பெயர்தான் உலமாக்கள் ஓய்வு ஊதியம். ஆனால் அது பேஷ் இமாம் முஅத்தின்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. உலமாக்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலான உலமாக்கள் அரபிக் கல்லூரிகளில்தான் பணியாற்றுகிறார்கள். எனவே அரபிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பென்சன் கிடைக்க வழி செய்ய வேண்டும். அல்லது இந்த திட்டத்தை பேஷ் இமாம் முஅத்தின் பென்சன் திட்டம் என அறிவிக்க வேண்டும் என உலமாக்கள் விரும்புகிறார்கள் என்று 6.5.07 அன்று நடந்த ஜமாஅத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி பேசினார்.
இதற்கு பதில் அளித்த வக்பு வாரிய தலைவர் S.ஹைதர் அலி அவர்கள் அந்த திட்டம் அரபிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் உண்டு என்றுதான் உள்ளது. அதைக் கூட அறியாததாகத்தான் நமது சமுதாயத்தின் நிலை உள்ளது என வருந்தினார்.
Friday, May 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment