த.த.ஜ. ஆம்புலன்ஸை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும்.
வருகிற 28.05.2007 அன்று கடையநல்லூர் த.த.ஜ. சார்பில் மாபெரும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த ஆம்புலன்ஸை அர்ப்பணிக்க அண்ணன் பி.ஜெ. வருகிறார். அண்ணன் பி.ஜெ. அர்ப்பணிக்க இருக்கும் இந்த ஆம்புலன்ஸின் அந்தப்புரத்தைப் பார்த்தால் இந்த த.த.ஜ. ஆம்புலன்ஸை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும் என்பதை உணரலாம்.
சகராத் ஹாலில் இருந்த இந்த ஆம்புலன்ஸை ரூபாய் எழுபத்தைந்தாயிரம் கொடுத்து வாங்கியுள்ளார்கள் மதுரையில் உள்ள ஆட்டோமோ ஆஸ்பத்திரியினர். பிறகு தங்களது ஆட்டோமோ ஆஸ்பத்திரியில் ஒரு வருட காலமாக பெட்டில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆம் மதுரை விநாயகா பாடி பில்டரில் ஒரு வருடமாக பாடி வேலை நடந்துள்ளது. புதை குளிக்குள் போக வேண்டியதை போர்வை போர்த்தி புத்தம் புதியது போல் காட்டி உள்ளார்கள்.
ஆர்.சி. புக் இல்லாத ஆம்புலன்ஸை அர்ப்பணிக்க வரும் அண்ணனே வருக.
அண்ணன் பி.ஜெ. அர்ப்பணிக்க இருக்கும் இந்த ஆம்புலன்ஸுக்கு 3ஆவது பார்ட்டியிடமிருந்துதான் ஆர்.சி புக் வாங்கியுள்ளார்கள். அதற்காக சில போலி ஆவணங்களையும் உருவாக்கி உள்ளார்கள். அப்பளம் போல் நொறுங்கும் நிலையில் உள்ளதை ரூபாய் எழுபத்தைந்தாயிரம் கொடுத்து வாங்கி விட்டு 2,25,000 ரூபாய்க்கு விற்றுள்ளது. இதற்கு ஒரிஜினல் ஆர்.சி. புக் கிடையவே கிடையாது.
ஜனாஸாவாக ஆகி விடாமல் இருப்பதற்காக விபத்தில் சிக்கியவர்களை வேகமாக ஏற்றிச் செல்லும்போது இதுவும் ஜனாஸாவாக ஆகி இருப்பவர்களையும் ஜனாஸாவாக ஆக்கி விடும் ஒரிஜினல் ஆர்.சி. புக் இல்லாத இந்த ஆம்புலன்ஸ்.
இந்த ஆர்.சி. புக் இல்லாத ஆம்புலன்ஸை அர்ப்பணிக்க வரும் அண்ணனே வருக வருக என யார்தான் வரவேற்க முடியும்.
இந்த ஆம்லன்ஸை அனுமதித்தால் த.த.ஜ. ஆம்புலன்ஸை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும் என்ற போனை அதிகாரிகள் விரைவாக எதிர் பார்க்கலாம்.
1 comment:
surely very good articles,it will use for every KDNL peoples.
I also want to participate with u
BY; Ilyas
Post a Comment