Monday, July 03, 2006

ஆர். ஏம். ஹனீபா மீது ஏன் த.மு.மு.க.வுக்கு திடீர் பாசம்?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 28-04-2006
ஆபீஸ் பாயாகவும் ஒர்க் ஸாப் ஊழியராகவும் வேலை செய்யும் டாக்டர்கள்.
(முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார்?-1)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை பெற வேண்டும். இது ஜாதி, மத, இன பேதமின்றி இரக்க உணர்வு உள்ள மனித உள்ளங்கள் அனைத்தின் எதிர் பார்ப்பாகவும் விருப்பமாகவும் உள்ளது. சிறைவாசிகளின் விடுதலைக்காக பாடுபடுவது போல் பல பேர் காட்டிக் கொள்கிறார்கள். அவர்களெல்லாம் பாடுபடுகிறார்களா? பாசாங்கு செய்கிறார்களா? பாசாங்கு செய்பவர்கள் யார்? எப்படி பாசாங்கு செய்கிறார்கள்? உண்மையிலேயே பாடுபடக் கூடிய அமைப்பின் நிலை என்ன? முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார்? ஆகியவை பற்றி இதில் நீங்கள் அடையாளம் காண முடியும்.

சிறை நிரப்பும் போராட்டம் போராட்டம் நடத்திய த.மு.மு.க. என்ன செய்கிறது?

இட ஒதுக்கீடு கோரிக்கையுடன் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையையும் வைத்துள்ளோம் என்றுதானே தேர்தல் பிரச்சாரம் செய்தது. த.மு.மு.க. ஆட்சி அமைத்து 50ஆவது நாளை நோக்கி போய்க் கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியில் இது பற்றி எந்த தகவலும் இல்லையே? கிணற்றில் போட்ட கள்ளாக உள்ளதே. ஏதாவது தகவல் உண்டா? சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய த.மு.மு.க. என்ன செய்கிறது? இதுதான் விடுதலையாகி விட வேண்டும் என்ற எண்ணமுடைய சிறைவாசிகள் குடும்பங்களின் அவர்களது நண்பர்கள் உறவினர்கள் கேள்வியாக உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி இருந்தவரை போராட்டங்களாகத்தான் இருந்தது.

குணங்குடி ஹனீபா த.மு.மு.க.வை துவக்கியது. 1986 ஆம் ஆண்டில். அது புணர்நிர்மானம் செய்யப்பட்டு வளர துவங்கியது 1995, 96களில்தான். அப்பொழுது அது ஏராளமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது. அவற்றில் மிக அதிகமானது அநியாயமாக சிறையில் வாடும் தடா கைதிகளை விடுதலை செய் என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்திய போராட்டங்களே அகும். அ.தி.மு.க. ஆட்சி இருந்தவரை போராட்டங்களாகத்தான் இருந்தது. ஆட்சியாளர்களுடனோ, அதிகாரிகளுடனோ தடா கைதிகள் விடுதலை சம்பந்தமாக கனிவான பேச்சு வார்த்தை என்ற முன்னேற்றம் ஏற்படவே இல்லை.

இதை இங்கு விரிவாக விளக்கியே ஆக வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி வந்த பின்னர்தான் ஆட்சியாளர்களிடம் பேச்சு வார்த்தை என்ற நல்ல நிலை ஏற்பட்டது. இன்று த.மு.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் அன்று தடா கைதிகள் விடுதலை சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவர்கள். இதை இப்பொழுது கூற காரணம் அணுவளவு சம்பந்தம் இல்லாதவர்களும் தாங்கள்தான் காரணம் என கூறி வருகிறார்கள். ஒன்றாக இருந்து போது நாங்கள் செய்த முயற்சி என்கிறார்களாம். எனவே இதை இங்கு விரிவாக விளக்கியே ஆக வேண்டும்.

பி.ஜெ.யின் வீரம் எல்லாம் மைக் முன்னால் மட்டும்தான்.

பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டவராக இருந்தார். பி.ஜெ. ஆட்சியாளர்களிடமோ அதிகாரிகளிடமோ பேச போக மாட்டார். அப்படி போனாலும் தலை நிமிர்ந்து பேச தெரியாது. தலையை சொரிந்து கொண்டு கூனி குறுகி நிற்பார். உட்கார்ந்தால் நிமிர்ந்து உட்கார மாட்டார். அடிமைத் தனமாய் கவட்டுக்குள்தான் கையிருக்கும். ஜெ. சந்திப்பு போட்டோ இதற்கு ஆதாரம். பி.ஜெ.யின் வீரம் எல்லாம் மைக் முன்னால் மட்டும்தான். அது மட்டுமல்ல பி.ஜெ. தடாவில் தள்ளப்பட வேண்டிய குற்றவாளி. அதனாலும் அவர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முடியாதவராக இருந்தார். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ள வாக்கு மூல ஆடியோ வீடியோ ஆதாரம் உள்ளது.

பி.ஜெ. வீதிக்கு வந்தது அவரை தடாவிலிருந்து காத்துக் கொள்ளத்தான்.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். சமுதாய நலன் கருதி த.மு.மு.க.வை துவங்கினோம். வீதிக்கு வந்தோம் என்று சொல்லும் தகுதி இன்று த.மு.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் உண்டு. இதை பி.ஜெ. போன்றவர்களும் சொல்லி வருகிறார்கள். இதைச் சொல்வதற்கு பி.ஜெ. போன்றவர்களுக்கு அருகதை கிடையாது. பி.ஜெ. வீதிக்கு வந்தது அவரை தடாவிலிருந்து காத்துக் கொள்ளத்தான். எனவே தடா கைதிகள் விடுதலை சம்பந்தமாக ஆட்சியாளர்களுடனும் அதிகாரிகளுடனும் பேசியது இன்று த.மு.மு.க. தலைமை பொறுப்பில் உள்ள ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி போன்றவர்கள்தான்.

சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தி நிர்ப்பந்தித்தது.

அன்று தடா கைதிகளாக இருந்தவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த அதே ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி தலைமையிலான த.மு.மு.க. தான் இன்று எட்டு ஆண்டுகளாக சிறையில் உள்ள ஒட்டு மொத்த கைதிகளின் விடுதலைக்கான முயற்சிகளில் ஈடுபட்டது. அதற்காக ஜெ. ஆட்சியின்போது அதிகாரிகளுடன் பேசியது. அப்பொழுது செல்வாக்குடன் இருந்த பொன்னையனுடன் பேசியது. அவர்கள் விடுதலை செய்ய மாட்டார்கள் என உணர்ந்தது. உடனே ஒற்றைக் கோரிக்கை மாநாடுகள் நடத்தி மக்கள் மன்றத்தில் வைத்து வலியுறுத்தி வந்தது. ஜெ. ஆட்சியின் இறுதியில் சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தி நிர்ப்பந்தித்தது.

கும்பகோணத்தில் கூத்தடித்தவர்கள் தீர்மானம் போடவில்லை.

கும்பகோணத்தில் கூத்தடித்தவர்கள் போல் ஸ்டண்ட் பண்ணவில்லை. கும்பகோணம் குலுங்கியதாக கூறிக் கொள்ளும் பொதுக் கூட்டத்தில் மக்களை ஏமாற்ற பாசாங்கு செய்தார்கள். ஆம் மேடையில் மட்டும் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஒருவரை பேச வைத்து மக்களை ஏமாற்றினார்கள். அரசாங்கத்தின் கவனத்திற்கு செல்லும் தீர்மானத்தில் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும் என்று கும்பகோணத்தில் கூத்தடித்தவர்கள் தீர்மானம் போடவில்லை.

அந்த கோரிக்கையுடன்தான் தேர்தல் உடன்பாடு கண்டது த.மு.மு.க.

கும்பகோணத்தில் கூத்தடித்தவர்கள் செய்த ஸ்டண்ட்டு போல் த.மு.மு.க. செய்திருந்தால் தேர்தல் வந்ததும் மறந்திருக்க வேண்டும். சிம்ரனுக்கு கொடி காட்டி வரவேற்றவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறைவாசிகள் விடுதலை பற்றி பேசவே இல்லை. ஆனால் த.மு.மு.க. கூட்டணி கட்சிகளிடம் சிறைவாசிகளின் விடுதலையையும் கோரிக்கையாக வைத்தது. அந்த கோரிக்கையுடன்தான் தேர்தல் உடன்பாடு கண்டது த.மு.மு.க. தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சிறைவாசிகள் விடுதலையையும் மையமாக வைத்து பிரச்சாரம் செய்தது.

வழக்கை விரைந்து முடியுங்கள் என்றுதான் கோரிக்கை வைக்க வேண்டும்.

பிரச்சாரத்தைக் கேட்ட சமுதாய பிரமுகர்களில் சிலர் கவலையுடன் கேட்டார்கள். சிறைவாசிகள் விடுதலை என்பது செய்ய வேண்டிய ஒன்றுதான். த.மு.மு.க.வின் இந்த முயற்சிக்கு நன்றியுடன் நடந்து கொள்வார்களா? முன்போல் எதுவும் பண்ண மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். மீண்டும் ஏதாவது பண்ணி விட்டால் த.மு.மு.க. தானே பாதிக்கும். விடுதலை செய்யுங்கள். ஜாமீனில் விடுங்கள் என்றால் அதற்கு த.மு.மு.க. தான் பொறுப்பாக வேண்டி இருக்கும். எனவே விடுதலை செய்ய வேண்டும், ஜாமீனில் விட வேண்டும் என்ற கோரிக்கையை த.மு.மு.க. கை விட வேண்டும். வழக்கை விரைந்து முடியுங்கள் என்றுதான் கோரிக்கை வைக்க வேண்டும். கோர்ட் தீர்ப்புபடி விடுதலையாகி விட்டால் அவர்கள் கோர்ட் பொறுப்பாக ஆகி விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.

எல்லா சிறைவாசிகளும் வாக்குறுதி தந்தார்கள்.

அதற்காக த.மு.மு.க. பின் வாங்கியதா என்றால் இல்லை. முடியும் தருவாயில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கட்டும். தீர்ப்பு கூற நாளாகும் என்ற வழக்கில் உள்ளவர்களை ஜாமீனில் விட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நின்றது. அதே நேரம் சிறைவாசிகளை சந்தித்து கவுன்ஸிலிங் பண்ணவும் நம்மை அனுப்பி வைத்தது. இனிமேல் நாங்கள் அது மாதிரி ஈடுபட மாட்டோம் என்று நாம் சந்தித்த எல்லா சிறைவாசிகளும் வாக்குறுதி தந்தார்கள்.

த.மு.மு.க. அதன் முயற்சியில் பின் வாங்கவில்லை.

தேர்தல் முடிந்தது. தேர்தல் முடிவில் சென்னை உட்பட பல நகரங்களில் தி.மு.க. தோற்றது. ஓவ்வொரு நகரங்களில் ஏற்பட்ட தோழ்விக்கு ஒவ்வொரு காரணங்கள் இருந்தன. கோவையில் தோழ்விக்கு காரணம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அல்-உம்மா தீவிரவாதிகள் விடுதலையாகி விடுவார்கள் என்று எதிர் கட்சியினர் பிரச்சாரம் செய்ததே. காரணம் சொல்லப்பட்டுள்ளது. எதிர் அணியில் இருந்த த.த.ஜ. கூட இந்த பிரச்சாரத்தை செய்துள்ளது. தோழ்விக்கான காரணம் அல்-உம்மா சிறைவாசிகள் விடுதலையாகி விடுவார்கள் என்று மக்கள் பயந்தது தான் என்றாகி விட்டது. இருந்தாலும் த.மு.மு.க. அதன் முயற்சியில் பின் வாங்கவில்லை.

ஆட்சியாளர்கள் ஆதரவு மட்டும் இருந்தால் போதாது.

தேர்தல் வாக்குறுதிபடி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அதற்காக வியூகங்களை அமைத்தது. விடுதலை விஷயமாக ஆட்சியாளர்களை சந்தித்தால் அவர்கள் அதிகாரிகளிடம் நிலைமையை விசாரிப்பார்கள். அதிகாரிகள் அளிக்கும் சான்றுகளை, பரிந்துரைகளை அனுசரித்துதான் ஆட்சியாளர்கள் முடிவு இருக்கும். ஆட்சியாளர்கள் ஆதரவு மட்டும் இருந்தால் போதாது. அதிகாரிகளின் நற்சான்றும் வேண்டும். எனவே ஆட்சியாளர்களை சந்தித்து தேர்தல் உண்பாடுபடி சிறைவாசிகள் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது 2 ஆவது கட்டம். முதலில் அதிகாரிகளை சந்தித்து அவர்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோர வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு ஒத்துழைப்பு கோரி வந்தார்கள்.

ஆட்சி மாற்றத்திற்குப் பின் நடைபெறும் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருப்தால் அது முடிந்ததும் அதிகாரிகளை சந்திப்போம் என்று இருந்து விடவில்லை. எந்த அதிகாரிகளெல்லாம் மாற்றப்பட மாட்டார்கள் என்று எல்லாராலும் உறுதியாக நம்பப்பட்டதோ அவர்களை சந்தித்து முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு ஒத்துழைப்பு கோரி வந்தார்கள். அவர்களிலும் ஒருவர் மாற்றப்பட்டு விட்டார். அதன் எதிரொலி மக்கள் உரிமையிலும் ஒலித்தது பார்த்திருப்பீர்கள். முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு ஒத்துழைப்பு கோருவதற்காக அதிகாரிகளை சந்திக்க சென்றபோது முதலில் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களும், மாநில செயலாளர் ரிபாஈ அவர்களும் சென்றார்கள்.

இதே த.மு.மு.க.தான் விடுதலை வாங்கித் கொடுத்தது.

இரண்டாவது தடவை த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களும் மாநில செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும் சென்றார்கள். அதிகாரிகளை சந்தித்துப் பேசியதில் கிடைத்த தகவல் பற்றி முன்பே எழுதி இருக்கிறோம். 1993 முதல் தடாவிலிருந்த இதே அல் உம்மாவினரை 1996 இல் இதே தி.மு.க. ஆட்சியினரிடம் பேசி இதே த.மு.மு.க.தான் விடுதலை வாங்கித் கொடுத்தது. விடுதலையான இதே அல்-உம்மாவினர்தான் தி.மு.க. ஆட்சியில் குண்டு வெடிப்பு நடத்தினார்கள். விடுதலை வாங்கி கொடுத்த த.மு.மு.க.வுக்கே தடை போடும் நிலையை ஏற்படுத்தினார்கள்.

த.மு.மு.க. தலைமைக்கு எழுதியும் கொடுத்தேன்.

அப்படிப்பட்ட அல்-உம்மாவினருக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் அதே த.மு.மு.க.வினர் முனைப்பாக உள்ளீர்கள். மீண்டும் முன் போல் நடந்து விடுவார்களோ என்ற அச்சம் எல்லா மட்டத்திலும் உள்ளது. இனிமேல் எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று யார் பொறுப்பு ஏற்பார்கள் என்பதுதான் கேள்வியாகவும் உள்ளது. இதுதான் அதிகாரிகளிடம் ஆதரவு கோரி சென்ற போது கிடைத்த தகவல். எனவே எல்லா சிறைவாசிகளின் விடுதலைக்காகவும் த.மு.மு.க. பொறுப்பு ஏற்க முடிவு செய்தது. அதனால்தான் சிறைவாசிகளிடம் என்னை தொடர்ந்து அனுப்பி இனி ஈடுபட மாட்டோம் என உறுதி மொழி வாங்கி வரச் செய்தது. நானும் உறுதி மொழி வாங்கி த.மு.மு.க. தலைமைக்கு எழுதியும் கொடுத்தேன்.

த.மு.மு.க. தலைமையை பேசச் சொல்லுங்கள்.

இப்படி திட்டமிட்டு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கவே சிறைவாசிகள் தரப்பிலிருந்து ஒவ்வொரு யோசனைகள் வந்த வண்ணம் இருந்தன. ஒரு தரப்பினர், ''உடனடியாக விடுதலைக்கு வழி வகுக்க சொல்லுங்கள். கேஸை எப்ப வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளட்டும். உடனடியாக ஜாமீனில் விட வேண்டும் என த.மு.மு.க. தலைமையை வற்புறுத்தி பேசச் சொல்லுங்கள்'' என்றார்கள். பிறகு இன்னொரு தரப்பினர், ''ஜாமீனில் விட வேண்டாம். ஜாமீனில் வெளியே வந்தால் கேஸுக்கு ஆஜராக என வர வேண்டி இருக்கும். கேஸை விரைந்து முடிக்க வேண்டும் என்று த.மு.மு.க. தலைமையை பேசச் சொல்லுங்கள்'' என்றார்கள். ஒரு தரப்பு சொன்னதை இன்னொரு தரப்புக்கு தெரிய வேண்டாம் என்றும் சொல்லி விடுவார்கள்.
த.மு.மு.க. தலைமையிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

இன்னும் சிலர் ''கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் மக்கள் உரிமையில் எழுதுகிறார்கள். அப்படி எழுதக் கூடாது என்று சொல்லுங்கள். ரெயில் குண்டு வெடிப்பு உட்பட பல குண்டு வெடிப்பு கைதிகள் உள்ளனர். எனவே குண்டு வெடிப்பு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பொதுவாக எழுதச் சொல்லுங்கள்'' என்றார்கள். ''எப்படியானாலும் சரி எது நல்லதோ அது த.மு.மு.க. தலைமைக்குத் தெரியும். அதன்படி செய்யச் சொல்லுங்கள். கிடப்பில் போட்டு விடாமல் இருக்க எங்களுக்காக அடிக்கடி த.மு.மு.க. தலைமையிடம் பேசிக் கொண்டே இருங்கள். வெளிநாடு போய் விட்டாலும் நாங்கள் விடுதலையாகும் வரை நீங்கள் த.மு.மு.க. தலைமையிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்'' இப்படி மேலப்பாளையம் சிறைவாசிகள் சொன்னார்கள்.

''த.மு.மு.க. விடுதலை வாங்கி தந்து விடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்''

24-05-2006 புதன் அன்று துபை வருவதற்காக டிகட் ஓ.கே. செய்து இருந்தேன். 25 ஆம் தேதி நெல்லை கோர்ட்டுக்கு கிச்சான் புகாரி வருகிறார். அவரை சந்தித்து விட்டு போகணுமாம் என்று மேலப்பாளையத்தில் உள்ள அல்-உம்மா சகோதரர்கள் சொன்னார்கள். எனவே 27ஆம் தேதிக்கு பயணத்தை மாற்றினேன். 25-05-2006 வியாழன் காலை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று கிச்சான் புகாரி அவர்களை சந்தித்தேன். மேற் சொன்னதை மேலப்பாளையம் சிறைவாசிகள் சார்பில் மீண்டும் சொல்லி விட்டு, ''த.மு.மு.க. விடுதலை வாங்கி தந்து விடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்'' என்றார்.

த.மு.மு.க. தலைமையை தொடர்பு கொள்வதற்கு.

மேலும் ''தேர்தல் முடிவுக்குப் பிறகு த.மு.மு.க. தலைமையிடம் போனில்தான் பேசியுள்ளீர்கள். எங்கள் திருப்திக்காக ஒரு முறை எங்கள் சார்பில் த.மு.மு.க. மாநில தலைமைக்கு நேரில் போய் கோரிக்கை வைத்து விட்டு துபை செல்லுங்கள். நீங்கள் சென்ற பின் த.மு.மு.க. தலைமையை தொடர்பு கொள்வதற்கு வசதியாக முல்லன் செய்யது அலி அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்'' என்றார்.

டிகட் ஓ.கே. செய்துள்ளபடி நாளையே புறப்படுங்கள்.

வெளியில் நின்ற சகோதரர்கள் ''எல்லா சிறைவாசிகளையும் பார்த்து விட்டீர்கள். சென்னை சென்று ஏர்வாடி காசிம் அவர்களையும் பார்த்து ஒரு வார்த்தை சொல்லி விட்டு செல்லுங்கள்'' என்றார்கள். இதன் பொருளுணர்ந்த நான் சிறை உள் வாயிலில் நின்றபடியே துபை பயணத் தேதியை மாற்றினேன். ஏன் பயணத் தேதியை மாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆளுக்கு ஒரு கோரிக்கை வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். டிகட் ஓ.கே. செய்துள்ளபடி நாளையே புறப்படுங்கள் என்று முல்லன் செய்யது அலி கூறினார்.

சிறைவாசிகள் சார்பில் வந்திருந்த மொட்டைக் கடிதம்.

25-05-2006 வியாழன் அன்று மாலையே சென்னை புறப்பட்டேன். முல்லன் செய்யது அலி வராததால் எனது மகனை என்னுடன் அழைத்துச் சென்றேன். 26-05-2006 வெள்ளியன்று ஜும்ஆவுக்குப் பிறகு த.மு.மு.க. தலைமையகம் சென்று தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியவர்களை சந்தித்தேன். சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக த.மு.மு.க. செய்து வரும் முயற்சிகளை பற்றிக் கேட்டேன். த.மு.மு.க. தலைமையகத்திற்கு சிறைவாசிகள் சார்பில் வந்திருந்த மொட்டைக் கடிதம் (அதனுள் இருந்த நோட்டீஸ்) ஒன்றை எடுத்துக் காட்டினார் பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள்.

ஆர். ஏம். ஹனீபா மீது ஏன் த.மு.மு.க.வுக்கு திடீர் பாசம்?

மொட்டைக் கடிதத்தில் வந்திருந்த அந்த நோட்டீஸை படித்தேன். பிறகு அவர்களுடன் பேசி விட்டு வெளியில் வந்த நான் அலி அப்துல்லாஹ் தம்பி தவ்பீக் அவர்களுக்கு போன் போட்டேன். 2 பக்க அளவில் வெளியாகியுள்ள அந்த மொட்டை நோட்டீஸில் உள்ள முக்கிய வரிகளை படித்துக் காட்டினேன். நான் படித்துக் காட்டிய வரிகள்.

பிஜெ.யின் எதிரி மேலை இலாஹி என்பவரின் உறவினர் என்பதாலா?

''த.மு.மு.க.வின் தந்தை என்று சொல்லப்படுகின்ற தனி நபரை முன்னிலைபடுத்தி பேசப்போவதாக அறிந்தேன். எத்தனையோ சிறைவாசிகள் குடும்பங்கள் கடும் துன்பத்தில் இருக்க ஆர். ஏம். ஹனீபா மீது ஏன் த.மு.மு.க.வுக்கு திடீர் பாசம்? பிஜெ.யின் எதிரி மேலை இலாஹி என்பவரின் உறவினர் என்பதாலா? தேர்தல் முடிந்ததும் அரசிடம் பேசும் நிலையில் ஆர். ஏம். ஹனீபாவை அவசரமாக முன்னிலை படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன? மற்ற சிறைவாசிகளை விட எந்த வகையில் மேன்மையானவர். ஒரு சிறைவாசியின் சகோதரன் என்ற முறையில் கேட்கிறேன்'' இப்படியே தொடர்கிறது. இதுதான் சிறைவாசிகளின் பண்பா என்று கேட்டேன். யார் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். நிச்சயமாக இது சிறையிலிருந்துதான் தயாராகி வந்திருக்கிறது என்றேன்.

2 கோடி ரூபாயும் 2 லாரியும். 2 மகன்களுக்கு டாக்டர் சீட்டும் வாங்கி விட்டார்.

குணங்குடி ஹனீபா முதலில் சிறைவாசி. அதற்குப் பிறகு சிறைவாசி என்பதால்தான் உறவு ஆனார். ஜெ.யிடம் குணங்குடி ஹனீபா 2 கோடி ரூபாயும் 2 லாரியும். அவரது 2 மகன்களுக்கு டாக்டர் சீட்டும் வாங்கி விட்டார் என பி.ஜெ.யும் ஏ.எஸ். அலாவுதீனும் என்னிடம் சொன்னார்கள். அதை நம்பி பரப்பினேன். அந்த பாவத்திற்காக பிளஸ்-டூ வில் பெயில் ஆகி (டாக்டராகி?) விட்ட மைதீன் ரஸாக்குக்கு விஸா அனுப்பினேன். டாக்டர்? மைதீன் ரஸாக் துபையில் ஆபீஸ் பாய் வேலை செய்து கொண்டிருக்கிறார். குணங்குடி ஹனீபாவின் இன்னொரு மகன் டாக்டர்? அமீர் சுல்தானுக்கு விஸா அனுப்பி ஒர்க் ஷhப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுவெல்லாம் குணங்குடி ஹனீபா சிறைவாசி என்பதால் செய்ததுதான். இதற்குப் பிறகுதான் நாங்கள் அவரது மகனுக்கு பெண் கொடுத்தோம்.

ஹைதர் அலி உறவுக்காரர் என கொச்சைப்படுத்தி இருப்பார்கள்.

இலாஹி உறவினர் ஆவதற்கு முன் பி.ஜெ.க்குதான் அவர் குடும்ப ரீதியான உறவுக்காரர். த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களுக்கும் குடும்ப ரீதியான உறவுக்காரர். இது தெரிந்திருந்தால் ஹைதர் அலி உறவுக்காரர் என கொச்சைப்படுத்தி இருப்பார்கள். த.மு.மு.க. 40 சிறைவாசிகளின் விடுதலைக்கு மட்டுமே முயற்சி செய்கிறது என்றார்கள். அனைவரின் விடுதலைக்hக முயற்சி செய்யும் போதும் கொச்சைப்படுத்துகிறார்கள். 8 வருடம் சிறையிலிருந்தும் பண்பட்டதாக தெரியவில்லையே என்றேன்.

துபை மு.மு.க. மண்டல தலைவர் மதுக்கூர் ஹாஜாவுக்கு போன் போட்டு பேசினார்.

அதே நேரம் த.மு.மு.க. தலைவர்களிடம் சொன்னேன். இதைப் பார்த்து வருத்தப்படாதீர்கள். அவர்களுக்கு மாட்டு மூளை என்று பி.ஜெ. சொன்னதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட மோசமாக இருக்கிறது அன்சாரி பேட்டி என்ற பெயரால் வந்துள்ள ஈ-மெயில். எனவே இந்த மொட்டைக் கடித பேர்வழிகளை பார்க்காதீர்கள் அவர்கள் குடும்பம் படும் கஷ;டங்களை பாருங்கள். அவர்களை வெளியே எடுத்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விஸா ஏற்பாடு செய்து கொடுங்கள். அவரது பிள்ளைகளின் கல்விக்கு வழி செய்யுங்கள். என்று எழுதி இருந்தேனே அதை கவனத்தில் கொள்ளுங்கள் என்றேன். உடனே துபை மு.மு.க. மண்டல தலைவர் மதுக்கூர் ஹாஜாவுக்கு போன் போட்டு பேசினார். விஸா விஷயமாக பேசச் சொன்னேனே பேசினீர்களா? என்று கேட்டார்.

த.மு.மு.க.வின் நல்ல முயற்சிகளை கொச்சைப்படுத்தியுள்ளார்.

''ஏற்கனவே மதுக்கூர் ஹாஜாவிடம் விஸா விஷயமாக பேசச் சொல்லி இருந்தேன். பேசினாராம் கொள்கை அளவில் ஏற்று இருக்கிறார்கள். நிர்வாகிகள் கூட்டத்தில் பரிசீலித்து முடிவு சொல்வதாக சொன்னார்கள் என்று சொல்கிறார். சரி முதலில் எல்லாரும் விடுதலை ஆகட்டும். அரசு அளவிலும் வேலை வாய்ப்புகள், தொழில் துவங்க கடன் வழங்குதல் போன்ற விஷயங்கள் குறித்தும் சொல்லி வைத்திருக்கிறோம்'' என்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் கூறினார்கள். இப்படிப்பட்ட த.மு.மு.க.வின் நல்ல முயற்சிகளைத்தான் கொச்சைப்படுத்தியுள்ளார். மொட்டைக் கடிதம் அனுப்பியுள்ள ஒரு சிறைவாசி. ..
தொடர்ச்சி அடுத்த இதழில்.

வெளியீடு: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி.

No comments: