Tuesday, August 01, 2006

ஜாதி, மத, பேதமற்ற நீதியான ஆட்சியை நம்மால்தான் தர முடியும்.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 01-08-2006

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு வந்ததும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தும் வழக்கம் வந்து விட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள். முஸ்லிம்களுக்கு பங்கு உண்டு என்ற இந்த தலைப்பு உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான இந்த தலைப்பில் முஸ்லிம்கள் பேசுவதுடன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்டும் முஸ்லிம்கள் பேச வைக்கிறார்கள். மீலாது மேடைகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறார்கள் அல்லவா. அது போல் இந்த மேடையிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பேசுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக நம்பும்படியாக பேசி விட்டுச் செல்கிறார்கள்.

நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும்.

வரலாறு தெரியாத முஸ்லிம்களும் வரலாற்றை மறந்து விட்ட முஸ்லிம்களும் வராலற்றை மறைத்திடும் இந்த பேச்சாளர்கள் பற்றி, எவ்வளவு பெரிய உண்மையை சொல்லி விட்டார் என நம்பி விடுகிறார்கள். அதனால் ஆஹா என்ன அருமையான பேச்சு என்று பேசியவர்களை முஸ்லிம்களின் நண்பன் என புகழ ஆரம்பித்து விடுகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு(தான்) வகித்தார்கள் என்று சொல்வது தவறு. இதை ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்களை கொண்டு ஆய்வு செய்துதான் தெரிய வேண்டும் என்பதில்லை. அப்படி ஆய்வு செய்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள் எப்படி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் விளங்க முடியும். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்று சொல்வது சரி அல்ல. இதை விளக்க பாமரர்களும் நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும். முதலில் உதாரணத்தின் மூலம் விளங்குவோம்.

எந்த மடையனாவது ஏற்றுக் கொள்வானா? இந்திய முஸ்லிம்கள் ஏற்று இருக்கிறார்கள்.

இரு நூறு கிலோ எடையுள்ள ஒரு பொருளை ஒருவர் தூக்குகிறார். அவர் தூக்கும்பொழுது இரண்டு பேர் வந்து அவருக்கு உதவி செய்கிறார்கள். இப்பொழுது பொருளை தூக்கியவரை இரு நூறு கிலோ தூக்கியவர் என்றும் உதவி செய்தவர்களை அவர் தூக்க இவர்கள் உதவி பங்களிப்பு செய்தார்கள் என்றும் சொல்வோம். யாராவது வந்து உதவி செய்தவர்களை இரு நூறு கிலோ தூக்கியவர்கள் என்றும் இரு நூறு கிலோ தூக்கியவரை பங்களிப்பு செய்தவர் என்றும் சொன்னால் எந்த மடையனாவது ஏற்றுக் கொள்வானா? இந்திய முஸ்லிம்கள் ஏற்று இருக்கிறார்கள். இன்னொரு உதாரணத்தின் மூலமும் விளங்குவோம்.

பொருளுக்குரியவர்கள் செய்த உயிர் தியாகத்தால்.

ஒரு சமுதாயத்தாரிடம் பொருள் ஒன்று இருக்கிறது. அந்த பொருளின் உரிமையாளர்களான அந்த சமதாயத்தவர்கள் அசால்ட்டாக இருக்கும்பொழுது கொள்ளைக் கூட்டம் வந்து அந்த பொருளை அபகரித்து விடுகிறது. பொருளை பறி கொடுத்தவர்கள் அதை மீட்பதற்காக உடனே போராட்டத்தில் குதிக்கிறார்கள். செத்தாலும் பரவாயில்லை தங்கள் பொருளை மீட்டே ஆக வேண்டும் என உயிரையே பணயம் வைத்து சண்டை போடுகிறார்கள். அப்பொழுது இன்னும் சில சமுதாயத்தவர்களும் வந்து சேர்ந்து உதவி செய்கிறார்கள். கொள்ளையடித்தவர்களோ பொருளுக்குரியவர்களை கொன்று விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். பொருளை தங்களுக்குரியதாக ஆக்கி விடலாம் என பொருளுக்குரியவர்களை அழித்தொளிப்பதிலேய குறியாக இருக்கிறார்கள். அதனால் பொருளுக்குரியவர்களே குறி வைத்து அதிகமாக கொல்லப்பட்டார்கள். பொருளுக்குரியவர்கள் செய்த உயிர் தியாகத்தால்; கொள்ளையர்களிடமிருந்து பொருள் மீட்கப்படுகிறது.

உங்களுக்கும் பங்கு உண்டு என பாராட்டுகிறோம்.

மீட்கப்பட்ட பின் பொருளை என்ன செய்ய வேண்டும். அந்த பொருள் எந்த சமுதாயத்திற்குரியதோ அந்த சமுதாயத்தவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். என்ன நடந்தது. உரியவர்களிடம் கொடுக்கவில்லை. என்ன செய்தார்கள். பொருளுக்குரியவர்களிடம்; சொல்கிறார்கள். இந்த பொருளை மீட்க நாங்கள் அனைவரும் போராடினோம். நீங்களும் எங்களுடன் வந்து சேர்ந்து உதவி செய்து உங்கள் பங்களிப்பை செலுத்தினீர்கள். உயிர்த் தியாகம் செய்தீர்கள். நீங்களும் உங்கள் பங்களிப்பை செலுத்தி உயிர்த் தியாகம் செய்ததால் பாராட்டுகிறோம். எப்படி பாராட்டுகிறோம்? இந்த பொருளை மீட்டதில் உங்களுக்கும் பங்கு உண்டு என பாராட்டுகிறோம் என்றார்கள்.

இவர்கள் யார்? என்கிறீர்களா? இவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

பாராட்டி விட்டு பொருளை மற்றவர்கள் வைத்துக் கொண்டார்கள். நன்றாக கவனிக்க வேண்டும். இந்த பொருளில் உங்களுக்கும் பங்கு உண்டு என்று கூட சொல்லவில்லை. பொருளுக்குரியவர்கள் இது எங்கள் பொருள் என்று உரிமை கோரவுமில்லை. பொருளுக்குரியவர்களும் என்ன செய்தார்கள். ஆம் அந்த பொருளை மீட்டதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று பெருமையாகக் கூற ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் பொருள் என்பதையே மறந்து விட்டார்கள். இவர்களைப் பற்றி என்ன சொல்வீர்கள். இவர்கள் யார்? என்கிறீர்களா? இவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

முஸ்லிம்களே மறந்து விட்டார்கள்.

குட்டி குட்டி சமஸ்தானங்களாக இருந்தவற்றை இணைத்து ஹிந்துஸ்த்தான் என்ற பெரிய நாட்டை உருவாக்கியவர்களே முஸ்லிம்கள்தான். இதை முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். அரபி, உருது, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஹ என்ற அரபி உச்சரிப்புக்கு நிகரான எழுத்து உண்டு. தமிழ் போன்ற மொழிகளில் ஹ என்ற அரபி உச்சரிப்புக்கு நிகரான எழுத்து இல்லை. எனவே தமிழ் போன்ற மொழி பேசுபவர்கள் இந்து என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் இந்தியா என யூகித்து விளங்கி உள்ளார்கள். இந்தியா என்று தமிழில் எழுதப்படும் நம் நாட்டுக்கு அல்-ஹிந்த், ஹிந்துஸ்தான் என பெயர் வைத்தவர்களே முஸ்லிம்கள்தான். இந்த உண்மையை முஸ்லிம்களே மறந்து விட்டார்கள்.

சமுதாய தலைவர்கள் என்போர் அப்படி ஆக்கி விட்டார்கள்.

800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்கள் நாம் என்று பேசுவார்கள். ஆகவே இந்தியாவை ஆளும் உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உண்டு என்று பேச மாட்டார்கள். ஆகவே இந்தியாவில் வாழ முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்றுதான் பேசுவார்கள். இந்தியாவே முஸ்லிம்களுக்கு உரியதுதான் என்று பேசத் தெரியாதவர்களாக ஆகி விட்டார்கள். சமுதாய தலைவர்கள் என்போர் அப்படி ஆக்கி விட்டார்கள். இந்தியாவில் வாழ முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்பது தவறு. இந்தியாவே முஸ்லிம்களுக்கு உரியது என்பதே சரி.

இன உணர்வை தூண்டி குளிர் காய்ந்து வரும் கூட்டத்தின் மூதாதையர்கள்.

இந்தியா என்ற நாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபொழுதுதான் வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அபகரித்தார்கள். இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள்தான், ஆட்சியை ஆங்கிலேயனிடம் பறி கொடுத்த முஸ்லிம்கள்தான் இழந்த நாட்டை மீட்க, இழந்த ஆட்சியை பிடிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக களம் கண்டார்கள். மற்றவர்கள் குறிப்பாக இன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இன உணர்வை தூண்டி குளிர் காய்ந்து வரும் கூட்டத்தின் மூதாதையர்கள் ஆங்கிலேயனிடம் கிடைத்த பதவிகளை பெற்று சொகுசு வாழ்வு வாழ்ந்தார்கள்.

இதைத்தான் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறோம்.

இந்தியாவை மீட்க இழந்த ஆட்சியை பெற போராடி வந்த முஸ்லிம்களுடன் மற்றவர்களும் சேர்ந்தார்கள். நாட்டை இழந்த முஸ்லிம்கள் நாட்டை மீட்க போராடினார்கள். ஆட்சியை இழந்த முஸ்லிம்கள் ஆட்சியை திரும்ப பெற போராடினார்கள். இதைத்தான் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள். சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்கள். இந்தியாவே முஸ்லிம்களுக்குரியது. இதை எல்லாரும் மறந்து விட்டோம்.

ஜமாஅத் என்ற வார்த்தைக்கு பகராமாக வைக்கப்பட்டதுதான்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற போராட்டத்துக்கு காலப் போக்கில் அமைப்பு துவங்கினார்கள். சுதந்திர போராட்டுத்துக்காக 1885இல் துவங்கப்பட்ட அமைப்பு காங்கிரஸ். காங்கிரஸ் என்ற பெயர் வைக்க காரணம் என்ன? காங்கிரஸ் என்றால் என்ன? இதையும் முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். முஸ்லிம்கள் ஒன்று கூடினால் அதற்கு சொல்லப்படும் வார்த்தை ஜமாஅத். இந்த ஜமாஅத் என்ற பொருள் தரும் வார்த்தைதான் காங்கிரஸ் என்பது. காங்கிரஸ் என்ற பெயரே ஜமாஅத் என்ற வார்த்தைக்கு பகராமாக வைக்கப்பட்டதுதான்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விட்டது.

இந்த ஜமாஅத்தே (காங்கிரஸ் கட்சியே) முஸ்லிம்களுக்கு சொந்தமானதுதான். காலப் போக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை (ஜமாஅத்தை) விட்டு முஸ்லிம்களின் தலைவர்களாக அன்று கருதப்பட்டவர்கள் வெளியேறினார்கள். அதாவது ஜமாஅத்தை (காங்கிரஸ் பேரியக்கத்தை) விட்டு பிரிந்தார்கள். இந்த பிரிவினையால் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்த காங்கிரஸ் பேரியக்கத்தை (ஜமாஅத்தை) முஸ்லிம்கள் இழந்தார்கள். அதனால் அந்த பேரியக்கம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விட்டது.

முஸ்லிம் லீக் என்ற அமைப்பை- ஜமாஅத்தை துவங்கினார்கள்.

இது போன்ற உண்மைகளைச் சொல்லும்போது கசக்கும். யார் சொன்னாலும், யாருக்கு சொன்னாலும் உண்மையைச் சொன்னால் அது கசக்கும். அதனால்தான் ''உண்மை அது கசப்பாயினும் சொல்லி விடு'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிரிந்து விடாதீர்கள் என்று திரு குர்ஆனில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பிரிந்து விடாதீர்கள் என்று யாரைப் பார்த்து சொல்லப்பட்டிருக்கிறது. அழகிய உபதேசமாகவும் கட்டளைகளாகவும் முஸ்லிம்களை நோக்கித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த முஸ்லிம் தலைவர்கள்தான் பிரிந்தார்கள். பிரிந்த முஸ்லிம் தலைவர்கள் சார்பில் சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம் லீக் என்ற அமைப்பை- ஜமாஅத்தை துவங்கினார்கள்.

முஸ்லிம் லீக்கை ஒளித்தாக வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

இந்த முஸ்லிம் லீக் என்பதில் உள்ள லீக் என்பதும் ஜமாஅத் என்ற பொருள் தரக் கூடியதுதான். முஸ்லிம் ஜமாஅத் என்பதையே மற்றவர்களும் புரியும் வண்ணம் முஸ்லிம் லீக் என பெயரிடப்பட்டது. நாம் அடிக்கடி சொல்வோம் இந்தியா என்ற நாடு இருக்கும் வரை இ.யூ. முஸ்லிம் லீக் என்ற அமைப்பு இருந்தாக வேண்டும் என்று. காரணம் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட முஸ்லிம்களின் கட்சி காங்கிரஸ். அது முஸ்லிம்களுக்கு சொந்தமில்லை என்பது போல் ஆகி விட்டது. எனவே சுதந்திரத்துக்காக பாடுபட்ட கட்சி என்று முஸ்லிம்கள் சார்பில் சொல்லிக் கொள்ள முஸ்லிம் லீக் இருந்தாக வேண்டும் என்று. இதனால்தான் சங்பரிவார்கள் இந்திய சுதந்திரத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வதற்கு தடையாக உள்ள முஸ்லிம் லீக்கை ஒளித்தாக வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் முஸ்லிம் என்ற பெயருடன் தேர்தலில் போட்டியிட.

அது மட்டுமல்ல சுதந்திரத்திற்குப் பிறகு தோன்றிய ஜாதி, மத பெயரில் உள்ள கட்சிகளை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளாக அங்கீகரிக்க இந்திய சட்டத்தில் தடை உள்ளது. அதனால்தான் ராமதாஸ், கிருஷ;ணசாமி, திருமாவளவன் போன்றவர்கள் துவங்கிய ஜாதி சங்கங்களின் பெயர்களை விட்டு விட்டு வேறு பெயரில் கட்சி கண்டார்கள். சுதந்திரத்திற்கு முன்பு தோன்றிய கட்சி என்பதால் முஸ்லிம் லீக் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் முஸ்லிம் என்ற பெயருடன் தேர்தலில் போட்டியிட முஸ்லிம் லீக் என்ற கட்சியால் மட்டுமே முடியும்.

முஸ்லிம் லீக்குக்கு தலைவர்களாக வருபவர்கள் செயல்பட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனாலும்தான் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் முஸ்லிம் லீக்கை ஒளிப்பதில் குறியாக இருக்கிறார்கள். நீங்கள் என்ன முஸ்லிம் லீக்கை ஒளிப்பது. முஸ்லிம் லீக்கை நாங்களே ஒளித்துக்கட்டி விடுவோம். குற்றுயிரும் குறை உயிராகவும் கூட விட மாட்டோம். அதற்கு ரூஹு (உயிர்) போகும் வரை இருந்து அதை முழுமையாக மவ்த்தாக்கி விட்டும் ஒதுங்க மாட்டோம். கபுருக்குளியில் வைத்து மண்ணைப் போட்டு மூடி சமாதி கட்டி விட்டுத்தான் ஒதுங்குவோம். இப்படித்தான் முஸ்லிம் லீக்குக்கு தலைவர்களாக வருபவர்கள் செயல்பட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி நளினமாக எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை.

த.மு.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த முஸ்லிம் லீக்கின் கண்ணியத்திற்குரிய தலைவர்களின் பல்வேறு தவறான போக்குகளை பலர் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். 2001 சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். 14-04-2001 அன்று அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் பக்கம் 78 இல் 'தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லிம்கள்' என்ற தலைப்பில் ஒரு வாசகம் இடம் பெற்றது. அது ''தலித் கிறிஸ்தவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இணையாக ஆக்கிட மத்திய அரசை வலியுறுத்தும். தலித் கிறிஸ்தவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர் குழுவின் ஆய்வுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்பதாகும். இந்த அறிக்கை வந்ததும் த.மு.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலித் முஸ்லிம்கள் யோசனையை இவர்தான் சொல்லி இருப்பார் போலும்.

1999 வாழ்வுரிமை மாநாடு முதல் அ.தி.மு.க.வுக்கு த.மு.மு.க. வழங்கி வந்த ஆதரவை 2001 தேர்தலில் ரத்து செய்தது. அதற்கு காரணம். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற தலித் முஸ்லிம்கள் என்ற வாசகமும்தான். ஆனால் அப்பொழுது அ.தி.மு.க.விடம் ஒரே ஒரு சீட்டு பெற்ற முனீருல் மில்லத் காதர் மைதீன் அவர்களுக்கு அந்த ஒரு சீட்டுதான் பெரிதாக தெரிந்தது போலும். அதனால் முனீருல் மில்லத் காதர் மைதீன் அதற்கு சால்ஜாப்பு கூறி சீட்டை மட்டும் வாங்கிக் கொண்டார். ,d;ndhU காரணம் அவரே இந்த கொள்கையில்தான் இருந்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவுக்கே இந்த தலித் முஸ்லிம்கள் யோசனையை இவர்தான் சொல்லி இருப்பார் போலும்.

அவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை.

அன்று முனீருல் மில்லத் காதர் மைதீன் சொன்ன சால்ஜாப் என்ன? ''கிறிஸ்தவ மதத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கோருவதால் அதே வகையில் முஸ்லிம்களுக்கும் உரிமைகள் வழங்க எண்ணி அறிக்கையை எழுதியவர், ஆர்வக் கோளாறு காரணமாக இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது. தேர்தல் அறிக்கையில் வருவதெல்லாம் அரசாங்க சட்டமா என்ன? ஆட்சிக்கு வந்த பின் இந்த பிரச்சனை பற்றி விவாதிக்கையில் எங்கள் நிலையை தெரிவிப்போம்'' என்றார்.

இஸ்லாமிய விரோத கொள்கையை ஜெயலலிதா மூலம் சொல்ல வைத்துள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னால் எங்கள் நிலையை தெரிவிப்போம் என்றார் முனீருல் மில்லத். 5 வருடங்களுக்கு பின்னால் தங்கள் நிலையை தெரிவித்துள்ளார் முனீருல் மில்லத். 5 வருடங்களுக்கு முன்னால் இஸ்லாமிய விரோத கொள்கையை ஜெயலலிதா மூலம் சொல்ல வைத்துள்ளார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுதான் முஸ்லிம் லீக் கட்சியின் தீர்மானமாக இப்பொழுது வந்த அறிக்கையாக இருக்கிறது. ''அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எழுதியவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது' என்று அன்று சொன்ன முனீருல் மில்லத் காதர் மைதீன் அவர்களுக்கும் சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது என்றுதான் நாமும் கூற வேண்டி உள்ளது. இதை விட நளினமான எழுத எனக்குத் தெரியவில்லை.

இஸ்லாமிய (யிஸத்திற்கு) கொள்கைக்கு எதிராகத் தோன்றியவைதான்.

இந்த முஸ்லிம் லீக் தலைவர்களின் பல்வேறு தவறான போக்குகளால், குறிப்பாக இஸ்லாமிய விரோத போக்கால் முஸ்லிம்களிடம் பல வகையான இஸ்லாமிய விரோத கொள்கைகள் ஊடுறுவி விட்டன. முஸ்லிம்கள் தங்களுக்கு தாங்களே கொள்கைகளை வகுத்துக் கொள்ள முடியாது. குர்ஆன் ஹதீஸ்கள் மூலம் இஸ்லாம் கூறியுள்ள கொள்கைகளைத்தான் முஸ்லிம்கள் தங்கள் கொள்கைகளாக ஏற்று கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அதற்கு பெயர்தான் முஸ்லிம். சோசலிஸம், கேப்டலிஸம், கம்யூனிஸம் என இன்று உலகில் உள்ள அனைத்து இஸங்களும் (கொள்கைகளும்) இஸ்லாமிய (யிஸத்திற்கு) கொள்கைக்கு எதிராகத் தோன்றியவைதான்.

தலைவர்கள்தான் தவறாக பயன்படுத்தி விட்டார்கள்.

சமுதாய அமைப்புகளில் குறிப்பாக முஸ்லிம் லீக் தலைவர்களாக பிரச்சார பீரங்கிகளாக அறிமுகம் ஆனவர்கள் செய்த செய்து கொண்டிருக்கிற தவறான செயல்களால் இஸ்லாம் வகுத்தளித்த வழியை (இஸ்லாமியயிஸத்தை) விட்டு வேறு வழியில் முஸ்லிம்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் வகுத்தளித்த கொள்கையை விட்டு வேறு கொள்கைக்கு போகிறோம் என்று சொல்லவில்லை. இஸ்லாம் வகுத்தளித்த கொள்கைக்கு விரோதமாக போக வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு அணுவளவும் கிடையாது. இஸ்லாம் காட்டிய வழியை தலைவர்கள் தவறாக பயன்படுத்தியதால் அந்த வழிவே தவறு என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். எனவே அவர்களது திட்டத்தில் இஸ்லாமிய விரோத கொள்கை புகுந்து விட்டது. இஸ்லாம் காட்டிய வழி சரியானது. தலைவர்கள்தான் தவறாக பயன்படுத்தி விட்டார்கள். தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ கொள்கையை செயல்படுத்தும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டார்கள்.

இந்த இஸ்லாமிய விரோத தலைவர்களைத்தான் சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். ''ஜிஹாதுகளில் மிகச் சிறந்தது. அக்கிரமக்கார அரசனின் முன்னால் உண்மையை எடுத்துச் சொல்வது'' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இதை நமது சகோதரர்கள் சிந்திக்க தவறி விட்டார்கள். அதன் விளைவு இஸ்லாத்திற்கு எதிரான கம்யூனிஸ கொள்கையை செயல்படுத்தும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டார்கள்.

இந்த பாவமெல்லாம் நிச்சயமாக --- தலைவர்களையே சாரும்.

இஸ்லாம் முஸ்லிம்(ஜமாஅத்தார்)களுக்கு இட்டுள்ள கட்டளை தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். தலைமைக்கு இட்டுள்ள கட்டளை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். கலந்தாலோசித்து முடிவு எடுத்து விட்டால் அல்லாஹ்வின் மீது தவக்கல் (எனும் அசைக்க முடியாத நம்பிக்கை) வைத்து எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மஷ{ரா சம்பந்தமான 3:159 வசனத்தைக் காட்டி கலந்தாலோசித்தல் என்பதை வெறும் நாடகமாக சில தலைவர்கள் ஆக்கி விட்டார்கள். அதனால் தலைமைக்கு கட்டுப்படுதல், தலைமைக்கு முடிவு எடுக்கும் உரிமை என்பதெல்லாம் வேண்டாம். கம்யூனிஸ்டுகள் மாதிரி பொலிட் பீரோ முறையை பின் பற்றுவோம் என்ற முடிவுக்கு சில சகோதரர்கள் சென்று விட்டார்கள். இந்த பாவமெல்லாம் நிச்சயமாக - - - தலைவர்களையே சாரும்.

இந்தியாவை பாகிஸ்தான், பங்ளாதேஸ் என பிரித்தாள வேண்டும் என்று போராடவில்லை.

இந்த மாதிரி தலைவர்களை, இஸ்லாமிய விரோத தலைவர்களை அவர்களது சமுதாய துரோகச் செயல்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாமல் இருக்கக் கூடாது. அப்படி இருப்பதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் செய்யும் துரோகம்தான். இந்த மாதிரி தலைவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாததால்தான் முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்தியா என்ற பெரிய நாட்டையே இழந்து இருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தின் போது போராடியவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் அனைத்து மக்களின் நலனுக்காகவும்தான் போராடினார்கள். இந்தியாவை பாகிஸ்தான், பங்ளாதேஸ் என பிரித்தாள வேண்டும் என்று போராடவில்லை. தேசப் பிரிவினைக்கு யார் காரணம்? என்பதை http://tmmk.blogspot.com/2006/07/blog-post_11.html என்ற இந்த சைட்டில் எழுதியுள்ளார்கள். இதை படித்து மூல காரணம் யார்? என அறியலாம்.

பாதிப்பு அடைந்தவர்கள் யார்? இலாபம் அடைந்தவர்கள் யார்?

அகில இந்திய காங்கிரஸ் மகா சபை - அகில இந்திய முஸ்லிம் லீக் - இங்கிலாந்து ஆங்கில அரசு ஆகிய முத்தரப்பு முழு மனதுடன் கூடிய முழுமையான உடன்பாட்டினூடே பாகிஸ்தான் உதயமாயிற்று. பண்டித ஜவஹர்லால் நேரு, காயிதே ஆஜம் முஹம்மது அலி ஜின்னாஹ், லார்டு மவுண்ட் பேட்டன் கையொப்பமிட்டு, களிப்போடு கைலாகு கொடுத்து இந்தியாவையும், பாகிஸ்தானையும் தனித்தனி இரு சுதந்திர நாடுகளாகப் பிரித்துக் கொண்டனர். இப்படி வரலாற்றில் எழுதப்பட்டிருக்கலாம். புனித ரமழான் பிறை 27 ஆம் நாள் புதிய நாடு பாகிஸ்தான் உருவானது. இப்படி பாகிஸ்தானியர்களாக ஆகி விட்டவர்கள் (முன்னாள் இந்தியர்கள்) பெருமைப்படலாம். இந்த பிரிவினைக்கு யார் காரணமாக இருந்தாலும் இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் யார்? இலாபம் அடைந்தவர்கள் யார்? சிந்திக்க வேண்டாமா?

தவறுகளை சுட்டிக் காட்டினால் இன உணர்வுதான் பிரதிபலிக்கிறது.

இந்திய சுதந்திரத்தின் போது கையெழுத்திடும் கட்சியாக இருந்த முஸ்லிம் லீக்கின் இன்றைய நிலை என்ன? வாங்கிய 3 தொகுதியில் ஒன்றை இழந்தார்கள். எஞ்சிய இரு தொகுதிகளின் வேட்பாளர்களைக் கூட முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வைத்து முஸ்லிம் லீக் வேட்பாளராக அறிவிக்கவில்லை. அறிவிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலைக்கு யார் காரணம்? இதை பரிதாப நிலை என்பதா? இழி நிலை என்பதா? சிந்தியுங்கள். பிரிக்கப்படாத இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பதை கற்பனை செய்து கூட பார்த்து இருக்க முடியுமா? சிந்தியுங்கள். பாகிஸ்தான் (பங்ளாதேஸ் என) பிரிக்கப்பட்டதால் ஆள வேண்டிய நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கஷ;மீர் பிரச்சனை வேறு. இன மாச்சர்யம் பார்ப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முட்டாள்தனமானவர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினால் இன உணர்வுதான் பிரதிபலிக்கிறது.

இழந்த உரிமை என்பது இந்தியாவின் ஆட்சி.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மனமுண்டு என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும் என்று உரைத்தவர்கள் நாம். பிறரது உரிமைகளை மதித்தவர்கள் நாம். உரிமைகளை வழங்கி வாழ்ந்தவர்கள் நாம். இன்று உரிமைகளை இழந்து நிற்கிறோம். இழந்த உரிமைகளை மீட்கவும் முடியாமல், இருக்கும் உரிமைகளை காக்கவும் முடியாமல் அலைகிறோம். இழந்த உரிமை என்பது இந்தியாவின் ஆட்சி. இதைக் கூட உணராமல் அலைகிறோம். இதற்கு யார் காரணம்?

கண் மூடி பின் பற்றியதால் ஏற்பட்ட கதி இது.

ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆலிம்கள் சொன்னார்கள். அந்த ஆலிம்கள் பின்னால் கண் மூடிப் போனதால் நமது கல்வி மண் மூடிப் போனது. நமது சமுதாயத்தவர்கள் அனைத்து துறைகளிலும் பின் தங்கிப் போனார்கள். இந்தியாவில்தான் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறுகிறோம். அரபு நாடுகளில் உயர் பதவிகளில் யார் இருக்கிறார்கள். குப்பை அள்ளும் வண்டியில் தொங்கிச் செல்பவர்களாக, சட்டிப் பானைகளை கழுபவர்களாக, சாக்கடையை அள்ளுபவர்களாக யார் இருக்கிறார்கள். இந்த கதி எதனால் ஏற்பட்டது. ஆங்கிலம் ஹராம் என்று சொன்ன ஆலிம்ஸாக்களை கண் மூடி பின் பற்றியதால் ஏற்பட்ட கதி இது.

அண்ணன் அன்று சொன்னவைகளை அப்படியே எழுதி இருப்பேன்.

ஓராண்டுக்கு முன்னால் அண்ணன் பி.ஜே.யும் அவருடன் உள்ள ஆலிம்ஸாக்களும் அரசியல் ஹராம் என்பது போல் பேசினார்கள். அன்று ஆங்கிலம் ஹராம் என்று சொன்னவர்கள் ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வெறுப்பால் சொன்னார்கள். த.மு.மு.க. மீது கொண்ட வெறுப்பால் அண்ணன் பி.ஜே. அரசியல் ஹராம் என்பது போல் பேசினார். ஆங்கிலம் ஹராம் என்று சொன்ன ஆலிம்ஸாக்களை 1986ரிலிருந்து 95 வரை அண்ணன் பி.ஜே. எப்படியெல்லாம் விமர்சித்தார். அவர் செய்த அத்தனை விமர்சனங்களும் அண்ணன் பி.ஜே.க்கு இன்று பொருந்தாதா? நளினமாக எழுத வேண்டும் என்று சொன்னதால்தான் இப்படி எழுதுகிறேன். மேலே உள்ள கோடு போட்ட இடத்தை நீங்களே நிரப்பிக் கொள்ள விட்டு விட்டேன். இல்லை எனில் அண்ணன் பி.ஜே. அன்று சொன்னவைகளை அப்படியே தொகுத்து பதிலாக எழுதி இருப்பேன்.

வீதியில் நிற்பதே நமது தலை விதியாக ஆகி விடும்.

அரசியல் ஹராம் என்று சொன்ன இந்த பி.ஜே. ஆலிம்ஸா? ஒரு வருடத்திற்குள் அவரே மாறி விட்டார். இவர்கள் அபகரித்த ஜாக் பள்ளிகளையெல்லாம் ஜெயலலிதா கட்சியின் தேர்தல் காரியாலமாக ஆக்கிக் காட்டினார். அன்று ஆங்கிலம் ஹராம் என்று சொன்னவர்கள் பின்னால் போனதால் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என பின் தங்கிப் போனோம். இன்று இவர் பின்னால் போனால் என்ன ஆகும்? இருக்கும் கொஞ்ச அரசியல் அதிகாரத்தையும் இழந்து விடுவோம். வீதியில் நிற்பதே நமது தலை விதியாக ஆகி விடும். இந்தியாவை ஆண்டவர்களின் வாரிசுகளாகிய நாம் இன்று ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி வருங்காலத்தில் நமது வாரிசுகளாவது ஆள வழி வகுப்போம்.

முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா.

எனவே இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தவறான சிந்தனையை பரப்பும் பணியில் நாம் ஈடுபடக் கூடாது. தமிழக முஸ்லிம்களால் பேரறிஞர், உத்தமர் என்று நம்பப்பட்ட அண்ணன் பி.ஜே. அவர்களால் சொல்லப்பட்டதுதான். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது. அவர் யாரிடம் ரகசிய பங்கு வாங்கி விட்டு இப்படிச் சொன்னாரோ? அவர் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர் என்பதை விளங்கி விட்டோம். அவரை இந்த விஷயத்தில் புறம் தள்ளி விட வேண்டும். இனி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா என்ற உண்மையையே நாம் சொல்ல வேண்டும். இதையே நமது வாரிசுகளுக்கு உணர வைப்போம். இன்ஷh அல்லாஹ் நமது வாரிசுகள் இந்தியாவை ஆளும். எப்படிப்பட்ட இந்தியாவை ஆளும்?

அந்த நேரத்தில் நிசப்தம் நிலவி இருந்தது. நிசப்தம் நிலவி இருந்த அந்த நேரத்தில்.

சூழ்ச்சிக்காரர்களால் பிரிக்கப்பட்ட இந்தியா அல்ல. நம்மவர்களால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான், பங்ளாதேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவை ஆளும். அதற்கு நாம் இந்த சுதந்திர தினத்தில் உறுதி எடுப்போம். இன்னொன்றையும் உங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறேன். 1947 ஆகஸ்ட் 15! அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களும் கூடி இருந்தார்கள். அந்த நேரத்தில் நிசப்தம் நிலவி இருந்தது. நிசப்தம் நிலவி இருந்த அந்த நேரத்தில் இந்திய விடுதலை பிறந்தது என்பதற்கு அறிகுறியாக பனிரெண்டு மணி அடித்து ஓய்ந்தது.

இந்திய சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதம்.

மணி அடித்து ஓய்ந்ததும் கணீரென ஒலித்தது சுதந்திர கீதம். அந்த சுதந்திர கீதத்தை திருமதி சுஸேதா கிருபளானி அவர்களும், டாக்டர் சுசீலா நய்யார் அவர்களும் குரலெடுத்துப் பாடினார்கள். அவர்களுடன் அங்கிருந்த அத்தனை தலைவர்களும் சேர்ந்து பாடினார்கள். அப்பொழுது ஒலித்த சுதந்திர கீதம் எது தெரியுமா? ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' இதுதான் இந்திய சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதம். சுதந்திர கீதம்.

விண்ணிலும் மண்ணிலும் ஒலித்த இந்திய தேசிய கீதம்.

1984 இல் இந்தியாவும் சோவியத் ரஷ;யாவும் இணைந்து செலுத்திய விண் கலம் என்பது நினைவு. விண் கலத்தில் பயணம் செய்த முதல் இந்திய வீரர் ராகேஷ; சர்மா விண் வெளியில் உலா வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தொலை பேசி மூலம் ராகேஸ் சர்மாவுடன் பேசினார்கள். இந்த உரையாடலை உலகில் உள்ள அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஒளிபரப்பினார்கள். அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பேசும்பொழுது, விண்வெளியிலிருந்து இந்தியாவை பார்க்கும் போது எப்படித் தெரிகிறது என்று கேட்டார்கள். ராகேஸ் சர்மா சொன்ன இரத்தின சுருக்கமான பதில் என்ன தெரியுமா? ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' இதுதான் அந்த பதில். விண்ணிலும் மண்ணிலும் ஒலித்த இந்திய தேசிய கீதம் ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்பதுதான்.

இந்த கீதத்தை, தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படவில்லை. அது ஏன்?

இதே கீதத்தைத்தான் இந்திய முப்படை வீரர்கள் அணி வகுக்கும் போதும் எடுப்பான குரலில் இசையுடன் பாடி வந்தார்கள். இந்திய தொலைக்காட்சிகளின் எல்லா நிலையங்களிலிருந்தும் வானொலிகளிலும் இதே கீதத்தைத்தான் ஒவ்வொரு நாளும் ஒலி பரப்பி வந்தார்கள். சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதத்தை, விண்ணிலும் ஒலித்த இந்த கீதத்தை, இந்தியாவிலுள்ள பெரும்பாலோருக்கும் உலகிலுள்ள பெரும்பானவர்களுக்கும் தெரிந்த மொழியில் உள்ள இந்த கீதத்தை, தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படவில்லை. அது ஏன்? இந்தியாவின் ஒரு மாநில மொழியாகிய வங்க மொழியில் உள்ள கீதத்தை ஏற்றுக் கொள்ளப்பட்டது ஏன்?

'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய கீதமாக உள்ள 'ஜன கண மண' பற்றி சர்ச்சை வந்தது. கேரளாவில் உள்ள 'பாலாமொழி' என்ற ஊருக்கு அருகில் சுதர்ஷன சமஸ்கிருதப் பள்ளி. அதன் நிர்வாகியும் தலைமை ஆசிரியருமான ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார் இந்த சர்ச்சையை - வாதத்தை தொடங்கி வைத்தார். ''ஜன கண மண' எத்தகைய தேசிய உணர்வையும் ஊட்டவில்லை. இது முதலில் தேசிய கீதமாக அமைக்கப்பட்டதுமில்லை. பிரிட்டிஸ் சக்கரவர்த்தி எட்வர்டை வரவேற்க பாராட்டி புகழ்ந்து பாடிய கீதம்தான் 'ஜன கண மண'. எனவே 1985 ஜுலை 26 ஆம் தேதி முதல் எமது பள்ளி கூடத்தில் 'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம். நானே சமஸ்கிருத மொழியில் எழுதிய 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலை பாடச் செய்வோம்'' என்றார்.

அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

அதே கால கட்டத்தில் அதே கேரளாவில் இன்னொரு பிரச்சனை எழுந்தது. கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினரான 'ஜெஹோவா' என்ற பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 'ஜன கண மண' கீதத்தை பாட மறுத்தார்கள். அது தங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்ட கருத்தைக் கொண்ட கீதம். எனவே அதை நாங்கள் பாட முடியாது என்றார்கள். இந்த இரு பிரச்சனைகளையொட்டி அரசியல் வாதிகள் வாதப் பிரதி வாதங்கள் செய்தார்கள். ஆன்மீகவாதிகள் மதக் கொள்கைக்கு முரண்பட்டது என்றார்கள். கேரள மாநில அரசு, உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், அடர்னி ஜெனரல் ஆப் இந்தியா என இந்தப் பிரச்சனை சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்த வாதப் பிரதிவாதங்கள் பற்றியெல்லாம் நாம் இப்போது எழுதப் போவதில்லை. அது நமது நோக்கமும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு வருடமாக இருந்து வந்த இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒரு பரிசீலனை நடந்தது. அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

'ஜய ஜய ஜனனி' 'ஜன கண மண' பிரச்சனை அப்படியே அமுங்கி விட்டது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'ஜன கண மண' என்ற தேசிய கீதத்திற்குப் பதிலாக ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஆக்கலாமா என பரிசீலித்தது. இப்படி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்ற செய்தி 1986 செப்டம்பரில் வெளியானதுதான் தாமதம் 'ஜய ஜய ஜனனி' 'ஜன கண மண' பிரச்சனை அப்படியே அமுங்கி விட்டது. இப்பொழுதும் ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஏன் ஆக்கவில்லை என்பதற்கு காரணம் சொல்லப்படவில்லை.

ஒரு பாடலுக்கே இந்த நிலை என்றால் நமது உரிமைகளுக்கு என்ன நிலை?

காரணம் சொல்லப்படாவிட்டாலும் இரண்டு காரணங்கள்தான் தடையாக இருக்கிறது என்பதுதான் நமது நிலை. ஒன்று முஸ்லிம்களின் மொழி என பெரும்பாலான இந்தியர்களால் நம்பப்படும் உருது மொழியில் அது உள்ளது. இரண்டாவது, அதை எழுதியவர் அமரகவி அல்லாமா முஹம்மது இக்பால் என்ற ஒரு முஸ்லிம். இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்கவே முடியாது. முஸ்லிம் கவிஞர் எழுதியது என்ற ஒரே காரணத்துக்காக தேசிய உணர்வு கொப்பளிக்கும் இந்த கீதம் தேசிய கீதமாக ஆக்கப்படவில்லை. ஒரு கவிதைக்கே இந்த நிலை என்றால் நமது உரிமைகளுக்கு என்ன நிலை?

''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா''

ஆகவே அரசியல் ஹராம் எனக் கூறும் அற்பப் பதர்களை புறந் தள்ளுவோம். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்ற தவறான பிரச்சாரத்தை தவிர்ப்போம். முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா என்ற உண்மைகளை உணர வைத்து மக்கள் உள்ளத்தை வெல்லுவோம். பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம். ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற தேசிய உணர்வுடன் செல்லுவோம். இழந்த ஆட்சியை மீட்போம். ஜாதி, மத, பேதமற்ற நீதியான ஆட்சியை நம்மால்தான் தர முடியும் என்பதை மீண்டும் நிரூபிப்போம். வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, 55. சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம், 627005.

No comments: