பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
முஸ்லிம்களை 'நஜீஸாக' ஆக்கிய கூட்டம் விமான ஓடு தளத்தில் தலை வைக்குமா?
கலிமாச் சொன்ன முஸ்லிம்களில் ஒரு சாராரை காபிர்கள் என்று கூறி சமுதாயத்தில் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த சிந்தனை தவறானது குர்ஆன் ஹதீஸ்களுக்கு எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதை உணர்த்தி, நபி வழியா நமது பாலிஸியா, சுன்னத் ஜமாஅத்தினரை பின் பற்றி தொழக் கூடாது என்றால் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடுவது கூடுமா? ஆகிய தலைப்புகளில் சரியான கருத்தை எழுதி இருந்தோம். அதில் ஆட்கள் பெயரை குறிப்பிட்டு எழுதாமல் அவர்கள் கூறி வரும் தவறான கருத்துக்களை மட்டும் விமர்சித்து எழுதி இருந்தோம். அந்த மாதிரி கருத்துக்களை கூறுபவர்களின் பெயரை குறிப்பிட்டு எழுத வேண்டும் என சில சகோதரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திசை திருப்ப வாய்ப்புகள் உள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்டு சின்னா பின்னமாக சீரழித்து விடும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணான கருத்துக்களை மட்டும்தான் அவற்றில் அடையாளம் காட்டி விமர்சித்திருக்கிறோம். முஸ்லிம்களின் பலம் குன்றிடச் செய்திடும் இஸ்லாத்தில் இல்லாத இந்த தவறான கருத்துக்களை சமுதாயத்தில் பரவச் செய்து வருபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விமர்சித்தாலும் தவறு இல்லை. பெயர்களை குறிப்பிட்டு எழுதி அவர்கள் பரப்பி வரும் தவறான கருத்துக்களை மட்டும் விமர்சித்தாலும் ஆட்களை விமர்சித்துள்ளதாக திசை திருப்ப வாய்ப்புகள் உள்ளது. அதனாலும் பெயர்களை தவிர்த்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சொந்த விரோத குரோதங்கள்தான்.
நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் என்று சொன்னார்கள். அந்த ஒற்றுமைக்கும் குர்ஆன் ஹதீஸ்களைத்தான் ஆதாரமாகக் காட்டினார்கள். இப்பொழுது அவர்களை காபிர்கள் என்று கூறி விட்டதற்கும் அவர்களை விட்டுப் பிரிந்து தனித்து விட வேண்டும் என்று கூறி வருவதற்கும் அதே குர்ஆன் ஹதீஸ்களிலிருந்துதான் ஆதாரங்களை கூறி வருகிறார்கள். எனவே இதை கொள்கை அடிப்படையிலானது என்று கூற முடியாது என்று முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு ஆதாரமாக கடந்த காலங்களில் நடந்துவிட்ட சம்பவங்களில் சிலவற்றை பட்டியலிட்டு இவற்றையெல்லாம் கொள்கைப் பிரச்சனை என்று கூற முடியுமா என்று கேட்;டிருந்தோம். கொள்கைப் பிரச்சனை அல்ல சொந்த விரோத குரோதங்கள்தான் ஒருவரை ஒருவர் பகைத்து விரோதிக்க காரணமாக இருந்தது என்பதற்குரிய ஆதாரங்களாகவே அவை இருந்தன.
சுன்னத் ஜமாஅத்தினரை இமாமாக முன்னிறுத்தி தொழக் கூடாது.
அல் குர்ஆன் 9:28 வது வசனத்தை வாதமாக எடுத்து வைத்து ஷpர்க் செய்யும் சுன்னத் ஜமாஅத்தினரை இமாமாக முன்னிறுத்தி தொழக் கூடாது என்று கூறி வருகிறார்கள். இந்த வாதம் குர்ஆன் ஹதீஸ்களுக்கு எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதை நமது அடுத்தடுத்த வெளியீடுகளிலும் விளக்குவோம். அந்த வசனம் இந்த வாதத்தைத்தான் கூறுகிறதா? என்பதை இந்த வெளியீட்டிலேயே பிறகு பார்ப்போம். முன்னதாக, பல அணிகளாக ஆகிவிட்ட தவ்ஹீது அணிகளில் உள்ள ஒரு அணியின் கூட்டத்தில் இன்னொரு அணியை நோக்கி கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
பெயரை தவிர்த்து விடுவோம்.
கடந்த காலங்களில் நடந்த சம்பவம்களுக்கு கொள்கைப் பிரச்சனை காரணம் அல்ல சொந்த விரோத குரோதங்களே காரணம் என்ற நமது கருத்துக்கு வலு சேர்த்திடும் வகையில்தான் அந்த விமர்சனங்கள் உள்ளன. எனவே அவற்றை முதலில் பார்ப்போம். யாரை விமர்சித்துள்ளார்களோ அவர்களது பெயரை தவிர்த்து விடுவோம். இதில் விமர்சித்துள்ளவர் யார் என்பதை குறிப்பிடாவிட்டால் விமர்சனத்தை நாமே உண்டு பண்ணி எழுதியுள்ளதாக பரப்ப வாய்ப்பு உள்ளது. எனவே விமர்சித்து பேசியவர் யார் என்பதை அறியத் தருகிறோம். மேலப்பாளையம் ஹாமீம்புரம் மஸ்ஜித் தவ்பா கதீப் கண்ணியத்திற்குரிய காஸிம் பிர்தவ்ஸி அவர்கள்தான் அந்த விமர்சகர். அவர் ஆற்றிய உரையின் வீடியோ நமக்கு கிடைத்தது. அதை நாம் சி.டி.யாக ஆக்கி வெளியிட்டுள்ளோம். அந்த உரையிலிருந்து சிலவற்றைத் தருகிறோம்.
கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறேன்.
(தவ்ஹீதுவாதியாகிய) என்னை (இன்;னொரு அணியைச் சார்ந்த) தவ்ஹீதுவாதிகள்? என்போர் அடித்து விட்டார்கள். அடிபட்டவன் நான் ஆனால் அடித்தவன் உடனடியாகப் போய் தான் அடிபட்டதாக போலீஸில் பொய் கேஸ் பதிந்து விட்டான். இப்பொழுது நான் எனது வேலைகளை பார்க்க முடியாமல் கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் முன் மட்டும் கைகட்டி நிற்க வேண்டிய முஸ்லிமை (என்னை) கோர்ட்டில் கைகட்டி நிற்க வைத்து விட்டார்கள்.
க்கா க்கா, தூ தூ, ஹஹ்ஹா ஹஹ்ஹா.
எதிர் அணியாக ஆகி விட்ட அந்த தவ்ஹீதுவாதிகள் என்னைப் போன்றவர்களைக் கண்டால் க்கா க்கா என்று சப்தமிட்டு காரி தூ தூ என்று துப்புகிறார்கள். அவர்கள் ஒரு கூட்டமாக சேர்ந்து விட்டால் ஹஹ்ஹா ஹஹ்ஹா என சப்பதமிட்டு சிரிக்கிறார்கள், விசிலடிக்கிறார்கள் (கழுதைபோல்) கனைக்கிறார்கள். ஒரு முஃமினை சிரித்த முகத்தோடு பார்ப்பது தர்மம் என்றார்கள் நபி (ஸல்) இன்று அது கூட கிடையாது. ஸலாம் சொல்வதும் இல்லை சொன்னால் பதில் சொல்வதும் இல்லை. கேட்டால் கொள்கையிலிருந்து அப்பால்பட்டவர்கள் என்கிறார்கள். என்னப்பா முஸ்லிம்கள்தானப்பா குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்கிறார்கள். அல்லாஹ்வை ஏற்று இருக்கிறார்கள். அவனது தூதரை ஏற்று இருக்கிறார்கள். பிறகு ஏன் ஸலாம் சொல்லக் கூடாது என்கிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் ஏற்றுள்ள கொள்கையை (தலைமையை) அவர்கள் ஏற்கவில்லை. அதனால் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனவே ஸலாம் சொல்ல மாட்டோம் என்கிறார்கள்.
பெண் எடுப்பதற்கென்றே பிரிந்து விட்ட கழிசடைகள்.
குர்ஆன் ஹதீஸ்களை பின் பற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஜும்ஆ மேடைகளில் நின்று கழிசடைகள் என்று பேசுகிறார்கள். சுன்னத் ஜமாஅத் பெண்களை கழிசடைகள்தான் திருமணம் செய்வார்கள். எங்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்ட கழிசடைகள் (சுன்னத் ஜமாஅத்தாராகிய) உங்களிடம் பெண் எடுக்க தயாராக இருக்கிறார்கள். உங்களிடம் பெண் எடுப்பதற்கென்றே பிரிந்து விட்ட கழிசடைகள் என்று (ஒரு தவ்ஹீது அணியின் மாநில நிர்வாகியாக உள்ள) ஒரு தவ்ஹீது மவுலவி(?) திருமண நிகழ்ச்சியில் பேசியுள்ளார். யாரிடம் போய் தோலுக்கு நிற்கிறார்களோ, யாரிடம் போய் அஸ்ஸலாமு அலைக்கும் என்று உண்டியல் குலுக்குகிறார்களோ அவர்களைப் பார்த்து உங்களிடம் பெண் எடுப்பதற்கென்றே பிரிந்து விட்ட கழிசடைகள் என்கிறார்.
துட்டுக்கு ஒரு கொள்கை. மேடையில் பேசுவதற்கு ஒரு கொள்கையா?
வரதட்சணை வாங்காமல் யாநபி பைத் ஓதாமல் முடிந்த வரை பித்அத்களை தவிர்த்து விட்டு கூட்டு துஆ மட்டும் ஓதப்பட்டு விட்டாலும் அந்த திருமண விருந்தை புறக்கணிப்போம் என்கிறார்கள். அவன் கபுர் வணங்கி அதனால் அவனுக்கு நரகம். அவன் முஷ;ரிக் அதனால் அவனுக்கு நரகம். அவன் காபிர் அதனால் அவனுக்கு நரகம் என்று சுன்னத் ஜமாஅத் பற்றி (அவர்களுக்கு நரகம் என்று) டிக்லர் பண்ணி விட்டார்கள் ஆனால் அவர்களால் அறுக்கப்படும் ஆடு மாடுகளின் தோல்களை தாருங்கள் என்று கேட்டு வாங்குகிறார்கள். நண்டு உறவாதாம் நண்டு சாறு மட்டும் உறவுமாம். (சரா சரா மக்ரூஹு அதன் சாற்றை கொஞ்சம் இறத்து ஊத்து) அதுபோல் இருக்கிறது இவர்களது செயல். இது என்ன கொள்கை? துட்டுக்கு ஒரு கொள்கை. மேடையில் பேசுவதற்கு ஒரு கொள்கையா? காபிர் என்று சொல்லி விட்டு அவர்கள் அறுத்ததை வாங்கி சாப்பிடலாமா?
3 ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்ட தவ்ஹீதுவாதி(?)
இன்று தவ்ஹீது அணியின் மாநில பொறுப்பில் இருக்கிறார் ஒருவர். அவர் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். (நாம்தான் இதை மூடலாக எழுதுகிறோம். எந்த ஊர்க்காரர் பெண்ணிடம் எது மாதிரி நடந்து கொண்டார் என்பதை மேடையில் பகிரங்கமாக தெளிவாகவே சொல்லிக் காட்டி உள்ளார். கேஸட்டிலிருந்து கேட்டுத்தான் எழுதியுள்ளோம்.) இது பிரிவுக்கு முன்னால் நடந்த சம்பவம். இது சம்பந்தமாக கம்ளைண்ட் மாநில தலைமைக்கு வந்தது. விசாரித்ததில் சம்பந்தப்பட்ட அந்த தவ்ஹீதுவாதியே? பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளதை ஒப்புக் கொண்டு விட்டார். பிறகு நடந்த மாநில செயற்குழுவுக்கு அவர் வரவில்லை. அந்த ஊர்க்காரர்கள் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தவே அவர் (2003லிருந்து) 3 ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டார். இதை எல்லாரும் ஆதரித்தார்கள்
கொள்கை அடிப்படையிலான முடிவு என்பதெல்லாம் கிடையாது.
அவர் ஏன் நீக்கப்பட்டார் என்ற விபரத்தை பத்திரிக்கையில் போட வேண்டும் என்ற கருத்து வந்தபோது கடுமையாக எதிர்த்தோம். கடைசியில் பத்திரிக்கையில் போடுவதா? வேண்டாமா? என்பதற்கு என்ன அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது தெரியுமா? அவர் ஹாமித் பக்ரியை சந்தித்துப் பேசி (அவருடன் உறவாக) இருப்பதாகத் தெரிந்தால் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்ட விஷயத்தால் நீக்கப்பட்டார் என்று பத்திரிக்கையில் போட்டு விடுவோம். அவர் ஹாமித் பக்ரியை சந்திக்கவில்லை என்றால் பத்திரிக்கையில் போட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. (3 ஆண்டுகள் கழியவில்லை) இப்பொழுது அவரை சேர்த்துக் கொண்டார்கள். மாநில நிர்வாகிகளில் ஒருவராக இருக்கிறார். ஆக நியாயம் அநியாயம் என்பது கிடையாது. கொள்கை அடிப்படையிலான முடிவு என்பதும் கிடையாது என்பதற்குத்தான் இதனைச் சொல்லிக் காட்டுகிறேன்.
இனி எப்படி நம்ப முடியும்?
இந்த குற்றச்சாட்டுக்களை நாம் சொல்லவில்லை. நேற்று வரை ஒன்றாக கை கோர்த்து இருந்து ஒரே மேடையில் பேசி, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே காரில் பயணித்து, ஒரே பாயில் படுத்து வந்த தவ்ஹீது அணியின் மவுலவிகளில் ஒருவரான காசிம் பிர்தவ்ஸி அவர்கள் பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் இது. பிரிவுகளுக்கு கொள்கைப் பிரச்சனை காரணம் அல்ல சொந்த விரோத குரோதங்களே காரணம் என்று நாம் எழுதியதை இவரது உரை வலு சேர்த்துள்ளது குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் தீர்வு காணாமல் ஹாமித் பக்ரியை சந்தித்தால் ஒரு தீர்வு. சந்திக்கவில்லை என்றால் வேறு தீர்வு என முடிவு எடுத்தவர்கள் கூறும் மார்க்க தீர்ப்புகளெல்லாம் குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் இருக்கும் என இனி எப்படி நம்ப முடியும்? (கேஸட்டைப் பார்த்து உறுதி செய்து கொள்ள விரும்புவோர். அந்த கூட்டத்தை நடத்திய மஸ்ஜித் தக்வா ஜமாஅத்திற்கு தொடர்பு கொண்டால் வீடியோ, சி.டி. கிடைக்கலாம்.
மஸ்ஜித் தக்வா ஜமாஅத், 134.பி. அபுல்கலாம் ஆஸாத் ரோடு, மேலப்பாளையம், திருநெல்வேலி, 627005. இது மஸ்ஜித் தக்வா ஜமாஅத் முகவரி.)
மக்கா காபிர்கள் வழியில் விசிலடிக்கும் ஜமாஅத்தாரை பின் பற்றி தொழலாமா?
அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாத, அந்த ஜமாஅத்தாரை பின் பற்றி தொழாதே இந்த ஜமாஅத்தாரை முன் நிறுத்தி தொழாதே என்பதை பரவ விட்டால் இனி என்ன மாதிரி எல்லாம் வரும்? அடித்து விட்டு அடித்ததாக பொய் கேஸ் பதிய சொல்லும் ஜமாஅத்தாரை பின் பற்றி தொழலாமா? அல்லாஹ்வின் முன் மட்டும் கைகட்டி நிற்க வேண்டிய முஸ்லிம் மீது பொய் கேஸ் போட்டு மனிதர்களுக்கு முன் கைகட்டி (ஷpர்க்) வைத்த வண்ணம் நிற்க வைத்துவிட்ட ஜமாஅத்தாரை முன் நிறுத்தி தொழலாமா? ஜும்ஆ மேடைகளில் அசிங்கமாக பேசுவதை அனுமதித்து ரசிக்கும் ஜமாஅத்தாரை முன் நிறுத்தி தொழலாமா? விசிலடித்தல் என்பது மக்கா காபிர்கள் வணக்க முறையாகும் (அல்குர்ஆன் 8:35) எனவே மக்கா காபிர்கள் வழியில் பக்காவாக விசிலடிக்கும் ஜமாஅத்தாரை பின் பற்றி தொழலாமா? என்றெல்லாம் கேள்விகள் வருமா வராதா?
கருத்து தவறானது என்றாலும் நல்லவர்கள்.
இந்த வெளியீட்டில் தவறான கருத்துக்களை மட்டும்தான் சுட்டிக் காட்டி விமர்சிப்போம்.. தவறான கருத்தை கூறியவரின் பெயரை குறிப்பிட்டு எழுதி அவர் விமர்சிக்கப்படுவது போன்ற தோற்றத்தைக் கூட ஏற்படுத்தி விட மாட்டோம் என்று குறிப்பிட்டிருக்கிறோம். அதே நேரத்தில் கலிமாச் சொன்னவர்களை காபிர்கள் என்று கூறுபவர்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்து பார்க்க முடியாது. ஒரு சாரார் தாங்கள் கூறுவது தவறுதான் என்று தெரிந்து கொண்டே இஸ்லாத்தில் ஹராமாக்கப்படாததை ஹராம்போல் வெறுத்துக் காட்டினால்தான் தமது அணியின் இமேஜ் கூடும் என்று செயல்பட்டு வருகிறார்கள். அதாவது இமேஜை கூட்டுவதற்காகவே ஹராம்போல் காட்டி வருகிறார்கள். இவ்வாறு இமேஜ் தேடும் அணியின் பெயரையோ ஆட்கள் பெயரையோ குறிப்பிட்டு எழுத மாட்டோம். இமேஜ் தேடும் இந்த அணியின் உள் நோக்கம் புரியாமல் அவர்கள் சொல்வதுதான் மார்க்கம் என்று தவறாக விளங்கிக் கொண்டு அதைப் பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கருத்து தவறானது என்றாலும் இவர்கள் நல்லவர்கள் என்பதை அடையாளம் காட்ட பெயரை குறிப்பிட்டே எழுதுவோம்.
ரஹ்மதுல்லாஹ் இம்தாதி.
உதாரணமாக ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களும் ஷஇன்னமல் முஷ;ரிக்கூன நஜஸுன் என்ற ஆயத்தின் அடிப்படையில் இணை வைக்கும் இமாமை பின் பற்றி தொழக் கூடாது என்று கூறி வருவதை அறிகிறோம். ரஹ்மதுல்லாஹ் இம்தாதியைப் பொறுத்த வரையில் மனதில் பட்டதை பேசக் கூடியவர். இந்த நற்சான்றை கண்ணியத்திற்குரிய கமாலுத்தீன் மதனி அவர்களும் பி.ஜெய்னுல் ஆபிதீன் உலவி அவர்களும் மனம் விட்டு பேசிய 38 மவுலவிகள் கூட்டதில் கூறியுள்ளார்கள். அதில் கலந்து கொண்ட அனைத்து மவுலவிகளும் அந்த நற்சான்றை அங்கீகரித்துள்ளார்கள். நாமும் ரஹ்மதுல்லாஹ் இம்தாதியைப் பொறுத்த வரையில் மனதில் பட்டதை பேசக் கூடியவர் என்ற நல்ல எண்ணத்தில்தான் உள்ளோம். சுய நல நோக்கில் கூறப்படும் கருத்து வருவாய்க்காக கூறப்படும் கருத்து என்று விமர்சிக்கப்பட்டால் அது ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களையும் அவரைப் போன்றுள்ள நல்லவர்களையும் குறிக்காது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
தொழுதால் தொழுகை கூடுமா?
இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். 'இன்னமல் முஷ;ரிக்கூன நஜஸுன்' என்ற ஆயத்தை படித்துக் காட்டி முஷ;ரிக்குகளையெல்லாம் நஜீஸ் - அசுத்தமானவர்கள் என்று அல்லாஹ் கூறி விட்டான். நமது ஆடையில் அசுத்தம் பட்டிருந்தால் அந்த அசுத்தத்துடன் தொழுவோமா? தொழுதால் தொழுகை கூடுமா? நஜீஸுடன் தொழுதால் தொழுகை கூடாது எனும்போது அல்லாஹ் நஜீஸ் என்று கூறிவிட்டவர்களை முன்னிறுத்தி தொழ முடியுமா? தொழுதால் தொழுகை கூடுமா? என்று வாதம் வைக்கிறார்கள். சுன்னத் ஜமாஅத்தினரை முன்னிறுத்தி தொழக் கூடாது என்பதற்கு அல் குர்ஆன் 9:28 வது வசனத்தின் நேரடியான அர்த்தத்தை ஆதாரமாகக் காட்டவில்லை, காட்ட முடியாது. எனவே விளக்கம் என்ற பெயரில் வாதம்தான் வைக்கிறார்கள். அந்த வாதத்தைத்தான் ஆதாரம் போல் காட்டி சுன்னத் ஜமாஅத்தினரை முன்னிறுத்தி தொழக் கூடாது என்கிறார்கள். அந்த ஆயத்து கூறும் நேரடி அர்த்தம் இது அல்ல. அவர்கள் கூறும் வாதப்படி (ஆதாரப்படி அல்ல) இதுதான் அர்த்தம் என்றால் அந்த வாதத்தின் அடிப்படையிலும் அவர்கள் கூறும் கருத்தும் தவறானதே.
ஒட்டி உரசி நின்று தொழுதால் தொழுகை கூடுமா?
ஒருவர் தொழும் இடம் சுத்தமாக இருக்கிறது. அவருக்கு முன்னால் 'நஜீஸ்' இருக்கிறது. இப்பொழுது அவரது தொழுகை கூடுமா கூடாதா? என்றால் கூடும் என்பார்கள். அந்த 'நஜீஸ்' அவர் மீது பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதாவது நஜீஸுடன் ஒட்டி உரசி நின்று தொழுதால் தொழுகை கூடுமா? என்றால் நிச்சயமாகக் கூடாது என்பார்கள். இவர்கள் யாரை ஷநஜீஸ் என்று கூறி முன் வைத்து தொழக் கூடாது. தொழுதால் தொழுகை கூடாது என்கிறார்களோ, அவர்களை பக்கத்தில் நிறுத்தி தொழுதால் அவர்கள் வாதப்படி பக்கத்தில் நிற்பவர்கள் தொழுகைதான் கூடாது.
அவர்கள் வாதப்படி முஷ;ரிக்குகளான நஜீஸ்களா.
எனவே இந்த ஆயத்தை கொள்கை அடிப்படையில் கூறி இருந்தால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். ஆயத்தை எழுதிப் போட்டு இந்த ஆயத்து அடிப்டையில் அவர்கள் யாரையெல்லாம் நஜீஸ் என்கிறார்களோ அவர்களையெல்லாம் தங்களது நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்குள் நுழைய விட மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். 4 மத்ஹபுகளை பின் பற்றாதவர்கள் இங்கு தொழ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று போர்டு வைத்த மாதிரி வெறும் போர்டுகளுடன் நிற்கக் கூடாது. இவர்கள் நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரக் கூடியவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தி முஸ்லிம்களா அல்லது அவர்கள் எடுத்து வைத்துள்ள வாதப்படி முஷ;ரிக்குகளான நஜீஸ்களா என செக் பண்ணி உள்ளே விட வேண்டும். அப்படி செய்வார்களா? செய்கிறார்களா இல்லை. இதை கொள்கை அடிப்படையில் கூறி இருந்தால் அப்படித்தான் செய்திருப்பார்கள்.
அது மாதிரிதான் இதுவும் என்பதில் சந்தேகம் இல்லை.
குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணான சட்டத்தை சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் கூறிவிட்டார்கள் என்று கூறி அவர்களை எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் - கேவலப்படுத்தினார்கள். அதில் ஒன்றுதானே மவுலவிகளின் வருவாய் நோக்கில் கூறப்பட்ட சுய நல சட்டம் என்ற விமர்சனம். அப்படியானால் இதை தவ்ஹீது இமாம்கள் வருவாய் நோக்கில் கூறப்பட்ட சுய நல சட்டம் என்றுதானே விமர்சிக்க வேண்டும். இவர்கள் யாரை நஜீஸ் என்கிறார்களோ அவர்கள் பள்ளிக்கு வந்தால்தான் உண்டியல் நிறையும். எனவே அவர்களை தடுக்க மாட்டார்கள் என்றுதானே சொல்ல வேண்டும். இது துட்டுக்கு ஒரு கொள்கை. மேடைப் பேச்சுக்கு ஒரு கொள்கை என்றார்களே அது மாதிரிதான் இதுவும் என்பதில் சந்தேகம் இல்லை என்று சொல்லலாம் அல்லவா.
எப்படி கொள்கை முடிவு என கூற முடியும்.
அல் குர்ஆன் 9:28 வசனத்தின் மூலம் இடப்படும் நேரடியான கட்டளையே முஷ;ரிக்குகள் மஸ்ஜிதுல் ஹராமை நெருங்கக் கூடாது என்பதுதான். அது எந்த முஷ;ரிக்குகள் பற்றி கூறுகிறது என்பதை பிறகு பார்ப்போம். அந்த ஆயத்தில் மற்ற பள்ளிகள் பற்றி கூறவில்லை. 'இன்னமல் முஷ;ரிகூன நஜஸுன்' என கூறிவிட்டு 'பலா யக்ரபுல் மஸ்ஜிதல் ஹராம' என்றுதான் அதன் தொடரே உள்ளது. (கஃபாவை உள்ளடக்கி இருக்கும் மக்காவிலுள்ள) 'மஸ்ஜிதல் ஹராமை' நெருங்கக் கூடாது என்றுதான் கட்டளை இடப்பட்டுள்ளது. எனவே நேரடி கட்டளையை கண்டு கொள்ளாமல். அவர்கள் மக்கா செல்வதை தடுக்காமல். வருவாய் தரும் இமாமத் பணிக்கு மட்டும் 'ஹராம்' என்பதும் உண்டியலில் காசு போட வரும் மஃமூம்களாக வரலாம் என்பதுமான இந்த நிலையை எப்படி கொள்கை முடிவு என கூற முடியும்.
விமான மறியல்.
அதில் கூறப்பட்டுள்ள நஜீஸ் என்பது இவர்கள் கூறும் பின்பற்ற முடியாத சுன்னத் ஜமாஅத்தினருக்கு என்றால், அதை இவர்கள் கொள்கை அடிப்படையில் கூறி இருந்தால் அவர்களை மக்கா செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதுவரை அதைச் செய்யவில்லை. அவ்வப்போது உம்ரா செல்கின்ற செய்திகள் கிடைக்காமல் போகலாம். ஹஜ்ஜுக்கு செல்வது பகிரங்கமானது. டிசம்பர் 6 போராட்டத்தை விட இதுக்குத்தான் இந்த கருத்துடையவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் விமானம் ஓடு தளத்தில் போய் படுத்துக் கொண்டு விமான மறியல் செய்தாவது அவர்களது இந்த கொள்கையை உலகறியச் செய்திருக்க வேண்டும். வருமான நோக்கில் சொல்லாமல் கொள்கை அடிப்படையில் சொல்லி இருந்தால் இதைச் செய்திருப்பார்கள். முஸ்லிம்களை 'நஜீஸாக' ஆக்கிய கூட்டம் விமான ஓடு தளத்தில் இனியாவது தலை வைக்குமா?
ஹக்குதாரர்களெல்லாம் ஹக்கை சொல்லி விடுவார்கள்.
அங்கு (இந்துக்களிடம்) சப்பரம், இங்கு பஞ்சா. அங்கு தேர், இங்கு சந்தனக் கூடு. அங்கு துவஜா ரோகணம் எனும் கொடி ஏற்றம் இங்கும் கொடி ஏற்றம். அங்கும் உண்டியல் இங்கும் உண்டியல் வசூல். இந்த உண்டியல் வசூல் ஒளிக்கப்பட்டு விட்டால் ஹக்குதாரர்களெல்லாம் ஹக்கை சொல்லி விடுவார்கள். கடவுளை வணங்கச் சென்றால் காணிக்கை செலுத்த வேண்டும் என்பது மாற்று மத கலாச்சாரம். இது முஸ்லிம்களிடமும் புகுந்து விட்டது. உண்டியல் கலாச்சாரம் இன்று பள்ளிவாசல்களையும் ஆக்ரமித்து வருகிறது. தொழுகைக்கு வந்தவர்களிடம் தொழுத பின் செய்யப்படும் வசூல் கடவுளை வணங்கி விட்டு காணிக்கை செலுத்தப்படும் கலாச்சாரத்தை ஒட்டியதாகவே இருக்கிறது.
இவர்களுக்கான வசூலை நிறுத்தி விட்டால்.
பள்ளிவாசல் நிர்வாகச் செலவுக்கு என்றால் மஹல்லாவாசிகளிடம் போய் கேளுங்கள். அல்லது மஹல்லாவாசிகள் அல்லாஹ்வுடைய பள்ளிக்கு என்று நிர்வாகிகளை தேடி வந்து தரட்டும். இது தவ்ஹீது மவுலவிகள் என்போர் 1986ல் ஆரம்ப காலகட்டத்தில் செய்த பிரச்சாரமாகும். இதில் குறிப்பாக வசூல் ஒளிக்கப்பட்டு விட்டால் ஹக்குதாரர்களெல்லாம் ஹக்கை சொல்லி விடுவார்கள் என்று அன்று கூறியதை ஒவ்வொரு நிர்வாகிகளும் இன்று நினைவுபடுத்தி இவர்களுக்கான வசூலை நிறுத்தி விடவேண்டும். இவர்களுக்கான வசூலை நிறுத்தி விட்டால் இந்த ஹக்குதாரர்களும் அல் குர்ஆன் 9:28 வசனத்திற்குரிய ஹக்கான விளக்கத்தைச் சொல்லி விடுவார்கள் அப்படித்தானே.
அவர்கள் வாதப்படி அந்த திருமணங்களின் நிலை என்ன?
இந்த ஆயத்து அடிப்படையில் சுன்னத் ஜமாஅத் பெண்களை தவ்ஹீதுவாதிகள் என்போர் திருமணம் செய்யக் கூடாது என்றால் ஏற்கனவே திருமணம் செய்து விட்டவர்களை என்ன செய்யப் போகிறார்கள். இவர்கள் வாதப்படி அவர்கள் காபிர்கள் என்றால் அவர்களுடன் நடத்துவது இல்லறமா? வேறு எதுவுமா? தவ்ஹீதுவாதி என்று சொன்னால் பெண் தர மாட்டேன் என்று சொன்ன காலம் இருந்தது. அப்பொழுது திருமணம் செய்த தவ்ஹீது மவுலவிகள் என்போர் இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாத லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூட சொல்லத் தெரியாத பெண்களைத்தான் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் வாதப்படி அந்த திருமணங்களின் நிலை என்ன? இவர்கள் கூற்றுப்படி புதிதாக ஒருவர் தவ்ஹீதுவாதியாக ஆகிறார் என்றால் கலிமாச் சொல்லித்தான் சேர்ப்பார்களா? ஏற்கனவே சேர்ந்தவர்களை கலிமாச் சொல்லித்தான் சேர்த்தார்களா? புதிதாக சேர்ந்தவரின் மனைவி மாறவில்லை பழைய கொள்கையில்தான் உள்ளார் என்றால் தலாக் சொல்லச் சொல்வார்களா?
அல்லாஹ் நஜீஸ் என குறிப்பிட்டுள்ளது யாரை?.
லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்ல (ஏற்க) மறுத்து இஸ்லாத்தை நிராகரித்தவர்கள். தங்களுக்கு தாங்களே காபிர்கள் என சாட்சி கூறி இணைவைப்பாளர்களாக முஷ;ரிக்குகளாக ஆகிவிட்டவர்கள் அன்றைய மக்காவாசிகள். அல்லாஹ்வை மறுத்து விட்ட அந்த முஷ;ரிக்குகளைத்தான் அந்த ஆயத்தில் நஜீஸ் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது கஃபாவை நிர்வகித்து வந்த காபிரான அந்த முஷ;ரிக்களுக்கு கஃபாவை நிர்வகிக்கும் தகுதி கிடையாது என்பதை அதற்கு முந்தைய ஆயத்துகளான 9:17,18,19 ஆகியவற்றில் தொடராக குறிப்பிட்டுள்ளான். அந்த தொடரில்தான் இந்த ஆண்டுக்குப் பின் மஸ்ஜிதுல் ஹராமை நெருங்கக் கூடாது என்று கட்டளை இட்டு அவர்களை நஜீஸ் என குறிப்பிட்டுள்ளான். அல்லாஹ் யாரை நஜீஸ் என குறிப்பிட்டுள்ளான்? லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்லாது அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது நிராகரித்து காபிராகி விட்டவர்களைத்தான் நஜீஸ் என குறிப்பிட்டுள்ளான். இதற்கு 9:28 ஆயத்தின் முன் பின்னுள்ள ஆயத்துகளே தெளிவான ஆதாரங்களாக உள்ளன.
ஒரே வசனத்திற்கு 2 வித விளக்கம் கூறி வரும் நிலை.
தாங்கள் கூறி விட்ட பொய்களை உண்மைப்படுத்த ஆடியோ வீடியோக்களில் முன்பின் எடிட் செய்து தங்கள் வாதத்தை நிலை நிறுத்தியவர்கள் குர்ஆனிலும் முன்பின் எடிட் செய்ய துணிந்து விட்டனர். உண்மைக்குப் புறம்பான எடிட்டர்களை கண் மூடித்தனமாக பின் பற்றுபவர்கள் இந்த வாதத்தை ஏற்கலாம். சிந்திக்கக் கூடிய முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள். அல் குர்ஆன் 9:28வது வசனத்தை குறிப்பிட்டு, ''முஸ்லிம் அல்லாதவர்களை மக்கா பள்ளிக்கு செல்ல ஏன் அனுமதிப்பது இல்லை'' என்று இந்து சகோதரர்கள் கேட்டார்கள். உடனே உங்களை மட்டும் குறிக்காது. முஸ்லிம்களிலுள்ள சுன்னத் ஜமாஅத்தினரையும்தான் குறிக்கும் என்றா பதில் சொன்னார்கள். அவர்களின் இந்த வாதம் உண்மை என்றால் இப்படித்தான் பதில் சொல்லி இருக்க வேண்டும். ஒரே வசனத்திற்கு இந்துக்களிடம் ஒரு விதமாகவும் முஸ்லிம்களிடம் வேறு விதமாகவும் விளக்கம் கூறி வருகிறார்கள். ஒரே வசனத்திற்கு 2 விதமான விளக்கம் கூறி வரும் நிலையே அவர்களை அடையாளம் காட்டி விடுகிறது.
காரணங்களை இட்டுக் கட்டி கூறுகிறார்கள்.
அல் குர்ஆன் 9:28வது வசனத்தில் கூறப்பட்டுள்ள தெளிவான நேரடி கட்டளையை முஸ்லிம் அல்லாதவர்களிடம் சொல்லத் தயங்குகிறார்கள். அவர்களை சமாளித்து திருப்திபடுத்தும் விதமாக விளக்கம் என்ற பெயரில் காரணங்களை இட்டுக் கட்டி கூறி வருகிறார்கள். இட்டுக் கட்டிக் கூறிடும் இவர்களது செயலை நியாயப்படுத்த இந்த வசனம் கூறும் உண்மையைச் சொல்லி விட்டால் மனித நேயமற்ற செயல் என்று சொல்லி விடக் கூடும் என்று காரணமும் கற்பிக்கிறார்கள். கடவுள் விஷயத்தில் ஒரே கொள்கை உடைய மனிதர்;களில் ஒரு சாராரை மட்டும் மூலம் வரை அனுமதித்து மற்ற சாரார் செல்லக் கூடாது என்று தடுத்து பாகுபடுத்தும் சித்தாந்தம்தான் மனித நேயத்திற்கு எதிரானது. இறைவன் ஒருவனே அந்த இறைவன் அல்லாஹ்தான் என்ற உண்மையை ஏற்றுள்ள மனிதர்கள் அனைவரும் இங்கு சமமாக நடத்தப்படுகிறார்கள். எனவே இதில் மனித நேயம் என்ற பிரச்சனைக்கே இடமில்லை.
பொய்களைப் புனைந்து கூறுவது ஏன்?
வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை நிராகரித்து விட்டவர்கள். தாங்கள் விரும்பியதையெல்லாம் கடவுள்களாக ஆக்கி வணங்கி பல தெய்வ கொள்கை உடையவர்களாக ஆகி விட்டவர்கள். கொள்கை அடிப்படையில் அசுத்தமானவர்கள். அதனால்தான் அல்லாஹ்வை வணங்க முதன் முதலில் கட்டப்பட்ட பைத்துல்லாஹ்வாகிய (அதாவது அல்லாஹ்வின் வீடாகிய) அந்தப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்பது அவன் இட்ட கட்டளை. இந்த உண்மையை போட்டு உடைக்காமல் பொய்களைப் புனைந்து கூறுவது ஏன்? அங்கே புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது போன்ற விதிகள் உள்ளன. இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால்தான் கடைப்பிடிக்க இயலும் என்று தவறான விளக்கம் கூற வேண்டிய அவசியம் என்ன? அல்லாஹ் கூறியுள்ள காரணத்தை ஏன் மறைக்க வேண்டும்?
ஏன் இப்படி குழப்ப வேண்டும்?
கேள்வி கேட்பவர்கள் தன் முகம் டி.வி.யில் வரவேண்டும் என்ற நோக்கில் கேட்பவராகவும் சிந்தனை திறன் இல்லாதவராகவும் உள்ளதால் தலையாட்டி விட்டுப் போகிறார்கள். கேள்வி கேட்பவர்கள் சிந்தனையாளர்களாக இருந்தால், நோன்பு மாதத்தில் பகலில் பகிரங்கமாக உண்ணக் கூடாது பருகக் கூடாது என்ற சிறப்பு சட்டங்கள் அரபு நாடுகளில் உள்ளன. அங்கு பணிக்கு சென்றுள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் அந்த சிறப்பு விதிகளை கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள். சிறப்பு விதிகளை மக்காவுக்கு செல்லும் முஸ்லிம்களுக்கு சொல்கிற மாதிரி எங்களுக்கும் சொல்லுங்கள் கடைப்பிடிப்போம் என்று கூறி இருப்பார்கள். புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பது நிரந்தரச் சட்டமா? இஹ்ராம் ஆகி விட்டவர்கள் இஹ்ராம் நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டமா? ஏன் இப்படி குழப்ப வேண்டும்?
உண்மைக் காரணத்தை சொல்ல பயந்து.
இந்த ஆயத்தில் அல்லாஹ் யாரை நஜீஸ் என குறிப்பிட்டுள்ளானோ அவர்களை நஜீஸ் என கூற தெம்பு இல்லாதவர்கள். என்ன காரணம் கூறி தனது இல்லத்திற்கு வரக் கூடாது என்று அல்லாஹ்வே சொல்லி உள்ளானோ அந்த உண்மைக் காரணத்தை சொல்ல பயந்து இல்லாததை சொல்லி வருபவர்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்லிவிட்ட முஸ்லிம்களில் ஒரு சாராரைப் பார்த்து காபிர், நஜீஸ் என கூறி வருகிறார்கள். அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்றும் பத்வா வழங்கி வருகிறார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் பின் நின்று தொழக் கூடாது என்பதற்கு இன்னும் என்ன என்ன ஆயத்து ஹதீஸ்களை கூறி வாதம் வைத்துள்ளார்கள் என்பதையும் அந்த வாதங்கள் குர்ஆன் ஹதீஸ்களுக்கு எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதையும் அடுத்தடுத்த வெளியீகளில் பார்ப்போம் இன்ஷh அல்லாஹ்.
முஸ்லிம்களை கூறு போட்டு விட்டார்கள்.
இஸ்லாம் எளிமையானது அதை கடினப்படுத்தி விட்டார்கள். இஸ்லாம் தூய்மையானது அதை களங்கப்படுத்தி விட்டார்கள். இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை. இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளை உண்டு பண்ணி முஸ்லிம்களை கூறு போட்டு விட்டார்கள். எனவே இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புதியவைகளை நீக்கி விட்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டி முஸ்லிம்களை ஒன்றுபடுத்தப் போகிறோம் என்றார்கள். அப்படிச் சொன்னவர்கள் தங்கள் சொந்த விரோத குரோதங்களால் ஏற்பட்ட பகைமையை தீர்த்துக் கொள்ள இஸ்லாத்தின் பெயரால் இன்னும் பல பிரிவுகளை உண்டு பண்ணி முஸ்லிம்களை கூறு போட்டு விட்டார்கள்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் உண்டு பண்ணிவிட்ட பிளவுகளை நியாயப்படுத்துகிறார்கள். ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதற்கு தகுந்தவாறு வளைத்து விளக்கம் கூற வசதியான ஆயத்து ஹதீஸ்களை தேடி அலைகிறார்கள். அது மாதிரியான ஆயத்து ஹதீஸ்களை தேடிப் பிடித்து வளைத்து விளக்கம் கூறி வருகிறார்கள். இஸ்லாத்தில் இல்லாத சட்டங்களை உருவாக்கி அல்லாஹ்வோ அவனது தூதரோ கூறாத புதியவைகளை நுழைத்து இஸ்லாத்தை கடினமானதாக ஆக்கி களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்பொழுது இவர்களிடமிருந்துதான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்ட வேண்டிய கட்டாயமான கால கட்டத்தில் உள்ளோம். வஸ்ஸலாம்
வெளியீடு: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.
No comments:
Post a Comment