Friday, August 17, 2018

தவ்ஹீத் ஜமா அத் கட்டபஞ்சாயத்து அமைப்பு தான் என்று மீண்டும் நிரூபணம்!

தவ்ஹீத் ஜமா அத் கட்டபஞ்சாயத்து அமைப்பு தான் என்று மீண்டும் நிரூபணம்!
தவ்ஹீத் ஜமா அத்தில் முன்பு மாவட்ட பேச்சாளராக இருந்த ஹபிபுர் ரஹ்மான் என்ற சகோதரர் , காஞ்சிபுரம் பகுதியில் இமாமாக பணி புரிந்து வந்துள்ளார்.
அந்த பகுதியில் சந்தா வசூல் செய்யும் பொழுது, பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளிலும் சென்று வசூல் செய்திருப்பதாகவும்,
மேலும் மார்க்க விளக்கம் கேட்கும் பெண்களிடம் மார்க்க விளக்கம் போனில் சொல்லியதாகவும் குற்றச்சாட்டு வந்த அடிப்படையில், கடந்த காலங்களில் விசாரிக்கப்பட்டு உள்ளது. அவரும் குற்றத்தை ஒத்துக் கொண்டுள்ளார்.
இது முடிந்த விஷயம். இதில் தவறே செய்திருந்தாலும், அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீண்டு இருப்பார். அது அல்லாஹ்வுக்கும் அவருக்கும் உள்ள விஷயம்.
இந்த விசாரணை வீடியோவை படம் பிடித்து வைத்துக் கொண்டனர் ததஜ தலைமை.
இன்று ஜமாஅத்தின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்டு ஹபிபுர் ரஹ்மான் ஜமா அத்தை விட்டு வெளியேறிய உடன், அந்த விசாரணை வீடியோவை வெளியிட்டு அவருடைய மானத்தோடு விளையாடுகிறது மாநில தலைமை.
மாநில பொதுக்குழுவில் நாங்கள் திருந்தி விட்டோம் என்று மக்களிடம் பொய்யான வாக்குறுதி தான் கொடுத்தோம். நாங்கள் பொய்யர்கள் தான் என்று நிரூபித்துள்ளனர். ஜமாத்தை காக்க பொய் சொல்லலாம் என்று ஃபத்வா கொடுத்தவர்கள் தானே!
யாரெல்லாம் ஜமாஅத் செய்யும் தவறான செயல்களில் எதிர்க்கிறார்களோ, விமர்சனம் செய்கிறார்களோ! அவர்களின் அமானிதங்களை மக்களுக்கு மத்தியிலே போட்டு உடைத்து, அவர்களின் மானத்தோடு விளையாடும், இந்த ஜமாத் நிச்சயம் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய ஜமாஅத் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
துல்ஹஜ் மாதத்தில் இருக்கிறோம். இந்த மாதத்தின் புனிதத்தை கெடுப்பதும் பிறர் மானத்தோடு விளையாடுவதும் சமம் என்றார்கள் அல்லாஹ்வுடைய தூதர்.
மானம் புனிதமானது
நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள், “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?” என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, “இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தினமாகும்” என்று கூறினார்கள். மேலும், “இறைவா! நீயே சாட்சி!” என்று கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள்.
எனவே மக்களும் “இது (நபியவர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்கின்ற ஹஜ்ஜாகும்” என்று பேசிக் கொண்டார்கள்.
அறி : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி 1742
அல்லாஹ்வுடைய தூதரை நேசிப்பதாக சொல்வார்கள், ஆனால் தூதரின் எச்சரிக்கையை காலில் போட்டு மிதிப்பார்கள். ஏன் என்றால் இவர்களுக்கு கொள்கையே தலைவன்!
-----------------------------------------------------------------
பழசும் புதுசும்

No comments: