Thursday, August 02, 2018

: தாஜிதீன் பெயரில் #பிஜே எழுதிய# கடிதம் #மாநில நிர்வாகிகக்கு சக்கு ஊதும் கடித தொடர்

[02/08, 1:51 pm] அப்ரஹ்மான்கநல்லார்: Nallathambi Thambi
அஸ்ஸலாமு அலைக்கும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்கைச் சகோதரர்களுக்கும் குறிப்பாக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
மாநிலச் செயலாளராக இருக்கும் கோவை ரஹ்மதுல்லாஹ் தன்னைத் தூய்மையானவர் என்று காட்டிக் கொள்வதற்காக மக்கள் மத்தியில் துணிந்து பொய்களைப் பரப்பி நம்மை ஏமாற்றி வருகிறார்.
அவர் தனது முகநூலில் சொன்ன பொய்களைப்பற்றி மேலாண்மைக்குழுவுக்கு நான் புகார் கொடுத்தும், அதன் பின்னர் உயர்நிலைக் குழு கூடியும் கூட பாரதூரமான இக்குற்றச்சாட்ட
ுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஜமாஅத் மூடி மறைத்து விட்டது.
கோவை ரஹ்மத்துல்லா சொன்னது பொய் என்றாவது அறிக்கை விட்டிருக்க வேண்டும். அப்படியும் செய்யவில்லை.
இந்தப் பொய்யைப் பரப்புவதில் மேலாண்மைக் குழுவும் உடந்தையாக இருந்துள்ளது இதிலிருந்து தெரிகிறது.
http://fazlulilahi.blogspot.com/2018/08/blog-post.html 
கடந்த 22-6-2018 அன்று நான் மேலாண்மைக்குழுவுக்கு இது குறித்து அனுப்பிய மின்னஞ்சல் இதுதான்:
இந்த மின்ன்ஞ்சல் மீது இது வரை எந்தப் பதிலும் வரவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே பொதுக்குழுவில் மக்கள் இது குறித்து நியாயம் கேட்பதற்காக அந்த மின்னஞ்சலை இன்று (15- 7- 2018) பொதுவில் வைக்கிறேன்.

அன்பிற்குரிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக்குழுத் தலைவருக்கும், ஜமாஅத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கும் நல்ல தம்பி எனும் இப்ராமூசா உடைய அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஜமாஅத் ஜமாஅத்தைப் பாதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க முறையில் நடவடிக்கை எடுத்து மக்கள் நம்பிக்கையைப் பெறுவதில் ஜமாஅத் தனித்து விளங்கி வருகிறது.
ஒழுக்கக்கேடு சம்மந்தமான குற்றச்சாட்டுக்கள் காரணமாக பாக்கர், அல்தாபி, பீஜே ஆகியோர் மீது ஜமாஅத் நடவடிக்கை எடுத்தது மட்டுமின்றி ஜமாஅத் சம்மந்தமாக பொய் சொன்னதற்காக அல்லது உண்மையை மறைத்தற்காக சையித் இப்ராஹீம் மீதும் ஜமாஅத் நடவடிக்கை எடுத்தது மக்களிடம் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
இத்தகைய ஜமாஅத்தாக நமது ஜமாஅத் இருப்பதால் ஒரு மாநில நிர்வாகி பகிரங்கமாக பொய்யைப் பரப்பி ஜமாஅத்தின் மீது உள்ள நம்பிக்கையைச் சிதைத்துள்ளதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
அந்த நிர்வாகி ஜமாஅத்தின் நிதி ஆதாரம் குறித்து பொது வெளியில் பதிவு செய்த விஷயம் முற்றிலும் பொய்யானது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து இந்தப் புகாரை அனுப்புகிறேன்.
அந்த நிர்வாகி வேறு யாருமல்ல. உயர்நிலைக் குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான கோவை ரஹ்மதுல்லா தான்.
ஜமாஅத் சார்பில் வசூல் செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கமிஷன் குறித்து பொது மக்களுக்கு பொய்ச் செய்தியைக் கொடுத்து உள்ளார்.
அவர் தனது அதிகாரப்பூர்வமா
ன முக நூல் பக்கத்தில் பின்வரும் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.
Kovai Rahmathulla
ரமலான் வசூல் சம்பந்தமான குற்றச்சாட்டுக்கு எனது பதில்.
எதிரிகள் பரப்புவது போல் அனைத்திற்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுவதில்லை.
தலைமையின் புதிய கட்டிடம்,
தலைமைக்கு சொந்தமான இடம்,
தலைமை பள்ளிவாசல்,
#முதியோர் இல்லம்,
#சிறுவர் இல்லம்,
#தஃவா செண்டர்,
மாநாடுகள்,
இயற்கைச் சீற்றங்கள்
பித்ரா,
குர்பானி
ஆகியவற்றுக்காக வசூலிப்பவர்களுக்கு ஐந்து பைசா கூட ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை.
ரமலானில் மக்களை வீடுகளில் ,கடைகளில், மர்கஸ்களில் தேடிச் சென்று சந்திக்கும் போது செய்யப்படும் வசூலுக்குத்தான் ஊக்கத்தொகை என்று முடிவு செய்யப்பட்டது.
தலைமைக்கு தொடர்ச்சியாக சந்தா அனுப்பியவர்களிடம் வசூலித்தால் அந்தத் தொகைக்கு ஊக்கத் தொகை இல்லை.
ஆர்.ரஹ்மத்துல்லாஹ் 06.06.18
மேலே உள்ளவாறு ஜமாஅத் வழங்கும் கமிஷன் பற்றி அவர் பொது மக்களுக்கு கூறுகிறார்.
இது உண்மையா?
இதில் ரஹ்மதுல்லா குறிப்பிட்ட பட்டியலில் வசூல் பிரதிநிதிகள் மூலம் வசூலிக்கப்படுபவையும் உள்ளன. அவற்றுக்கு கமிஷன் உள்ளன.
நேரடியாக வசூலிக்கப்படுபவ
ைகளும் உள்ளன. அவற்றுக்கு கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. இரண்டையும் கலந்து மக்களிடம் பரப்புகிறார். அவர் குறிப்பிட்ட விஷயங்களில்
முதியோர் இல்லம்,
சிறுவர் இல்லம்,
தஃவா செண்டர்,
ஆகியவற்றுக்கு கமிஷன் கொடுக்கப்படுகிறது.
இவற்றுடன் கமிஷன் கொடுக்கப்படாத கீழ்க்கண்டவற்றை இனைக்கிறார்.
தலைமையின் புதிய கட்டிடம்,
தலைமைக்கு சொந்தமான இடம்,
தலைமை பள்ளிவாசல்,
மாநாடுகள்,
இயற்கைச் சீற்றங்கள்
பித்ரா
குர்பானி
இவற்றுக்கு வசூல் பிரதிநிதிகளே இல்லை. கமிஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை.
உதாரணமாக பித்ரா குர்பானி ஆகியவற்றுக்கு கமிஷன் இல்லை என்பதை ஒவ்வொரு நிர்வாகியும் அறிவார்.
இவற்றுக்கு கமிஷன் இல்லாதது போல் மேலே சொன்னவற்றுக்கும் கமிஷன் இல்லை என்று கிளை நிர்வாகிகளை நம்ப வைப்பதற்காக இப்படி கலந்து எழுதியுள்ளார்.
அதாவது யூதர்களைப் போல் பொய்யுடன் மெய்யைக் கலந்து கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்.
சிறுவர் இல்லங்களுக்காக வசூல் செய்பவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறதா? இல்லையா?
இதற்காக கமிஷன் கொடுப்பதாக வசூல் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
முன்னாள் மாநில நிர்வாகிகள் சிலரும் இதை உறுதிப்படுத்துகின்றனர். பீஜே தலைவராக இருந்த போது இவற்றுக்கு கமிஷன் உண்டு என்று ஆன்லைன் நிகழ்ச்சியில் சொல்லி உள்ளார்.
மேலும் முதியோர் இல்லங்களுக்கு செய்யப்படும் வசூலுக்கும் வழக்கமான கமிஷன் வழங்கப்படுகிறதா? இல்லையா?
இதற்காக கமிஷன் கொடுப்பதாக வசூல் பிரதிநிதிகள் கூறுகின்றனர். முன்னாள் மாநில நிர்வாகிகள் சிலரும் இதை உறுதிப்படுத்துகின்றனர். பீஜே தலைவராக இருந்த போது இவற்றுக்கு கமிஷன் உண்டு என்று ஆன்லைன் நிகழ்ச்சியில் சொல்லி உள்ளார்.
மேலும் தாவா செண்டருக்காக வசூல் செய்யப்படுவதற்கும் கமிஷன் உண்டா இல்லையா?
இதற்காக கமிஷன் கொடுப்பதாக வசூல் பிரதிநிதிகள் கூறுகின்றனர். முன்னாள் மாநில நிர்வாகிகள் சிலரும் இதை உறுதிப்படுத்துகின்றனர். பீஜே தலைவராக இருந்த போது இவற்றுக்கு கமிஷன் உண்டு என்று ஆன்லைன் நிகழ்ச்சியில் சொல்லி உள்ளார்.
தலைமைக்கு தொடர்ச்சியாக சந்தா வழங்குவோரிடமிருந்து வசூலிக்கும் தொகைக்கு அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி உள்ளிட்டவர்கள் கமிஷன் பெறுகிறார்களா? இல்லையா?
ரஹ்மதுல்லா காஞ்சி சில மாவட்டங்களுடன் சேர்ந்து வசூல் செய்த போது மேற்கண்டவைகளைப் பிரித்து கமிஷன் வாங்காமல் இருக்கவில்லை. மொத்தமாக வசூலாகும் தொகையில் கமிஷன் வாங்கி உள்ளார்.
உழைப்புக்கான ஊதியம் என்ற அடிப்படையில் கமிஷன் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட
்து தான். அதன்படி வாங்கினேன் என்று சொல்லாமல் பொய்யைச் சொல்லி தன்னை உத்தமானாக ஏன் காட்ட வேண்டும்? ஐந்து பைஸா கூட கமிஷன் இல்லை எறு அப்பட்டமாக ஏன் பொய் கூற வேண்டும்?
மேற்கண்டவற்றுக்கு கமிஷன் உண்டு என்பதை பின்னர் நமது கிளை நிர்வாகிகள் அறியும் போது அவர்களின் நம்பிக்கை சிதைந்து போகாதா?
இது மக்களுக்கு நாளை தெரிய வரும் போது கமிஷன் வாங்கிக் கொண்டே இல்லை என்று மறுக்கும் கூட்டம் என்று மக்கள் நினைத்தால் நிதிகளை அளிப்பார்களா?
துணிந்து ஜமாஅத் செயல்பாடு குறித்து பொய்த் தகவலைப் பரப்பிய ரஹ்மதுல்லா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் அவர் கூறியது பொய் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரவே இம்மடலை அனுப்புகிறேன்.
சையித் இப்ராஹீம் உண்மையை மறைத்தார். ஆனால் இவரோ ஜமாஅத் செய்யும் உண்மைக்கு மாறாக பொய்யைப் பரப்பி நம்பிக்கையைச் சிதைத்தார்.
எனவே அனைவருக்கும் சம்நீதி என்பதைக் கடைப்பிடிக்கும் ஜமாஅத் என்ற நம்பிக்கையில் இதை அனுப்புகிறேன்.
ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த மெயிலை அல்தாபி, ஹாஜா நூஹ், மற்றும் பலருக்கும் நான் அனுப்பினால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு.
மேலும் இவற்றுக்கு கமிஷன் உண்டு என்று சொன்னவர்களின் உரையாடல் வாக்கு மூலங்களும் அனுப்பப்படும்.
அந்த நிலையை உயர்நிலைக் குழு ஏற்படுத்தாது என்று பெரிதும் நம்புகிறேன்.
நான் நேரில் வந்து நிரூபிக்க வேண்டும் என்று விரும்பினால் ஜமாஅத்தின் வசூல் கணக்குகளை எனக்கு காட்டினால் அதில் இருந்து கமிஷன் கொடுக்கப்பட்டதை நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் இது வெளிப்படையான உண்மை என்பதால் அது தேவைப்படாது என்று கருதுகிறேன்.
ரஹ்மத்துல்லா தனது முகநூலில் போட்டதற்கு அவரது முகநூலே ஆதாரம் என்பதால் தனியாக இதை நிரூபிக்கும் அவசியம் இல்லை கருதுகிறேன்.
அன்புடன்
இப்ராமூசா
(நல்ல தம்பி)
சுருக்கமாக
முதியோர் இல்லம்,
சிறுவர் இல்லம்,
தஃவா செண்டர்,
ஆகியவைகளுக்கு வசூலிக்கும் தொகையிலும் கமிஷன் கொடுக்கப்படுகிறது.
ரஹ்மதுல்லாவும் மேற்கண்ட வசூலில் கமிஷன் பெற்றுள்ளார்.
இது உண்மை இல்லை என்றால் பொதுக்குழுவில் மேற்கண்ட வகைக்கு வசூலான தொகைக்கு கமிஷன் கொடுக்கப்படவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.
அல்லது ஜமாஅதுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி நம்பிக்கையைச் சீர்குலைத்த கோவை ரஹ்மதுல்லா மீது நடவடிக்க எடுக்க வேண்டும்.
பொதுக்குழுவில் இது பற்றி உறுப்பினர்கள் நியாயம் கேட்கவே இதை அனுப்புகிறேன்.

முந்தைய கடிதங்களைக் காண http://fazlulilahi.blogspot.com/

No comments: