பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 03-06-2006
கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. சமீப காலமாக சிறைவாசிகள் சம்பந்தமாக வரும் மெயில்கள் பற்றி கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன. விரைவில் பதில் தருவோம் என குறிப்பிட்டிருந்தோம். அல்லாஹ் அருளால் 31.05.2006 அன்று துபை வந்து சேர்ந்த பின்னர் நேரில் கண்டவர்களெல்லாம் இதையே கேட்டனர். 02.06.2006 வெள்ளியன்று துபை பசாரில் கண்டவர்களும் இந்த மெயில்கள் பற்றியே கேட்டனர்.
அனைவருக்கும் அனுப்புவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.
முக்கியமானவர்களுக்கு மட்டும் இது பற்றிய மெயில்களை அனுப்புகிறேன் என்றேன். பசாரிலிருந்து வந்த பின் எமிரேட்ஸ் மெயில் பாக்ஸை ஓப்பன் செய்து பார்த்தபோது 88 மெயில்கள் சிறைவாசிகள் கடித மெயில்கள் பற்றியே இருந்தது. எனவே புதிதாக விளக்கம் எழுதுவதற்கு முன் ஏற்கனவே உள்ளதை அனுப்புவது சிறந்தது. அதுவும் முக்கியமானவர்களுக்கு மட்டும் அனுப்பாமல் அனைவருக்கும் அனுப்புவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.
இந்த கடிதங்கள் பல உண்மைகளை உங்களுக்கு விளக்கும்.
22-05-2006 அன்று த.மு.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அனுப்பிய கடிதம். 03-05-2006 அன்று ரைசுத்தீன் அவர்களுக்கு அனுப்பிய கடிதம். 18-05-2006 அன்று காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பிய கடிதம். 1-5-06 அன்று முக்கிய சிலருக்கு அனுப்பிய கடிதம் என 4 வகையான கடிதங்களை அனுப்பியுள்ளேன். ஏற்கனவே எழுதப்பட்ட இந்த கடிதங்கள் பல உண்மைகளை உங்களுக்கு விளக்கும். இது போக மேலும் தேவைப்படும் விளக்கங்களை விரைவில் தருவேன் இன்ஷh அல்லாஹ்.
No comments:
Post a Comment