Monday, May 28, 2007

ஒரு வாரத்தில் இட ஒதுக்கீடு என்பது உண்மையா?

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒடுக்கீடு என்ற அவசர சட்டம் ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்பட இருக்கிறது என்றச் செய்தி காட்டுத் தீ போல் பரவி இருக்கிறது. சன் டி.வி. செய்தி பார்த்த வெளி நாட்டவர் பலர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரியாணி போட்டு செய்தியை பரப்பி இருக்கிறார்கள். பகிர்ந்து இருக்கிறார்கள். தினத்தந்தியின் வெப் சைட்டில் வந்த செய்தியை பாருங்கள்.

பக்கத்திலே உள்ள கர்நாடகாவில் 4 சதவீதம் சிறுபான்மை சமுதாயத்துக்கு என்று இட ஒதுக்கீடு, கேரளாவிலே இட ஒதுக்கீடு, ஆந்திராவிலும் அவ்வாறே இட ஒதுக்கீடு அந்த அடிப்படையில் தமிழகத்திலும் நிலை நாட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அங்கெல்லாம் அப்படி இட ஒதுக்கீடு இப்போது நடைமுறையில் இருக்குமானால் நாளைக்கே அதற்கான ஆணை தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் களிப்பு மிகுதியால் கைதட்டுகிறீர்கள். நானும் உட்சாகத்தோடு அதை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். ஆனால் கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஓரளவு அது நடைமுறையிலே அது இருந்த போதிலும் ஆந்திராவிலே இன்னும் நடைமுறைக்கு வர முடியாமல் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி குறுக்கு பாதையிலே போனவர்கள் குறுக்கு பாதை என்றால் உங்களுக்குப் புரியும் அந்த குறுக்கு பாதையிலே போனவர்கள் அதை தடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இல்லை அது அங்கே அமல்படுத்தப்படுகிறது என்றால் விரைவிலே இந்த வாரத்திலே அதைப்பரிசீலித்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும். அந்த அவசர சட்டத்துக்கு நான் மாத்திரமல்ல நம்முடைய கவர்னரும் கையெழுத்திட தயாராக இருப்பார் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்

இதுதான் அந்தச் செய்தி விரிவாகப் பார்க்க இதை கிளிக் செய்து பார்க்கவும்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=338825&disdate=5/28/2007&advt=1

தினமலர் செய்தி

கர்நாடகத்திலும் கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒரு வாரத்தில் சட்டம் கொண்டு வரப்படும். என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். என்று தினமலர் செய்தி போட்டுள்ளது.

http://www.dinamalar.com/2007may28/political_tn8.asp

தாட்ஸ் தமிழ் செய்தி

முஸ்லீம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், முதல்வர் கருணாநிதி இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள பணிகளை பாராட்டி அவருக்கு உமறு புலவர் விருது வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கருணாநிதி,

இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என கேட்டுகொண்டது போல் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ராஜ்ய சபை துணை தலைவர் ரகுமான் கான், கர்நாடகா மற்றும் கேரளாவில் 50 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்காக 4 சதவீதம் இடஒதுக்கீடு கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் ஒதுக்கியுள்ளனர் என குறிப்பிட்டார்.

அதே போல தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் ஒரிரு வாரத்திற்குள் இயற்றப்படும் என்றார் என தாட்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. . http://thatstamil.oneindia.in/news/2007/05/28/cm.html

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒடுக்கீடு என்ற அவசர சட்டத்தை கருணாநிதி கூறியள்ளபடி ஒரு வாரத்தில் தமிழக அரசு பிறப்பித்தாலும் அது பலனளிக்குமா?
முஸ்லிம்களுக்கு என தனி இட ஒதுக்கீடு அல்ல. 69 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கும் தனி இட (உள்)ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம்தான்.

69 சதவீத இடஒதுக்கீடு என்று பல காலங்களாக பேசப்பட்டு வந்தபோதிலும் 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில்தான் 69 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்தினார். அன்று கோர்ட்டுக்கு போனதுதான் இது.

மக்கள் மன்றமா? கோர்ட்டா பார்த்து விடுவோம் என்று அன்றைய அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் பேசினார்கள். 13 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த 69க்குள்தான் முஸ்லீம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் ஒரிரு வாரத்திற்குள் இயற்றப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: