Monday, May 28, 2007

ஒரு வாரத்தில் இட ஒதுக்கீடு என்பது உண்மையா?

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒடுக்கீடு என்ற அவசர சட்டம் ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்பட இருக்கிறது என்றச் செய்தி காட்டுத் தீ போல் பரவி இருக்கிறது. சன் டி.வி. செய்தி பார்த்த வெளி நாட்டவர் பலர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரியாணி போட்டு செய்தியை பரப்பி இருக்கிறார்கள். பகிர்ந்து இருக்கிறார்கள். தினத்தந்தியின் வெப் சைட்டில் வந்த செய்தியை பாருங்கள்.

பக்கத்திலே உள்ள கர்நாடகாவில் 4 சதவீதம் சிறுபான்மை சமுதாயத்துக்கு என்று இட ஒதுக்கீடு, கேரளாவிலே இட ஒதுக்கீடு, ஆந்திராவிலும் அவ்வாறே இட ஒதுக்கீடு அந்த அடிப்படையில் தமிழகத்திலும் நிலை நாட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அங்கெல்லாம் அப்படி இட ஒதுக்கீடு இப்போது நடைமுறையில் இருக்குமானால் நாளைக்கே அதற்கான ஆணை தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் களிப்பு மிகுதியால் கைதட்டுகிறீர்கள். நானும் உட்சாகத்தோடு அதை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். ஆனால் கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஓரளவு அது நடைமுறையிலே அது இருந்த போதிலும் ஆந்திராவிலே இன்னும் நடைமுறைக்கு வர முடியாமல் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி குறுக்கு பாதையிலே போனவர்கள் குறுக்கு பாதை என்றால் உங்களுக்குப் புரியும் அந்த குறுக்கு பாதையிலே போனவர்கள் அதை தடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இல்லை அது அங்கே அமல்படுத்தப்படுகிறது என்றால் விரைவிலே இந்த வாரத்திலே அதைப்பரிசீலித்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும். அந்த அவசர சட்டத்துக்கு நான் மாத்திரமல்ல நம்முடைய கவர்னரும் கையெழுத்திட தயாராக இருப்பார் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்

இதுதான் அந்தச் செய்தி விரிவாகப் பார்க்க இதை கிளிக் செய்து பார்க்கவும்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=338825&disdate=5/28/2007&advt=1

தினமலர் செய்தி

கர்நாடகத்திலும் கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒரு வாரத்தில் சட்டம் கொண்டு வரப்படும். என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். என்று தினமலர் செய்தி போட்டுள்ளது.

http://www.dinamalar.com/2007may28/political_tn8.asp

தாட்ஸ் தமிழ் செய்தி

முஸ்லீம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், முதல்வர் கருணாநிதி இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள பணிகளை பாராட்டி அவருக்கு உமறு புலவர் விருது வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கருணாநிதி,

இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என கேட்டுகொண்டது போல் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ராஜ்ய சபை துணை தலைவர் ரகுமான் கான், கர்நாடகா மற்றும் கேரளாவில் 50 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்காக 4 சதவீதம் இடஒதுக்கீடு கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் ஒதுக்கியுள்ளனர் என குறிப்பிட்டார்.

அதே போல தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் ஒரிரு வாரத்திற்குள் இயற்றப்படும் என்றார் என தாட்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. . http://thatstamil.oneindia.in/news/2007/05/28/cm.html

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒடுக்கீடு என்ற அவசர சட்டத்தை கருணாநிதி கூறியள்ளபடி ஒரு வாரத்தில் தமிழக அரசு பிறப்பித்தாலும் அது பலனளிக்குமா?
முஸ்லிம்களுக்கு என தனி இட ஒதுக்கீடு அல்ல. 69 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கும் தனி இட (உள்)ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம்தான்.

69 சதவீத இடஒதுக்கீடு என்று பல காலங்களாக பேசப்பட்டு வந்தபோதிலும் 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில்தான் 69 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்தினார். அன்று கோர்ட்டுக்கு போனதுதான் இது.

மக்கள் மன்றமா? கோர்ட்டா பார்த்து விடுவோம் என்று அன்றைய அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் பேசினார்கள். 13 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த 69க்குள்தான் முஸ்லீம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் ஒரிரு வாரத்திற்குள் இயற்றப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடிய பி.ஜெ.

இன்று மதியம் நெல்லையில் பேட்டி அளித்த பி.ஜெ. தங்களது சிறை நிரப்பும் போராட்டத்துக்கு பயந்துதான் இட ஒதுக்கீடு அறிவித்து விட்டதாக அடித்த ஜோக்கை கேட்டு நிருபர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

கிழவி குமரியான கடையநல்லூர் ஆம்புலன்ஸ் கதை பற்றி கேட்டதும் என்ன கேட்கிறீர்கள் என்று கோபமாகியுள்ளார். பழைய வண்டி என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்றதும் இல்லை புது வண்டிதான். அது பற்றிய விபரத்தை எங்கள் மாவாட்ட நிர்வாகிகளிடம் கேளுங்கள் என்று கூறி விட்டு அடுத்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடி இருக்கிறார்.



Sunday, May 27, 2007

சவால்களை ஏற்பாரா? சறுக்கி விழுவரா?

இது களியக்காவிளை.. .. அல்ல கடையநல்லூர். முஸ்ஜிதுல் முபாரக் பள்ளி விவகாரத்தை மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் விவாதிக்கத் தயாரா? விண் டி.வி. பொய்யை.. .. கடையநல்லூர் வீதியில் விவாதிக்கத் தயாரா? சவால் விட்டுள்ளது கடையநல்லூர் ஜாக். இந்த சவாலை ஏற்று இன்று பி.ஜெ. பதில் சொல்வரா?

ஜாக்கிலிருந்து பிரிந்து சென்ற பி.ஜெ.யும் அவருடன் உள்ளவர்களும் காபிர்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார். பி.ஜெ. என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என கடையநல்லூர் மவுலவி கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி செல்லுமிடங்களிலெல்லாம் சவால் விட்டு வருகிறார். இந்த சவாலை பி.ஜெ. இன்று வரை ஏற்கவில்லை.

கிழவியை குமரியாகக் காட்ட இன்று கடையநல்லூர் வரும் பி.ஜெ. இந்த இரு சவால்களையும் ஏற்பாரா? சறுக்கி விழுவரா? பி.ஜெ.யை காபிர் என கூறும் ரஹ்மதுல்லாஹ் இம்தாதியை ஒரே மேடையில் சந்திக்கத் தயார் என அறிவிப்பாரா?

ஜவாஹிருல்லாஹ் முழக்கம்





Saturday, May 26, 2007

இந்த கிழவி தேவையா?

கிழவி குமரியான கதை. கடையநல்லூர் த.த.ஜா. ஆம்புலன்ஸ்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையிலுள்ள இத்துப்போன ஒரு (ஆம்புலன்ஸ்) வாகனத்தை மதுரை வினாயகா பாடி பில்டர்ஸ் நிறுவனத்தினர் வெறும் 75,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள். எந்த வித டாக்குமென்டுகள் இல்லாமலும், ஆர்.சி புக் ரோடு டாக்ஸ் போன்ற சட்ட விதிகளை பின்பற்றாமலும்தான் இதை வாங்கியுள்ளார்கள். கிழவியான இந்த வண்டியை குமரியாக்கிய மதுரை வினாயகா பாடி பில்டர்ஸினரிடமிருந்து 2,25,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கடையநல்லூர் த.த.ஜ. கூறுகிறது.

இத்துப்போன செத்துப்போன 75,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு வாகனத்துக்கு 2,25,000 ரூபாய் கொடுத்து பொது நலம் கருதி குறைந்த விலையில் வாங்கியுள்ளதாக கடையநல்லூர் த.த.ஜ. பீற்றிக் கொள்கிறது.

இந்த தரங்கெட்ட தௌஹீத் ஜமாத் இதற்காக வெளிநாட்டில் வாழும் கடையநல்லூர் தௌஹீத் சகோதரர்களிடம் புதிதாக ஆம்புலன்ஸ் வாங்க இருக்கிறோம் என 4,50,000 வசூல் செய்துள்ளார்கள். பாக்கி 2,25,00 ரூபாயை வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளதாக விஷயமரிந்த தௌஹீத் சகோதரர்களே புலம்பித் திரிகின்றனர்.

இந்தக் கிழவியை அறிமுகப்படுத்த பாக்கர் விபச்சாரத்தை பெருந்தன்மையோடு மன்னித்த அண்ணன் அவர்கள் கடையநல்லுர்ர் வருவதால் தவ்ஹீத் சகோதரர்கள் குஷியாகி இந்தக் கிழவியை பார்த்து குமரி என அண்ணன் சொன்னால்தான் நம்புவோம் என சில தக்லீத் சகோதரர்கள் குதிக்கின்றனர்.

கிழவி குமரியான கதையிலான வண்டி இது. 75,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டதை 2,25,000 ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறுகிறார்கள். வசூலித்த 4,50,000ல் மீதி 2,25,00 ரூபாயை வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்து விட்டார்கள் என செய்தி பரவி விட்டது.

எனவே 28ஆம் தேதி நிகழ்சியில் ஆம்புலன்ஸ் பற்றிய வரவு செலவு கணக்கையும் அதன் டாக்குமென்டுகளையும் காவல்துறை உயர்அதிகாரிகள் முன் சமர்ப்பிப்போம் என கடையநல்லூர் த.த.ஜ.வினரில் சிலர் கூறி விட்டனர். கணக்கு காட்ட முடியாத த.த.ஜ. நிர்வாகிகளோ ஏன் இப்படி வாய் உளறினீர்கள். எப்படி வரவு செலவு கணக்கையும் டாக்குமென்டுகளையும் காட்ட முடியும் என கடிந்துள்ளனர்.

இந்த ஊழல் சம்பந்தமான செய்தி காவல்துறை உயர்அதிகாரிகளுக்கும் சென்று விட்டதாம். எனவே அந்த அதிகாரி வருவாரா? என்ற சந்தேகமும் உள்ளதாம்.

சில சகோதரர்கள் காவலர் ஆம்புலன்ஸ், அரசு ஆஸ்பிடலில் உள்ள வாகனம் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் ஆம்புலன்ஸ் இருக்கும் போது இந்த கிழவி தேவையா எனவும் புலம்பித் திரிகின்றனர்.

Friday, May 25, 2007

வக்பு வாரிய ஆக்ரமிப்புகள்




நமது சமுதாயத்தின் நிலை

பெயர்தான் உலமாக்கள் ஓய்வு ஊதியம். ஆனால் அது பேஷ் இமாம் முஅத்தின்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. உலமாக்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலான உலமாக்கள் அரபிக் கல்லூரிகளில்தான் பணியாற்றுகிறார்கள். எனவே அரபிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பென்சன் கிடைக்க வழி செய்ய வேண்டும். அல்லது இந்த திட்டத்தை பேஷ் இமாம் முஅத்தின் பென்சன் திட்டம் என அறிவிக்க வேண்டும் என உலமாக்கள் விரும்புகிறார்கள் என்று 6.5.07 அன்று நடந்த ஜமாஅத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி பேசினார்.

இதற்கு பதில் அளித்த வக்பு வாரிய தலைவர் S.ஹைதர் அலி அவர்கள் அந்த திட்டம் அரபிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் உண்டு என்றுதான் உள்ளது. அதைக் கூட அறியாததாகத்தான் நமது சமுதாயத்தின் நிலை உள்ளது என வருந்தினார்.

Tuesday, May 22, 2007

பி.ஜே.பி.யின் சேவை நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை.

திருமணமான பி.ஜே.பி. எம்.எல்.ஏ.வின் நிலையே இது என்றால் நாங்கள் சந்நியாசிகள் என்று கூறித் திரியும் பி.ஜெ.பி.களின் நிலையை சொல்லவும் வேண்டுமா?



Sunday, May 20, 2007

மானமுள்ளவர்கள் என நிரூபித்துள்ள கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்கள்.

த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? என்ற தலைப்பில் பேச பி.ஜே.யும் பாக்கரும் தொண்டிக்குப் போனார்கள். இந்த தலைப்பில் பேசுவதற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் பாக்கர் பற்றி வந்துள்ள செய்திக்கு பதில் தாருங்கள். அதற்கு பதில் தந்துவிட்டு த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? என்ற உங்கள் தலைப்பில் பேசுங்கள் என்று சொன்னதும் நெஞ்சு வலி வந்தது போல் பாக்கர் தன் நெஞ்சில் வைக்கிறார். என்ன ஆச்சு பாக்கர் உங்களுக்கு என்று பி.ஜே. பாக்கரை பிடிக்கிறார்.
10 நிமிடம் கரண்ட் இல்லாமல் ஆகி விடுகிறது.
4 மாதங்களுக்கு முன் நாகூரில் இறை நேசன் சொன்னது.'சத்தி நேசன்' ஈ-மெயில் ஆசிரியர் குழுவில் உள்ள 'முற்பகலு'(லுஹாவு)க்கு பாக்கர் என்றாலே பிடிக்காது. அந்த அளவு அவர் மீது பழைய பகை உள்ளது. நெஞ்சு வலி வர மூல காரணமான சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் அது வெளி வரவில்லையே என்று ஆத்திரம் வந்துள்ளது 'முற்பகலு'(லுஹாவு)க்கு. எங்கு சொன்னால் இந்தச் செய்தி நம்மை வந்தடையுமோ அங்கும் போய் சொல்லி உள்ளது. கடைசியாக எதை எழுதினால் இந்தச் செய்தி வெளிவரும் என்று யோசித்துள்ளதோ என்னவோ? 4 மாதங்களுக்கு முன் நாகூர் சென்ற இறை நேசன் அங்குள்ள பள்ளிவாசலில் கூடி இருந்தவர்களிடம் சொல்லிக் காட்டியதை அப்படியே அச்சிடச் செய்து வெளியிட்டு விட்டது. பழைய பாசத்தில் முற்பகலுக்காக பாக்கர் நெஞ்சி வலியை ஒட்டிய செய்தியை கடைசியில் குறிப்பிட்டுள்ளோம்.
இது பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதில் உள்ள முன்னுரை. அதன் முடிவுரையை இதன் கடைசியில் தருகிறோம்.
கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்களின் கீழ் காணும் விளக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து த.த.ஜ.வினரும் விபச்சாரத்துக்கு துணை போகின்றவர்கள் என நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எவன் பொண்டாட்டி எவனோடு போனால் என்ன எனக்கு 5 பணம் என்கிற மாதிரியான மவுலவிகள்தான் த.த.ஜ.வில் உள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் மானமுள்ள கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்களின் அறிக்கை இதோ


பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதை மறுத்த பி.ஜெ. இன்று தரும் வாக்கு மூலம் பாரீர்.







அவசரமாக வெளிப்பட்ட அந்த ஆண் வேறு யாருமல்ல.
மண்ணடி ஒய்.கே. மேன்சன் முன் அன்பார்க்கிங்கில் ஒரு பைக் நிற்கிறது. போலீஸ் வருகிறது. பைக் யாருடையது? லாட்ஜ் பொறுப்பாளி பைக்குக்கு உரியவர் பெயர் சொல்லி இந்த ரூமில் இருப்பார் கூட்டி வா என்கிறார். நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவு திறக்கப்படுகிறது. கதவை திறந்தவர் யாஸ்மின் என்ற பெண். பைக்கை அன்பார்க்கில் விட்டு விட்டு வந்துள்ளவர் பெயரை சொல்லி கேட்டதற்கு இல்லை என்று பதில் சொல்லி உள்ளார் யாஸ்மின். போலீஸ் வந்துள்ளது என்றதும் ஒரு ஆண் மகன் அவசரமாக வெளிப்படுகிறார். அவர் வேறு யாருமல்ல தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் டைரக்டர் பாக்கர்தான் அந்த ஆண் மகன். பெண் யார்? என்று கேட்டால் ஐ.ஏ.எஸ். கோச்சிங்குக்கு வந்துள்ளது என்று உளறி இருக்கிறார். ஐ.ஏ.எஸ். கோச்சிங் காலம் இது அல்லவே என்ற குறுக்கு கேள்வியில் மாட்டிக் கொண்டார்.
முபாஹலாவுக்கு அழைத்தது எப்படி?
மீடியா வேல்டு பெயரில் போடப்பட்டுள்ள லாட்ஜ் ரூமில் யாஸ்மின் என்ற பெண். செய்தி காட்டுத் தீயாக பறக்கிறது. சத்திய நேசன் ஆசிரியர் முற்பகல் போன்றோருக்கு சந்தோஷமோ சந்தோஷம். சத்திய நேசன் மெயிலின் ஒரிஜினல் ஆசிரியரோ தலையில் அடித்துக் கொண்டு பரபரக்கிறார். உடனே தலையிட்டு என்ன கேஸ் வேண்டுமானாலும் பதியுங்கள் விபச்சார வழக்காக பதிந்து விடாதீர்கள் என்று கெஞ்சி கூத்தாடி பாக்கரை காப்பாற்றி விட்டு தனது மானத்தையும் காப்பாற்றி விடுகிறார். யாஸ்மின், 10. புது ஆயக்குடி, பழனி. என்ற முகவரியில் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் சுற்று வட்டாரங்களில் விசாரித்தால் உண்மைகள் வெளி வரும். இன்று சத்திய நேசன் முன்பு இறை நேசன் 1988ல் உண்மை நேசன் ஒரு பள்ளிவாசல் பெயரால் கடிதம் வெளியிட்டு முபாஹலாவுக்கு அழைத்தது எப்படி? அடுத்த இதழில். (இது பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதில் உள்ள அதன் முடிவுரை.)

த.த.ஜ. மவுலவிகளுக்கு படித்தவர்கள் என்றாலே பிடிக்காது பாக்கர் என்றால் அறவே பிடிக்காது நந்தினி விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன். தங்களுக்கும் ஒரு நந்தினியை செட் பண்ணி பி.ஜெ. தருவார் என எதிர் பார்த்து மவுனியாக இருக்கிறார்களா?

Saturday, May 19, 2007

சகராத் ஹாலில் இருந்த ஆம்புலன்ஸ்

த.த.ஜ. ஆம்புலன்ஸை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும்.
வருகிற 28.05.2007 அன்று கடையநல்லூர் த.த.ஜ. சார்பில் மாபெரும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த ஆம்புலன்ஸை அர்ப்பணிக்க அண்ணன் பி.ஜெ. வருகிறார். அண்ணன் பி.ஜெ. அர்ப்பணிக்க இருக்கும் இந்த ஆம்புலன்ஸின் அந்தப்புரத்தைப் பார்த்தால் இந்த த.த.ஜ. ஆம்புலன்ஸை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும் என்பதை உணரலாம்.


சகராத் ஹாலில் இருந்த இந்த ஆம்புலன்ஸை ரூபாய் எழுபத்தைந்தாயிரம் கொடுத்து வாங்கியுள்ளார்கள் மதுரையில் உள்ள ஆட்டோமோ ஆஸ்பத்திரியினர். பிறகு தங்களது ஆட்டோமோ ஆஸ்பத்திரியில் ஒரு வருட காலமாக பெட்டில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆம் மதுரை விநாயகா பாடி பில்டரில் ஒரு வருடமாக பாடி வேலை நடந்துள்ளது. புதை குளிக்குள் போக வேண்டியதை போர்வை போர்த்தி புத்தம் புதியது போல் காட்டி உள்ளார்கள்.


ஆர்.சி. புக் இல்லாத ஆம்புலன்ஸை அர்ப்பணிக்க வரும் அண்ணனே வருக.


அண்ணன் பி.ஜெ. அர்ப்பணிக்க இருக்கும் இந்த ஆம்புலன்ஸுக்கு 3ஆவது பார்ட்டியிடமிருந்துதான் ஆர்.சி புக் வாங்கியுள்ளார்கள். அதற்காக சில போலி ஆவணங்களையும் உருவாக்கி உள்ளார்கள். அப்பளம் போல் நொறுங்கும் நிலையில் உள்ளதை ரூபாய் எழுபத்தைந்தாயிரம் கொடுத்து வாங்கி விட்டு 2,25,000 ரூபாய்க்கு விற்றுள்ளது. இதற்கு ஒரிஜினல் ஆர்.சி. புக் கிடையவே கிடையாது.

ஜனாஸாவாக ஆகி விடாமல் இருப்பதற்காக விபத்தில் சிக்கியவர்களை வேகமாக ஏற்றிச் செல்லும்போது இதுவும் ஜனாஸாவாக ஆகி இருப்பவர்களையும் ஜனாஸாவாக ஆக்கி விடும் ஒரிஜினல் ஆர்.சி. புக் இல்லாத இந்த ஆம்புலன்ஸ்.
இந்த ஆர்.சி. புக் இல்லாத ஆம்புலன்ஸை அர்ப்பணிக்க வரும் அண்ணனே வருக வருக என யார்தான் வரவேற்க முடியும்.
இந்த ஆம்லன்ஸை அனுமதித்தால் த.த.ஜ. ஆம்புலன்ஸை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும் என்ற போனை அதிகாரிகள் விரைவாக எதிர் பார்க்கலாம்.

Thursday, May 17, 2007

தி.மு.க. கூட்டணியில் உள்ள த.மு.மு.க.வின் போராட்டம்.

தி.மு.க. கூட்டணியில் த.மு.மு.க. உள்ளதால் எந்த போராட்டமும் த.மு.மு.க. நடத்தாது என்று பரப்பப்படும் செய்தி பொய்யானது என்பதை நிரூபிக்கும் செய்தி.
கருணாநிதியை எதிர்த்துப் போராடினால் ஆதரவாக புரட்சியம்மா வருவாங்க பி.ஜெ.யின் சிறப்புப் பேட்டி விரைவில் எதிர் பாருங்கள்

போராட்டம் வெடிக்கும்.

V.S.T. வக்பு அலல் அவ்லாத்தினர் செய்து வரும் மோசடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வக்பு வாரிய தலைவர் மாண்புமிகு ஹைதர் அலி அவர்களிடம் மனு கொடுக்க அந்த பகுதி மக்கள் தயாராகி வந்தனர். அது பற்றிய விபரம் அறிய http://fazlulilahi.blogspot.com/2007/05/blog-post.html இதை கிளிக் செய்து பார்க்கவும்.
எனவே பொதுமக்களை ஏமாற்ற எண்ணிய V.S.T. வக்பு அலல் அவ்லாத் நிர்வாகத்தினர் வக்பு அலல் அவ்லாத் கமிட்டியால் வழங்கப்பட்ட நிலங்களில் வீடுகட்டி இருப்பவர்களுக்கு மாநகராட்சி வீட்டு தீர்வை போட்டு கொடுக்க முடிவு செய்து விட்டது போன்ற மாயை ஏற்படுத்த 5.5.2007 அன்று அமைச்சருக்கு நன்றி அதிகாரிகளுக்கு நன்றி என போஸ்ட்டர் ஒட்டினர். அதிலும் ஏமாறாத மக்கள் 6ஆம் தேதி வந்த வக்பு வாரிய தலைவர் மாண்புமிகு ஹைதர் அலி அவர்களிடம் மனு கொடுக்க ஏராளமான மக்கள் மனுக்களை கொடுத்தனர்.
முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ.வின் V.S.T. வக்பு அலல் அவ்லாத் நிர்வாகத்தின் பொய்ச் செய்தியை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்ட்டர் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
உண்மைக்குப் புறம்பாக செய்தி பரப்பிய V.S.T. வக்பு அலல் அவ்லாத் நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
V.S.T. வக்பு அலல் அவ்லாத் கமிட்டியால் வழங்கப்பட்ட நிலங்களில் வீடுகட்டி இருப்பவர்களுக்கு மாநகராட்சி வீட்டு தீர்வை போட்டு கொடுப்பதாக மக்களிடம் பொய்யை பரப்பி உள்ளார்கள். இன்றைய (11-05-2007) தேதி வரை மேற்படி தீர்வை போடும் திட்டம் அமுலுக்கு வரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்: M.A. நாகூர்கனி, N.அப்துல்லாஹ், A.K..அப்துல் கனி, S.அப்துல் கனி, மேலப்பாளையம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
வன்மையாகக் கண்டிக்கிறோம்

பாரபட்சபோக்கோடு செயல்படும் மண்டல சேர்மன்

S.S .முகம்மது மைதீன்
மண்டல உதவி ஆணையாளர் பொறுப்பு வகிக்கும்
சாந்தி ஆகியோரை
V.S.T.வக்பு அலல் அவ்லாத் நிலங்களுக்கு வீட்டு தீர்வை போடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டத்திற்கு V.S.T. கமிட்டிக்கு சாதகமான நபர்களை மட்டும் அழைத்துவிட்டு பல முக்கியமான ஜமாஅத்தார்களை அழைக்காமல் புறக்கணித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும். ஹாமீம்புரம் முஸ்லிம் ஜமாஅத்& மஸ்ஜித் தவ்பா மேலப்பாளையம்.
5.5.2007 அன்று அமைச்சருக்கு நன்றி அதிகாரிகளுக்கு நன்றி என போஸ்ட்டர் என ஒட்டப்பட்ட போஸ்ட்டர் பிரதடுத்தனமானது என்பதை உண்மைப்படுத்தும் பத்திரிக்கைச் செய்தி.
நடுநிலையாளர் பிரச்சனைகளை விரும்பாதவர் யாரையும் பகைக்காதவர் என்று பெயர் எடுக்க விரும்பும் அமைச்சர் மைதீன் கான் இதில் பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறார். அமைச்சர் சுதாரிப்பாரா?

Saturday, May 12, 2007

கருணாநிதி குடித்ததோ மேலப்பாளையம் தண்ணீர்.

மேலப்பாளையவாசிகள் அப்பாவிகள் ஏமாளிகள்.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளருமான மாண்புமிகு எஸ். ஹைதர் அலி ஸாஹிப் அவர்கள் 6.5.2007 ஞாயிறன்று நெல்லை மாநகருக்கு வருகை தந்தார்கள். நெல்லை மாநகரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். இறுதியாக இரவு 8.30மணிக்கு மேலப்பாளையம் அல்லாமா இக்பால் பசார் திடலில் மேலப்பாளையம் அனைத்து பள்ளி ஜமாஅத்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டோ காஜா அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள் நுகர்வோர் என்ற தலைப்பில் மார்க்கப் பிரச்சார உரையாற்றினார். கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியை அறிமுக உரையாற்றுமாறு பணிக்கப்பட்டது. அவர் ஆற்றிய உரையின் கரு.
மேலப்பாளையமே இருண்டு போய் இருந்தது.
அறிமுக உரையாற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளேன். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளருமான மாண்புமிகு அண்ணன் எஸ். ஹைதர் அலி அவர்களுக்கு மேலப்பாளையத்தில் அறிமுகம் தேவை இல்லை. அவரை யார் மறந்தாலும் மேலப்பாளையவாசிகள் அவரை மறக்க மாட்டார்கள் மறக்க முடியாது. 1997 ஆம் ஆண்டு நடந்த அசம்பாவித சம்பவங்களினால் மேலப்பாளையம் ஒரு தீவு போல் ஆகி இருந்தது. ஊரில் இருந்தவர்கள் ஊரை விட்டு வெளியே போக முடியாது. வெளியூரிலிருந்தவர்கள் ஊருக்கள் வர முடியாது. இப்படி மேலப்பாளையம் மற்ற ஊர்களுடன் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டிருந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலப்பாளையமே இருண்டு போய் இருந்தது.
அறிமுகம் தேவை இல்லை.
இந்த இக்கட்டான நேரத்தில் மேலப்பாளையம் நகருக்குள் வந்து ஒரு வாரம் முகாமிட்டு களப் பணியாற்றிவர்தான் இன்று தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக ஆகி இருக்கும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் எஸ். ஹைதர் அலி அவர்கள். வக்பு வாரிய தலைவர் வருகிறார் என நான் அழைப்புக் கொடுக்கச் சென்றபொழுது காங்ரஸ் கட்சியைச் சார்ந்த முஹம்மது அலி அவர்களும் இதனை நினைவு கூர்ந்தார்கள். எனவே அவருக்கு அறிமுகம் தேவை இல்லை.
அவரை உயர்வுபடுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
12 ஆண்டு காலமாக சமுதாயத்துக்காக கோரிக்கைகளை எழுதி ஆட்சியாளர்களைத் தேடிச் சென்று கோரிக்கை மனுக்களை கொடுத்துக் கொண்டிருந்தவர் அண்ணன் எஸ். ஹைதர் அலி அவர்கள். இன்று சமுதாயம் கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்க கோரிக்கை மனுக்களை வாங்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். கோரிக்கை மனுக்களை கொடுக்கும் நிலையிலிருந்து கோரிக்கை மனுக்களை வாங்கும் நிலைக்கு அவரை உயர்வுபடுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
மக்களை விட்டும் அந்நியப்பட்டு இருந்தார்கள்.
நான் இங்கு எந்த கட்சி சார்பிலும் பேசவில்லை. ஒரு மேலப்பாளையம்வாசி என்ற முறையில் பேசுகிறேன். இங்கு கூடி இருக்கும் ஜமாஅத்தார் சார்பில் பேசுகிறேன். இதுவரை எத்தனையோ வக்பு வாரிய தலைவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழ் பேசும் வக்பு வாரிய தலைவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை வந்த வக்பு வாரிய தலைவர்கள் அனைவரும் உருது பேசும் முஸ்லிம்கள் என்றுதான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். காரணம் அவர்கள் அனைவரும் அந்த அளவுக்கு மக்களை விட்டும் அந்நியப்பட்டு இருந்தார்கள்.
பொது மக்கள் உங்களிடம் அதிகமாகவே எதிர் பார்க்கிறார்கள்.
நீங்கள் அப்படி இல்லை உங்களை மக்கள் விளங்கி வைத்திருக்கிறார்கள். இதுவரை வந்த வக்பு வாரிய தலைவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்சியின் சார்பானவர்களாகத்தான் மக்களால் கருதப்பட்டார்கள். அதனாதல்தான் அவர்கள் வக்பு வாரிய தலைவர்களாக பொறுப்பு ஏற்றபொழுது பொது மக்கள் அங்கு கூடவில்லை. அவர்களது கட்சிகாரர்கள் கூட கூடியது இல்லை. வக்பு மெம்பர்கள் மட்டுமே வந்திருப்பார்கள். ஆனால் நீங்கள் வக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்று விட்டு வரும்பொழுது வெளியில் பொது மக்கள் கூடி இருந்ததை கண்டீர்கள். பொது மக்கள் உங்களிடம் அதிகமாகவே எதிர் பார்க்கிறார்கள்.
எந்தக் கோரிக்கைகளாக இருந்தாலும் உங்களிடம்தான் வைப்போம்.
1997ஆம் ஆண்டு துபை வந்திருந்தபொழுது மேலப்பாளையம் நலனுக்காக உங்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன். அப்பொழுது த.மு.மு.க மாநில பொதுச் செயலாளர் என்ற பொறுப்பைத் தவிர வேறு அரசு ரீதியான எந்தப் பொறுப்பிலும் நீங்கள் இருக்கவில்லை. இருந்தாலும் உங்களால் முடியும் என்ற நம்பிக்கையில் கோரிக்கை வைத்தேன். இன்று அரசு ரீதியான பொறுப்பில் இருக்கிறீர்கள். வக்பு வாரிய தலைவராகத்தானே இருக்கிறேன் அதற்கு சம்பந்தம் இல்லாத துறை கோரிக்கைகளை வைக்கிறீர்களே என்று சொல்லக் கூடாது. எந்தக் கோரிக்கைகளாக இருந்தாலும் உங்களிடம்தான் வைப்போம்.
பெண்கள் நிலை எப்படி இருக்கும் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களைப் பொறுத்த வரை நீங்கள் வக்பு வாரிய தலைவர் மட்டும்தான். எங்களைப் பொறுத்த வரை அனைத்து துறை அமைச்சரும் நீங்கள்தான் எங்களுக்கு. எனNவு உங்களிடம்தான் அனைத்து கோரிக்கைகளையும் வைப்போம். மேலப்பாளையம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பிளாட்பாரம் கிடையாது. சமீபத்திலே நாகர்கோயில் செல்வதற்காக மேலப்பாளையம் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றேன். கழுத்துக்கு மேலே படி இருக்கிறது. முஸ்லிம் பெண்களெல்லாம் அதில் ஏற ரொம்ப ரொம்ப கஸ்டப்படுகிறார்கள். ஆண்கள் நிலையே கஸ்டம் என்றால் பெண்கள் நிலை எப்படி இருக்கும் புரிந்து கொள்ளுங்கள்.
அந்த அளவுக்கு பரிதாபமான பிள்ளை அது.
எனவே ரெயில்வே இணை அமைச்சர் வேலு அவர்களிடம் பேசுவீர்களோ லாலுவிடம் பேசுவீர்களோ எங்களுக்குத் தெரியாது. மேலப்பாளையம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பிளாட்பாரம் வேண்டும். இந்தக் கோரிக்கையை உங்களிடமே வைக்கிறோம். எப்பொழுது பார்த்தாலும் எங்கள் ஊர் எங்கள் ஊர் என நான் சொல்வதாகச் சொல்கிறீர்கள். எங்கள் ஊர் மக்கள் மேலப்பாளையவாசிகள் எந்த அளவுக்கு அப்பாவிகள் ஏமாளிகள் என்பதைச் சொல்லுகிறேன் கேளுங்கள். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். மேலப்பாளையம் என்ற பிள்ளை அழாது. அழவும் தெரியாது. அடித்தாலும் அழாது அந்த அளவுக்கு பரிதாபமான பிள்ளை அது.
மேலப்பாளையம் பஸ் நிலையம் என்று பெயர் வைக்கக் கூடாதா?
உதாரணத்துக்கு மேலப்பாளையம் எல்கைக்குள் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இதற்கு காயிதே மில்லத் பெயர் வைக்க வேண்டும் என்றார்கள். மறுத்து விட்டார்கள். அதை விட்டு விடுவோம் மேலப்பாளையம் எல்கைக்குள் இருக்கும் பஸ் நிலையத்துக்கு குறைந்த பட்சம் மேலப்பாளையம் பஸ் நிலையம் என்று பெயர் வைக்கக் கூடாதா?
பெரியாரா அண்ணாவா பழங்கா நத்தமா? மாட்டுத் தாவணியா?
இங்கிருந்து மதுரை சென்றால் மதுரையா என கேட்கமாட்டான். பெரியாரா அண்ணாவா பழங்கா நத்தமா? மாட்டுத் தாவணியா? என்றுதான் கேட்பார்கள். இந்த 4 பஸ் நிலையங்களும் மதுரை என்ற அந்த மாநகர் எல்கைக்குள்தான் இருக்கின்றன. இங்கிருந்து நாகர்கோயில் போனால் மீனாட்சிபுரமா? வடசேரியா? என கேட்பார்கள். இரண்டுமே நாகர்கோயில் என்ற நகராட்சி எல்கைக்குள்தான் இருக்கின்றன.
வண்ணாரப் பேட்டை பாளையங்கோட்டை என்றெல்லாம் டிகட் கொடுப்பார்கள்.
மேலப்பாளையம் எல்கைக்குள் இருக்கும் பஸ் நிலையத்திற்கு மேலப்பாளையம் என்ற பெயர் கிடையாது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் என பெயர் வைத்துள்ளார்கள். மதுரை, திருச்சி சென்னை போன்ற வட பகுதியிலிருந்தோ தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற கிழக்குப் பகுதியிலிருந்தோ வரும்போது சங்கர் நகர், தாழையூத்து, திருநெல்வேலி ஜங்ஷன், வண்ணாரப் பேட்டை பாளையங்கோட்டை என்றெல்லாம் டிகட் கொடுப்பார்கள். இவை அனைத்தும் திருநெல்வேலி என்ற மாநகராட்சி பகுதியில்தான் உள்ளன.
இழிச்ச வாயன் மேலப்பாளையத்துக்காரன்.
மேலப்பாளையம் என்ற பெயரில் மட்டும் டிகட் கொடுக்க மாட்டார்கள். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் என்றுதான் டிகட் கேட்பார்கள் டிகட் கொடுப்பார்கள். மேலப்பாளையம் என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள். ஏன்னா இழிச்ச வாயன் மேலப்பாளையத்துக்காரன்.
தூங்கியது நாம் அல்லவா.
இப்பொழுது வந்த பஸ் நிலையம்தான் அப்படி என்றால் ரயில் நிலையத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருச்செந்தூருக்கு போகும் வழியில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மேலப்பாளையத்துக்கு உட்பட்ட மேலப்பாளையத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரயில் நிலையம் அமைந்தது. அதற்கு குரிச்சி ரெயில் நிலையம் என பெயர் வைத்தார்கள். குரிச்சி என்பது மேலப்பாளையம் எல்கைக்குட்பட்ட ஒரு சிறு பகுதி. குரிச்சி ரெயில் நிலையம் என பெயர் வைத்ததற்கு குரிச்சி வாழ் இந்து மக்களை குறை சொல்ல முடியாது. அவர்களது உணர்வை ஆர்வத்தை மதிக்கிறோம். தூங்கியது நாம் அல்லவா.
மேலப்பாளையம் என பெயர் வர வழி செய்தோம்.
நாகர்கோயில் கன்னியாகுமரி ரயில் பாதை அமைத்தார்கள். மேலப்பாளையத்துக்கு உட்பட்ட மேலப்பாளையத்தின் மேற்கு பகுதியில் ரயில் நிலையம் அமைந்தது. அதற்கு சந்தனம்மாள்புரம் என பெயர் வைத்தார்கள். சந்தனம்மாள்புரம் என்பது மேலப்பாளையம் எல்கைக்குட்பட்ட இந்து மக்கள் மட்டும் வாழும் ஒரு சிறு தெருவின் பெயர். இதிலும் சந்தனம்மாள்புரம் வாழ் இந்து மக்களை குறை சொல்ல மாட்டோம். அவர்களது உணர்வை ஆர்வத்தை மதிக்கிறோம். அதிலும் கண்டு கொள்ளாமல் இருந்தது நாம் அல்லவா. 1972இல் மாணவர்களாக இருந்த நாங்கள் தலையிட்டு அதற்கு மேலப்பாளையம் என பெயர் வர வழி செய்தோம்.
தொழில் வளம் பெற வழி பிறக்கும்.
பஸ் நிலையம் ரெயில் நிலையம் பெயர்களால் என்ன பயன் என எண்ணாதீர்கள். திருநெல்வேலி மநாகராட்சிக்கு உட்பட்ட திருநெல்வேலி ஜங்ஷன், திருநெல்வேலி டவுண், வண்ணாரப் பேட்டை பாளையங்கோட்டை, தச்சநல்லூர், பேட்டை அடுத்துள்ள சங்கர் நகர், தாழையூத்து என எல்லாப் பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளன. மேலப்பாளையம் மட்டும் எல்லா வகையிலும் பின் தங்கி உள்ளது. மேலப்பாளையம் பகுதியில் உள்ள இந்த பஸ் நிலையத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பஸ்கள் வருகின்றன. காலப் போக்கில் மற்ற மாநிலங்களிலிருந்தும் பஸ்கள் வரும். இதனால் மேலப்பாளையம் என்ற ஊர் மேலும் மேலும் பல நகரங்களிலும் அறிமுகமாகும். தொழில் வளம் பெற வழி பிறக்கும்.
மேலப்பாளையம் ரெயில் நிலையம் திட்டமிட்டு டம்மி ஆக்கப்படுகிறது.
அதுபோல் ஒரு ரெயில் நிலையத்திற்கு பெயர் வைத்து விட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலுமுள்ள கம்யூட்டர்களிலும் பெயர் பதிவாகி விடும். திருநெல்வேலி ஜங்ஷன், திருநெல்வேலி டவுண் என ரெயில் நிலையங்கள் உள்ளன. திருச்சி ஜங்ஷன், திருச்சி டவுண் என ரெயில் நிலையங்கள் உள்ளன. இப்படி ஒரே ஊரின் பெயரில் இரண்டு ரெயில் நிலையங்கள் உள்ளன. மேலப்பாளையம் பெயரால் மட்டும் ரெயில் நிலைய பெயர் வைக்க கஸ்டமாக இருக்கிறது. அப்படியே பெயர் வைத்து விட்டாலும். அந்த மேலப்பாளையம் ரெயில் நிலையம் திட்டமிட்டு டம்மி ஆக்கப்படுகிறது.
மேலப்பாளையம் ரெயில் நிலையத்தை புறக்கணிக்கும் நிலை.
திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரையிலான அனைத்து ரெயில் நிலையங்களும் நல்ல முறையில் கட்டப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் மாதிரி அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலப்பாளையம் ரெயில் நிலையம் மட்டும் கரடு முரடான மேடு பள்ளங்களாக கபரஸ்தான் மாதிரி காட்சி அளிக்கிறது. இதனால் மேலப்பாளையம்வாசிகள் கூட மேலப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து போகாமல் திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து போகிறார்கள். மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் வந்திறங்கமால் திருநெல்வேலி ஜங்ஷன் வந்திறங்குகிறார்கள். மேலப்பாளையவாசிகளே மேலப்பாளையம் ரெயில் நிலையத்தை புறக்கணிக்கும் நிலை.
அதற்குப் பெயர் பாளையங்கோட்டை மத்திய சிறை.
திருநெல்வேலியிலே ஒரு மத்திய சிறை இருக்கிறது. அதற்கு பாளையங்கோட்டை மத்திய சிறை என்று பெயர். அது பாளையங்கோட்டை பகுதியிலா இருக்கிறது? மேலப்பாளையம் எல்கையில் இருக்கிறது. அந்த மத்திய சிறைக்கு தண்ணீர் மேலப்பாளையம் பஞ்சாயத்திருந்து போனது. பிறகு நகராட்சியானதும் மேலப்பாளையம் நகராட்சியிலிருந்து தண்ணீர் போனது. இப்பொழுது மாநகராட்சியான பின்னரும் மேலப்பாளையம் மண்டலத்திலிருந்துதான் தண்ணீர் போகிறது. ஆனால் அதற்குப் பெயர் பாளையங்கோட்டை மத்திய சிறை. பெயர்களால் என்ன பயன் என கேட்பவர்களுக்கு இதில் மிகத் தெளிவான பதில் இருக்கிறது.
கருணாநிதி குடித்ததோ மேலப்பாளையம் தண்ணீர்.
தமிழக முதல்வர் கருணாநிதி பாளையங்கோட்டை என்ற பெயரால் உள்ள சிறையினிலே இருந்ததால் பாளையங்கோட்டை சிறையினிலே... என்ற பாடல் பாடப்பட்டது. அதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் அந்த ஊர் பிரபலமானது. கருணாநிதி முதல்வராக வரும்பொழுதெல்லாம் பாளையங்கோட்டை என்ற பெயரால் உள்ள சிறையினிலே குடித்த தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விதமாக பாளையங்கோட்டைக்கு என ஏதாவது திட்டங்கள் அறிவிக்கிறார். அவர் குடித்ததோ மேலப்பாளையம் தண்ணீர். நன்றி செலுத்துவதோ பாளையங்கோட்டைக்கு.
மேலப்பாளையம் பெயரில் கோட்டை விட்டது.
கருணாநிதி முதல்வராக வரும்பொழுதெல்லாம் அடிக்கடி பாளையங்கோட்டை வந்து செல்கிறார். அதே காரணத்துக்காக அவரது அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பாளையங்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். அத்தோடு அவர்கள் இலாகாக சார்பாக ஏதாவது திட்டங்களையும் அறிவித்துச் செல்கின்றனர். மேலப்பாளையம் பெயரில் கோட்டை விட்டது. அதனால் பாளையங்கோட்டை பயன் பெறுகிறது.
வயல்களை இழந்தவர்கள் மேலப்பாளையவாசிகளான முஸ்லிம்கள்.
1970இல் மேலப்பாளையத்தில் 80 ஏக்கர் விளை நிலத்தை ரெயில்வே இலாகா எடுத்துக் கொண்டது. இதனால் வயல்களை இழந்தவர்கள் மேலப்பாளையவாசிகளான முஸ்லிம்கள். திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் எனும் சரக்கு வண்டிகள் நிலையத்தை மேலப்பாளையத்தில் அமைக்கவே 80 ஏக்கர் விளை நிலத்தை அரசு எடுத்தது. இது அமைந்திருந்தால் மேலப்பாளையம் ஒரு போக்கு வரத்து உள்ள இடமாக ஆகி இருக்கும். அதை ஒட்டி வேறு தொழில் வளங்களும் தோன்றி இருக்கும். பொருளாதாரத்திலும் மேலப்பாளையம் மேம்பாடு அடைந்திருக்கும்.
சரக்கு வண்டிகள் நிலையம் திட்டம் கைவிடப்பட்டது.
சரக்கு வண்டிகள் நிலையம் மேலப்பாளையத்தில் அமைத்தால் ரயில்வே கேட் அடிக்கடி பூட்டப்படும். அதனால் திருநெல்வேலி டவுணுக்கு போய் வரும் மேலப்பாளையவாசிகளின் போக்கு வரத்து பாதிக்கப்படும் எனவே மேலப்பாளையத்தில் அமைக்கவே வேண்டாம் என எதிர்ப்புத் தெரிவிக்க வைத்தார்கள். அப்பாவி மேலப்பாளையவாசிகளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மேலப்பாளையத்தில் சரக்கு வண்டிகள் நிலையம் என்ற திட்டம் கைவிடப்பட்டது. இப்பொழுது ஒரு நாளைக்கு 14 தடவைக்கு மேல் ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. மேலப்பாளையம் பின்னடைவுக்கு மேலப்பாளையவாசிகளே காரணம்.
சரக்கு வண்டிகள் நிலையம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
டவுண் போக்கு வரத்து பாதிக்கப்படும் என்றால் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். இந்த அறிவு கூட இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள். மேலப்பாளையம் முஸ்லிம்களிடமிருந்து கையகப்படுதத்தப்பட்ட வயல்கள் அனைத்தையும் இன்று முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இப்பொழுதும் அந்த நிலம் ரெயில்வே இலாகாவுக்கு சொந்தமானதுதான். எனவே டவுண் மேலப்பாளையம் வழியில் மேம் பாலம் அமைத்து அந்த சரக்கு வண்டிகள் நிலையம் திட்டத்தை நிறைவேற்ற வழி செய்ய வேண்டும்.
வேலைக்குச் சென்று வந்தவர்கள் மேலப்பாளையவாசிகள்.
முன்பு நூல் மில் நிலையம் வர இருந்தது. மேலப்பாளையத்தில் மில் தொழில் வந்தால் கைத் தொழிலான நெசவுத் தொழில் பாதிக்கப்படும் என்றார்கள். சரக்கு வண்டிகள் நிலையம் என்ற திட்டம் கைவிடப்பட எப்படி மேலப்பாளையவாசிகள் காரணமாக ஆக்கப்பட்டர்களோ அதுபோல்தான் முன்பு மில் தொழில் வர தடையாக மேலப்பாளையவாசிகள் ஆக்கப்பட்டார்கள். ஒட்டு மொத்த மேலப்பாளையவாசிகளும் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மேலப்பாளையத்திற்கு வர இருந்த மில் தொழில் திருநெல்வேலி பேட்டைக்குச் சென்றது. அந்த பேட்டை மில்லுக்கு இரவு பகல் என்று பாராமல் இரவு 12மணிக்கும் பகல் ஒரு மணிக்கும் மழை வெயில் என்று பாராமல் தினமும் வேலைக்குச் சென்று வந்தவர்கள் மேலப்பாளையவாசிகள்.
கைத்தறி தொழில் இன்று முற்றிலும் அழிந்து விட்டது.
அதற்கு முன்னர் மொரார்ஜி, மூல்சந்த் போன்ற ஏராளமான மின் தறி துணி மில்கள் மேலப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட இருந்தது. அப்பொழுதும் கைத் தொழிலான நெசவுத் தொழில் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். அப்பாவிகளான மேலப்பாளையவாசிகளைக் கொண்டே அந்த திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து கைவிடப்பட வைத்தார்கள். அந்த துணி மில்கள் பம்பாயில் அமைக்கப்பட்டன. பம்பாயில் அமைக்கப்பட்ட அந்த துணி மில்களிலும் போய் வேலை செய்தவர்கள் மேலப்பாளையவாசிகளே. எந்த கைத் தொழிலான நெசவுத் தொழில் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவித்தார்களோ அந்த கைத்தறி தொழில் இன்று முற்றிலும் அழிந்து விட்டது.
மேலப்பாளையவாசிகள் அப்பாவிகள் ஏமாளிகள்.
எனவே தொழில் கல்விக் கூடமோ, ஆசிரியர் பயிற்சிக் கூடமோ, கல்லுரியோ வக்பு வாரியம் சார்பில் அமைத்துத் தர வேண்டும். மேலப்பாளையத்தை முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும். அதற்குரிய சரியான திட்டத்தை வகுத்து வக்பு வாரியம் சார்பில் அமைத்து தர வேண்டும். அப்படி அமைக்கப்படும்பொழுது கூட சரக்கு வண்டிகள் நிலையம், நூல் மில் நிலையம், மின் தறி துணி மில்கள் வர எந்த மேலப்பாளையவாசிகள் தடையாக ஆக்கப்பட்டார்களோ அவர்களைக் கொண்டே எதிர்ப்பு தெரிவிக்க வைக்கப்படுவார்கள். அப்பொழுது நீங்களும் பின் வாங்கி விடாமல் மேலப்பாளையவாசிகள் அப்பாவிகள் ஏமாளிகள் என்பதை கவனத்தில் கொண்டு அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

Sunday, May 06, 2007

கலீமுல்லாஹ்வை வஞ்சம் தீர்த்த பி.ஜெ.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
த.த.ஜ. மாவட்ட தலைமைக்கு எதிராக மாநில தலைமை கூட்டிய போட்டி பொது(மக்கள்)குழு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பிரபல கிரிமிமினல் பேர்வழி பி.ஜெ. அவர்கள் திருவாளர் பாக்கர். மீது விபச்சாரக் குற்றச்சாட்டுக் கூறினார். அண்ணன் எப்பொழுது சாசவான் திண்ணை எப்பொழுது காலியாகும் என்கிற மாதிரி பாக்கர் எப்பொழுது போவான் மீடியா வேல்டு எப்பொழுது நமது குடும்ப சொத்தாக ஆகும் என காத்திருந்தார் பி.ஜெ. பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக பி.ஜெ. வைத்த பொறியில் வீழ்ந்த பாக்கர் வாய் தவறி பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி விட்டார். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பி.ஜெ. பாக்கர் வாய் தவறி கூறிய ராஜினாமாவை வழக்கம் போல் ஜென்டில் மேன் ஒப்பந்தமாக ஆக்கினார்.

அந்த ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை பி.ஜெ.யின் வழக்கப்படி முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் வெளியிட்டார். ஜென்டில்மேன் ஒப்பந்தம் என்பது பி.ஜெ.யின் அகராதியில் அவரது எதிர் தரப்பினர் முந்திக் கொண்டு உண்மையை வெளியிட்டு விடக் கூடாது என்பதே. பாக்கர் ராஜினாமா பற்றி உணர்வில் போட்டுள்ளபடிதான் வெளியில் செய்திகளை சொல்ல வேண்டும் என்பதுதான் பாக்கருடன் பி.ஜெ. செய்த கொண்ட ஜென்டில்மேன் ஒப்பந்தம். பி.ஜெ. போட்ட சதித் திட்டத்தின்படி ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை மீறினார் பி.ஜெ. செக்ஸ்பட வர்ணிப்பாளாராக மாறினார் பி.ஜெ.

பாக்கரும் அந்நிய பெண்ணும் பஸ்ஸில் அடுத்தடுத்து எப்படி இருந்தார்கள். பாக்கரின் கை அருகில் இருந்த பெண்ணின் அங்கங்கிளில் அங்கிங்கெனாதபடி எங்கெல்லாம் எப்படியெல்லாம் பட்டிருக்கும். சென்னையிருந்து கோயில்பட்டி வரை என்ன என்ன பட்டிருக்கும். என்ன என்ன சில்மிஷங்கள் நடந்திருக்கும் என வர்ணித்தார். இதை பி.ஜெ.யின் செக்ஸ் ரசிகர்களுக்கு போன்கள் மூலம் சொல்லி கிளு கிளுப்பையூட்டினார் பி.ஜெ. அண்ணன் சொன்ன அந்தப்புரக் கதைகளைக் கேட்ட தம்பிகள் சைட்டில் போடுங்கள் என்றார்கள். ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை போன்கள் மூலம் மீறிய பி.ஜெ. சைட்டுக்கும் வந்தார். சைட்டில் சொன்ன செய்தி போன் மூலம் சொன்ன மாதிரி அவ்வளவு செக்ஸாக இல்லையே. போன் மூலம் சொன்னபொழுது எவ்வளவு கிளு கிளுப்பாக இருந்தது. மூடு வராதவர்களுக்கும் மூடு வந்தததே என பி.ஜெ.யின் செக்ஸ் ரசிகர்கள் வருத்தப்பட்டனராம்.

சரி இதுவெல்லாம் பழைய செய்தி புதுச் செய்தி என்ன என கேட்கிறீர்களா? பாக்கரை மீண்டும் சேர்த்துள்ளீர்களே சரியா என கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் கலீமுல்லாஹ் கேட்டுள்ளார். தலைமை எடுத்த முடிவு இது பற்றி கேட்க மாவட்ட தலைவருக்கு உரிமை இல்லை என பி.ஜெ. தனது சுய ரூபத்தைக் காட்டி உள்ளார். ஜனநாயகப் பிதா என நம்பியிருந்த பி.ஜெ.யின் கோர முகத்தைக் கண்டு கொண்டார் கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் கலீமுல்லாஹ். பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டதுக்கு எதிராக கலீமுல்லாஹ் ஆகி விடுவார் என உணர்ந்த பி.ஜெ. கலீமுல்லாஹ் அவர்களை நீக்கியதாக அறிவித்தார்.

பி.ஜெ.யின் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்ட மாவட்ட பொதுக்குழுவைக் கூட்டினார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ். பிராடு பி.ஜெ.யும் கோதாவில் இறங்கினார். அதே தினத்தில் அதே கடலூர் மாவட்டத்தின் பொதுக்குழுவை பி.ஜெ.யும் கூட்டினார். கலீமுல்லாஹ். கூட்டிய கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருகுதாளம் பி.ஜெ. கூட்டிய கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்றானது. எனவே பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டி பொதுக்குழு என்றார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ் அவர்களையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கி விட்டதாக பி.ஜெ. அறிவித்தார். பி.ஜெ.யையும் அவருடன் உள்ள தில்லு முல்லு பேர்வழிகளையும் நீக்கி விட்டதாக அறிவித்த கலீமுல்லாஹ் நாங்கள்தான் உண்மையான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் அறிவித்துள்ளார். பி.ஜெ. நான்தான் த.த.ஜ. என்கிறார்.

பி.ஜெ. கூட்டிய போட்டி பொது(மக்கள்)குழுவில் உங்களால் விபச்சார குற்றச்சாட்டுக்குள்ளான பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கியது ஏன் என கேட்டுள்ளனர். தன்னை பேரறிஞர் என நம்பிக் கொண்டிருக்கும் பி.ஜெ. அறிவுப்பூர்வமாக பதில் அளிப்பதாக எண்ணிக் கொண்டு அதற்குத்தான் அவரை 34 நாட்கள் நீக்கி வைத்து விட்டோமே அந்த தண்டணை காணாதா என்று திருவாய் மலாந்தருளினார்.

விபச்சார குற்றச்சாட்டுக்கு 34 நாள் நீக்கம்தான் தண்டனை என்ற அளவுகோலை எங்கிருந்து எடுத்தீர்கள். குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் தாருங்கள் என போட்டி பொது(மக்கள்)குழுவினர் கேட்டுள்ளனர். வெள வெளத்துப் போன பி.ஜெ. வாயடைத்துப் போனார்.

போட்டி பொது(மக்கள்)குழுவில் மீண்டும் ஒரு கேள்வி கேட்டுள்ளனர். இதே நிலையை ஏன் கலீல் ரசூல் விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை. அந்தச் சட்டம் பிறருக்கும் பொருந்து மானால் 34 நாட்கள் தண்டணை என்பதை த.த.ஜ.வின் பைலாவில் சேர்த்துக் கொள்ளலாமா? என்று கேள்விகளை அடுக்கியுள்ளனர். தடம் மாறிப் போன பி.ஜெ. பதில் சொல்ல வக்கில்லாமல் தடுமாறிப் போய் தவித்தார்.

இந்த கேள்விகளுக்குப் பின்னணி கலீல் ரசூல்தான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ்வை தூண்டி விட்டதும் கலீல் ரசூல்தான் என பி.ஜெ. புலம்பிக் கொண்டிருக்கிறார். கலீமுல்லாஹ்வை வஞ்சம் தீர்த்த பி.ஜெ. கலீல் ரசூலை வஞ்சம் தீர்க்க வாய்ப்பை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். த.த.ஜ. தலைவரின் பலி வாங்கும் படலம் தொடரும் நிலையில் அடுத்து தானாக இருக்குமோ என அஞ்சிய பள்ளித் திருடன்கள் தற்கொலை செய்து கபுர்களை நிரப்ப தயாராவதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

Friday, May 04, 2007

வக்பு எஸ்.பி.யின் சுற்றறிக்கை.

நெல்லை மாநகருக்கு வருகை தரும் மாண்புமிகு வக்பு வாரிய தலைவர் ஆலி ஜனாப் ஹைதர் அலி ஸாஹிப் அவர்களின் நிகழ்ச்சி பற்றி வக்பு எஸ்.பி.யின் சுற்றறிக்கை.

Thursday, May 03, 2007

இமாம்களுக்கு மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 5000 ரூபாய் முஅத்தின்களுக்கு 3000 ரூபாய்

பெறுனர்:- தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜமாஅத்தார்கள்.

பொருள்:- இமாம்களுக்கும் முஅத்தின்களுக்கும் சம்பள உயர்வு அறிவித்துள்ள வக்பு வாரிய மாண்புமிகு தலைவர் வருகை.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நமது த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளரும் வக்பு வாரியத்தின் தலைவருமான மாண்புமிகு எஸ். ஹைதர்அலி அவர்கள் இமாம்களுக்கு மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 5000 ரூபாய் எனவும் முஅத்தின்களுக்கு மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 3000 ரூபாய் எனவும் அறிவித்துள்ளார்கள். மேலும் இமாம்கள் முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுடைய வருமானத்துக்கு உத்திரவாதம் அளித்ததுடன் அவர்களின் பிள்ளைகளுக்கு 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கல்விச் செலவுகளையும் வக்பு வாரியம் ஏற்பதாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பயன்படும் நல்ல பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். குறிப்பாக கல்வி நிலையங்கள், தொழிற்பயிற்சி கூடங்கள், தொகுப்பு வீடுகள், மாணவர் விடுதிகள், மருத்துவ மனைகள் போன்றவை வக்பு வாரியம் சார்பாக அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இவற்றில் நமது மேலப்பாளையம் பகுதிக்கு தேவையானதை அமைத்து தர வலியுறுத்தி தங்கள் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படி சிறந்த பல திட்டங்களை அறிவித்துள்ள வக்பு வாரியத்தின் தலைவர் மாண்புமிகு எஸ். ஹைதர்அலி அவர்கள் 06-05-2007 ஞாயிறு அன்று நமது மேலப்பாளையம் மாநகருக்கு வருகை தருகிறார்கள். மேலப்பாளையம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்களை சந்திக்கும் நிகழ்ச்சி 2 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷh அல்லாஹ் 06-05-2007 ஞாயிறு மாலை மஃரிபுக்குப் பின் ஞானியாரப்பா நகர் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்ஆ பள்ளி முன்பும். இஷhவுக்குப் பின் மேலப்பாளையம் அல்லாமா இக்பால் (பசார்) திடலில் வைத்தும் நடைபெறும். மழையாக இருந்தால் புதுமனைப் பள்ளியில் வைத்து நிகழ்ச்சி நடைபெறும்.
இப்படிக்கு
கே.எஸ்.ரசூல் மைதீன்
குறிப்பு:-இதை ஜும்ஆவில் வாசித்து அறிவிப்பு பலகையில் ஒட்டவும்.
மாண்புமிகு வக்பு வாரிய தலைவர் மேலப்பாளையம் வருகையையொட்டி அவரை எதிர் நோக்கி காத்திருக்கும் மனுக்களில் ஒன்று இது. மற்ற மனுக்கள் தனித் தனியாக இருந்தாலும். இந்த ஒரு மனு மட்டும் 3000க்கும் மேற்பட்டோரிடமிருந்து வர இருக்கிறது.