Thursday, July 06, 2006

10 லட்சமா? 7 லட்சமா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 18-05-2006

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் குத்தாலம் லியாகத் அலி அவர்களுக்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நலம், நலம் பல சூழ்க.

03-04-2006 திங்கள் கிழமை மாலை பாளையங்கோட்டை மத்திய சிறைக்குச் சென்றேன். (பச்சை)அப்துர்றஹ்மான், ஷhஜஹான், சேக் பாதுஷh, பத்தமடை சிந்தா, ஹாரிஸ் உட்பட அங்குள்ள அல்-உம்மா சிறைவாசிகள் அனைவரையும் சந்தித்துப் பேசினேன்.

19-04-2006 புதன் அன்று மதுரை மத்திய சிறை சென்றேன். மதுரை ராஜா உசேன், பக்ருத்தீன் உட்பட சிறையிலிருக்கும் அனைவரையும் சந்தித்தேன். நிறைய விஷயங்கள் ராஜா உசேன் அவர்களிடம் பேச வேண்டி இருந்தது. அதனால்; இமாம் அலி வழக்கில் உள்ள பக்ருத்தீன் அவர்களை அருகில் வைத்துக் கொண்டு ராஜா உசேன் அவர்களிடமே அதிகமான நேரம் பேசினேன்.

26-04-2006 புதன் அன்று கோவை மத்திய சிறை சென்றேன். அல்-உம்மா தலைவர் அன்சாரி பாய், கிச்சான் புகாரி, தடா புகாரி உட்பட பலரை சந்தித்துப் பேசினேன். குறிப்பாக குண்டு வெடிப்பு வழக்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களை சந்தித்தேன்.

அதன் தொடர்ச்சியாக 15-05-2006 செவ்வாயன்று திருச்சி சென்றேன். ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் உள்ள அலி அப்துல்லாஹ், உடுமலைப் பேட்டை அப்துல் கையூம், நாகூர் அமானி உட்பட பலரை சந்தித்துப் பேசினேன். அப்பொழுது அலி அப்துல்லாஹ் சொன்னார். முஸ்லிம் லீக் சார்பாக துபை ஈமான் சங்கத்திலிருந்து 10 லட்சம் வாங்கி சி.டி.எம்.மில் கொடுத்து விட்டதாக முஸ்லிம் லீக் தரப்பில் சொல்கிறார்கள். சி.டி.எம்.மினர் 7 லட்சம்தான் வந்தது என்கிறார்கள். உண்மை நிலை என்ன? என்று கேட்டார்.

மேலும் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் மட்டும்தான் சிறைவாசிகளின் விடுதலைக்காக கோரிக்கை வைத்துள்ளார். த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் இட ஒதுக்கீடு கோரிக்கை மட்டும்தான் வைத்துள்ளார். சிறைவாசிகளின் விடுதலைக்காக கோரிக்கை வைக்கவில்லை என்றும் யாரோ ஒரு அனாமேதயம் மூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அலி அப்துல்லாஹ் கூறினார்.

சிறைவாசிகள் விஷயத்தில் சிறைத் துறை அதிகாரி எஸ்றா துவங்கி ஜட்ஜ் சாவித்திரி வரை உள்ள பல பிரச்சனைகளுக்கு ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களை தொடர்பு கொண்டு த.மு.மு.க. மூலம் நான் செய்துள்ள பணிகளை எடுத்துச் சொன்னேன். சிறைவாசிகளின் விடுதலைக்காக த.மு.மு.க. எந்த அளவுக்கு பேசி முறையான ஒப்பந்தம் செய்துள்ளது என்பதைச் சொன்னேன்.

துபையில் வசூலித்த பணத்தை முதலில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் மூலம் கொடுப்பதாக கூறினார்கள். அவர் பயந்து விட்டார். முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் சிறைகளுக்குச் சென்று சிறைவாசிகளை சந்தித்துப் பேசினார் என்று செய்திகளை பரப்பினார்கள். நான் கோவை சென்றிருந்தபொழுது கோவை மக்களும் அவ்வாறு சொன்னார்கள். கோவை சிறைவாசிகளை கேட்டபொழுது முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் தங்களை வந்து சந்திக்கவே இல்லை என்கிறார்கள்.

10 லட்சம் விஷயத்தில் தேர்தலுக்கு முன் பாதியும் தேர்தலுக்கு பின் பாதியும் கொடுப்பதாகச் சொன்னார்கள். அதன் பிறகு தாவூத் பாட்சா மூலம் 5 லட்சமும் காயிதே மில்லத் பேரவை தலைவராக உள்ள முத்துப் பேட்டை அப்துர் றஹ்மான் தம்பி மூலம் 2 லட்சமும் தான் கொடுத்து உள்ளார்கள். இதுதான் எனக்குத் தெரியும்.

துபை ஈமான் சங்கத்திலிருந்து முஸ்லிம் லீக் சார்பாக வாங்கி கொடுத்ததாக நீங்கள் சொல்கிறார்களே அது 10 லட்சமா 7 லட்சமா என்பது பற்றி விசாரித்து தகவல் அனுப்புகிறேன். என்று சொல்லி விட்டு வந்தேன். இது பற்றி தங்கப்பாவிடம் கேட்டேன், ''7 லட்சம்தான் தந்துள்ளார்கள்'' என்றார். ''2006 பிப்ரவரியில் தாவூத் பாஷh வீட்டு கல்யாணத்திற்கு வந்த காயிதே மில்லத் பேரவை தலைவர் அப்துர் றஹ்மான் துபை போய் ஒண்ணரை லட்சம் அனுப்புவதாகக் கூறினார். இப்பொழுது பணம் எதுவும் இல்லை என்கிறார். மீதி 3 லட்சத்தை நம்பி வேறு எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து விட்டேன்.

நான் துபையிலிருந்து புறுப்படும்பொழுது ''10 லட்ச ரூபாய் ஈமான் சங்கத்தில் இருக்கிறது'' என்றார் அப்துர்றஹ்மான். அப்பொழுது காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் குத்தாலம் லியாகத் அலி அவர்களும் (திருப்பணந்தாள்) தாஹா அவர்களும் உடன் இருந்தார்கள். அப்பொழுது ''10 லட்ச ரூபாய் ஈமான் சங்கத்தில் இருக்கிறது'' என்ற அப்துர் றஹ்மான் அவர்கள் 7 லட்சம்தான் வந்தது என்கிறார்'' என்றார் தங்கப்பா.

2005 டிசம்பரில் தாயகம் வந்திருந்த காயிதே மில்லத் பேரவை தலைவர் அப்துர் றஹ்மான் அவர்களிடம் நான் போனில் பேசினேன். சென்னையிலிருந்த அப்துர்றஹ்மான் அருகில் கோட்டை தங்கப்பா இருந்தார். தங்கப்பாவிடம் பேசி விட்டு தங்கப்பாவின் போனில்தான் அப்துர் றஹ்மான் அவர்களிடம் பேசினேன். அப்பொழுதும் ''10 லட்ச ரூபாய் ஈமான் சங்கத்தில் இருக்கிறது'' என்று அப்துர் றஹ்மான் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

முஸ்லிம் லீக் சார்பாக துபை ஈமான் சங்கத்திலிருந்து 10 லட்சம் வாங்கி சி.டி.எம்.மில் கொடுத்து விட்டதாக சிறைவாசிகளுக்கு தகவல் போயுள்ளது. தங்கப்பாவோ 7 தான் வந்துள்ளது என்கிறார். எனவே இது விஷயத்தில் உண்மை நிலை என்ன என்பதை காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் என்ற முறையில் பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, மேலப்பாளையம்.

No comments: