
பலர் உள்ளனர். இவர்களின் அனுபவம் குறித்து நாம் அறிய முடியவில்லை.
மக்களின்
நம்பிக்கையைப் பெறும் தீர்வு என்ன?
பொதுவாக நான்
தனிப்பட்ட முறையில் கருதுவது என்னவென்றால் இன்று நாம் மக்களின் நம்பிக்கையை
அப்படியே தக்கவைக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
நிர்வாகிகளில்
முக்கிய மாற்றம் இருந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் கிளை மாவட்ட நிர்வாகிகளால்
ஜமாஅத்தைக் கொண்டு செல்ல முடியும்.
உயர்நிலைக் குழு
உறுப்பினர்களில் சிலர் நீண்ட காலமாக உள்ளனர்.
சிலர் முதன்
முறையாக சென்ற ஆண்டு தான் தேர்வு செய்யப்பட்டனர்.
நீண்ட காலமாக
உயர்நிலைக் குழுவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களில் ஒருவரும்
உயர்நிலைக் குழுவுக்கு வரக்கூடாது என்று முடிவு செய்தால் சிலர் திரும்ப திரும்ப
ஏதாவது ஒரு பொறுப்பில் ஒட்டிக் கொள்கிறார்கள் என்ற விமர்சனத்தை நாம் மாற்றியாக
வேண்டும். அவர்கள் சாதாரண உறுப்பினராக இருந்து ஜமாஅதுக்காக பாடுபடலாம்.
தற்போது
உயர்நிலைக் குழுவில் இல்லாத எம்.ஐ.சுலைமான், பனைக்குளம் அப்துல் ஹமீது போன்றவர்களுக்கு
விதிவிலக்கு அளிக்கலாம். ஏனெனில் தொடர்ந்து உயர்நிலைக் குழுவில் இல்லாமல் வெளியே
சென்று பணி செய்பவர்கள். மேலும் இந்த நிர்வாகத்தின் எந்த முடிவிலும் இவர்கள்
சம்மந்தப்படவில்லை.
புதிதாகத்
தேர்வு செய்யப்பட்டவர்கள் தயக்கம் காரணமாக பழையவர்களின் வழிகாட்டுதலை முன்மொழியும்
நிலையில் தான் ஆரம்பத்தில் இருப்பார்கள். எனவே அவர்கள் இந்த நிர்வாகத்தின்
முடிவுக்கு தலையாட்டியதை அலட்சியப்படுத்தலாம். எனவே முதன் முறை தேர்வு செய்யப்பட்ட
அனைவரையும் மீண்டும் பொறுப்புக்கு தேர்வு செய்யலாம்.
பெங்களூர் கனி, காஞ்சி சித்தீக், இம்ரான், போன்றவர்கள்
உதாரணம்.
மேலும் மாவட்ட
நிர்வாகிகளாக உள்ளவர்களில் சிலரை முன்மொழிய முன் கூட்டியே முடிவு செய்து கொண்டு
நீங்கள் பொதுக்குழுவைச் சந்தித்தால் அல்லாஹ்வின் அருளால் மக்கள் அனைவரும் திருப்தி
கொள்ளத் தக்க நம்பிக்கை கொள்ளத் தக்க நிர்வாகம் அமையும். பழைய நிர்வாகத்தின்
செயல்களுக்கு பதில் சொல்லும் நிலைமை ஏற்படாது.
பல
மாவட்டங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்களிடம் நல்ல திறமை உள்ளது. மாற்றம் தேவை என்ற
எண்ணம் பலரிடம் உள்ளதால் மாவட்ட நிர்வாகிகளில் இருந்து தகுதியானவர்களை முன்னரே
முடிவு செய்து கொண்டு பொதுக்குழுவில் பரிந்துரைத்தால் அது நல்ல தேர்வாக அமையும்.
கட்டுக் கோப்பு குலையக் கூடாது என்பதற்காகத் தான் மக்கள் அமைதியாக உள்ளனர். மிக
அதிகமானவர்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள்.
இது தான் சிறந்த
தீர்வாகத் தெரிகிறது. இதை விட நல்ல தீர்வு இருந்தால் ஆலோசனை செய்து கொண்டு
பொதுக்குழுவை நீங்கள் சந்திக்கலாம்.
சையித்
இப்ராஹீம் மீது நடவடிக்கை சரியா?
மாநிலப்
பொதுக்குழுவின் மூவாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களால் சையித் இப்ராஹீம் பொதுச்
செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஒருவர்
பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டுமானால், ஒரு காலத்திலும்
அவர் பொறுப்புக்கு வரக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட வேண்டுமானால் பைலாவில்
சொல்லப்பட்ட குற்றத்தை அவர் செய்திருக்க வேண்டும்.
அல்தாபியின்
அயோக்கியததனத்தை ரியாத் மைதீன் என்ற பெயரில் அவர் பரப்பினார் என்பது தான் அவர்
மீதான குற்றச்சாட்டு.
இதற்காக
நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உயர்நிலைக் குழுவுக்கு இல்லை. உயர்நிலைக் குழு
விரும்பியபடி நடவடிக்கை எடுக்கலாமா?
சையித்
இப்ராஹீமை உயர்நிலைக் குழுவில் உள்ளவர்களில் அதிமானவர்களுக்குப் பிடிக்கவில்லை
என்பதற்காகவே புகார் வந்த உடனே உயர்நிலைக் குழுவைக் கூட்டாமல் ஜமாஅத்தின்
சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும் கலீல் ரசூலின் விருப்பப்படி அவர் நீக்கப்பட்டு
அம்முடிவு உயர்நிலைக் குழு பெயரில் அறிவிக்கப்பட்டது என்ற சந்தேகம் பலமாக
எழுகின்றது.
பைலாவில்
சொல்லப்படாத குற்றத்தை ஒரு மாநில நிர்வாகி செய்தால் அவரைக் கண்டித்து இருக்கலாம்.
இதைப் பற்றி பொதுக்குழுவில் விவாதிப்போம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும்.
மேலும் ஜமாஅத் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் அவரைத் தூக்கி வீசியதில் கலீல்
ரசூல் வகையறாக்களுக்கு உள் நோக்கம் உள்ளதாகவே தெரிகிறது.
சையித்
இப்ராஹிம் நிர்வாகத்தில் இருந்தால் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்பார் என்பதால்
தான் அவர் நீக்கப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்காக அல்ல.
தன்மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கை நியாயமற்றது என்று கூறி விளக்கம் கேட்டு அனைத்து
உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கும் சையித் இப்ராஹீம் கடிதம் எழுதினார். அந்தக்
கடிதத்தில் அவர் கேட்டுள்ள கேள்விகள் நியாயமாக உள்ளதா என்று சிந்தித்துப்
பாருங்கள்.
அந்தக் கடிதம்
பரவலாகச் சென்றடைந்துள்ளதால் அதை நான் வெளியிட அவசியம் இல்லை.
அது அவரை மீறி
பரவியதா? அவரே பரப்பினாரா? என்ற
சர்ச்சைக்குள் நான் போகவில்லை. ஆனால் அவர் மீது எடுத்த நடவடிக்கை தான்
தோன்றித்தனமானது என்பதையே சுட்டிக் காட்டுகிறேன்.
நியாயம், நேர்மைக்குச்
சிறிதும் மதிப்பளிக்காமல் தான் விரும்பியதைச் செய்ய நினைப்பவர்கள் தான் இப்படி
முடிவு செய்ய முடியும்.
புகார் வந்த அதே
தினம் உயர்நிலைக் குழுவைக் கூட்டாமல் விவாதிக்காமல் அவசர கோலத்தில் அவர்
நீக்கப்பட்டு உள்ளார் என்பது பளிச்சென்று தெரிகிறது.
பொதுக்குழுவில்
ஒப்புதல் கேட்க இருந்தோம்; அதற்குள் சையித் இப்ராஹீம் கடிதம் பலருக்கும்
அனுப்பப்பட்டு விட்டது என்று தலைமை அறிக்கையில் சொல்லப்படுகிறது. இதை விட மக்களை
ஏமாற்றும் அறிக்கை எதுவும் இருக்க முடியாது. நடவடிக்கை எடுத்து தூக்கி வீசிவிட்டு
பல மாதங்கள் கழித்து ஒப்புதல் கேட்க இருந்தோம் என்று தலைமை சொல்வது அறிவுடையோரால்
ஏற்க முடியுமா? சையித்
இப்ராஹீம் விஷயமாக ஒரு முடிவும் எடுக்காமல் பொதுக்குழுவில் முடிவு எடுப்போம் என்று
முடிவு அறிவித்து இருந்தால் தான் இப்படி அறிக்கை வெளியிட முடியும். அனைத்தையும்
முடித்து வெளியேற்றி கேவலப்படுத்தி விட்டு இப்படி சொல்வது பொதுக்குழுவை
அவமதிக்கும் அறிக்கையாகவே உள்ளது.
இதைச் சரி
செய்யும் அதிகாரம் பொதுக்குழு உறுப்பினர்களாகிய உங்களுக்குத் தான் உண்டு. கண்டு
கொள்ளாமல் விட்டால் இந்த அநீதியில் உங்களுக்கும் பங்கு உண்டு என்று ஆகிவிடும்.
உயர்நிலைக் குழு
உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவரை சட்டப்படி
இல்லாமல் நீக்கியதாக நீங்கள் கருதினால் அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டுமா இல்லையா?.
அவர்களில் சிலர்
மட்டும் இம்முடிவை எடுத்து மற்றவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தால் அந்தச் சிலர்
மீது ஆயுட்காலத் தடை விதிக்க வேண்டுமா இல்லையா?
இன்னொரு
விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பத்து
வருடத்துக்கு முன் மதுரையில் செய்து வந்த தொழிலை விட்டு விட்டு ஜமாஅத் பணிக்காக
ஸையித் இப்ராஹீம் சென்னை வந்தார். அந்தத் தொழிலைச் செய்து கொண்டு மதுரையில் அவர்
இருந்திருந்தால் அல்லாஹ்வின் நாட்டப்படி அவர் தொழிலதிபராகக் கூட ஆகி இருக்கலாம்.
[02/08, 2:05 pm] அப்ரஹ்மான்கநல்லார்: தாஜிதீன் பெயரில் #பிஜே எழுதிய# கடிதம் #மாநில
நிர்வாகிகக்கு சக்கு ஊதும் கடிதம்
பாகம். 8
ஆனால் ஜமாஅத்
வழங்கும் ஊதியத்தையும் வாடகைப் படியையும் வைத்துத் தான் அவர் வாழ்க்கை நடத்தினார்.
பிள்ளைகளையும் படிக்க வைத்து வந்தார்.
திடீரென அற்பக்
காரணத்துக்காக அவரை நீக்கினார்கள். நீக்கினால் ஜமாஅத் மூலம் வாடகை கொடுக்க
மாட்டார்கள். மாத ஊதியம் கொடுக்க மாட்டார்கள். அதற்கு ஸையித் இப்ராஹீம் என்ன
செய்வார் என்ற மனிதாபிமான சிந்தனை கூட இல்லாமல் நிர்வாகிகள் இருந்துள்ளனர்.
நடுத்தெருவில்
நிறுத்தி விட்டோமே? சாப்பிட என்ன செய்வார்? வாடகை எப்படி
கொடுப்பார்? என்ற சிந்தனை
கூட இல்லாதவர்கள் என்றால் இவர்கள் எந்த அளவு காழ்ப்புணர்வுடன் செயல்பட்டு உள்ளனர்
என்று அறிந்து கொள்ளுங்கள்.
பாலியல்
குற்றச்சாட்டுக்காக அல்தாபி நீக்கப்பட்ட போது ஜமாஅத் அவருக்கு உதவ முடியாது என்ற
நிலையில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத பீஜே நிர்வாகிகளிடம் வாதாடி அல்தாபி
குடும்பம் எப்படி நடக்கும்? தனது வருவாய்க்கான வழியை உடனே அவரால் தேட
முடியுமா என்று வாதிட்டு பிஜே மூன்று லட்சம் ரூபாய் அல்தாபிக்குக் கொடுத்தார்.
(அல்தாபி பின்னர் திருப்பிக் கொடுத்து விட்டார் என்பது தனி விஷயம்)
சையித்
இப்ராஹீம் மீதான குற்றம் அப்படிப்பட்டது அல்லவே?
பைலாவிலும் இல்லாத பழி வாங்கும் நடவடிக்கை
தானே? அப்படி
இருக்கும் போது நீங்கள் வருவாய்க்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை அல்லது சில
மாதங்களுக்கு வாடகை, ஊதியம் தருகிறோம்; அதற்குள் மாற்று
ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று ஒரு வார்த்தையும் கூறவில்லை. வாழ்வாதாரத்துக்கு
என்ன செய்வீர்கள் என்று ஒருவரும் போனில் கூட கேட்கவில்லை.
இப்போது உள்ள நிர்வாகிகளை
விட மிக அதிகம் உழைத்தவர் சையித் இப்ராஹீம் தான். ஜமாஅத்தே கதி என்று கிடந்தவர்.
அப்படி இருந்தும் இது பற்றி ஒருவர் கூட கவலைப்படவில்லை; ஃபார்மாலிட்டிக்காகக்
கூட விசாரிக்கவில்லை. இதை அவரைக் கேட்டு நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
அவரைக் கழட்டி
விட்டு இஷ்டப்படி ஆட்டம் போட நிர்வாகிகள் நினைத்து இருந்தால் மட்டுமே இப்படி நடக்க
முடியும் என்று நான் நினைத்தால் அது தவறா?
பீஜே குறித்த
விசாரணை
பீஜே அவர்கள்
மீதான நடவடிக்கையைக் கவனித்தால் காலை ஒன்பது மணிக்கு அவரை நீக்கி லுஹாவும், கலீல் ரசூலும்
எம்.எஸ் சுலைமானும் கோவை ரஹ்மதுல்லாவும் முடிவு செய்து விட்டு பத்து மணிக்குத்
தான் உயர்நிலைக் குழுவைக் கூட்டி விளக்கியுள்ளார்கள் என்பது எம்,எஸ். சுலைமான்
செயற்குழுவில் விளக்கியதில் இருந்து தெரிகிறது.
இது குறித்து பல
கேள்விகள் முகநூலில் கேட்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை நியாயமாகவே
எனக்குத் தெரிகின்றது.
அவற்றைக் கீழே
உள்ள லின்குகளில் நீங்கள் காணலாம்.
இலங்கையைச்
சேர்ந்த முஹம்மது நிசாம் என்பவர் தனது முக நூலில் பீஜே மீதான நடவடிக்கை தவறானது
என்று பல அறிவுப்பூர்வமான வாதங்களை முன்வைக்கிறார். இவர் அல்தாபி நீக்கத்தின் போது
அல்தாபியின் வாதங்களை தவறு என்று சுட்டிக்காட்டிவர். ஜமாஅத்தின் ஆதரவாளர்.
செயற்குழுவில் M.S சுலைமான் இது
குறித்து அளித்த விளக்கம் கள்ளத்தன்மாக பதிவு செய்யப்பட்டு யூடூபில் போட்டனர்.
அதைக் கேட்கும் போது ஜமாஅத் பீஜே விஷயத்தை சரியான முறையில் விசரிக்கவில்லை என்று
தெரிகிறது. காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது.
No comments:
Post a Comment