Thursday, August 02, 2018

எத்தனை தில்லு முல்லுகள் பல் இளித்தது ஆலிம் பட்டமளிப்பு நிகழ்ச்சி


கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தின் தலைவன் சம்சுல்லுஹாவின் கர்ஜனையை மீண்டும் கேட்பவர்கள் வெட்கித் தலை குனிவார்கள். 
[02/08, 12:53 pm] ‪+91 98404 07474: ஆலிம் பட்டமளிப்பு நிகழ்ச்சியைப் பார்வையிட நான் சென்றிருந்த போது அங்கு வருகை தந்த சிலர் பேசிக்கொண்ட விடயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கொஞ்சம் விசாரித்து அறிந்த தகவல்களோடு எனக்கும் தெரிந்த சில தகவல்களை வைத்து இதனை மக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். 

ஒழுக்க சீலர்களையே தாஃவாவுக்கு பயன்படுத்துவோம் என்று மேலாண்மைக்குழு அங்கத்தவர் ஷம்சுல் ளுஹா சப்தமிட்டதை கொள்கை வாதிகள் அதை துண்டாக வெட்டிப் பரப்ப, இந்த ஜமாஅத்துக்கு ஈடாக ஒரு ஜமாஅத் இருக்கிறதா என்று அறைகூவல் விட, கோலாகலமாக பட்டமளிப்பு நிகழ்ச்சி நடந்தேறியது.

ஆனால் மாநில நிர்வாகிகளின் கள்ளப்புத்தியும், பொய்யான தற்பெருமை பீத்தலும் கீழ்நிலைத் தொண்டனுக்கு தெரியாது என்கின்ற விடையமும், ஜமாஅத் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்ற விடையமும் இதில் ஒளிந்துள்ள அயோக்கியத்தனத்தை மறைத்து விடும் என்று நம்புகிறார்கள்.

இதிலே இருக்கும் ஏராளமான திருட்டுத்தனங்களை மக்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன். 

பட்டமளிப்பு கொடுத்ததில் எத்தனை தில்லு முல்லுகள் மறைந்து உள்ளன என்பதை விளக்க முன் ஒரு பிளாஷ் பேக் பார்ப்போமா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விதிப்படி பெண்களுக்கு பாடம் கற்பிக்க ஆண் ஆசிரியர்களை ஏற்பாடு செய்யக் கூடாது. சிறுமிகளுக்கும் ஆண் ஆசிரியர்கள் குர்ஆன் மத்ரசா நடத்தக் கூடாது என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெமோரெண்டமாக கூட அனுப்பப்பட்டுள்ளது.  இப்படி ஏதாவது ஒரு கிளையில் சிறுமிகளுக்கு பாடம் போதிக்க ஆண் ஆசிரியர் ஏற்படுத்தப்பட்டால் அந்த நேரமே நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இது அனைத்து பொதுக்குழு அங்கத்தவர்களும் தெரிந்து வைத்துள்ள ஜமாஅத்தின் சட்டமாகும். இந்த சட்டத்தை மீறினால் எதிலும் பொறுப்பு வகிக்க முடியாது. 

ஒரு பக்கம் மக்களுக்கு இச்சட்டம் அமுல் படுத்தப்பட்டது. ஆனால் மேலாண்மைக்குழு அங்கத்தவரான கலீல் ரசூல் ஆண்களும் பெண்களும் படிக்கும் கொலேஜ் ஒன்றை நடாத்தி வருகிறார். இதில் இளம் ஆசிரியர்கள் மவ்லவிகள் பெண்களுக்கு பாடம் நடாத்த பணிக்கப்படு உள்ளனர். இதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்படி கலீல் ரசூல் நடத்திய கொலேஜில் ஆசிரியராக இருந்த ஒரு இளவயது ஆலிமுக்கு படிக்கும் மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த மாணவி சுன்னத் ஜமாஅத் குடும்பத்தைச் சேர்ந்தவராம். 

அந்த மாணவி ஒரு முறை காணாமல் போய் விட்டார். பெற்றோரும் கலீல் ரசூலும் தேடி அலையும் வேளை நட்பு மாணவிகள் அந்த ஆலிமுக்கு அந்தப் பெண்ணுடன் பழக்கம் உள்ளது என்று சொல்லியுள்ளனர். இன்னும் அந்தப் பெண் காணாமல் போன நாளில் அந்த ஆலிமும் காணாமல் போய் விட்டார்.

அந்த ஆசிரியர் தான் அந்தப் பெண்ணை ஓடிப்போக சொல்லி அதன் மூலம் நெருக்கடி கொடுத்து கல்யாணம் செய்ய உத்தேசித்தமை கலீல் ரசூலுக்கு தெரிய வந்ததாம். 

இதன் பின்னர் அந்தப் பெண் வீட்டினர் ஜமாஅத்தில் புகார் கொடுத்தார்கள். அந்த புகாரின் அடிப்படையில் மாநில உப பொதுச் செயலாளராக இருந்த தௌபீக்கும் மாநிலச் செயலாளர் ஈ.முகம்மதும் அந்த ஆலிமை விசாரித்தார்கள். அவர் தவறாக நடந்து கொண்டது உறுதியானதால் அந்த ஆலிம் நீக்கப்பட்டார். மேலும் ஐந்து வருடம் தாஃவாவில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டார்.

இப்போது விடையத்துக்கு வருவோம்

கலீல் ரசூல் ஜமாஅத் விதிக்கு மாற்றமாக ஆண் பெண் சேர்ந்து பணிக்கும் முறையில் கல்விக் கூடம் நடத்தினாரே அதற்காக ஜமாஅத் அவர் மீது நடவடிக்கை எடுத்ததா? அவர் எப்படி மேலாண்மை குழுவில் உறுப்பிணராக இருக்க முடியும்? என்ற கேள்வி புறம்பாக உள்ளது. பொதுக்குழுவில் இதையும் மக்கள் கேட்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது பட்டம் வழங்கியுள்ள ஆலிம்களில் ஒருவர் தான் நாம் குறிப்பிட்ட ஆலிம்.

மாணவியை வீட்டை விட்டு ஓடி வரச்சொன்னவர்

விசாரணையில் இன்னும் பல பெண்களிடம் சேட்டை செய்தவர் என நிரூபிக்கப்பட்டவர்

ஐந்து வருடங்கள் தாஃவாவில் இருந்து நிறுத்தப்பட்டவர்

மீண்டும் தன்னை தாஃவாவுக்கு பயன்படுத்துமாறு கேட்ட போது மறுக்கப்பட்டவர்

எப்படி பட்டம் வழங்கி ஆலிமாக அங்கீகரிக்கப்பட்டார்

சம்சுல்லுஹா, ஆலிம்களை விட ஒழுக்க சீலர்கள் தான் பிரச்சாரத்துக்கு தேவை என்று அடித் தொண்டையில் கத்தும் போதே  அவரை அவ்விடையம் உறுத்தி இருக்க வேண்டாமா?

இந்த போட்டோவில் இப்போதைய தலைவருக்குப் பின்னால் நிற்பவர் தான் அந்த ஆலிம். அப்துல் கரீமுக்கு இந்த உண்மை தெரிந்து இருந்தும், நடவடிக்கை எடுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தும் எப்படி ஆலிம் பட்டம் கொடுத்து மேடையில் ஏற்றினார்?

மாநில பொதுச் செயலாளர் தௌபீக் தானே அந்த ஆலிமை விசாரித்து உண்மையைக் கண்டறிந்தாராம். அவர் எப்படி ஜமாஅத் பைலாவுக்கு துரோகம் செய்தார்?

அனைவர் மீதும் ஒரேயடியாக நடவடிக்கை எடுக்கும் கலீல் ரசூல் அந்த ஆலிமை கல்விக் கூடத்தில் இருந்து நீக்கியவர். அவரை மேடையேற்றக் கூடாது என்ற நடவடிக்கையில் பங்கு கொண்டவர். அவர் எப்படி ஜமாஅத்தின் சட்ட விதியை மீறினார்.

இவர்கள் நால்வரும் ஜமாஅத் பைலாவைக் காலில் போட்டு மிதித்து விட்டு ஜமாஅத்துக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் துரோகம் செய்து விட்டார்கள்.

மேலும் இந்த செய்திகள் தெரிந்தும் மக்களை ஏமாற்றிய மாநில நிர்வாக உறுப்பினர் மீதும் பொதுக்குழு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலீல் ரசூல் மீது இளம் பெண்களுக்கு இளம் ஆண் ஆசிரியர்களை நியமித்து ஜமாஅத் விதியை மீறிய குற்றத்துக்கும் சேர்த்து இரட்டை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுக்குழு பொருத்தமான நடவடிக்க எடுக்கத் தவறினால் ஜமாஅத் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் சரியும். இதுவரை கட்டிக் காத்த நாணயம் நேர்மை கேள்விக்குறியாகும்.

இந்த சம்பவத்துடன் சம்சுல்லுஹாவின் கர்ஜனையை மீண்டும் கேட்பவர்கள் வெட்கித் தலை குனிவார்கள். அவரும் தான். (அவருக்கு ஏது மானம்?)

இந்த துரோகத்துக்கான தண்டனையை பொதுக்குழு இவர்களுக்கு வழங்க வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------------------------------



No comments: