V.S.T. வக்பு அலல் அவ்லாத்தினர் செய்து வரும் மோசடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வக்பு வாரிய தலைவர் மாண்புமிகு ஹைதர் அலி அவர்களிடம் மனு கொடுக்க அந்த பகுதி மக்கள் தயாராகி வந்தனர். அது பற்றிய விபரம் அறிய http://fazlulilahi.blogspot.com/2007/05/blog-post.html இதை கிளிக் செய்து பார்க்கவும்.
எனவே பொதுமக்களை ஏமாற்ற எண்ணிய V.S.T. வக்பு அலல் அவ்லாத் நிர்வாகத்தினர் வக்பு அலல் அவ்லாத் கமிட்டியால் வழங்கப்பட்ட நிலங்களில் வீடுகட்டி இருப்பவர்களுக்கு மாநகராட்சி வீட்டு தீர்வை போட்டு கொடுக்க முடிவு செய்து விட்டது போன்ற மாயை ஏற்படுத்த 5.5.2007 அன்று அமைச்சருக்கு நன்றி அதிகாரிகளுக்கு நன்றி என போஸ்ட்டர் ஒட்டினர். அதிலும் ஏமாறாத மக்கள் 6ஆம் தேதி வந்த வக்பு வாரிய தலைவர் மாண்புமிகு ஹைதர் அலி அவர்களிடம் மனு கொடுக்க ஏராளமான மக்கள் மனுக்களை கொடுத்தனர்.
முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ.வின் V.S.T. வக்பு அலல் அவ்லாத் நிர்வாகத்தின் பொய்ச் செய்தியை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்ட்டர் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
உண்மைக்குப் புறம்பாக செய்தி பரப்பிய V.S.T. வக்பு அலல் அவ்லாத் நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
V.S.T. வக்பு அலல் அவ்லாத் கமிட்டியால் வழங்கப்பட்ட நிலங்களில் வீடுகட்டி இருப்பவர்களுக்கு மாநகராட்சி வீட்டு தீர்வை போட்டு கொடுப்பதாக மக்களிடம் பொய்யை பரப்பி உள்ளார்கள். இன்றைய (11-05-2007) தேதி வரை மேற்படி தீர்வை போடும் திட்டம் அமுலுக்கு வரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்: M.A. நாகூர்கனி, N.அப்துல்லாஹ், A.K..அப்துல் கனி, S.அப்துல் கனி, மேலப்பாளையம்
வன்மையாகக் கண்டிக்கிறோம்
பாரபட்சபோக்கோடு செயல்படும் மண்டல சேர்மன்
S.S .முகம்மது மைதீன்
மண்டல உதவி ஆணையாளர் பொறுப்பு வகிக்கும்
சாந்தி ஆகியோரை
V.S.T.வக்பு அலல் அவ்லாத் நிலங்களுக்கு வீட்டு தீர்வை போடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டத்திற்கு V.S.T. கமிட்டிக்கு சாதகமான நபர்களை மட்டும் அழைத்துவிட்டு பல முக்கியமான ஜமாஅத்தார்களை அழைக்காமல் புறக்கணித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும். ஹாமீம்புரம் முஸ்லிம் ஜமாஅத்& மஸ்ஜித் தவ்பா மேலப்பாளையம்.
5.5.2007 அன்று அமைச்சருக்கு நன்றி அதிகாரிகளுக்கு நன்றி என போஸ்ட்டர் என ஒட்டப்பட்ட போஸ்ட்டர் பிரதடுத்தனமானது என்பதை உண்மைப்படுத்தும் பத்திரிக்கைச் செய்தி.
நடுநிலையாளர் பிரச்சனைகளை விரும்பாதவர் யாரையும் பகைக்காதவர் என்று பெயர் எடுக்க விரும்பும் அமைச்சர் மைதீன் கான் இதில் பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறார். அமைச்சர் சுதாரிப்பாரா?
No comments:
Post a Comment