Tuesday, July 18, 2006

இதைச் செய்தவன் முஸ்லிமா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 18-07-2006
ரிபாஈ அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை யார் ஈடு செய்வார்கள்?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அல்லாஹ்வையோ ரசூலையோ ஈமான் (நம்பிக்கை) கொள்ளாத யாரோ ஒருவன் இஸ்லாத்தை விமர்சிக்கிறான். அப்படிப்பட்டவன் அவனது கூற்றுக்கு ஆதாரமாக நம்முடைய எழுத்தையும் எடுத்துக் கொண்டான். இதையொட்டி கண்ணியத்திற்குரிய சகோதரர்களில் சிலர் வருத்தப்பட்டு கடிதம் எழுதி இருந்தனர். அல்லாஹ்வை நம்புகிறோம். அவனது தூதரை நம்புகிறோம். என்று சொன்னால் போதுமா? அல்லாஹ்வும் அவனது தூதருமா இந்த மாதிரி அநியாயம் செய்யச் சொன்னார்கள்.

இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அநியாயமாக பொய் சொல்பவனுக்கும் அநியாயமாக பொய் சாட்சி சொல்லுபவனுக்கும் பெயர்தான் முஸ்லிமா? சமாதானம் செய்து வைக்கும் நல்ல நோக்கிலோ, நிர்ப்பந்தத்திலோ பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது. அந்த பொய் அநியாயமானதாக பிறரை பாதிக்கும்படியானதாக இருக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அல்லாஹ் ரசூல் பற்றி எழுதாமல் இருக்க முடியாது.

நேசகுமார் என்பவன் அல்லாஹ்வையும் ரசூலையும் தீவிரவாதிகள் போல் கிண்டல் செய்து மண்டை ஓடுகளுடன் கார்டூன் போட்டிருந்தான். அது பற்றி கடந்த மாதம் எல்லாருக்கும் மெயில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும்படி எழுதி இருந்தோம். ரசிகவ் ஞானியார் என்ற ஒருவரைத் தவிர வேறு யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை. அவன் கார்டூன் போடுகிறான் என்பதற்காக அல்லாஹ் ரசூல் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அது போல இந்த மாதிரி தீவைத்து தெரியும் தீவட்டி தடியன்களை, குட்டி ஷய்த்தாகளை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாமல் இருக்க முடியாது.

நல்ல புத்தி வர துஆச் செய்வோம்.

நேசகுமார் என்பவனுக்கு http://kirukku.blogspot.com/2005_05_01_kirukku_archive.html என்ற நிறைய கேள்விகளும் விமர்சனங்களும் உள்ளன. அதற்கு பதில் சொல்லாமல் இஸ்லாத்தின் மீது அவன் புழுதி வாரி வீசுகிறான். ஆதமுடைய மக்களில் அவனும் ஒருவன் என்ற முறையில் அவனுக்கு நல்ல புத்தி வர துஆச் செய்வோம்.

முதல்வராக பணியாற்றிய போது அவர் வாழ்வில் சோதனை வந்தது.

சமீபத்தில் த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்கள் வீட்டில் தீ வைக்கப்பட்ட செய்தியை நமது என்ற http://mdfazlulilahi.blogspot.com/ பிளாக்கில் வெளியிட்டிருந்தோம். பத்திரிக்கையில் வந்துள்ள அவர் குடியிருக்கும் வீட்டின் போட்டோவையும் த.மு.மு.க. மாநில செயலாளர் என்ற பொறுப்பையும் வைத்துக் கொண்டுதான் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களின் பொருளாதாரத்தை பற்றி பொது மக்கள் பெரிதாக கணக்கிட்டுள்ளார்கள். ரிபாஈ அவர்களின் உண்மையான பொருளாதார நிலை என்ன? என்பது யாருக்கும் தெரியாது. காரைக்கால் அரபிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது அவர் வாழ்வில் சோதனை வந்தது.

மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எவனோ ஒரு அயோக்கியனின் தூண்டுதலில் யாரோ ஒருவர் பார்சல் குண்டுகள் அனுப்பினார். அதில் அநியாயமாக கைது செய்யப்பட்டவர் காரைக்கால் அரபிக் கல்லூரியில் முதல்வராக இருந்த மவுலவி ஜே.எஸ். ரிபாஈ. 06-09-1995 புதனன்று கைது செய்யப்பட்டவர் 90 நாட்களுக்குப் பிறகு நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நாகை கோர்ட் ஜாமீன் கொடுத்த மறு நிமிடமே நாகப்பட்டிணம் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இன்று வரை அந்த வழக்கு முடியவில்லை.

90 நாட்களுக்குப் பிறகு விடுதலை கனவோடு இருந்தவருக்கு மீண்டும் சிறைவாசம் அழைத்துக் கொண்டது. இதை ஒவ்வொருவரும் இந்த நிலைக்கு நாம் ஆகி இருந்தால் நமது மன நிலை எப்படி இருக்கும்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த கஷ;டமும் நஷ;டமும் தெரியும். உள்ளம் கனத்து கண்கள் குளமாவது புரியும். இறையருளால் அடுத்த 90 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார். ஆக 180 நாட்கள் சிறையிலிருந்தார். இன்று வரை அந்த வழக்கு முடியவில்லை.
மகான் பி.ஜே. த.மு.மு.க. மீது புழுதி வாரி வீசி விட்டு வெளியாறினார்.

இந்தச் செயலை எந்த தெரு நாய் தூண்டி விட்டதோ, அந்த தெரு நாய் மாடியில் உல்லாச வாழ்வு வாழ்கிறது. சம்பந்மில்லாத அப்பாவி ரிபாஈ 11 வருடங்களாக நெல்லை – நாகை, நெல்லை- சென்னை என கோர்ட்டுகளுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இதனால் வேலை வாய்ப்பை இழந்தார். வேலை வாய்ப்பை இழந்த அவருக்கு அவரது சகோதரர்கள்தான் உதவியாக இருந்து வருகிறார்கள். அவரது பொருளாதாரத்துக்காக ஒரு கடை வைத்துக் கொடுத்தார்கள். அது நன்றாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மகான் பி.ஜே. த.மு.மு.க. மீது புழுதி வாரி வீசி விட்டு வெளியாறினார்.

நடத்த முடியாமல் மூடி விட்டார்கள்.

அவரது பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் பணியில் த.மு.மு.க. மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் முழுமையாக ஈடு பட்டார்கள். அப்போது மாநில துணை பொதுச் செயலாளராக இருந்த ரிபாஈ அவர்களும் தன்னை பிரச்சாரப் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் அவரது கடையை அவரால் சரியாக கவனிக்க முடிந்ததில்லை. இழப்பு ஏற்பட்டு தொடர்ந்து நடத்த முடியாமல் மூடி விட்டார்கள்.

ஏற்பட்டுள்ள இழப்பை ரிபாஈதான் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.

பத்திரிக்கையில் வந்துள்ள ரிபாஈ குடியிருக்கும் வீட்டின் போட்டோவை பார்த்து விட்டு ரிபாஈ அவர்களின் பொருளாதாரத்தை பலர் பலமானதாக எடை போட்டுள்ளனர். அது ரிபாஈ அவர்களின் சொந்த வீடு கிடையாது. ரிபாஈ அவர்களுக்கு சொந்தமாக வீடும் கிடையாது. குடும்பத்துடன் வெளிநாட்டிலிருக்கும் அவரது தம்பியின் வீட்டில்தான் ரிபாஈ குடி இருக்கிறார். சமூக விரோதிகள் தீ வைத்ததால் எரிந்து போன மோட்டார் பைக்கும் சைக்கிளும் ரிபாஈ அவர்களின் தம்பிக்கு சொந்தமானதுதான். இந்த சம்பவத்தால் ரிபாஈ அவர்களின் தம்பிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ரிபாஈதான் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது எவ்வளவு பெரிய பாதிப்பு. ரிபாஈ அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை யார் ஈடு செய்வார்கள். இந்த நிகழ்வின் நோக்கம் என்ன. ஒருவனின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தினால் அவன் பொது வாழ்விலிருந்து ஒதுங்கி விடுவான். இது ஷய்த்தான்களின் தலைவன் அடிக்கடி சொல்லும் தத்துவம். இந்த நோக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மீண்டும் மீண்டும் நினைத்துப் பாருங்கள்.

எந்த நோக்கத்தில் நடந்தாலும் இதைச் செய்தவன் முஸ்லிமா? முஸ்லிம் பெயர் தாங்கியா? என்பதை பிறகு பார்ப்போம். இவன்களையெல்லாம் மனித இனத்தில் சேர்க்க முடியுமா? மாற்றுக் கருத்து இருந்தால் நேருக்கு நேர் பேசாமல் இந்த மாதிரி அயோக்கியத்தனம் செய்யும் தெரு நாய்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டக் கூடாதா? மவுலவி ரிபாயிக்கு ஏற்பட்டுள்ள நிலைக்கு நாம் ஆகி இருந்தால் நமது மன நிலை எப்படி இருக்கும்? இதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பாருங்கள். எனவே இந்த மாதிரி ஈனத்தனமான வேலைகளை செய்து திரியும் பொறுக்கித் தெரு நாய்களை நான் தனித்து நின்றாலும் அடையாளம் காட்டாமல் விட மாட்டேன். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

No comments: