பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா என்ற தலைப்பில் முந்தைய நமது வெளியீடு இருந்தது. அதை பலர் பாராட்டி இருக்கிறார்கள். இது போன்ற ஆக்கங்களை தொடர்ந்து தாருங்கள் என்று எழுதி இருக்கிறார்கள். சிலர் விமர்சித்து இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே தங்கள் கருத்தையும் பெயரையும் சைட்டிலோ மெயில்களிலோ போட்டு விடாதீர்கள் என்பதை மறவாமல் எழுதி இருக்கிறார்கள். பலர் போன் மூலம் வரவேற்று இருந்தார்கள். விமர்சனம் செய்யுங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதாதீர்கள் என்று ஒருவர் அறிவுரை கூறி இருந்தார். சிலர் விமர்சனம் செய்திருந்தார்கள். முதலில் விமர்சனங்களைப் பார்ப்போம்.
யாரும் தேசிய கீதத்தை விமர்சித்து இருக்க மாட்டார்கள்.
விமர்சனம் செய்தவர்கள் சுட்டிக் காட்டியவற்றில் இரண்டு விஷயங்கள் நாம் மிகைப்படுத்தி எழுதியுள்ளதாக கூறியுள்ளார்கள். அதில் ஒன்று கேரள சுதர்ஷன சமஸ்கிருதப் பள்ளியில் 'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று கூறி இருக்க முடியாது. யாரும் தேசிய கீதத்தை விமர்சித்து இருக்க மாட்டார்கள். யாரும் தேசிய கீதம் பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று கூறி இருக்க மாட்டார்கள். தாங்கள் உருவாக்கிய 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலையும் பாடுவோம்'' என்று கூறி இருப்பார்கள். அது கிருஸ்ணவாரியார் எழுதிய பிரார்த்தனை அடிப்படையிலான பக்தி பாடலாக இருக்கும். அதையொட்டிதான் பிரச்சனை வந்திருக்கும் என்று எழுதியுள்ளார்கள்.
'ஜன கண மண' பாடுவதை நிறுத்தியும் விட்டார்.
இது விமர்சனம் எழுதியவர்களின் யூகம்தான். உண்மை நிலை அது அல்ல. பெரும்பாலான பள்ளி கூடங்களில் அன்று முதல் இன்று வரை தாங்கள் உருவாக்கிய அல்லது அவர்கள் மதம் சார்ந்த பிரார்த்தனை அடிப்படையிலான பக்தி பாடல்கள் பாடத்தான் செய்கிறார்கள். அதனால் எங்கும் பிரச்சனை வரவில்லை, வராது. ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார் 1985 ஜுலை 26 ஆம் தேதி முதல் எமது பள்ளி கூடத்தில் ஷஜன கண மண பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று மட்டும் சொல்லவில்லை. ஷஜன கண மண பாடுவதை நிறுத்தியும் விட்டார்.
கேரள அரசு எச்சரிக்கை செய்தது.
'ஜன கண மண' பற்றி விமர்சித்தும் இருந்தார். என்ன விமர்சனம் என்பதை முந்தைய வெளியீட்டில் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறோம். அந்த நேரத்தில் 'ஜன கண மண' பற்றி செய்யப்பட்ட விமர்சனத்தை இதில் விரிவாகவே தருவோம். 'ஜன கண மண' பாடுவதை வாரியார் நிறுத்தியதும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடுவதாக கேரள அரசு எச்சரிக்கை செய்தது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகுதான் அரசின் உத்தரவுக்கு கிருஸ்ணவாரியார் பணிந்தார். 'ஜன கண மண' வுடன் அவரது 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலை பாடச் செய்தார்.
இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.
நாடு சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நாளில் தேசிய கீதத்தைப் பற்றி கடும் சர்ச்சை ஏற்பட்டிருப்பது மிக மிக வருந்தத் தக்கது. ஏந்த நாடும் ஏற்றுக் கொண்ட தேசிய கீதத்திற்கு இப்படி ஒரு சர்ச்சை ஏற்படவில்லை. அதுவும் 40 ஆண்டுகளாக நடை முறையில் உள்ள தேசிய கீதத்தைப் பற்றி இப்படி ஒரு சர்ச்சை எழுந்ததாக வரலாறு இல்லை. என அப்பொழுது பத்திரிக்கைகள் கூட கருத்துக்கள் எழுதியுள்ளன. எனவே இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.
எழுத்து வித்தியாசம் இருக்கலாம்.
கிறிஸ்துவ மதத்தில் 'ஜெஹோவா' என்பது கேள்விப்படாத பெயராக உள்ளது. எனவே இது உண்மையாக இருக்காது என்று எழுதியுள்ளனர். 'ஜெஹோவா' என்பது எழுத்து அல்லது வார்த்தை பிசகலாகக் கூட இருக்கலாம். நடந்த சம்பவம் உண்மை. 1985இல் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகள் 'ஜெஹோவாவின்' சாட்சிகள் என்ற பிரிவைச் சார்ந்த என்றும் ஜஹோலா பிரிவைச் சார்ந்த என்றும் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஓரிரு எழுத்து வித்தியாசத்தில் இந்த செய்திகளை வெளியிட்டன. எனவே எழுத்து வித்தியாசம் இருக்கலாம்.
சரியான வார்த்தையை சம்பந்தப்பட்டவர்களே அறிவார்கள்.
முஸ்லிம்களின் பெரிய அமைப்பு த.மு.மு.க.தான் என்று எல்லா பத்திரிக்கைகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அந்த பெரிய அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பெயரை ஆரம்பத்தில் வித விதமாக எழுதினார்கள். இப்பொழுது சரியாக எழுதினாலும் பெயரைச் சொல்லும்போது உச்சரிப்பில் இன்றும் பேதம் உள்ளது. எனவே 'ஜெஹோவாவின்' சாட்சிகள் என்ற பிரிவின் சரியான உச்சரிப்பை சரியான வார்த்தையை சம்பந்தப்பட்டவர்களே அறிவார்கள். நாம் ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார், ஜெஹோவா பற்றி எழுதியது அதையொட்டி கருத்தைச் சொல்லத்தான். அவற்றைப் பற்றிய விபரங்களைத் தர அல்ல. விமர்சனங்கள் வந்துள்ளதால் விபரங்களை தர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
'ஜன கண மண'வை நாங்கள் பாட மாட்டோம்.
பள்ளிகூடங்களில் தேசிய கீதம் போடும்போது எல்லாரும் எழுந்து நின்று பாட வேண்டும் என்பது கேரள அரசின் சட்டம். ஷஜெஹோவாவின் மாணவர்கள் மூன்று பேர் திருச்சூருக்கு அருகில் உள்ள பள்ளி கூடத்தில் தேசிய கீதம் போடும்போது மரியாதைக்காக எழுந்து நின்றார்கள். ஆனால் சேர்ந்து பாடவில்லை. அதைப் பற்றி கேட்டதற்கு, 'ஜன கண மண' எங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்ட கருத்தைக் கொண்ட கீதம். அதனால் 'ஜன கண மண' வை நாங்கள் பாட மாட்டோம். தேசிய கீதம் என்ற முறையில் 'ஜன கண மண' மற்றவர்கள் பாடும்போது அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் எழுந்து நிற்போம் என்று கூறி விட்டார்கள்.
பாடத்தான் வேண்டும் என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பு.
தேசிய கீதம் பாட மறுத்ததற்காக மூன்று மாணவர்கள் மீதும் பள்ளி விதிகளுக்கு முரணாக நடந்ததாக குற்றஞ்சாட்டி பள்ளியிலிருந்து நீக்கி விட்டார்கள். மாணவர்கள் சார்பில் நீதி வேண்டி கேரள ஹைகோர்ட்டில் வழக்காடப்பட்டது. கேரள அரசின் உத்தரவுப்படி தேசிய கீதமான 'ஜன கண மண' வை பாடத்தான் வேண்டும் என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. பிறகு இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சின்னப்ப ரெட்டி, நீதிபதி தத் ஆகிய இருவரையும் கொண்ட மன்றத்தில் விசாரணை நடந்தது. அந்த உச்ச நீதி மன்றம் கீழ் உள்ளவாறு தீர்ப்பளித்தது.
'தேசிய கீதம் பாட வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது' சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
கேரள மாநில உயர் நீதி மன்றம் தவறான வழியில் சென்று தடம் புரண்டு தீர்ப்பு அளித்து விட்டது. கேரள உயர் நீதி மன்றம் தேசிய கீதத்தின் ஒவ்வொரு சொல்லையும் ஆழ ஆராய்ந்து எந்த மதத்தாரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடிய எதுவும் தேசிய கீதத்தில் இல்லை என்று சொல்லி தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் பிரச்சனை அது அல்ல. ஜஹோலா பிரிவைச் சார்ந்த அந்த மாணவர்கள் தங்கள் கடவுளை நோக்கி செய்யப்படும் பிரார்த்தனைகள் தவிர வேறு எந்த சடங்கிலும் தாங்கள் கலந்து கொள்வது தங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்டது என்று உண்மையாகவே நம்புகிறார்கள். எனவே, அவர்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
பாடத்தான் வேண்டும் என்று சொல்ல எவ்வித சட்ட ஆதாரமும் இல்லை.
கேரள அரசின் உத்தரவு இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவுக்கு முரண்பட்டது. சிலருடைய மத நம்பிக்கைகள் மற்றவர்களுக்கு ஆச்சரிமாகப்பட்டாலும் அவர்கள் அந்த நம்பிக்கைகளில் உறுதியாகவும் உண்மையாகவும் நம்பிக் கொண்டிருந்தால் அவர்களை இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு பாதுகாக்கும். பள்ளிகூடங்களில் தேசிய கீதம் போடும்போது எல்லாரும் எழுந்து நின்று பாடத்தான் வேண்டும் என்ற கேரள மாநில அரசின் கல்வித்துறை அதிகாரிகளின் சுற்றறிக்கைக்கு எவ்வித சட்ட ஆதாரமும் இல்லை.
அந்த மூன்று மாணவர்களையும் அதே பள்ளி கூடத்தில் சேர்க்க வேண்டும்.
அந்த மூன்று மாணவர்களையும் அவர்கள் படித்த அதே பள்ளி கூடத்தில் சேர்க்க வேண்டும். அவர்கள் எந்த இடர்பாடும் இன்றி படிக்க வகை செய்ய வேண்டும். நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையை போதிக்கின்றது. நமது தத்துவமும் அதை போதிக்கின்றது. நம் அரசியல் அமைப்பு அதை நடைமுறைப் படுத்துகிறது. நாம் அதை களங்கப்படுத்தி விடக் கூடாது என்று கூறி கேரள உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதி மன்றம். தீர்ப்பு வந்த உடனேயே கிருஷ;ணவாரியார் தமது பள்ளியில் 'ஜன கண மண' பாடுவதை மீண்டும் நிறுத்தி விட்டார். அவர் தாமே எழுதிய சமஸ்கிருத பாடலைப் பாடச் செய்தார். அதற்குப் பிறகு பெரும்பாலான பள்ளி கூடங்களில் தேசிய கீதம் பாடுவதையே நிறுத்தினார்கள்.
இந்திய தேசிய கீதத்தின் ஆரம்பமே சரி இல்லை.
'ஜன கண மண' பற்றி அப்பொழுது செய்யப்பட்ட விமர்சனத்தை இப்பொழுது பார்ப்போம். 1919ஆம் ஆண்டு 5 ஆம் ஜார்ஜ் மன்னரும் அவரது தாயார் இங்கிலாந்து மகாராணியும் கல்கத்தாவுக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்று போற்றி பாட எழுதப்பட்ட கவிதைதான் 'ஜன கண மண'. இதைத்தான் நமது தேசிய கீதமாக ஆக்கி இருக்கிறார்கள். ஜன கண மண அதிநாயக ஜெஹே! இதுதான் நமது தேசிய கீதத்தின் ஆரம்ப வார்த்தை. இதன் பொருள் என்ன? மக்கள் தலைவனே வாழ்க! பாராத பாக்கியவிதாதா என்றால் பாரதத்துக்கு நன்மை பயப்பயவனே! என்று பொருள். இது இந்திய தேசத்தை பாரத மாதாவை குறிக்கிறதா? சிந்தியுங்கள். நிச்சயமாக இது இந்தியாவை குறிக்கவே இல்லை. ஆக இந்திய தேசிய கீதத்தின் ஆரம்பமே சரி இல்லை.
தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் சேர்க்கப்படவில்லை.
'பஞ்சாப சிந்து குஜராத மராத்தா' என்றுதான் இரவிந்தரநாத் தாகூர் எழுதி இருந்தார். இது தேசிய கீதமாக ஆக்கப்பட்டபொழுதுதான் திராவிடம் சேர்க்கப்பட்டு 'திராவிட உத்கல வங்கா' என்றானது. பிரிட்டிஷ; அரசாங்கத்துக்கு பஞ்சாப், சிந்து, குஜராத், மராத்தா ஆகிய சமஸ்தானங்கள் அடிமைபட்டுக் கிடந்தன. எனவே அந்த சமஸ்தானங்களின் பெயர்களை மட்டுமே இரவிந்தரநாத் தாகூர் எழுதி இருந்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, காஷ;மீர், ராஜஸ்தான் போன்ற இந்தியாவிலுள்ள எந்த மாநிலமும் இது தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் சேர்க்கப்படவில்லை.
இது தேசிய கீதமா? இந்தியாவை கூறு போடும் பிரிவினை கீதமா?
அதே போல் வங்காள விரிகுடா மட்டுமே கீதத்தில் உள்ளது. அரபிக் கடல், இந்து மஹா சமுத்திரம் இடம் பெறவில்லை. காரணம், அந்தப் பகுதிகளெல்லாம் போர்சுகீசியர்களிடம் இருந்தது. அதனால்தான் பிரிட்டிஷ; ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் பாராட்டி வர வேற்று குளிர வைக்க எழுதிய இந்த பாடலில் இந்தப் பகுதிகளின் பெயர்களெல்லாம் இடம் பெறவில்லை. இது தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் கூட இவை இடம் பெறவில்லை. இது தேசிய கீதமா? இந்தியாவை கூறு போடும் பிரிவினை கீதமா?
பிரிட்டீஸ் ராஜாவை நல்ல ஐஸ் வைத்து குளிப்பாட்டியுள்ளார்.
விந்திய இமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா' இது பற்றி எந்த விமர்சனமும் நாம் காண கிடைக்கவில்லை. தவ சுப நாமே ஜாகே, தவ சுப ஆஷpஷ மாகே, ஜாஹே தவ ஜெய காதா என்ன அர்த்தம். மக்கள் எல்லலோரும், உன் புனிதப் பெயரை எண்ணிய படியே கண் விழிக்கிறார்கள். உன் பெருமையை பாடிக் கொண்டே உனது அருளாசியைக் கோருகிறார்கள் என்று அர்த்தம். இப்படி பிரிட்டீஷ; ராஜாவை நல்ல ஐஸ் வைத்து குளிப்பாட்டியுள்ளார். மேலும் இரவிந்தரநாத் தாகூர் பிரிட்டிஸ் ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் எப்படியெல்லாம் பாராட்டி ஐஸ் வைத்து எழுதியுள்ளார் தெரியுமா?
ஓ ராணியே ஓ ராஜேஸ்வரனே நாங்கள் உன் பாதத்தில் அடி பணிகிறோம்.
உனது சிம்மாசனத்தைச் சுற்றி பல மதத்தினரும் வந்து தங்களது அன்பை தெரிவிப்பார்கள். உனது அன்பு மொழியினைக் கேட்க ஆவலாய் இருப்பார்கள். பண்டைய நாடோடிகளை பஞ்சத்திலிருந்து மீட்டு மேலே ஏற்றி நம்மை வழி நடத்திச் செல்லும் மாமன்னனைப் போற்றுவோம். அறியாமையிலும், அவதியிலும், பஞ்சத்திலும் அடிபட்டு சுரணையற்ற நிலையிலுள்ள நாடு உன் கண் அசைவுக்கும் உன் தாயின் நிஜ பாதுகாப்பையும் விரும்புகிறது. உனது கருணை மிக்க வழி நடத்தலால் தூங்கும் பாரதம் விழித்தெழும். ஓ ராணியே ஓ ராஜேஸ்வரனே நாங்கள் உன் பாதத்தில் அடி பணிகிறோம்.
இந்த விஷயங்களில் நாம் எதையும் மிகைப்படுத்தி எழுதவில்லை.
இப்படி அடிமைத்தனமாய் பிரிட்டிஸ் ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் புகழ்ந்து இரவிந்தரநாத் தாகூரால் எழுதப்பட்ட கீதம்தான் 'ஜன கண மன'. இந்த அடிமைத்தனமான கீத்திலிருந்து 52 விநாடிகள் பாடும் அளவுக்கு எடுக்கப்பட்டதூன் இன்று இந்திய தேசிய கீதமாக உள்ள 'ஜன கண மன'. இது இந்தியனுக்கு பெருமையா? தலை குனிவா? இப்படி விமர்சனங்கள் அனல் பறந்தன. இந்த நிலையில்தான் மத்திய அரசு, இந்தியர்களுக்கு எழுச்சியூட்டும் வண்ணமும் இந்தியன் என்ற உணர்வை தூண்டும் வண்ணமும் அல்லாமா முஹம்மது இக்பால் எழுதியுள்ள ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஆக்கலாமா என பரிசீலித்தது. எனவே இந்த விஷயங்களில் நாம் எதையும் மிகைப்படுத்தி எழுதவில்லை.
அரசியல் ஒரு சாக்கடை.
பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம் என்பதை போனில் விமர்சித்த சிலர் ''அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் -- கள்தான் மூழ்கி குளிக்கும். 'ஜன கண மண' வுக்கு எழுந்து நின்றாலும். முஸ்லிம் எழுதிய 'ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா' வுக்கு எழுந்து நின்றாலும் இரண்டுமே ஷpர்க்குதான். பஞ்சாயத்து போர்டுக்கு போனாலும் பார்லிமெண்டுக்கு போனாலும் இந்த ஷpர்க்குகளை செய்யாமல் இருக்க முடியாது. என்றதோடு வசை மாரியும் பொழிந்தார்கள். விமர்சனம் செய்யுங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதாதீர்கள் என்று அறிவுரை சொன்ன சகோதரர் கூற்றுப்படி இங்கு பெயர் சொல்ல மாட்டோம்.
சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை.
நாம் பெயர் சொல்லாவிட்டாலும் ''அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் -- கள்தான் குளிக்கும்'' என்ற விமர்சனத்தைப் படித்ததும். இந்த விமர்சனத்துக்கு சொந்தக்கார அமைப்பினர் யார் என்பதை எல்லாருமே எளிதாக அறிவீர்கள். குர்ஆன் ஹதீஸ் வழி நடப்போம் என சொல்லிக் கொண்டு அரசியல் ஒரு சாக்கடை என்கிறார்கள். அவர்களின் இந்தக் கூற்றுக்கு இதுவரை ஏதாவது ஒரு ஆயத்து-ஹதீஸ் ஆதாரத்தைக் காட்டி இருக்கிறார்களா? என்றால் இல்லை. அரசியல் ஒரு சாக்கடை என்பவர்கள்தான் சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை என்பதை அவர்களது சமீபத்தி தேர்தல் நிலைப்பாடு படம் பிடித்துக் காட்டியது.
ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள்.
இவ்வளவு காலம் 'வரதட்சணை வாங்குபவனின் உணவு ஹராம்' என்றார்கள். இப்பொழுது 'திருமணத்திற்கு சென்றால் அதை நாம் ஆதரித்தது போல் ஆகும். தீமைக்கு பரிந்துரை செய்த குற்றவாளிகளாக ஆவோம் உணவு ஹராம் இல்லை'' என்று கூறியுள்ளார்கள். திருமணம் செய்வது சுன்னத் நபி வழி. அந்த நபி வழியை செய்பவர் வரதட்சணை என்ற ஒரு தவறை செய்தால் அந்த திருமணத்தையே புறக்கணிக்கச் சொன்னார்கள். அப்படிப்பட்டவர்கள் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள். திருமணத்திலாவது ஓரிரு தவறுகள் நடக்கும்.
அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்.
டாஸ் மார்க், மலிவு விலை கள்ளுக்கடை, தனியார் பனை மரத்தில் கள்ளு தயாரிக்க அனுமதி, நிரோத்தை மாட்டிக் கொண்டு விபச்சாரம் செய்யுங்கள் என்ற பிரச்சாரம். லஞ்சம் ஊழல் உட்பட எழுதி முடிக்க முடியாத அளவுக்கு அனைத்து ஹராம்களையும் செய்ததுதான் ஜெயலலிதா அரசு. அந்த ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி தெருத் தெருவாய் -- மாதிரி அலைந்தார்களே அப்பொழுது அரசியல் சாக்கடையாகத் தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அரசியலை ஹராமாக சித்தரித்தார்கள். சட்ட மன்ற தேர்தலில் அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்.
ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் வந்தாக வேண்டும்.
எனவே இவர்கள் ஆலிம்கள் தோற்றத்தில் உலவி வரும் ஷய்த்தான்கள். மார்க்கம் பற்றி சிந்திக்காத பொழுது போக்கிகளை கெடுக்க நடிக நடிகையர் போன்ற பொழுது போக்கிகள் ரூபத்தில் வருவான். மார்க்கம் பற்றி சிந்திக்கக் கூடியவர்களிடம் பொழுது போக்கிகள் ரூபத்தில் வந்தால் கெடுக்க முடியாது. அவர்களை மார்க்கத்தின் பெயரால்தான் கெடுக்க முடியும். மார்க்கத்தின் பெயரால் கெடுக்க வேண்டும் என்றால் ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் உலவி வந்தாக வேண்டும்.
அவர்கள் உருவத்தில் இருந்தவன் ஷய்த்தான்தான்.
களப்பணி ஆற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர்.... மற்றவர்கள் வரம்பு மீறிப் போயிருக்கலாம். ஆனால் நாம் அப்படி அல்லவே! நாம்தான் ஏகத்துவத்தில் உறுதியானவர்களாக இருக்கின்றோமே! நாம் களம் இறங்கினால் என்ன தவறு? என்று கேட்கலாம். நாம் என்ன தான் உறுதியானவர்களாக இருந்தாலும், நம்மீது நமக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும், 'யார் வேலியை சுற்றி மேய்கின்றாரோ அவர் வேலிக்குள்ளேயே சென்று விடக் கூடும் (புகாரி 2051) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் நிலைக்கு ஆளாக மாட்டோம் என்பது என்ன நிச்சயம்? என்று ஹதீஸ் ஆதாரத்தை எழுதி தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்றார்களே அப்பொழுதும் அவர்கள் உருவத்தில் உலவி வந்தவன் ஷய்த்தான்தான்.
அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.
என்னடா தவ்ஹீது பேசும் ஆலிம்கள் உருவத்தில் ஷய்த்தான் உலவி வருவதாக எழுதுகிறானே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எந்த குர்ஆன் ஹதீஸ்கள் ஆதாரம் காட்டி எந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டம் தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்று சொன்னதோ, அதே தவ்ஹீது மவுலவிகள் கூட்டம்தான் அதே குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் காட்டி நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் களப் பணி ஆற்றச் சொன்னது. அந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டமும் தேர்தலில் க(ள்)ளப் பணி ஆற்றியது. அது மட்டுமா இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை கூறி அது பத்ருப் போரில் ரசூலுல்லாஹ்வுக்கு கிடைத்த வெற்றி மாதிரி என்றும் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தோழ்வி உஹது போரில் ரசூலுல்லாஹ்வுக்கு ஏற்பட்ட தோழ்வி மாதிரி என்றும் 12-05-2006 அன்று ஜும்ஆவில் ஒருவன் பேசினான். அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.
இந்த மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது ஷய்த்தான்களா இல்லையா?
அவன்தான் அப்படி பேசினான் என்றால் அந்தக் கூடாரத்தில் உள்ள அத்தனை மவுலவி கூட்டமும் இப்பொழுது அதே கருத்தை ஏற்று எழுதியும் உள்ளன. இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை பத்ருக்கு ஒப்பிட்டும். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தோழ்வியை உஹதுக்கு ஒப்பிட்டும் எழுதியுள்ளார்கள். ரசூலுல்லாஹ்வுக்கு பத்ரில் கிடைத்த வெற்றிக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ்வுக்கு உஹதில் ஏற்பட்ட தோழ்வியும் இந்த லிவாத் கூட்டத்துக்கு தேர்தலில் ஏற்பட்ட தோழ்வியும் சமமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கண்ட பத்ருக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சந்தித்த உஹதுக்கு எதுவும் ஈடாகுமா? இப்பொழுது சொல்லுங்கள் இந்த தமிழ்நாடு தவ்ஹீது மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது யார்? ஷய்த்தான்கள்தானே.
இன்ஷh அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்ளுவோம்.
ஷய்த்தான் பிடித்துள்ள இந்த பைத்தியக்கார மவுலவிகளின் உளறல்களை தூக்கி எறிவோம். இந்திய அரசியலில் ஈடுபடலாம். ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வது ஹராம் ஷpர்க் என்ற இவர்களின் வாதம் முட்டாள்தனமான வாதம் என்பதை புரிவோம். எழுந்து நிற்பது பாடுவது போன்றவை ஷpர்க்கு என்ற நம்பிக்கைகளில் உறுதியாகவும் உண்மையாகவும் இருந்தால் அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு அனுமதி படி செயல்படலாம். எனவே மீண்டும் சொல்கிறோம் பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம். இன்ஷh அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்ளுவோம் வஸ்ஸலாம்.
வெளியீடு: கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி
No comments:
Post a Comment